1 וְאֵ֙לֶּה֙ –மற்றும்–இவை תּוֹלְדֹ֣ת தலைமுறைகள் בְּנֵי־ மகன்கள்– נֹ֔חַ நோவாவின் שֵׁ֖ם சேம் חָ֣ם காம் וָיָ֑פֶת –மற்றும்–யாப்பேத் וַיִּוָּלְד֥וּ –மற்றும்–பிறந்தனர் לָהֶ֛ם அவர்களுக்கு בָּנִ֖ים மகன்கள் אַחַ֥ר பிறகு הַמַּבּֽוּל׃ –அந்த–வெள்ளத்தின்
நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: வெள்ளப்பெருக்குக்குப் பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள்.
2 בְּנֵ֣י மகன்கள் יֶ֔פֶת யாப்பேத்தின் גֹּ֣מֶר கோமேர் וּמָג֔וֹג –மற்றும்–மாகோகு וּמָדַ֖י –மற்றும்–மாதாய் וְיָוָ֣ן –மற்றும்–யாவான் וְתֻבָ֑ל –மற்றும்–தூபால் וּמֶ֖שֶׁךְ –மற்றும்–மேஷேக்கு וְתִירָֽס׃ –மற்றும்–தீராஸ்
யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
3 וּבְנֵ֖י –மற்றும்–மகன்கள் גֹּ֑מֶר கோமேரின் אַשְׁכֲּנַ֥ז அஷ்கெனாஸ் וְרִיפַ֖ת –மற்றும்–ரீபாத்து וְתֹגַרְמָֽה׃ –மற்றும்–தோகர்மா
கோமரின் மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
4 וּבְנֵ֥י –மற்றும்–மகன்கள் יָוָ֖ן யாவானின் אֱלִישָׁ֣ה எலீஷா וְתַרְשִׁ֑ישׁ –மற்றும்–தர்ஷீஷ் כִּתִּ֖ים கித்தீம் וְדֹדָנִֽים׃ –மற்றும்–தோதானீம்
யாவானின் மகன்கள் எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
5 מֵ֠אֵלֶּה –இருந்து–இவர்களிலிருந்து נִפְרְד֞וּ பிரிந்தன אִיֵּ֤י தீவுகள் הַגּוֹיִם֙ –அந்த–ஜாதிகளின் בְּאַרְצֹתָ֔ם –இல்–நிலங்களில்–அவர்களுடைய אִ֖ישׁ மனிதன் לִלְשֹׁנ֑וֹ –கு–மொழியின்படி–அவனுடைய לְמִשְׁפְּחֹתָ֖ם –கு–குடும்பங்களின்படி–அவர்களுடைய בְּגוֹיֵהֶֽם׃ –இல்–ஜாதிகளில்–அவர்களுடைய
இவர்களால் மத்திய தரைக்கடல் தீவுகள் அவனவன் மொழியினடிப்படையிலும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், சந்ததியின்படியேயும் வெவ்வேறு தேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
6 וּבְנֵ֖י –மற்றும்–மகன்கள் חָ֑ם காமின் כּ֥וּשׁ கூஷ் וּמִצְרַ֖יִם –மற்றும்–எகிப்து וּפ֥וּט –மற்றும்–பூத் וּכְנָֽעַן׃ –மற்றும்–கானான்
காமுடைய மகன்கள் கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
7 וּבְנֵ֣י –மற்றும்–மகன்கள் כ֔וּשׁ கூஷின் סְבָא֙ செபா וַֽחֲוִילָ֔ה –மற்றும்–ஹவீலா וְסַבְתָּ֥ה –மற்றும்–சப்தா וְרַעְמָ֖ה –மற்றும்–ரகமா וְסַבְתְּכָ֑א –மற்றும்–சப்தகா וּבְנֵ֥י –மற்றும்–மகன்கள் רַעְמָ֖ה ரகமாவின் שְׁבָ֥א ஷேபா וּדְדָֽן׃ –மற்றும்–தேதான்
கூஷூடைய மகன்கள் சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள் சேபா, திதான் என்பவர்கள்.
8 וְכ֖וּשׁ –மற்றும்–கூஷ் יָלַ֣ד பெற்றான் אֶת־ –ஐ– נִמְרֹ֑ד நிம்ரோத் ה֣וּא அவன் הֵחֵ֔ל ஆரம்பித்தான் לִֽהְי֥וֹת ஆக גִּבֹּ֖ר வீரன் בָּאָֽרֶץ׃ –இல்–பூமியில்
கூஷ் நிம்ரோதைப் பெற்றெடுத்தான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
9 הֽוּא־ அவன்– הָיָ֥ה இருந்தான் גִבֹּֽר־ வீரன்– צַ֖יִד வேட்டையின் לִפְנֵ֣י முன்பாக יְהוָ֑ה கர்த்தரின் עַל־ –மேல்– כֵּן֙ அவ்வாறு יֵֽאָמַ֔ר சொல்லப்படும் כְּנִמְרֹ֛ד –போல–நிம்ரோத் גִּבּ֥וֹר வீரன் צַ֖יִד வேட்டையின் לִפְנֵ֥י முன்பாக יְהוָֽה׃ கர்த்தரின்
இவன் யெகோவாவுக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாக இருந்தான்; ஆகையால், “யெகோவா முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல” என்னும் வழக்கச்சொல் உண்டானது.
10 וַתְּהִ֨י –மற்றும்–ஆனது רֵאשִׁ֤ית தொடக்கம் מַמְלַכְתּוֹ֙ ராஜ்யத்தின்–அவனுடைய בָּבֶ֔ל பாபேல் וְאֶ֖רֶךְ –மற்றும்–ஏரேக்கு וְאַכַּ֣ד –மற்றும்–அக்காது וְכַלְנֵ֑ה –மற்றும்–கல்னே בְּאֶ֖רֶץ –இல்–நிலத்தில் שִׁנְעָֽר׃ சினெயாரின்
சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு முதன்மையான இடங்கள்.
11 מִן־ –இருந்து– הָאָ֥רֶץ –அந்த–நிலத்தில் הַהִ֖וא –அந்த–அந்த יָצָ֣א புறப்பட்டான் אַשּׁ֑וּר அஷ்ஷூர் וַיִּ֙בֶן֙ –மற்றும்–கட்டினான் אֶת־ –ஐ– נִ֣ינְוֵ֔ה நினிவே וְאֶת־ –மற்றும்–ஐ– רְחֹבֹ֥ת ரெகோபோத் עִ֖יר பட்டணம் וְאֶת־ –மற்றும்–ஐ– כָּֽלַח׃ காலா
அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
12 וְֽאֶת־ –மற்றும்–ஐ– רֶ֔סֶן ரேசேன் בֵּ֥ין –இடையில் נִֽינְוֵ֖ה நினிவேக்கும் וּבֵ֣ין –மற்றும்–இடையில் כָּ֑לַח காலாவுக்கும் הִ֖וא அது הָעִ֥יר –அந்த–பட்டணம் הַגְּדֹלָֽה׃ –அந்த–பெரிய
நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
13 וּמִצְרַ֡יִם –மற்றும்–எகிப்து יָלַ֞ד பெற்றான் אֶת־ –ஐ– לוּדִ֧ים லூதீம் וְאֶת־ –மற்றும்–ஐ– עֲנָמִ֛ים ஆனாமீம் וְאֶת־ –மற்றும்–ஐ– לְהָבִ֖ים லெகாபீம் וְאֶת־ –மற்றும்–ஐ– נַפְתֻּחִֽים׃ நப்தூகீம்
மிஸ்ராயீம் லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
14 וְֽאֶת־ –மற்றும்–ஐ– פַּתְרֻסִ֞ים பத்ரூசீம் וְאֶת־ –மற்றும்–ஐ– כַּסְלֻחִ֗ים கஸ்லூகீம் אֲשֶׁ֨ר எவர் יָצְא֥וּ புறப்பட்டன מִשָּׁ֛ם –இருந்து–அங்கிருந்து פְּלִשְׁתִּ֖ים பெலிஸ்தியர் וְאֶת־ –மற்றும்–ஐ– כַּפְתֹּרִֽים׃ கப்தோரீம் ס ס
பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகிமையும், கப்தொரீமையும் பெற்றெடுத்தான்.
15 וּכְנַ֗עַן –மற்றும்–கானான் יָלַ֛ד பெற்றான் אֶת־ –ஐ– צִידֹ֥ן சீதோன் בְּכֹר֖וֹ மூத்தமகன்–அவனுடைய וְאֶת־ –மற்றும்–ஐ– חֵֽת׃ கேத்
கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
16 וְאֶת־ –மற்றும்–ஐ– הַיְבוּסִי֙ –அந்த–எபூசியன் וְאֶת־ –மற்றும்–ஐ– הָ֣אֱמֹרִ֔י –அந்த–எமோரியன் וְאֵ֖ת –மற்றும்–ஐ הַגִּרְגָּשִֽׁי׃ –அந்த–கிர்காசியன்
எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
17 וְאֶת־ –மற்றும்–ஐ– הַֽחִוִּ֥י –அந்த–ஹிவ்வியன் וְאֶת־ –மற்றும்–ஐ– הַֽעַרְקִ֖י –அந்த–அர்க்கீயன் וְאֶת־ –மற்றும்–ஐ– הַסִּינִֽי׃ –அந்த–சீனியன்
ஈவியர்களையும், அர்கீரியர்களையும், சீனியர்களையும்,
18 וְאֶת־ –மற்றும்–ஐ– הָֽאַרְוָדִ֥י –அந்த–அர்வாதியன் וְאֶת־ –மற்றும்–ஐ– הַצְּמָרִ֖י –அந்த–செமாரியன் וְאֶת־ –மற்றும்–ஐ– הַֽחֲמָתִ֑י –அந்த–காமாத்தியன் וְאַחַ֣ר –மற்றும்–பிறகு נָפֹ֔צוּ பரவினர் מִשְׁפְּח֖וֹת குடும்பங்கள் הַֽכְּנַעֲנִֽי׃ –அந்த–கானானியனின்
அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றெடுத்தான்; பின்பு கானானியர்களின் வம்சத்தார்கள் எங்கும் பரவினார்கள்.
19 וַֽיְהִ֞י –மற்றும்–ஆனது גְּב֤וּל எல்லை הַֽכְּנַעֲנִי֙ –அந்த–கானானியனின் מִצִּידֹ֔ן –இருந்து–சீதோனிலிருந்து בֹּאֲכָ֥ה வருகையில்–உன் גְרָ֖רָה கெராருக்கு עַד־ வரை– עַזָּ֑ה காஸா בֹּאֲכָ֞ה வருகையில்–உன் סְדֹ֧מָה சோதோமுக்கு וַעֲמֹרָ֛ה –மற்றும்–கொமோரா וְאַדְמָ֥ה –மற்றும்–அத்மா וּצְבֹיִ֖ם –மற்றும்–செபோயீம் עַד־ வரை– לָֽשַׁע׃ லாஷா
கானானியர்களின் எல்லை சீதோன்முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், அங்கிருந்து சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் இருந்தது.
20 אֵ֣לֶּה இவர்கள் בְנֵי־ மகன்கள்– חָ֔ם காமின் לְמִשְׁפְּחֹתָ֖ם –கு–குடும்பங்களின்படி–அவர்களுடைய לִלְשֹֽׁנֹתָ֑ם –கு–மொழிகளின்படி–அவர்களுடைய בְּאַרְצֹתָ֖ם –இல்–நிலங்களில்–அவர்களுடைய בְּגוֹיֵהֶֽם׃ –இல்–ஜாதிகளில்–அவர்களுடைய ס ס
இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் காமுடைய சந்ததியினர்.
21 וּלְשֵׁ֥ם –மற்றும்–கு–சேமுக்கும் יֻלַּ֖ד பிறந்தனர் גַּם־ –மற்றும்–கூட– ה֑וּא அவனுக்கு אֲבִי֙ தகப்பன் כָּל־ எல்லா– בְּנֵי־ மகன்கள்– עֵ֔בֶר ஏபேரின் אֲחִ֖י சகோதரன் יֶ֥פֶת யாப்பேத்தின் הַגָּדֽוֹל׃ –அந்த–பெரிய
சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியினர் எல்லோருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாக இருந்தான்.
22 בְּנֵ֥י மகன்கள் שֵׁ֖ם சேமின் עֵילָ֣ם ஏலாம் וְאַשּׁ֑וּר –மற்றும்–அஷ்ஷூர் וְאַרְפַּכְשַׁ֖ד –மற்றும்–அர்பக்சாத் וְל֥וּד –மற்றும்–லூத் וַֽאֲרָֽם׃ –மற்றும்–ஆராம்
சேமுடைய மகன்கள் ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
23 וּבְנֵ֖י –மற்றும்–மகன்கள் אֲרָ֑ם ஆராமின் ע֥וּץ ஊஸ் וְח֖וּל –மற்றும்–ஹூல் וְגֶ֥תֶר –மற்றும்–கேதேர் וָמַֽשׁ׃ –மற்றும்–மாஷ்
ஆராமுடைய மகன்கள் ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள்.
24 וְאַרְפַּכְשַׁ֖ד –மற்றும்–அர்பக்சாத் יָלַ֣ד பெற்றான் אֶת־ –ஐ– שָׁ֑לַח சாலா וְשֶׁ֖לַח –மற்றும்–சாலா יָלַ֥ד பெற்றான் אֶת־ –ஐ– עֵֽבֶר׃ ஏபேர்
அர்பக்சாத் சாலாவைப் பெற்றெடுத்தான்; சாலா ஏபேரைப் பெற்றெடுத்தான்.
25 וּלְעֵ֥בֶר –மற்றும்–கு–ஏபேருக்கு יֻלַּ֖ד பிறந்தனர் שְׁנֵ֣י இரண்டு בָנִ֑ים மகன்கள் שֵׁ֣ם பெயர் הָֽאֶחָ֞ד –அந்த–ஒருவன் פֶּ֗לֶג பெலேக்கு כִּ֤י ஏனெனில் בְיָמָיו֙ –இல்–நாட்களில்–அவனுடைய נִפְלְגָ֣ה பிரிக்கப்பட்டது הָאָ֔רֶץ –அந்த–பூமி וְשֵׁ֥ם –மற்றும்–பெயர் אָחִ֖יו சகோதரனின்–அவனுடைய יָקְטָֽן׃ யோக்தான்
ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுக்கு பேலேகு என்று பெயர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
26 וְיָקְטָ֣ן –மற்றும்–யோக்தான் יָלַ֔ד பெற்றான் אֶת־ –ஐ– אַלְמוֹדָ֖ד அல்மோதாத் וְאֶת־ –மற்றும்–ஐ– שָׁ֑לֶף சாலேப் וְאֶת־ –மற்றும்–ஐ– חֲצַרְמָ֖וֶת ஹஸர்மாவேத் וְאֶת־ –மற்றும்–ஐ– יָֽרַח׃ யேராக்
யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
27 וְאֶת־ –மற்றும்–ஐ– הֲדוֹרָ֥ם ஹதோராம் וְאֶת־ –மற்றும்–ஐ– אוּזָ֖ל ஊசால் וְאֶת־ –மற்றும்–ஐ– דִּקְלָֽה׃ திக்லா
அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
28 וְאֶת־ –மற்றும்–ஐ– עוֹבָ֥ל ஓபால் וְאֶת־ –மற்றும்–ஐ– אֲבִֽימָאֵ֖ל அபீமாயேல் וְאֶת־ –மற்றும்–ஐ– שְׁבָֽא׃ ஷேபா
ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
29 וְאֶת־ –மற்றும்–ஐ– אוֹפִ֥ר ஓபீர் וְאֶת־ –மற்றும்–ஐ– חֲוִילָ֖ה ஹவீலா וְאֶת־ –மற்றும்–ஐ– יוֹבָ֑ב யோபாப் כָּל־ எல்லா– אֵ֖לֶּה இவர்கள் בְּנֵ֥י மகன்கள் יָקְטָֽן׃ யோக்தானின்
ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றெடுத்தான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய மகன்கள்.
30 וַֽיְהִ֥י –மற்றும்–ஆனது מוֹשָׁבָ֖ם குடியிருப்பு–அவர்களுடைய מִמֵּשָׁ֑א –இருந்து–மேஷாவிலிருந்து בֹּאֲכָ֥ה வருகையில்–உன் סְפָ֖רָה செப்பாருக்கு הַ֥ר மலை הַקֶּֽדֶם׃ –அந்த–கிழக்கின்
இவர்களுடைய குடியிருப்பு மேசாதுவங்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிவரைக்கும் இருந்தது.
31 אֵ֣לֶּה இவர்கள் בְנֵי־ மகன்கள்– שֵׁ֔ם சேமின் לְמִשְׁפְּחֹתָ֖ם –கு–குடும்பங்களின்படி–அவர்களுடைய לִלְשֹׁנֹתָ֑ם –கு–மொழிகளின்படி–அவர்களுடைய בְּאַרְצֹתָ֖ם –இல்–நிலங்களில்–அவர்களுடைய לְגוֹיֵהֶֽם׃ –கு–ஜாதிகளின்படி–அவர்களுடைய
இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் சேமுடைய சந்ததியினர்.
32 אֵ֣לֶּה இவர்கள் מִשְׁפְּחֹ֧ת குடும்பங்கள் בְּנֵי־ மகன்கள்– נֹ֛חַ நோவாவின் לְתוֹלְדֹתָ֖ם –கு–தலைமுறைகளின்படி–அவர்களுடைய בְּגוֹיֵהֶ֑ם –இல்–ஜாதிகளில்–அவர்களுடைய וּמֵאֵ֜לֶּה –மற்றும்–இருந்து–இவர்களிலிருந்து נִפְרְד֧וּ பிரிந்தன הַגּוֹיִ֛ם –அந்த–ஜாதிகள் בָּאָ֖רֶץ –இல்–பூமியில் אַחַ֥ר பிறகு הַמַּבּֽוּל׃ –அந்த–வெள்ளத்தின் פ פ
தங்களுடைய மக்களிலுள்ள சந்ததிகளின்படியே நோவாவுடைய மகன்களின் வம்சங்கள் இவைகளே; வெள்ளப்பெருக்குக்குப் பிறகு இவர்களால் பூமியிலே மக்கள் பிரிந்தனர்.