1 וְאֵ֛לֶּה –மற்றும்இவர்கள் תֹּלְד֥וֹת தலைமுறைகள் עֵשָׂ֖ו ஏசா ה֥וּא அவன் אֱדֽוֹם׃ ஏதோம்
ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாறு:
2 עֵשָׂ֛ו ஏசா לָקַ֥ח எடுத்துக்கொண்டான் אֶת־ ∅ נָשָׁ֖יו தன்மனைவிகளை מִבְּנ֣וֹת –இருந்துமகள்களில் כְּנָ֑עַן கானான் אֶת־ ∅ עָדָ֗ה ஆதா בַּת־ மகள் אֵילוֹן֙ ஏலோன் הַֽחִתִּ֔י –அந்தஹித்தியன் וְאֶת־ –மற்றும்∅ אָהֳלִֽיבָמָה֙ ஒகொலிபாமா בַּת־ மகள் עֲנָ֔ה அனா בַּת־ மகள் צִבְע֖וֹן சிபியோன் הַֽחִוִּֽי׃ –அந்தஹிவ்வியன்
ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் மகளாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமாகிய அகோலிபாமாளையும்,
3 וְאֶת־ –மற்றும்∅ בָּשְׂמַ֥ת பாசமாத் בַּת־ மகள் יִשְׁמָעֵ֖אל இஸ்மவேல் אֲח֥וֹת சகோதரி נְבָיֽוֹת׃ நெபாயோத்
இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் திருமணம் செய்திருந்தான்.
4 וַתֵּ֧לֶד –மற்றும்பெற்றெடுத்தாள் עָדָ֛ה ஆதா לְעֵשָׂ֖ו –க்குஏசா אֶת־ ∅ אֱלִיפָ֑ז எலிபாஸ் וּבָ֣שְׂמַ֔ת –மற்றும்பாசமாத் יָלְדָ֖ה பெற்றாள் אֶת־ ∅ רְעוּאֵֽל׃ ரெகூவேல்
ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாசைப் பெற்றெடுத்தாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றெடுத்தாள்.
5 וְאָהֳלִֽיבָמָה֙ –மற்றும்ஒகொலிபாமா יָֽלְדָ֔ה பெற்றாள் אֶת־ ∅ [יעיש] [யெகூஷ்] (יְע֥וּשׁ) (யெகூஷ்) וְאֶת־ –மற்றும்∅ יַעְלָ֖ם யாலாம் וְאֶת־ –மற்றும்∅ קֹ֑רַח கோராக் אֵ֚לֶּה இவர்கள் בְּנֵ֣י புத்திரர் עֵשָׂ֔ו ஏசாவின் אֲשֶׁ֥ר யார் יֻלְּדוּ־ பிறந்தார்கள் ל֖וֹ அவனுக்கு בְּאֶ֥רֶץ –இல்தேசத்தில் כְּנָֽעַן׃ கானான்
அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த மகன்கள்.
6 וַיִּקַּ֣ח –மற்றும்எடுத்துக்கொண்டான் עֵשָׂ֡ו ஏசா אֶת־ ∅ נָ֠שָׁיו தன்மனைவிகளை וְאֶת־ –மற்றும்∅ בָּנָ֣יו தன்மகன்களை וְאֶת־ –மற்றும்∅ בְּנֹתָיו֮ தன்மகள்களை וְאֶת־ –மற்றும்∅ כָּל־ எல்லா נַפְשׁ֣וֹת ஆத்துமாக்களை בֵּיתוֹ֒ தன்வீட்டின் וְאֶת־ –மற்றும்∅ מִקְנֵ֣הוּ தன்மந்தைகளை וְאֶת־ –மற்றும்∅ כָּל־ எல்லா בְּהֶמְתּ֗וֹ தன்மிருகங்களை וְאֵת֙ –மற்றும் כָּל־ எல்லா קִנְיָנ֔וֹ தன்உடைமைகளை אֲשֶׁ֥ר அவை רָכַ֖שׁ சேகரித்தான் בְּאֶ֣רֶץ –இல்தேசத்தில் כְּנָ֑עַן கானான் וַיֵּ֣לֶךְ –மற்றும்போனான் אֶל־ –க்கு אֶ֔רֶץ தேசம் מִפְּנֵ֖י –இருந்துமுகத்தில் יַעֲקֹ֥ב யாக்கோபு אָחִֽיו׃ தன்சகோதரன்
ஏசா தன்னுடைய மனைவிகளையும், மகன்களையும், மகள்களையும், வீட்டிலுள்ள அனைவரையும், ஆடுமாடுகளையும், மற்ற உயிரினங்கள் அனைத்தையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த சொத்து முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபைவிட்டுப் பிரிந்து வேறு தேசத்திற்குப் போனான்.
7 כִּֽי־ ஏனெனில் הָיָ֧ה இருந்தது רְכוּשָׁ֛ם அவர்கள்உடைமை רָ֖ב அதிகம் מִשֶּׁ֣בֶת –இருந்துவாழ்வது יַחְדָּ֑ו ஒன்றாக וְלֹ֨א –மற்றும்இல்லை יָֽכְלָ֜ה கூடியதில்லை אֶ֤רֶץ தேசம் מְגֽוּרֵיהֶם֙ அவர்கள்பரதேசங்களின் לָשֵׂ֣את சுமக்க אֹתָ֔ם அவர்களை מִפְּנֵ֖י –இருந்துமுகத்தில் מִקְנֵיהֶֽם׃ அவர்கள்மந்தைகளின்
அவர்களுடைய சம்பத்து அதிகமாக இருந்ததால் அவர்கள் ஒன்றாக இணைந்து குடியிருக்க முடியாமற்போனது; அவர்களுடைய மந்தைகளின் காரணமாக அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்க முடியாததாயிருந்தது.
8 וַיֵּ֤שֶׁב –மற்றும்குடியிருந்தான் עֵשָׂו֙ ஏசா בְּהַ֣ר –இல்மலையில் שֵׂעִ֔יר சேயீர் עֵשָׂ֖ו ஏசா ה֥וּא அவன் אֱדֽוֹם׃ ஏதோம்
ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பெயர்.
9 וְאֵ֛לֶּה –மற்றும்இவர்கள் תֹּלְד֥וֹת தலைமுறைகள் עֵשָׂ֖ו ஏசாவின் אֲבִ֣י தகப்பன் אֱד֑וֹם ஏதோம் בְּהַ֖ר –இல்மலையில் שֵׂעִֽיר׃ சேயீர்
சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியர்களுடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும்,
10 אֵ֖לֶּה இவர்கள் שְׁמ֣וֹת பெயர்கள் בְּנֵֽי־ புத்திரர் עֵשָׂ֑ו ஏசாவின் אֱלִיפַ֗ז எலிபாஸ் בֶּן־ மகன் עָדָה֙ ஆதாவின் אֵ֣שֶׁת மனைவி עֵשָׂ֔ו ஏசாவின் רְעוּאֵ֕ל ரெகூவேல் בֶּן־ மகன் בָּשְׂמַ֖ת பாசமாத்தின் אֵ֥שֶׁת மனைவி עֵשָֽׂו׃ ஏசாவின்
ஏசாவின் மகன்களுடைய பெயர்களாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகனுக்கு எலிப்பாஸ் என்று பெயர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய மகனுக்கு ரெகுவேல் என்று பெயர்.
11 וַיִּהְי֖וּ –மற்றும்இருந்தார்கள் בְּנֵ֣י புத்திரர் אֱלִיפָ֑ז எலிபாஸின் תֵּימָ֣ן தேமான் אוֹמָ֔ר ஓமார் צְפ֥וֹ செபோ וְגַעְתָּ֖ם –மற்றும்காத்தாம் וּקְנַֽז׃ –மற்றும்கேனாஸ்
எலிப்பாசின் மகன்கள் தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள்.
12 וְתִמְנַ֣ע ׀ –மற்றும்திம்னா הָיְתָ֣ה இருந்தாள் פִילֶ֗גֶשׁ மறுமனையாட்டி לֶֽאֱלִיפַז֙ –க்குஎலிபாஸின் בֶּן־ மகன் עֵשָׂ֔ו ஏசாவின் וַתֵּ֥לֶד –மற்றும்பெற்றெடுத்தாள் לֶאֱלִיפַ֖ז –க்குஎலிபாஸ் אֶת־ ∅ עֲמָלֵ֑ק அமாலேக் אֵ֕לֶּה இவர்கள் בְּנֵ֥י புத்திரர் עָדָ֖ה ஆதாவின் אֵ֥שֶׁת மனைவி עֵשָֽׂו׃ ஏசாவின்
திம்னாள் ஏசாவின் மகனாகிய எலிப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகன்கள்.
13 וְאֵ֙לֶּה֙ –மற்றும்இவர்கள் בְּנֵ֣י புத்திரர் רְעוּאֵ֔ל ரெகூவேலின் נַ֥חַת நாகாத் וָזֶ֖רַח –மற்றும்செராக் שַׁמָּ֣ה சம்மா וּמִזָּ֑ה –மற்றும்மிசா אֵ֣לֶּ֣ה இவர்கள் הָי֔וּ இருந்தார்கள் בְּנֵ֥י புத்திரர் בָשְׂמַ֖ת பாசமாத்தின் אֵ֥שֶׁת மனைவி עֵשָֽׂו׃ ஏசாவின்
ரெகுவேலுடைய மகன்கள், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்கள்.
14 וְאֵ֣לֶּה –மற்றும்இவர்கள் הָי֗וּ இருந்தார்கள் בְּנֵ֨י புத்திரர் אָהֳלִיבָמָ֧ה ஒகொலிபாமாவின் בַת־ மகள் עֲנָ֛ה அனாவின் בַּת־ மகள் צִבְע֖וֹן சிபியோனின் אֵ֣שֶׁת மனைவி עֵשָׂ֑ו ஏசாவின் וַתֵּ֣לֶד –மற்றும்பெற்றெடுத்தாள் לְעֵשָׂ֔ו –க்குஏசா אֶת־ ∅ [יעיש] [யெகூஷ்] (יְע֥וּשׁ) (யெகூஷ்) וְאֶת־ –மற்றும்∅ יַעְלָ֖ם யாலாம் וְאֶת־ –மற்றும்∅ קֹֽרַח׃ கோராக்
சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் மகன்களையும் ஏசாவுக்குப் பெற்றெடுத்தாள்.
15 אֵ֖לֶּה இவர்கள் אַלּוּפֵ֣י தலைவர்கள் בְנֵֽי־ புத்திரர் עֵשָׂ֑ו ஏசாவின் בְּנֵ֤י புத்திரர் אֱלִיפַז֙ எலிபாஸின் בְּכ֣וֹר மூத்தவன் עֵשָׂ֔ו ஏசாவின் אַלּ֤וּף தலைவர் תֵּימָן֙ தேமான் אַלּ֣וּף தலைவர் אוֹמָ֔ר ஓமார் אַלּ֥וּף தலைவர் צְפ֖וֹ செபோ אַלּ֥וּף தலைவர் קְנַֽז׃ கேனாஸ்
ஏசாவின் மகன்களில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலிப்பாசுடைய மகன்களில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு,
16 אַלּֽוּף־ தலைவர் קֹ֛רַח கோராக் אַלּ֥וּף தலைவர் גַּעְתָּ֖ם காத்தாம் אַלּ֣וּף தலைவர் עֲמָלֵ֑ק அமாலேக் אֵ֣לֶּה இவர்கள் אַלּוּפֵ֤י தலைவர்கள் אֱלִיפַז֙ எலிபாஸின் בְּאֶ֣רֶץ –இல்தேசத்தில் אֱד֔וֹם ஏதோம் אֵ֖לֶּה இவர்கள் בְּנֵ֥י புத்திரர் עָדָֽה׃ ஆதாவின்
கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலிப்பாசின் சந்ததியும் ஆதாளின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள்.
17 וְאֵ֗לֶּה –மற்றும்இவர்கள் בְּנֵ֤י புத்திரர் רְעוּאֵל֙ ரெகூவேலின் בֶּן־ மகன் עֵשָׂ֔ו ஏசாவின் אַלּ֥וּף தலைவர் נַ֙חַת֙ நாகாத் אַלּ֣וּף தலைவர் זֶ֔רַח செராக் אַלּ֥וּף தலைவர் שַׁמָּ֖ה சம்மா אַלּ֣וּף தலைவர் מִזָּ֑ה மிசா אֵ֣לֶּה இவர்கள் אַלּוּפֵ֤י தலைவர்கள் רְעוּאֵל֙ ரெகூவேலின் בְּאֶ֣רֶץ –இல்தேசத்தில் אֱד֔וֹם ஏதோம் אֵ֕לֶּה இவர்கள் בְּנֵ֥י புத்திரர் בָשְׂמַ֖ת பாசமாத்தின் אֵ֥שֶׁת மனைவி עֵשָֽׂו׃ ஏசாவின்
ஏசாவின் மகனாகிய ரெகுவேலின் மகன்களில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள்.
18 וְאֵ֗לֶּה –மற்றும்இவர்கள் בְּנֵ֤י புத்திரர் אָהֳלִֽיבָמָה֙ ஒகொலிபாமாவின் אֵ֣שֶׁת மனைவி עֵשָׂ֔ו ஏசாவின் אַלּ֥וּף தலைவர் יְע֛וּשׁ யெகூஷ் אַלּ֥וּף தலைவர் יַעְלָ֖ם யாலாம் אַלּ֣וּף தலைவர் קֹ֑רַח கோராக் אֵ֣לֶּה இவர்கள் אַלּוּפֵ֞י தலைவர்கள் אָֽהֳלִיבָמָ֛ה ஒகொலிபாமாவின் בַּת־ மகள் עֲנָ֖ה அனாவின் אֵ֥שֶׁת மனைவி עֵשָֽׂו׃ ஏசாவின்
ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் மகன்கள் எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
19 אֵ֧לֶּה இவர்கள் בְנֵי־ புத்திரர் עֵשָׂ֛ו ஏசாவின் וְאֵ֥לֶּה –மற்றும்இவர்கள் אַלּוּפֵיהֶ֖ם அவர்கள்தலைவர்கள் ה֥וּא அவன் אֱדֽוֹם׃ ஏதோம் ס §
இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள்.
20 אֵ֤לֶּה இவர்கள் בְנֵֽי־ புத்திரர் שֵׂעִיר֙ சேயீரின் הַחֹרִ֔י –அந்தஓரியன் יֹשְׁבֵ֖י குடியிருப்பவர்கள் הָאָ֑רֶץ –அந்ததேசத்தின் לוֹטָ֥ן லோத்தான் וְשׁוֹבָ֖ל –மற்றும்சோபால் וְצִבְע֥וֹן –மற்றும்சிபியோன் וַעֲנָֽה׃ –மற்றும்அனா
அந்த தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
21 וְדִשׁ֥וֹן –மற்றும்திசோன் וְאֵ֖צֶר –மற்றும்ஏத்சேர் וְדִישָׁ֑ן –மற்றும்தீசான் אֵ֣לֶּה இவர்கள் אַלּוּפֵ֧י தலைவர்கள் הַחֹרִ֛י –அந்தஓரியரின் בְּנֵ֥י புத்திரர் שֵׂעִ֖יר சேயீரின் בְּאֶ֥רֶץ –இல்தேசத்தில் אֱדֽוֹם׃ ஏதோம்
திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் மகன்களுமாகிய ஓரியர்களுடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
22 וַיִּהְי֥וּ –மற்றும்இருந்தார்கள் בְנֵי־ புத்திரர் לוֹטָ֖ן லோத்தானின் חֹרִ֣י ஓரி וְהֵימָ֑ם –மற்றும்ஹேமாம் וַאֲח֥וֹת –மற்றும்சகோதரி לוֹטָ֖ן லோத்தானின் תִּמְנָֽע׃ திம்னா
லோத்தானுடைய மகன்கள் ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
23 וְאֵ֙לֶּה֙ –மற்றும்இவர்கள் בְּנֵ֣י புத்திரர் שׁוֹבָ֔ל சோபாலின் עַלְוָ֥ן அல்வான் וּמָנַ֖חַת –மற்றும்மானகாத் וְעֵיבָ֑ל –மற்றும்ஏபால் שְׁפ֖וֹ செபோ וְאוֹנָֽם׃ –மற்றும்ஓனாம்
சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்.
24 וְאֵ֥לֶּה –மற்றும்இவர்கள் בְנֵֽי־ புத்திரர் צִבְע֖וֹן சிபியோனின் וְאַיָּ֣ה –மற்றும்அய்யா וַעֲנָ֑ה –மற்றும்அனா ה֣וּא அவன் עֲנָ֗ה அனா אֲשֶׁ֨ר யார் מָצָ֤א கண்டுபிடித்தான் אֶת־ ∅ הַיֵּמִם֙ –அந்தவெந்நீர்ஊற்றுகளை בַּמִּדְבָּ֔ר –இல்வனாந்தரத்தில் בִּרְעֹת֥וֹ –இல்அவன்மேய்த்தபோது אֶת־ ∅ הַחֲמֹרִ֖ים –அந்தகழுதைகளை לְצִבְע֥וֹן –க்குசிபியோன் אָבִֽיו׃ தன்தகப்பன்
சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்திரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கும்போது, சூடான தண்ணிரைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான்.
25 וְאֵ֥לֶּה –மற்றும்இவர்கள் בְנֵֽי־ புத்திரர் עֲנָ֖ה அனாவின் דִּשֹׁ֑ן திசோன் וְאָהֳלִיבָמָ֖ה –மற்றும்ஒகொலிபாமா בַּת־ மகள் עֲנָֽה׃ அனாவின்
ஆனாகின் பிள்ளைகள் திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் மகள்.
26 וְאֵ֖לֶּה –மற்றும்இவர்கள் בְּנֵ֣י புத்திரர் דִישָׁ֑ן தீசானின் חֶמְדָּ֥ן எம்தான் וְאֶשְׁבָּ֖ן –மற்றும்எஷ்பான் וְיִתְרָ֥ן –மற்றும்இத்ரான் וּכְרָֽן׃ –மற்றும்கேரான்
திஷோனுடைய மகன்கள் எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
27 אֵ֖לֶּה இவர்கள் בְּנֵי־ புத்திரர் אֵ֑צֶר ஏத்சேரின் בִּלְהָ֥ן பில்கான் וְזַעֲוָ֖ן –மற்றும்சாவான் וַעֲקָֽן׃ –மற்றும்அக்கான்
ஏத்சேருடைய மகன்கள் பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.
28 אֵ֥לֶּה இவர்கள் בְנֵֽי־ புத்திரர் דִישָׁ֖ן தீசானின் ע֥וּץ ஊத்ஸ் וַאֲרָֽן׃ –மற்றும்அரான்
திஷானுடைய மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
29 אֵ֖לֶּה இவர்கள் אַלּוּפֵ֣י தலைவர்கள் הַחֹרִ֑י –அந்தஓரியரின் אַלּ֤וּף தலைவர் לוֹטָן֙ லோத்தான் אַלּ֣וּף தலைவர் שׁוֹבָ֔ל சோபால் אַלּ֥וּף தலைவர் צִבְע֖וֹן சிபியோன் אַלּ֥וּף தலைவர் עֲנָֽה׃ அனா
ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள் லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு,
30 אַלּ֥וּף தலைவர் דִּשֹׁ֛ן திசோன் אַלּ֥וּף தலைவர் אֵ֖צֶר ஏத்சேர் אַלּ֣וּף தலைவர் דִּישָׁ֑ן தீசான் אֵ֣לֶּה இவர்கள் אַלּוּפֵ֧י தலைவர்கள் הַחֹרִ֛י –அந்தஓரியரின் לְאַלֻּפֵיהֶ֖ם –க்குஅவர்கள்தலைவர்கள் בְּאֶ֥רֶץ –இல்தேசத்தில் שֵׂעִֽיר׃ சேயீர் פ ¶
திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.
31 וְאֵ֙לֶּה֙ –மற்றும்இவர்கள் הַמְּלָכִ֔ים –அந்தராஜாக்கள் אֲשֶׁ֥ר யார் מָלְכ֖וּ ஆட்சிசெய்தார்கள் בְּאֶ֣רֶץ –இல்தேசத்தில் אֱד֑וֹם ஏதோம் לִפְנֵ֥י –க்குமுன் מְלָךְ־ ஆட்சிசெய்தது מֶ֖לֶךְ ராஜா לִבְנֵ֥י –க்குபுத்திரரின் יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேல்
இஸ்ரவேல் வம்சத்தார்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன:
32 וַיִּמְלֹ֣ךְ –மற்றும்ஆட்சிசெய்தான் בֶּאֱד֔וֹם –இல்ஏதோம் בֶּ֖לַע பேலா בֶּן־ மகன் בְּע֑וֹר பெயோர் וְשֵׁ֥ם –மற்றும்பெயர் עִיר֖וֹ அவன்நகரத்தின் דִּנְהָֽבָה׃ தின்ஹாபா
பேயோருடைய மகனாகிய பேலா ஏதோமிலே ஆட்சிசெய்தான்; அவனுடைய பட்டணத்திற்குத் தின்காபா என்று பெயர்.
33 וַיָּ֖מָת –மற்றும்இறந்தான் בָּ֑לַע பேலா וַיִּמְלֹ֣ךְ –மற்றும்ஆட்சிசெய்தான் תַּחְתָּ֔יו அவனுக்குப்பதிலாக יוֹבָ֥ב யோபாப் בֶּן־ மகன் זֶ֖רַח செராக் מִבָּצְרָֽה׃ –இருந்துபொஸ்ரா
பேலா இறந்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய மகனாகிய யோபாப் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
34 וַיָּ֖מָת –மற்றும்இறந்தான் יוֹבָ֑ב யோபாப் וַיִּמְלֹ֣ךְ –மற்றும்ஆட்சிசெய்தான் תַּחְתָּ֔יו அவனுக்குப்பதிலாக חֻשָׁ֖ם ஊசாம் מֵאֶ֥רֶץ –இருந்துதேசத்தில் הַתֵּימָנִֽי׃ –அந்ததேமானியன்
யோபாப் இறந்தபின், தேமானிய தேசத்தானாகிய ஊஷாம் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
35 וַיָּ֖מָת –மற்றும்இறந்தான் חֻשָׁ֑ם ஊசாம் וַיִּמְלֹ֨ךְ –மற்றும்ஆட்சிசெய்தான் תַּחְתָּ֜יו அவனுக்குப்பதிலாக הֲדַ֣ד ஆதாத் בֶּן־ மகன் בְּדַ֗ד பெதாத் הַמַּכֶּ֤ה –அந்தஅடித்தவன் אֶת־ ∅ מִדְיָן֙ மீதியானை בִּשְׂדֵ֣ה –இல்வெளியில் מוֹאָ֔ב மோவாப் וְשֵׁ֥ם –மற்றும்பெயர் עִיר֖וֹ அவன்நகரத்தின் עֲוִֽית׃ அவீத்
ஊஷாம் இறந்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியர்களை முறியடித்த பேதாதின் மகனாகிய ஆதாத் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்திற்கு ஆவீத் என்று பெயர்.
36 וַיָּ֖מָת –மற்றும்இறந்தான் הֲדָ֑ד ஆதாத் וַיִּמְלֹ֣ךְ –மற்றும்ஆட்சிசெய்தான் תַּחְתָּ֔יו அவனுக்குப்பதிலாக שַׂמְלָ֖ה சம்லா מִמַּשְׂרֵקָֽה׃ –இருந்துமஸ்ரேக்கா
ஆதாத் இறந்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
37 וַיָּ֖מָת –மற்றும்இறந்தான் שַׂמְלָ֑ה சம்லா וַיִּמְלֹ֣ךְ –மற்றும்ஆட்சிசெய்தான் תַּחְתָּ֔יו அவனுக்குப்பதிலாக שָׁא֖וּל சவுல் מֵרְחֹב֥וֹת –இருந்துரெகோபோத் הַנָּהָֽר׃ –அந்தநதியின்
சம்லா இறந்தபின், அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
38 וַיָּ֖מָת –மற்றும்இறந்தான் שָׁא֑וּל சவுல் וַיִּמְלֹ֣ךְ –மற்றும்ஆட்சிசெய்தான் תַּחְתָּ֔יו அவனுக்குப்பதிலாக בַּ֥עַל חָנָ֖ן பாகால்கானான் בֶּן־ மகன் עַכְבּֽוֹר׃ அக்போர்
சவுல் இறந்தபின், அக்போருடைய மகனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
39 וַיָּמָת֮ –மற்றும்இறந்தான் בַּ֣עַל חָנָ֣ן பாகால்கானான் בֶּן־ மகன் עַכְבּוֹר֒ அக்போர் וַיִּמְלֹ֤ךְ –மற்றும்ஆட்சிசெய்தான் תַּחְתָּיו֙ அவனுக்குப்பதிலாக הֲדַ֔ר ஆதார் וְשֵׁ֥ם –மற்றும்பெயர் עִיר֖וֹ அவன்நகரத்தின் פָּ֑עוּ பாகூ וְשֵׁ֨ם –மற்றும்பெயர் אִשְׁתּ֤וֹ அவன்மனைவியின் מְהֵֽיטַבְאֵל֙ மேகெத்தபேல் בַּת־ மகள் מַטְרֵ֔ד மத்ரேத் בַּ֖ת மகள் מֵ֥י זָהָֽב׃ மேசாகாப்
அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அவனுடைய பட்டணத்திற்குப் பாகு என்று பெயர்; அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய மகளும் மேசகாவின் மகளுமாக இருந்தாள்.
40 וְ֠אֵלֶּה –மற்றும்இவர்கள் שְׁמ֞וֹת பெயர்கள் אַלּוּפֵ֤י தலைவர்கள் עֵשָׂו֙ ஏசாவின் לְמִשְׁפְּחֹתָ֔ם –க்குஅவர்கள்குடும்பங்களுக்கு לִמְקֹמֹתָ֖ם –க்குஅவர்கள்இடங்களுக்கு בִּשְׁמֹתָ֑ם –இல்அவர்கள்பெயர்களில் אַלּ֥וּף தலைவர் תִּמְנָ֛ע திம்னா אַלּ֥וּף தலைவர் עַֽלְוָ֖ה அல்வா אַלּ֥וּף தலைவர் יְתֵֽת׃ யெதேத்
தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும், குடியிருப்புகளின்படியேயும், பெயர்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய பெயர்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,
41 אַלּ֧וּף தலைவர் אָהֳלִיבָמָ֛ה ஒகொலிபாமா אַלּ֥וּף தலைவர் אֵלָ֖ה ஏலா אַלּ֥וּף தலைவர் פִּינֹֽן׃ பினோன்
அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
42 אַלּ֥וּף தலைவர் קְנַ֛ז கேனாஸ் אַלּ֥וּף தலைவர் תֵּימָ֖ן தேமான் אַלּ֥וּף தலைவர் מִבְצָֽר׃ மிப்சார்
கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
43 אַלּ֥וּף தலைவர் מַגְדִּיאֵ֖ל மக்தியேல் אַלּ֣וּף தலைவர் עִירָ֑ם ஈராம் אֵ֣לֶּה ׀ இவர்கள் אַלּוּפֵ֣י தலைவர்கள் אֱד֗וֹם ஏதோமின் לְמֹֽשְׁבֹתָם֙ –க்குஅவர்கள்குடியிருப்புகளுக்கு בְּאֶ֣רֶץ –இல்தேசத்தில் אֲחֻזָּתָ֔ם அவர்கள்சொந்தத்தின் ה֥וּא அவன் עֵשָׂ֖ו ஏசா אֲבִ֥י தகப்பன் אֱדֽוֹם׃ ஏதோம் פ ¶
மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.