1 וְאֶת־ –மற்றும்–ஐ הַמִּשְׁכָּ֥ן –அந்த–வாசஸ்தலம் תַּעֲשֶׂ֖ה செய்வாய் עֶ֣שֶׂר பத்து יְרִיעֹ֑ת திரைகள் שֵׁ֣שׁ மெல்லிய–துணி מָשְׁזָ֗ר முறுக்கப்பட்ட וּתְכֵ֤לֶת –மற்றும்–நீலம் וְאַרְגָּמָן֙ –மற்றும்–இரத்தாம்பரம் וְתֹלַ֣עַת –மற்றும்–புழு שָׁנִ֔י சிவப்பு כְּרֻבִ֛ים கேருபீன்கள் מַעֲשֵׂ֥ה வேலைப்பாடு חֹשֵׁ֖ב திறமையான–வேலைஞன் תַּעֲשֶׂ֥ה செய்வாய் אֹתָֽם׃ அவைகளை
“மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் ஆசரிப்பு கூடாரத்தை உண்டாக்கு; அவைகளில் விசித்திர பின்னல்வேலையாகக் கேருபீன்களைச் செய்.
2 אֹ֣רֶךְ ׀ நீளம் הַיְרִיעָ֣ה –அந்த–திரை הָֽאַחַ֗ת –அந்த–ஒன்று שְׁמֹנֶ֤ה இருபத்தெட்டு וְעֶשְׂרִים֙ –மற்றும்–இருபது בָּֽאַמָּ֔ה –அந்த–முழம் וְרֹ֙חַב֙ –மற்றும்–அகலம் אַרְבַּ֣ע நான்கு בָּאַמָּ֔ה –அந்த–முழம் הַיְרִיעָ֖ה –அந்த–திரை הָאֶחָ֑ת –அந்த–ஒன்று מִדָּ֥ה அளவு אַחַ֖ת ஒன்று לְכָל־ –க்கு–எல்லா הַיְרִיעֹֽת׃ –அந்த–திரைகள்
ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும், நான்கு முழ அகலமுமாக இருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருக்கவேண்டும்.
3 חֲמֵ֣שׁ ஐந்து הַיְרִיעֹ֗ת –அந்த–திரைகள் תִּֽהְיֶ֙יןָ֙ இருக்கும் חֹֽבְרֹ֔ת இணைக்கப்பட்ட אִשָּׁ֖ה ஒவ்வொன்றும் אֶל־ –நோக்கி– אֲחֹתָ֑הּ அதன்–சகோதரி וְחָמֵ֤שׁ –மற்றும்–ஐந்து יְרִיעֹת֙ திரைகள் חֹֽבְרֹ֔ת இணைக்கப்பட்ட אִשָּׁ֖ה ஒவ்வொன்றும் אֶל־ –நோக்கி– אֲחֹתָֽהּ׃ அதன்–சகோதரி
ஐந்து மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
4 וְעָשִׂ֜יתָ –மற்றும்–செய்வாய் לֻֽלְאֹ֣ת கண்ணிகள் תְּכֵ֗לֶת நீலம் עַ֣ל –மேல்– שְׂפַ֤ת விளிம்பு הַיְרִיעָה֙ –அந்த–திரை הָאֶחָ֔ת –அந்த–ஒன்று מִקָּצָ֖ה முனையிலிருந்து בַּחֹבָ֑רֶת –அந்த–இணைப்பில் וְכֵ֤ן –மற்றும்–அவ்வாறே תַּעֲשֶׂה֙ செய்வாய் בִּשְׂפַ֣ת விளிம்பில் הַיְרִיעָ֔ה –அந்த–திரை הַקִּ֣יצוֹנָ֔ה –அந்த–வெளிப்புற בַּמַּחְבֶּ֖רֶת –அந்த–இணைப்பில் הַשֵּׁנִֽית׃ –அந்த–இரண்டாவது
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டாக்கு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரைகளின் ஓரத்திலும் அப்படியே செய்.
5 חֲמִשִּׁ֣ים ஐம்பது לֻֽלָאֹ֗ת கண்ணிகள் תַּעֲשֶׂה֮ செய்வாய் בַּיְרִיעָ֣ה –அந்த–திரையில் הָאֶחָת֒ –அந்த–ஒன்று וַחֲמִשִּׁ֣ים –மற்றும்–ஐம்பது לֻֽלָאֹ֗ת கண்ணிகள் תַּעֲשֶׂה֙ செய்வாய் בִּקְצֵ֣ה முனையில் הַיְרִיעָ֔ה –அந்த–திரை אֲשֶׁ֖ר –அது– בַּמַּחְבֶּ֣רֶת –அந்த–இணைப்பில் הַשֵּׁנִ֑ית –அந்த–இரண்டாவது מַקְבִּילֹת֙ எதிரெதிரான הַלֻּ֣לָאֹ֔ת –அந்த–கண்ணிகள் אִשָּׁ֖ה ஒவ்வொன்றும் אֶל־ –நோக்கி– אֲחֹתָֽהּ׃ அதன்–சகோதரி
காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கு.
6 וְעָשִׂ֕יתָ –மற்றும்–செய்வாய் חֲמִשִּׁ֖ים ஐம்பது קַרְסֵ֣י கொக்கிகள் זָהָ֑ב தங்கம் וְחִבַּרְתָּ֨ –மற்றும்–இணைப்பாய் אֶת־ –ஐ– הַיְרִיעֹ֜ת –அந்த–திரைகள் אִשָּׁ֤ה ஒவ்வொன்றும் אֶל־ –நோக்கி– אֲחֹתָהּ֙ அதன்–சகோதரி בַּקְּרָסִ֔ים –அந்த–கொக்கிகளால் וְהָיָ֥ה –மற்றும்–ஆகும் הַמִּשְׁכָּ֖ן –அந்த–வாசஸ்தலம் אֶחָֽד׃ ஒன்று פ ¶
ஐம்பது பொன் கொக்கிகளை செய்து, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைக்கப்படவேண்டும். அப்பொழுது ஆசரிப்பு கூடாரம் ஒன்றாகும்.
7 וְעָשִׂ֙יתָ֙ –மற்றும்–செய்வாய் יְרִיעֹ֣ת திரைகள் עִזִּ֔ים ஆட்டுமயிர் לְאֹ֖הֶל –ஒரு–கூடாரத்திற்கு עַל־ –மேல்– הַמִּשְׁכָּ֑ן –அந்த–வாசஸ்தலம் עַשְׁתֵּי־ பதினொன்று עֶשְׂרֵ֥ה பத்து יְרִיעֹ֖ת திரைகள் תַּעֲשֶׂ֥ה செய்வாய் אֹתָֽם׃ அவைகளை
“ஆசரிப்பு கூடாரத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டு ரோமத்தால் பதினொரு மூடுதிரைகளை உண்டாக்கு.
8 אֹ֣רֶךְ ׀ நீளம் הַיְרִיעָ֣ה –அந்த–திரை הָֽאַחַ֗ת –அந்த–ஒன்று שְׁלֹשִׁים֙ முப்பது בָּֽאַמָּ֔ה –அந்த–முழம் וְרֹ֙חַב֙ –மற்றும்–அகலம் אַרְבַּ֣ע நான்கு בָּאַמָּ֔ה –அந்த–முழம் הַיְרִיעָ֖ה –அந்த–திரை הָאֶחָ֑ת –அந்த–ஒன்று מִדָּ֣ה அளவு אַחַ֔ת ஒன்று לְעַשְׁתֵּ֥י –க்கு–பதினொன்று עֶשְׂרֵ֖ה பத்து יְרִיעֹֽת׃ திரைகள்
ஒவ்வொரு மூடுதிரைகளும் முப்பது முழ நீளமும், நான்கு முழ அகலமாக இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும்.
9 וְחִבַּרְתָּ֞ –மற்றும்–இணைப்பாய் אֶת־ –ஐ– חֲמֵ֤שׁ ஐந்து הַיְרִיעֹת֙ –அந்த–திரைகள் לְבָ֔ד தனியாக וְאֶת־ –மற்றும்–ஐ– שֵׁ֥שׁ ஆறு הַיְרִיעֹ֖ת –அந்த–திரைகள் לְבָ֑ד தனியாக וְכָפַלְתָּ֙ –மற்றும்–மடிப்பாய் אֶת־ –ஐ– הַיְרִיעָ֣ה –அந்த–திரை הַשִּׁשִּׁ֔ית –அந்த–ஆறாவது אֶל־ –நோக்கி– מ֖וּל முகத்துக்கு–எதிரே פְּנֵ֥י முகம் הָאֹֽהֶל׃ –அந்த–கூடாரம்
ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடவேண்டும்.
10 וְעָשִׂ֜יתָ –மற்றும்–செய்வாய் חֲמִשִּׁ֣ים ஐம்பது לֻֽלָאֹ֗ת கண்ணிகள் עַ֣ל –மேல்– שְׂפַ֤ת விளிம்பு הַיְרִיעָה֙ –அந்த–திரை הָֽאֶחָ֔ת –அந்த–ஒன்று הַקִּיצֹנָ֖ה –அந்த–வெளிப்புற בַּחֹבָ֑רֶת –அந்த–இணைப்பில் וַחֲמִשִּׁ֣ים –மற்றும்–ஐம்பது לֻֽלָאֹ֗ת கண்ணிகள் עַ֚ל –மேல்– שְׂפַ֣ת விளிம்பு הַיְרִיעָ֔ה –அந்த–திரை הַחֹבֶ֖רֶת –அந்த–இணைக்கிற הַשֵּׁנִֽית׃ –அந்த–இரண்டாவது
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
11 וְעָשִׂ֛יתָ –மற்றும்–செய்வாய் קַרְסֵ֥י கொக்கிகள் נְחֹ֖שֶׁת வெண்கலம் חֲמִשִּׁ֑ים ஐம்பது וְהֵבֵאתָ֤ –மற்றும்–போடுவாய் אֶת־ –ஐ– הַקְּרָסִים֙ –அந்த–கொக்கிகள் בַּלֻּ֣לָאֹ֔ת –அந்த–கண்ணிகளில் וְחִבַּרְתָּ֥ –மற்றும்–இணைப்பாய் אֶת־ –ஐ– הָאֹ֖הֶל –அந்த–கூடாரம் וְהָיָ֥ה –மற்றும்–ஆகும் אֶחָֽד׃ ஒன்று
ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடவேண்டும்.
12 וְסֶ֙רַח֙ –மற்றும்–தொங்குதல் הָעֹדֵ֔ף –அந்த–மிஞ்சுகிற בִּירִיעֹ֖ת –அந்த–திரைகளில் הָאֹ֑הֶל –அந்த–கூடாரம் חֲצִ֤י பாதி הַיְרִיעָה֙ –அந்த–திரை הָעֹדֶ֔פֶת –அந்த–மிஞ்சுகிற תִּסְרַ֕ח தொங்கும் עַ֖ל –மேல்– אֲחֹרֵ֥י பின்புறம் הַמִּשְׁכָּֽן׃ –அந்த–வாசஸ்தலம்
கூடாரத்தின் மூடுதிரைகளில் மீதமான பாதிமூடுதிரை ஆசரிப்பு கூடாரத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.
13 וְהָאַמָּ֨ה –மற்றும்–அந்த–முழம் מִזֶּ֜ה இந்தப்–பக்கம் וְהָאַמָּ֤ה –மற்றும்–அந்த–முழம் מִזֶּה֙ இந்தப்–பக்கம் בָּעֹדֵ֔ף –அந்த–மிஞ்சுகிற בְּאֹ֖רֶךְ நீளத்தில் יְרִיעֹ֣ת திரைகள் הָאֹ֑הֶל –அந்த–கூடாரம் יִהְיֶ֨ה இருக்கும் סָר֜וּחַ தொங்கும் עַל־ –மேல்– צִדֵּ֧י பக்கங்கள் הַמִּשְׁכָּ֛ן –அந்த–வாசஸ்தலம் מִזֶּ֥ה இந்தப்–பக்கம் וּמִזֶּ֖ה –மற்றும்–இந்தப்–பக்கம் לְכַסֹּתֽוֹ׃ –மூட–அதை
கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்தில் மீதியானதில், இந்தப்பக்கத்தில் ஒரு முழமும் அந்தப்பக்கத்தில் ஒரு முழமும் ஆசரிப்பு கூடாரத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.
14 וְעָשִׂ֤יתָ –மற்றும்–செய்வாய் מִכְסֶה֙ மூடி לָאֹ֔הֶל –அந்த–கூடாரத்திற்கு עֹרֹ֥ת தோல்கள் אֵילִ֖ם ஆட்டுக்கடா מְאָדָּמִ֑ים சிவப்பாக்கப்பட்ட וּמִכְסֵ֛ה –மற்றும்–மூடி עֹרֹ֥ת தோல்கள் תְּחָשִׁ֖ים தகஸ் מִלְמָֽעְלָה׃ மேலே פ ¶
சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத் தோலால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் மெல்லிய தோலால் ஒரு மூடியையும் உண்டாக்கவேண்டும்.
15 וְעָשִׂ֥יתָ –மற்றும்–செய்வாய் אֶת־ –ஐ– הַקְּרָשִׁ֖ים –அந்த–பலகைகள் לַמִּשְׁכָּ֑ן –அந்த–வாசஸ்தலத்திற்கு עֲצֵ֥י மரங்கள் שִׁטִּ֖ים சீத்திம் עֹמְדִֽים׃ நிற்கிற
“ஆசரிப்பு கூடாரத்திற்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும்.
16 עֶ֥שֶׂר பத்து אַמּ֖וֹת முழங்கள் אֹ֣רֶךְ நீளம் הַקָּ֑רֶשׁ –அந்த–பலகை וְאַמָּה֙ –மற்றும்–முழம் וַחֲצִ֣י –மற்றும்–பாதி הָֽאַמָּ֔ה –அந்த–முழம் רֹ֖חַב அகலம் הַקֶּ֥רֶשׁ –அந்த–பலகை הָאֶחָֽד׃ –அந்த–ஒன்று
ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கவேண்டும்.
17 שְׁתֵּ֣י இரண்டு יָד֗וֹת கைகள் לַקֶּ֙רֶשׁ֙ –அந்த–பலகைக்கு הָאֶחָ֔ד –அந்த–ஒன்று מְשֻׁלָּבֹ֔ת இணைக்கப்பட்ட אִשָּׁ֖ה ஒவ்வொன்றும் אֶל־ –நோக்கி– אֲחֹתָ֑הּ அதன்–சகோதரி כֵּ֣ן அவ்வாறே תַּעֲשֶׂ֔ה செய்வாய் לְכֹ֖ל –க்கு–எல்லா קַרְשֵׁ֥י பலகைகள் הַמִּשְׁכָּֽן׃ –அந்த–வாசஸ்தலம்
ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் இரண்டு பொருந்தும் முனை இருக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரங்களில் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்யவேண்டும்.
18 וְעָשִׂ֥יתָ –மற்றும்–செய்வாய் אֶת־ –ஐ– הַקְּרָשִׁ֖ים –அந்த–பலகைகள் לַמִּשְׁכָּ֑ן –அந்த–வாசஸ்தலத்திற்கு עֶשְׂרִ֣ים இருபது קֶ֔רֶשׁ பலகை לִפְאַ֖ת –அந்த–பக்கத்திற்கு נֶ֥גְבָּה தெற்கே תֵימָֽנָה׃ தெற்கு–திசையில்
ஆசரிப்புக் கூடாரத்திற்காக செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகைகள் தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கட்டும்.
19 וְאַרְבָּעִים֙ –மற்றும்–நாற்பது אַדְנֵי־ பாதங்கள் כֶ֔סֶף வெள்ளி תַּעֲשֶׂ֕ה செய்வாய் תַּ֖חַת –கீழே– עֶשְׂרִ֣ים இருபது הַקָּ֑רֶשׁ –அந்த–பலகை שְׁנֵ֨י இரண்டு אֲדָנִ֜ים பாதங்கள் תַּֽחַת־ –கீழே– הַקֶּ֤רֶשׁ –அந்த–பலகை הָאֶחָד֙ –அந்த–ஒன்று לִשְׁתֵּ֣י –க்கு–இரண்டு יְדֹתָ֔יו அதன்–கைகள் וּשְׁנֵ֧י –மற்றும்–இரண்டு אֲדָנִ֛ים பாதங்கள் תַּֽחַת־ –கீழே– הַקֶּ֥רֶשׁ –அந்த–பலகை הָאֶחָ֖ד –அந்த–ஒன்று לִשְׁתֵּ֥י –க்கு–இரண்டு יְדֹתָֽיו׃ அதன்–கைகள்
அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
20 וּלְצֶ֧לַע –மற்றும்–பக்கத்திற்கு הַמִּשְׁכָּ֛ן –அந்த–வாசஸ்தலம் הַשֵּׁנִ֖ית –அந்த–இரண்டாவது לִפְאַ֣ת –அந்த–பக்கத்திற்கு צָפ֑וֹן வடக்கே עֶשְׂרִ֖ים இருபது קָֽרֶשׁ׃ பலகை
ஆசரிப்பு கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,
21 וְאַרְבָּעִ֥ים –மற்றும்–நாற்பது אַדְנֵיהֶ֖ם அவைகளின்–பாதங்கள் כָּ֑סֶף வெள்ளி שְׁנֵ֣י இரண்டு אֲדָנִ֗ים பாதங்கள் תַּ֚חַת –கீழே– הַקֶּ֣רֶשׁ –அந்த–பலகை הָֽאֶחָ֔ד –அந்த–ஒன்று וּשְׁנֵ֣י –மற்றும்–இரண்டு אֲדָנִ֔ים பாதங்கள் תַּ֖חַת –கீழே– הַקֶּ֥רֶשׁ –அந்த–பலகை הָאֶחָֽד׃ –அந்த–ஒன்று
அவைகளின் கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
22 וּֽלְיַרְכְּתֵ֥י –மற்றும்–பின்பக்கத்திற்கு הַמִּשְׁכָּ֖ן –அந்த–வாசஸ்தலம் יָ֑מָּה மேற்கே תַּעֲשֶׂ֖ה செய்வாய் שִׁשָּׁ֥ה ஆறு קְרָשִֽׁים׃ பலகைகள்
ஆசரிப்பு கூடாரத்தின் மேற்குப்பக்கத்திற்கு ஆறு பலகைகளையும்,
23 וּשְׁנֵ֤י –மற்றும்–இரண்டு קְרָשִׁים֙ பலகைகள் תַּעֲשֶׂ֔ה செய்வாய் לִמְקֻצְעֹ֖ת –அந்த–மூலைகளுக்கு הַמִּשְׁכָּ֑ן –அந்த–வாசஸ்தலம் בַּיַּרְכָתָֽיִם׃ –அந்த–பின்பக்கங்களில்
ஆசரிப்பு கூடாரத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டாக்கவேண்டும்.
24 וְיִֽהְי֣וּ –மற்றும்–இருக்கும் תֹֽאֲמִים֮ இரட்டையாய் מִלְּמַטָּה֒ கீழிருந்து וְיַחְדָּ֗ו –மற்றும்–ஒன்றாக יִהְי֤וּ இருக்கும் תַמִּים֙ முழுமையாய் עַל־ –மேல்– רֹאשׁ֔וֹ அதன்–தலை אֶל־ –நோக்கி– הַטַּבַּ֖עַת –அந்த–வளையம் הָאֶחָ֑ת –அந்த–ஒன்று כֵּ֚ן அவ்வாறே יִהְיֶ֣ה இருக்கும் לִשְׁנֵיהֶ֔ם –க்கு–இரண்டும் לִשְׁנֵ֥י –க்கு–இரண்டு הַמִּקְצֹעֹ֖ת –அந்த–மூலைகள் יִהְיֽוּ׃ இருக்கும்
அவைகள் கீழே சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்கு ஆகும்.
25 וְהָיוּ֙ –மற்றும்–இருக்கும் שְׁמֹנָ֣ה எட்டு קְרָשִׁ֔ים பலகைகள் וְאַדְנֵיהֶ֣ם –மற்றும்–அவைகளின்–பாதங்கள் כֶּ֔סֶף வெள்ளி שִׁשָּׁ֥ה பதினாறு עָשָׂ֖ר பத்து אֲדָנִ֑ים பாதங்கள் שְׁנֵ֣י இரண்டு אֲדָנִ֗ים பாதங்கள் תַּ֚חַת –கீழே– הַקֶּ֣רֶשׁ –அந்த–பலகை הָאֶחָ֔ד –அந்த–ஒன்று וּשְׁנֵ֣י –மற்றும்–இரண்டு אֲדָנִ֔ים பாதங்கள் תַּ֖חַת –கீழே– הַקֶּ֥רֶשׁ –அந்த–பலகை הָאֶחָֽד׃ –அந்த–ஒன்று
அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.
26 וְעָשִׂ֥יתָ –மற்றும்–செய்வாய் בְרִיחִ֖ם தாழ்ப்பாள்கள் עֲצֵ֣י மரங்கள் שִׁטִּ֑ים சீத்திம் חֲמִשָּׁ֕ה ஐந்து לְקַרְשֵׁ֥י –அந்த–பலகைகளுக்கு צֶֽלַע־ பக்கம் הַמִּשְׁכָּ֖ן –அந்த–வாசஸ்தலம் הָאֶחָֽד׃ –அந்த–ஒன்று
“சீத்திம் மரத்தால் ஆசரிப்பு கூடாரத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
27 וַחֲמִשָּׁ֣ה –மற்றும்–ஐந்து בְרִיחִ֔ם தாழ்ப்பாள்கள் לְקַרְשֵׁ֥י –அந்த–பலகைகளுக்கு צֶֽלַע־ பக்கம் הַמִּשְׁכָּ֖ן –அந்த–வாசஸ்தலம் הַשֵּׁנִ֑ית –அந்த–இரண்டாவது וַחֲמִשָּׁ֣ה –மற்றும்–ஐந்து בְרִיחִ֗ם தாழ்ப்பாள்கள் לְקַרְשֵׁי֙ –அந்த–பலகைகளுக்கு צֶ֣לַע பக்கம் הַמִּשְׁכָּ֔ן –அந்த–வாசஸ்தலம் לַיַּרְכָתַ֖יִם –அந்த–பின்பக்கங்களுக்கு יָֽמָּה׃ மேற்கே
ஆசரிப்பு கூடாரத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், ஆசரிப்பு கூடாரத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் செய்.
28 וְהַבְּרִ֥יחַ –மற்றும்–அந்த–தாழ்ப்பாள் הַתִּיכֹ֖ן –அந்த–நடு בְּת֣וֹךְ நடுவில் הַקְּרָשִׁ֑ים –அந்த–பலகைகள் מַבְרִ֕חַ ஓடுகிற מִן־ –இருந்து– הַקָּצֶ֖ה –அந்த–முனை אֶל־ –நோக்கி– הַקָּצֶֽה׃ –அந்த–முனை
நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைவரை பலகைகளின் மையத்தில் ஊடுருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
29 וְֽאֶת־ –மற்றும்–ஐ– הַקְּרָשִׁ֞ים –அந்த–பலகைகள் תְּצַפֶּ֣ה பொன்தகடு–பதிப்பாய் זָהָ֗ב தங்கம் וְאֶת־ –மற்றும்–ஐ– טַבְּעֹֽתֵיהֶם֙ அவைகளின்–வளையங்கள் תַּעֲשֶׂ֣ה செய்வாய் זָהָ֔ב தங்கம் בָּתִּ֖ים வீடுகள் לַבְּרִיחִ֑ם –அந்த–தாழ்ப்பாள்களுக்கு וְצִפִּיתָ֥ –மற்றும்–பொன்தகடு–பதிப்பாய் אֶת־ –ஐ– הַבְּרִיחִ֖ם –அந்த–தாழ்ப்பாள்கள் זָהָֽב׃ தங்கம்
பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் செய்து, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடவேண்டும்.
30 וַהֲקֵמֹתָ֖ –மற்றும்–எழுப்புவாய் אֶת־ –ஐ– הַמִּשְׁכָּ֑ן –அந்த–வாசஸ்தலம் כְּמִ֨שְׁפָּט֔וֹ அதின்–நியாயப்படி אֲשֶׁ֥ר –அது– הָרְאֵ֖יתָ காண்பிக்கப்பட்டது בָּהָֽר׃ –அந்த–மலையில் ס ¶
இப்படியாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி ஆசரிப்பு கூடாரத்தை அமைக்கவேண்டும்.
31 וְעָשִׂ֣יתָ –மற்றும்–செய்வாய் פָרֹ֗כֶת திரைச்சீலை תְּכֵ֧לֶת நீலம் וְאַרְגָּמָ֛ן –மற்றும்–இரத்தாம்பரம் וְתוֹלַ֥עַת –மற்றும்–புழு שָׁנִ֖י சிவப்பு וְשֵׁ֣שׁ –மற்றும்–மெல்லிய–துணி מָשְׁזָ֑ר முறுக்கப்பட்ட מַעֲשֵׂ֥ה வேலைப்பாடு חֹשֵׁ֛ב திறமையான–வேலைஞன் יַעֲשֶׂ֥ה செய்வான் אֹתָ֖הּ அதை כְּרֻבִֽים׃ கேருபீன்கள்
“இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு மூடுதிரையைச் செய்யவேண்டும்; அதிலே வேலைப்பாடு செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.
32 וְנָתַתָּ֣ה –மற்றும்–வைப்பாய் אֹתָ֗הּ அதை עַל־ –மேல்– אַרְבָּעָה֙ நான்கு עַמּוּדֵ֣י தூண்கள் שִׁטִּ֔ים சீத்திம் מְצֻפִּ֣ים பொன்தகடு–பதிக்கப்பட்ட זָהָ֔ב தங்கம் וָוֵיהֶ֖ם அவைகளின்–கொக்கிகள் זָהָ֑ב தங்கம் עַל־ –மேல்– אַרְבָּעָ֖ה நான்கு אַדְנֵי־ பாதங்கள் כָֽסֶף׃ வெள்ளி
சீத்திம் மரத்தால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நான்கு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நான்கு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.
33 וְנָתַתָּ֣ה –மற்றும்–வைப்பாய் אֶת־ –ஐ– הַפָּרֹכֶת֮ –அந்த–திரைச்சீலை תַּ֣חַת –கீழே– הַקְּרָסִים֒ –அந்த–கொக்கிகள் וְהֵבֵאתָ֥ –மற்றும்–கொண்டுவருவாய் שָׁ֙מָּה֙ அங்கே מִבֵּ֣ית உள்ளே לַפָּרֹ֔כֶת –அந்த–திரைச்சீலைக்கு אֵ֖ת –ஐ– אֲר֣וֹן பெட்டி הָעֵד֑וּת –அந்த–சாட்சி וְהִבְדִּילָ֤ה –மற்றும்–பிரிக்கும் הַפָּרֹ֙כֶת֙ –அந்த–திரைச்சீலை לָכֶ֔ם உங்களுக்கு בֵּ֣ין –இடையே– הַקֹּ֔דֶשׁ –அந்த–பரிசுத்தம் וּבֵ֖ין –மற்றும்–இடையே– קֹ֥דֶשׁ பரிசுத்தம் הַקֳּדָשִֽׁים׃ –அந்த–பரிசுத்தங்கள்
கொக்கிகளின்கீழே அந்த மூடுதிரையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே மூடுதிரைக்குள்ளாக வைக்கவேண்டும்; அந்த மூடுதிரை பரிசுத்த இடத்திற்கும் மகா பரிசுத்த இடத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.
34 וְנָתַתָּ֙ –மற்றும்–வைப்பாய் אֶת־ –ஐ– הַכַּפֹּ֔רֶת –அந்த–கிருபாசனம் עַ֖ל –மேல்– אֲר֣וֹן பெட்டி הָעֵדֻ֑ת –அந்த–சாட்சி בְּקֹ֖דֶשׁ பரிசுத்தத்தில் הַקֳּדָשִֽׁים׃ –அந்த–பரிசுத்தங்கள்
மகா பரிசுத்த இடத்திலே சாட்சிப்பெட்டியின்மேல் கிருபாசனத்தை வைப்பாயாக;
35 וְשַׂמְתָּ֤ –மற்றும்–வைப்பாய் אֶת־ –ஐ– הַשֻּׁלְחָן֙ –அந்த–மேசை מִח֣וּץ வெளியே לַפָּרֹ֔כֶת –அந்த–திரைச்சீலைக்கு וְאֶת־ –மற்றும்–ஐ– הַמְּנֹרָה֙ –அந்த–விளக்குத்தண்டு נֹ֣כַח எதிரே הַשֻּׁלְחָ֔ן –அந்த–மேசை עַ֛ל –மேல்– צֶ֥לַע பக்கம் הַמִּשְׁכָּ֖ן –அந்த–வாசஸ்தலம் תֵּימָ֑נָה தெற்கு–திசையில் וְהַ֨שֻּׁלְחָ֔ן –மற்றும்–அந்த–மேசை תִּתֵּ֖ן வைப்பாய் עַל־ –மேல்– צֶ֥לַע பக்கம் צָפֽוֹן׃ வடக்கு
மூடுதிரைக்கு வெளியே மேஜையையும், மேஜைக்கு எதிரே ஆசரிப்பு கூடாரத்தின் தென்பக்கமாகக் குத்துவிளக்கை வைத்து, மேஜையை வடபக்கமாக வைப்பாயாக.
36 וְעָשִׂ֤יתָ –மற்றும்–செய்வாய் מָסָךְ֙ மறைப்பு לְפֶ֣תַח –க்கு–நுழைவாயில் הָאֹ֔הֶל –அந்த–கூடாரம் תְּכֵ֧לֶת நீலம் וְאַרְגָּמָ֛ן –மற்றும்–இரத்தாம்பரம் וְתוֹלַ֥עַת –மற்றும்–புழு שָׁנִ֖י சிவப்பு וְשֵׁ֣שׁ –மற்றும்–மெல்லிய–துணி מָשְׁזָ֑ר முறுக்கப்பட்ட מַעֲשֵׂ֖ה வேலைப்பாடு רֹקֵֽם׃ சித்திரத்–தையல்காரன்
இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்கு திரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,
37 וְעָשִׂ֣יתָ –மற்றும்–செய்வாய் לַמָּסָ֗ךְ –அந்த–மறைப்புக்கு חֲמִשָּׁה֙ ஐந்து עַמּוּדֵ֣י தூண்கள் שִׁטִּ֔ים சீத்திம் וְצִפִּיתָ֤ –மற்றும்–பொன்தகடு–பதிப்பாய் אֹתָם֙ அவைகளை זָהָ֔ב தங்கம் וָוֵיהֶ֖ם அவைகளின்–கொக்கிகள் זָהָ֑ב தங்கம் וְיָצַקְתָּ֣ –மற்றும்–வார்ப்பாய் לָהֶ֔ם அவைகளுக்கு חֲמִשָּׁ֖ה ஐந்து אַדְנֵ֥י பாதங்கள் נְחֹֽשֶׁת׃ வெண்கலம் ס ¶
அந்தத் தொங்கு திரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப்பாதங்களை வார்க்கவேண்டும்.