1 וַיְהִ֖י ஆனது אַחֲרֵ֣י பின்பு הַמַּגֵּפָ֑ה –வாதையின் פ — וַיֹּ֤אמֶר சொன்னார் יְהוָה֙ யெகோவா אֶל־ –நோக்கி מֹשֶׁ֔ה மோசேயை וְאֶ֧ל –நோக்கியும் אֶלְעָזָ֛ר எலெயாசாரை בֶּן־ மகன் אַהֲרֹ֥ן ஆரோனின் הַכֹּהֵ֖ן –ஆசாரியனை לֵאמֹֽר׃ சொல்லி
அந்த வாதை தீர்ந்தபின்பு, யெகோவா மோசேயையும் ஆரோனின் மகனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி:
2 שְׂא֞וּ எடுங்கள் אֶת־ – רֹ֣אשׁ ׀ தலைக்கணக்கை כָּל־ எல்லா עֲדַ֣ת சபையின் בְּנֵי־ புத்திரரின் יִשְׂרָאֵ֗ל இஸ்ரவேலின் מִבֶּ֨ן மகனிலிருந்து עֶשְׂרִ֥ים இருபது שָׁנָ֛ה வயது וָמַ֖עְלָה மேலும் לְבֵ֣ית வீட்டுக்கு אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் כָּל־ எல்லா יֹצֵ֥א புறப்படுகிற צָבָ֖א சேனையில் בְּיִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலிலே
“இஸ்ரவேல் மக்களின் எல்லா சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் எண்ணுங்கள்” என்றார்.
3 וַיְדַבֵּ֨ר பேசினார் מֹשֶׁ֜ה மோசே וְאֶלְעָזָ֧ר எலெயாசாரும் הַכֹּהֵ֛ן –ஆசாரியனும் אֹתָ֖ם அவர்களிடம் בְּעַֽרְבֹ֣ת சமவெளிகளிலே מוֹאָ֑ב மோவாபின் עַל־ –அருகே יַרְדֵּ֥ן யோர்தானின் יְרֵח֖וֹ எரிகோவின் לֵאמֹֽר׃ சொல்லி
அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு அருகிலே மோவாபின் சமவெளிகளிலே அவர்களோடு பேசி:
4 מִבֶּ֛ן மகனிலிருந்து עֶשְׂרִ֥ים இருபது שָׁנָ֖ה வயது וָמָ֑עְלָה மேலும் כַּאֲשֶׁר֩ கட்டளையிட்டபடி צִוָּ֨ה கட்டளையிட்டார் יְהוָ֤ה யெகோவா אֶת־ – מֹשֶׁה֙ மோசேக்கு וּבְנֵ֣י புத்திரரும் יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் הַיֹּצְאִ֖ים புறப்பட்டவர்கள் מֵאֶ֥רֶץ தேசத்திலிருந்து מִצְרָֽיִם׃ எகிப்தின்
“யெகோவா மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயது முதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள்” என்றார்கள்.
5 רְאוּבֵ֖ן ரூபன் בְּכ֣וֹר மூத்தவன் יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் בְּנֵ֣י புத்திரர் רְאוּבֵ֗ן ரூபனின் חֲנוֹךְ֙ ஆனோக்கு מִשְׁפַּ֣חַת குலம் הַחֲנֹכִ֔י –ஆனோக்கியரின் לְפַלּ֕וּא பல்லூவுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַפַּלֻּאִֽי׃ –பல்லூவியரின்
ரூபன் இஸ்ரவேலின் மூத்த மகன்: ரூபனுடைய மகன்கள், ஆனோக்கியர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான ஆனோக்கும், பல்லூவியர்கள் குடும்பத்திற்குத் தகப்பனான பல்லூவும்,
6 לְחֶצְרֹ֕ן எஸ்ரோனுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַֽחֶצְרוֹנִ֑י –எஸ்ரோனியரின் לְכַרְמִ֕י கர்மீக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַכַּרְמִֽי׃ –கர்மீயரின்
எஸ்ரோனியர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான எஸ்ரோனும், கர்மீயர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான கர்மீயுமே.
7 אֵ֖לֶּה இவைகள் מִשְׁפְּחֹ֣ת குலங்கள் הָרֻֽאוּבֵנִ֑י –ரூபனியரின் וַיִּהְי֣וּ ஆனார்கள் פְקֻדֵיהֶ֗ם அவர்கள்–எண்ணிக்கை שְׁלֹשָׁ֤ה மூன்று וְאַרְבָּעִים֙ நாற்பத்து אֶ֔לֶף ஆயிரம் וּשְׁבַ֥ע ஏழு מֵא֖וֹת நூறு וּשְׁלֹשִֽׁים׃ முப்பது
இவைகளே ரூபனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 43,730 பேர்.
8 וּבְנֵ֥י புத்திரர் פַלּ֖וּא பல்லூவின் אֱלִיאָֽב׃ எலியாப்
பல்லூவின் மகன் எலியாப்.
9 וּבְנֵ֣י புத்திரர் אֱלִיאָ֔ב எலியாபின் נְמוּאֵ֖ל நெமூவேல் וְדָתָ֣ן தாத்தான் וַאֲבִירָ֑ם அபிராம் הֽוּא־ அவன் דָתָ֨ן தாத்தான் וַאֲבִירָ֜ם அபிராமும் [קרואי] அழைக்கப்பட்டவர்கள் (קְרִיאֵ֣י) புகழ்பெற்றவர்கள் הָעֵדָ֗ה –சபையின் אֲשֶׁ֨ר – הִצּ֜וּ கலகம்செய்தார்கள் עַל־ –விரோதமாக מֹשֶׁ֤ה மோசேக்கும் וְעַֽל־ –விரோதமாகவும் אַהֲרֹן֙ ஆரோனுக்கும் בַּעֲדַת־ கூட்டத்திலே קֹ֔רַח கோராகின் בְּהַצֹּתָ֖ם கலகம்செய்ததில் עַל־ –விரோதமாக יְהוָֽה׃ யெகோவாவுக்கு
எலியாபின் மகன்கள் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பெயர்பெற்றவர்களாக இருந்து, யெகோவாவுக்கு எதிராகப் போராட்டம்செய்து, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக விவாதம்செய்தவர்கள்.
10 וַתִּפְתַּ֨ח திறந்தது הָאָ֜רֶץ –பூமி אֶת־ – פִּ֗יהָ தன்–வாயை וַתִּבְלַ֥ע விழுங்கியது אֹתָ֛ם அவர்களை וְאֶת־ – קֹ֖רַח கோராகையும் בְּמ֣וֹת சாவிலே הָעֵדָ֑ה –சபையின் בַּאֲכֹ֣ל பட்சித்ததில் הָאֵ֗שׁ –நெருப்பு אֵ֣ת – חֲמִשִּׁ֤ים ஐம்பது וּמָאתַ֙יִם֙ இருநூறு אִ֔ישׁ மனுஷரை וַיִּהְי֖וּ ஆனார்கள் לְנֵֽס׃ அடையாளமாக
பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி 250 பேரை எரித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.
11 וּבְנֵי־ புத்திரர் קֹ֖רַח கோராகின் לֹא־ இல்லை מֵֽתוּ׃ செத்தார்கள் ס —
கோராகின் மகன்களோ சாகவில்லை.
12 בְּנֵ֣י புத்திரர் שִׁמְעוֹן֮ சிமியோனின் לְמִשְׁפְּחֹתָם֒ குலங்களின்படி לִנְמוּאֵ֗ל நெமூவேலுக்கு מִשְׁפַּ֙חַת֙ குலம் הַנְּמ֣וּאֵלִ֔י –நெமூவேலியரின் לְיָמִ֕ין யாமீனுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַיָּמִינִ֑י –யாமீனியரின் לְיָכִ֕ין யாகீனுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַיָּכִינִֽי׃ –யாகீனியரின்
சிமியோனுடைய மகன்களின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியான நேமுவேலர்களின் குடும்பமும், யாமினியின் சந்ததியான, யாமினியர்களின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியர்களின் குடும்பமும்,
13 לְזֶ֕רַח சேராகுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַזַּרְחִ֑י –சேராகியரின் לְשָׁא֕וּל சவுலுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַשָּׁאוּלִֽי׃ –சவுலியரின்
சேராகின் சந்ததியான சேராகியர்களின் குடும்பமும், சவுலின் சந்ததியான சவுலியர்களின் குடும்பமுமே.
14 אֵ֖לֶּה இவைகள் מִשְׁפְּחֹ֣ת குலங்கள் הַשִּׁמְעֹנִ֑י –சிமியோனியரின் שְׁנַ֧יִם இரண்டு וְעֶשְׂרִ֛ים இருபத்து אֶ֖לֶף ஆயிரம் וּמָאתָֽיִם׃ இருநூறு ס —
இவைகளே சிமியோனியர்களின் குடும்பங்கள்; அவர்கள் 22,200 பேர்.
15 בְּנֵ֣י புத்திரர் גָד֮ காத்தின் לְמִשְׁפְּחֹתָם֒ குலங்களின்படி לִצְפ֗וֹן செப்போனுக்கு מִשְׁפַּ֙חַת֙ குலம் הַצְּפוֹנִ֔י –செப்போனியரின் לְחַגִּ֕י ஆக்கீக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַֽחַגִּ֑י –ஆக்கீயரின் לְשׁוּנִ֕י சூனீக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַשּׁוּנִֽי׃ –சூனீயரின்
காத்துடைய மகன்களின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியர்களின் குடும்பமும், அகியின் சந்ததியான ஆகியர்களின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியர்களின் குடும்பமும்,
16 לְאָזְנִ֕י ஒஸ்னீக்கு מִשְׁפַּ֖חַת குலம் הָאָזְנִ֑י –ஒஸ்னீயரின் לְעֵרִ֕י ஏரீக்கு מִשְׁפַּ֖חַת குலம் הָעֵרִֽי׃ –ஏரீயரின்
ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியர்களின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியர்களின் குடும்பமும்,
17 לַאֲר֕וֹד ஆரோதுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הָאֲרוֹדִ֑י –ஆரோதியரின் לְאַ֨רְאֵלִ֔י அரேலீக்கு מִשְׁפַּ֖חַת குலம் הָאַרְאֵלִֽי׃ –அரேலீயரின்
ஆரோதின் சந்ததியான ஆரோதியர்களின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியர்களின் குடும்பமுமே.
18 אֵ֛לֶּה இவைகள் מִשְׁפְּחֹ֥ת குலங்கள் בְּנֵֽי־ புத்திரரின் גָ֖ד காத்தின் לִפְקֻדֵיהֶ֑ם எண்ணிக்கையின்படி אַרְבָּעִ֥ים நாற்பது אֶ֖לֶף ஆயிரம் וַחֲמֵ֥שׁ ஐந்து מֵאֽוֹת׃ நூறு ס —
இவைகளே காத் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 40,500 பேர்.
19 בְּנֵ֥י புத்திரர் יְהוּדָ֖ה யூதாவின் עֵ֣ר ஏர் וְאוֹנָ֑ן ஓனானும் וַיָּ֥מָת செத்தார்கள் עֵ֛ר ஏர் וְאוֹנָ֖ן ஓனானும் בְּאֶ֥רֶץ தேசத்திலே כְּנָֽעַן׃ கானானின்
யூதாவின் மகன்கள் ஏர், ஓனான் என்பவர்கள்; ஏரும், ஓனானும் கானான்தேசத்தில் செத்தார்கள்.
20 וַיִּהְי֣וּ ஆனார்கள் בְנֵי־ புத்திரர் יְהוּדָה֮ யூதாவின் לְמִשְׁפְּחֹתָם֒ குலங்களின்படி לְשֵׁלָ֗ה சேலாவுக்கு מִשְׁפַּ֙חַת֙ குலம் הַשֵּׁ֣לָנִ֔י –சேலானியரின் לְפֶ֕רֶץ பேரேசுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַפַּרְצִ֑י –பேரேசியரின் לְזֶ֕רַח சேராகுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַזַּרְחִֽי׃ –சேராகியரின்
யூதாவுடைய மற்ற மகன்களின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியர்களின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியர்களின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராகியர்களின் குடும்பமுமே.
21 וַיִּהְי֣וּ ஆனார்கள் בְנֵי־ புத்திரர் פֶ֔רֶץ பேரேசின் לְחֶצְרֹ֕ן எஸ்ரோனுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַֽחֶצְרֹנִ֑י –எஸ்ரோனியரின் לְחָמ֕וּל ஆமூலுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הֶחָמוּלִֽי׃ –ஆமூலியரின்
பாரேசுடைய மகன்களின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியர்களின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியர்களின் குடும்பமுமே.
22 אֵ֛לֶּה இவைகள் מִשְׁפְּחֹ֥ת குலங்கள் יְהוּדָ֖ה யூதாவின் לִפְקֻדֵיהֶ֑ם எண்ணிக்கையின்படி שִׁשָּׁ֧ה ஆறு וְשִׁבְעִ֛ים எழுபது אֶ֖לֶף ஆயிரம் וַחֲמֵ֥שׁ ஐந்து מֵאֽוֹת׃ நூறு ס —
இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 76,500 பேர்.
23 בְּנֵ֤י புத்திரர் יִשָּׂשכָר֙ இச்சாக்காரின் לְמִשְׁפְּחֹתָ֔ם குலங்களின்படி תּוֹלָ֕ע தோலாவுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַתּוֹלָעִ֑י –தோலாவியரின் לְפֻוָ֕ה பூவாவுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַפּוּנִֽי׃ –பூனியரின்
இசக்காருடைய மகன்களின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியான தோலாவியர்களின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியர்களின் குடும்பமும்,
24 לְיָשׁ֕וּב யாசூபுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַיָּשׁוּבִ֑י –யாசூபியரின் לְשִׁמְרֹ֕ן சிம்ரோனுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַשִּׁמְרֹנִֽי׃ –சிம்ரோனியரின்
யாசூபின் சந்ததியான யாசூபியர்களின் குடும்பமும், சிம்ரோனின் சந்ததியான சிம்ரோனியர்களின் குடும்பமுமே.
25 אֵ֛לֶּה இவைகள் מִשְׁפְּחֹ֥ת குலங்கள் יִשָּׂשכָ֖ר இச்சாக்காரின் לִפְקֻדֵיהֶ֑ם எண்ணிக்கையின்படி אַרְבָּעָ֧ה நான்கு וְשִׁשִּׁ֛ים அறுபது אֶ֖לֶף ஆயிரம் וּשְׁלֹ֥שׁ மூன்று מֵאֽוֹת׃ நூறு ס —
இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து 64,300 பேர்.
26 בְּנֵ֣י புத்திரர் זְבוּלֻן֮ செபுலோனின் לְמִשְׁפְּחֹתָם֒ குலங்களின்படி לְסֶ֗רֶד சேரெதுக்கு מִשְׁפַּ֙חַת֙ குலம் הַסַּרְדִּ֔י –சேரெதியரின் לְאֵל֕וֹן ஏலோனுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הָאֵלֹנִ֑י –ஏலோனியரின் לְיַ֨חְלְאֵ֔ל யக்லெயேலுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַיַּחְלְאֵלִֽי׃ –யக்லெயேலியரின்
செபுலோனுடைய மகன்களின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியர்களின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியர்களின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியர்களின் குடும்பமுமே.
27 אֵ֛לֶּה இவைகள் מִשְׁפְּחֹ֥ת குலங்கள் הַזְּבוּלֹנִ֖י –செபுலோனியரின் לִפְקֻדֵיהֶ֑ם எண்ணிக்கையின்படி שִׁשִּׁ֥ים அறுபது אֶ֖לֶף ஆயிரம் וַחֲמֵ֥שׁ ஐந்து מֵאֽוֹת׃ நூறு ס —
இவைகளே செபுலோனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 60,500 பேர்.
28 בְּנֵ֥י புத்திரர் יוֹסֵ֖ף யோசேப்பின் לְמִשְׁפְּחֹתָ֑ם குலங்களின்படி מְנַשֶּׁ֖ה மனாச்சே וְאֶפְרָֽיִם׃ எப்ராயீமும்
யோசேப்புடைய மகனான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:
29 בְּנֵ֣י புத்திரர் מְנַשֶּׁ֗ה மனாச்சேயின் לְמָכִיר֙ மாகீருக்கு מִשְׁפַּ֣חַת குலம் הַמָּכִירִ֔י –மாகீரியரின் וּמָכִ֖יר மாகீரும் הוֹלִ֣יד பெற்றெடுத்தான் אֶת־ – גִּלְעָ֑ד கிலெயாதை לְגִלְעָ֕ד கிலெயாதுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַגִּלְעָדִֽי׃ –கிலெயாதியரின்
மனாசேயினுடைய மகன்களின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியர்களின் குடும்பமும், மாகீர் பெற்ற கீலேயாத்தின் சந்ததியான கிலெயாதியர்களின் குடும்பமும்,
30 אֵ֚לֶּה இவைகள் בְּנֵ֣י புத்திரர் גִלְעָ֔ד கிலெயாதின் אִיעֶ֕זֶר ஈயேசெருக்கு מִשְׁפַּ֖חַת குலம் הָאִֽיעֶזְרִ֑י –ஈயேசெரியரின் לְחֵ֕לֶק ஏலெக்குக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַֽחֶלְקִֽי׃ –ஏலெக்கியரின்
கீலேயாத் பெற்ற ஈயேசேர்களின் சந்ததியான ஈயேசேரியர்களின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியர்களின் குடும்பமும்,
31 וְאַ֨שְׂרִיאֵ֔ל அஸ்ரீயேலுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הָֽאַשְׂרִֽאֵלִ֑י –அஸ்ரீயேலியரின் וְשֶׁ֕כֶם செக்கேமுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַשִּׁכְמִֽי׃ –செக்கேமியரின்
அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலர்களின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியர்களின் குடும்பமும்,
32 וּשְׁמִידָ֕ע செமீதாவுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַשְּׁמִידָעִ֑י –செமீதாவியரின் וְחֵ֕פֶר ஏபேருக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַֽחֶפְרִֽי׃ –ஏபேரியரின்
செமீதாவின் சந்ததியான செமீதாவியர்களின் குடும்பமும், எப்பேரின் சந்ததியான எப்பேரியர்களின் குடும்பமுமே.
33 וּצְלָפְחָ֣ד செலோப்பெகாதும் בֶּן־ மகன் חֵ֗פֶר ஏபேரின் לֹא־ இல்லை הָ֥יוּ இருந்தார்கள் ל֛וֹ அவனுக்கு בָּנִ֖ים மகன்கள் כִּ֣י ஆனால் אִם־ – בָּנ֑וֹת குமாரத்திகள் וְשֵׁם֙ பெயர்கள் בְּנ֣וֹת குமாரத்திகளின் צְלָפְחָ֔ד செலோப்பெகாதின் מַחְלָ֣ה மக்லா וְנֹעָ֔ה நோவா חָגְלָ֥ה ஒக்லா מִלְכָּ֖ה மில்கா וְתִרְצָֽה׃ திர்சா
எப்பேரின் மகனான செலொப்பியாத்திற்கு மகன்கள் இல்லாமல், மகள்கள் மட்டும் இருந்தார்கள்; இவர்கள் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.
34 אֵ֖לֶּה இவைகள் מִשְׁפְּחֹ֣ת குலங்கள் מְנַשֶּׁ֑ה மனாச்சேயின் וּפְקֻ֣דֵיהֶ֔ם எண்ணிக்கை שְׁנַ֧יִם இரண்டு וַחֲמִשִּׁ֛ים ஐம்பத்து אֶ֖לֶף ஆயிரம் וּשְׁבַ֥ע ஏழு מֵאֽוֹת׃ நூறு ס —
இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 52,700 பேர்.
35 אֵ֣לֶּה இவைகள் בְנֵי־ புத்திரர் אֶפְרַיִם֮ எப்ராயீமின் לְמִשְׁפְּחֹתָם֒ குலங்களின்படி לְשׁוּתֶ֗לַח சூத்தேலாகுக்கு מִשְׁפַּ֙חַת֙ குலம் הַשֻּׁ֣תַלְחִ֔י –சூத்தேலாகியரின் לְבֶ֕כֶר பெக்கெருக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַבַּכְרִ֑י –பெக்கெரியரின் לְתַ֕חַן தாகானுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַֽתַּחֲנִֽי׃ –தாகானியரின்
எப்பிராயீமுடைய மகன்களின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியர்களின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியர்களின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியர்களின் குடும்பமும்,
36 וְאֵ֖לֶּה இவைகள் בְּנֵ֣י புத்திரர் שׁוּתָ֑לַח சூத்தேலாவின் לְעֵרָ֕ן ஏரானுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הָעֵרָנִֽי׃ –ஏரானியரின்
சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியர்களின் குடும்பமுமே.
37 אֵ֣לֶּה இவைகள் מִשְׁפְּחֹ֤ת குலங்கள் בְּנֵי־ புத்திரரின் אֶפְרַ֙יִם֙ எப்ராயீமின் לִפְקֻ֣דֵיהֶ֔ם எண்ணிக்கையின்படி שְׁנַ֧יִם இரண்டு וּשְׁלֹשִׁ֛ים முப்பது אֶ֖לֶף ஆயிரம் וַחֲמֵ֣שׁ ஐந்து מֵא֑וֹת நூறு אֵ֥לֶּה இவைகள் בְנֵי־ புத்திரர் יוֹסֵ֖ף யோசேப்பின் לְמִשְׁפְּחֹתָֽם׃ குலங்களின்படி ס —
இவைகளே எப்பிராயீம் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 32,500 பேர்; இவர்களே யோசேப்பு சந்ததியின் குடும்பங்கள்.
38 בְּנֵ֣י புத்திரர் בִנְיָמִן֮ பென்யமீனின் לְמִשְׁפְּחֹתָם֒ குலங்களின்படி לְבֶ֗לַע பெலாவுக்கு מִשְׁפַּ֙חַת֙ குலம் הַבַּלְעִ֔י –பெலாவியரின் לְאַשְׁבֵּ֕ל அஷ்பேலுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הָֽאַשְׁבֵּלִ֑י –அஷ்பேலியரின் לַאֲחִירָ֕ם அகீராமுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הָאֲחִירָמִֽי׃ –அகீராமியரின்
பென்யமீனுடைய மகன்களின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியர்களின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியர்களின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியர்களின் குடும்பமும்,
39 לִשְׁפוּפָ֕ם சுப்பாமுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַשּׁוּפָמִ֑י –சுப்பாமியரின் לְחוּפָ֕ם கூப்பாமுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַחוּפָמִֽי׃ –கூப்பாமியரின்
சுப்பாமின் சந்ததியான சுப்பாமியர்களின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியர்களின் குடும்பமும்,
40 וַיִּהְי֥וּ ஆனார்கள் בְנֵי־ புத்திரர் בֶ֖לַע பெலாவின் אַ֣רְדְּ ஆர்து וְנַעֲמָ֑ן நாகமானும் מִשְׁפַּ֙חַת֙ குலம் הָֽאַרְדִּ֔י –ஆர்தியரின் לְנַֽעֲמָ֔ן நாகமானுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַֽנַּעֲמִֽי׃ –நாகமானியரின்
பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியர்களின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியர்களின் குடும்பமுமே.
41 אֵ֥לֶּה இவைகள் בְנֵי־ புத்திரர் בִנְיָמִ֖ן பென்யமீனின் לְמִשְׁפְּחֹתָ֑ם குலங்களின்படி וּפְקֻ֣דֵיהֶ֔ם எண்ணிக்கை חֲמִשָּׁ֧ה ஐந்து וְאַרְבָּעִ֛ים நாற்பத்து אֶ֖לֶף ஆயிரம் וְשֵׁ֥שׁ ஆறு מֵאֽוֹת׃ நூறு ס —
இவைகளே பென்யமீன் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 45,600 பேர்.
42 אֵ֤לֶּה இவைகள் בְנֵי־ புத்திரர் דָן֙ தானின் לְמִשְׁפְּחֹתָ֔ם குலங்களின்படி לְשׁוּחָ֕ם சூகாமுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַשּׁוּחָמִ֑י –சூகாமியரின் אֵ֛לֶּה இவைகள் מִשְׁפְּחֹ֥ת குலங்கள் דָּ֖ן தானின் לְמִשְׁפְּחֹתָֽם׃ குலங்களின்படி
தாணுடைய மகன்களின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமே; இவைகள் தாணின் குடும்பம்.
43 כָּל־ எல்லா מִשְׁפְּחֹ֥ת குலங்கள் הַשּׁוּחָמִ֖י –சூகாமியரின் לִפְקֻדֵיהֶ֑ם எண்ணிக்கையின்படி אַרְבָּעָ֧ה நான்கு וְשִׁשִּׁ֛ים அறுபது אֶ֖לֶף ஆயிரம் וְאַרְבַּ֥ע நான்கு מֵאֽוֹת׃ நூறு ס —
சூகாமியர்களின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் 64,400 பேர்.
44 בְּנֵ֣י புத்திரர் אָשֵׁר֮ ஆசேரின் לְמִשְׁפְּחֹתָם֒ குலங்களின்படி לְיִמְנָ֗ה யிம்னாவுக்கு מִשְׁפַּ֙חַת֙ குலம் הַיִּמְנָ֔ה –யிம்னாவியரின் לְיִשְׁוִ֕י யிஷ்வீக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַיִּשְׁוִ֑י –யிஷ்வீயரின் לִבְרִיעָ֕ה பெரீயாவுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַבְּרִיעִֽי׃ –பெரீயாவியரின்
ஆசேருடைய மகன்களின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியர்களின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியர்களின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியர்களின் குடும்பமும்,
45 לִבְנֵ֣י புத்திரருக்கு בְרִיעָ֔ה பெரீயாவின் לְחֶ֕בֶר ஏபேருக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַֽחֶבְרִ֑י –ஏபேரியரின் לְמַ֨לְכִּיאֵ֔ל மல்க்கீயேலுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַמַּלְכִּיאֵלִֽי׃ –மல்க்கீயேலியரின்
பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியர்களின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியர்களின் குடும்பமுமே.
46 וְשֵׁ֥ם பெயர் בַּת־ மகளின் אָשֵׁ֖ר ஆசேரின் שָֽׂרַח׃ சேரா
ஆசேருடைய மகளின் பெயர் சேராள்.
47 אֵ֛לֶּה இவைகள் מִשְׁפְּחֹ֥ת குலங்கள் בְּנֵי־ புத்திரரின் אָשֵׁ֖ר ஆசேரின் לִפְקֻדֵיהֶ֑ם எண்ணிக்கையின்படி שְׁלֹשָׁ֧ה மூன்று וַחֲמִשִּׁ֛ים ஐம்பத்து אֶ֖לֶף ஆயிரம் וְאַרְבַּ֥ע நான்கு מֵאֽוֹת׃ நூறு ס —
இவைகளே ஆசேர் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 53,400 பேர்.
48 בְּנֵ֤י புத்திரர் נַפְתָּלִי֙ நப்தலீயின் לְמִשְׁפְּחֹתָ֔ם குலங்களின்படி לְיַ֨חְצְאֵ֔ל யக்சேயேலுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַיַּחְצְאֵלִ֑י –யக்சேயேலியரின் לְגוּנִ֕י கூனீக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַגּוּנִֽי׃ –கூனீயரின்
நப்தலியினுடைய மகன்களின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியான யாத்சியேலியர்களின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியர்களின் குடும்பமும்,
49 לְיֵ֕צֶר யேசெருக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַיִּצְרִ֑י –யேசெரியரின் לְשִׁלֵּ֕ם சில்லேமுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַשִּׁלֵּמִֽי׃ –சில்லேமியரின்
எத்செரின் சந்ததியான எத்செரியர்களின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியர்களின் குடும்பமுமே.
50 אֵ֛לֶּה இவைகள் מִשְׁפְּחֹ֥ת குலங்கள் נַפְתָּלִ֖י நப்தலீயின் לְמִשְׁפְּחֹתָ֑ם குலங்களின்படி וּפְקֻ֣דֵיהֶ֔ם எண்ணிக்கை חֲמִשָּׁ֧ה ஐந்து וְאַרְבָּעִ֛ים நாற்பத்து אֶ֖לֶף ஆயிரம் וְאַרְבַּ֥ע நான்கு מֵאֽוֹת׃ நூறு
இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 45,400 பேர்.
51 אֵ֗לֶּה இவைகள் פְּקוּדֵי֙ எண்ணிக்கை בְּנֵ֣י புத்திரரின் יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் שֵׁשׁ־ ஆறு מֵא֥וֹת நூறு אֶ֖לֶף ஆயிரம் וָאָ֑לֶף ஆயிரமும் שְׁבַ֥ע ஏழு מֵא֖וֹת நூறு וּשְׁלֹשִֽׁים׃ முப்பது פ —
இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள் 6,01,730 பேராக இருந்தார்கள்.
52 וַיְדַבֵּ֥ר பேசினார் יְהוָ֖ה யெகோவா אֶל־ –நோக்கி מֹשֶׁ֥ה மோசேயிடம் לֵּאמֹֽר׃ சொல்லி
யெகோவா மோசேயை நோக்கி:
53 לָאֵ֗לֶּה இவர்களுக்கு תֵּחָלֵ֥ק பங்கிடப்படும் הָאָ֛רֶץ –தேசம் בְּנַחֲלָ֖ה சுதந்திரமாக בְּמִסְפַּ֥ר எண்ணிக்கையின்படி שֵׁמֽוֹת׃ பெயர்களின்
“இவர்களுடைய பேர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி தேசம் இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிடப்படவேண்டும்.
54 לָרַ֗ב பெரியவனுக்கு תַּרְבֶּה֙ பெருக்குவாய் נַחֲלָת֔וֹ அவன்–சுதந்திரம் וְלַמְעַ֕ט சிறியவனுக்கு תַּמְעִ֖יט சிறிதாக்குவாய் נַחֲלָת֑וֹ அவன்–சுதந்திரம் אִ֚ישׁ ஒவ்வொருவன் לְפִ֣י அவன்–எண்ணிக்கையின்படி פְקֻדָ֔יו எண்ணிக்கையின்படி יֻתַּ֖ן கொடுக்கப்படும் נַחֲלָתֽוֹ׃ அவன்–சுதந்திரம்
அநேகம்பேருக்கு அதிக சுதந்தரமும் கொஞ்சம்பேருக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுக்கவேண்டும்; அவர்களில் எண்ணப்பட்ட எண்ணிக்கைக்குத் தகுந்தபடி அவரவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும்.
55 אַךְ־ ஆனால் בְּגוֹרָ֕ל சீட்டினால் יֵחָלֵ֖ק பங்கிடப்படும் אֶת־ – הָאָ֑רֶץ –தேசம் לִשְׁמ֥וֹת பெயர்களின்படி מַטּוֹת־ கோத்திரங்களின் אֲבֹתָ֖ם தகப்பன்மாரின் יִנְחָֽלוּ׃ சுதந்திரிப்பார்கள்
ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய பெயர்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளவேண்டும்.
56 עַל־ –படி פִּי֙ வாயின்படி הַגּוֹרָ֔ל –சீட்டின் תֵּחָלֵ֖ק பங்கிடப்படும் נַחֲלָת֑וֹ அவன்–சுதந்திரம் בֵּ֥ין நடுவே רַ֖ב பெரியவர்களுக்கும் לִמְעָֽט׃ சிறியவர்களுக்கும் ס —
அநேகம்பேரோ கொஞ்சம்பேர்களோ சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும்” என்றார்.
57 וְאֵ֨לֶּה இவைகள் פְקוּדֵ֣י எண்ணிக்கை הַלֵּוִי֮ –லேவியரின் לְמִשְׁפְּחֹתָם֒ குலங்களின்படி לְגֵרְשׁ֗וֹן கேர்சோனுக்கு מִשְׁפַּ֙חַת֙ குலம் הַגֵּ֣רְשֻׁנִּ֔י –கேர்சோனியரின் לִקְהָ֕ת கேகாதுக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַקְּהָתִ֑י –கேகாதியரின் לִמְרָרִ֕י மெராரீக்கு מִשְׁפַּ֖חַת குலம் הַמְּרָרִֽי׃ –மெராரீயரின்
எண்ணப்பட்ட லேவியர்களின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியர்களின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியர்களின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியர்களின் குடும்பமும்;
58 אֵ֣לֶּה ׀ இவைகள் מִשְׁפְּחֹ֣ת குலங்கள் לֵוִ֗י லேவியின் מִשְׁפַּ֨חַת குலம் הַלִּבְנִ֜י –லிப்னியரின் מִשְׁפַּ֤חַת குலம் הַֽחֶבְרֹנִי֙ –எப்ரோனியரின் מִשְׁפַּ֤חַת குலம் הַמַּחְלִי֙ –மக்லியரின் מִשְׁפַּ֣חַת குலம் הַמּוּשִׁ֔י –மூசியரின் מִשְׁפַּ֖חַת குலம் הַקָּרְחִ֑י –கோராகியரின் וּקְהָ֖ת கேகாத்தும் הוֹלִ֥ד பெற்றெடுத்தான் אֶת־ – עַמְרָֽם׃ அம்ராமை
லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயர்களின் குடும்பமும், எப்ரோனியர்களின் குடும்பமும், மகலியர்களின் குடும்பமும், மூசியர்களின் குடும்பமும், கோராகியர்களின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.
59 וְשֵׁ֣ם ׀ பெயர் אֵ֣שֶׁת மனைவியின் עַמְרָ֗ם அம்ராமின் יוֹכֶ֙בֶד֙ யோகேபெத் בַּת־ மகள் לֵוִ֔י லேவியின் אֲשֶׁ֨ר – יָלְדָ֥ה பெற்றெடுத்தாள் אֹתָ֛הּ அவளை לְלֵוִ֖י லேவிக்கு בְּמִצְרָ֑יִם எகிப்திலே וַתֵּ֣לֶד பெற்றெடுத்தாள் לְעַמְרָ֗ם அம்ராமுக்கு אֶֽת־ – אַהֲרֹן֙ ஆரோனையும் וְאֶת־ – מֹשֶׁ֔ה மோசேயையும் וְאֵ֖ת – מִרְיָ֥ם மிரியாமையும் אֲחֹתָֽם׃ அவர்கள்–சகோதரியை
அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பெயர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த மகள்; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.
60 וַיִּוָּלֵ֣ד பிறந்தார்கள் לְאַהֲרֹ֔ן ஆரோனுக்கு אֶת־ – נָדָ֖ב நாதாப் וְאֶת־ – אֲבִיה֑וּא அபீகூ אֶת־ – אֶלְעָזָ֖ר எலெயாசார் וְאֶת־ – אִיתָמָֽר׃ ஈத்தாமார்
ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.
61 וַיָּ֥מָת செத்தார்கள் נָדָ֖ב நாதாப் וַאֲבִיה֑וּא அபீகூவும் בְּהַקְרִיבָ֥ם அவர்கள்–செலுத்தியதில் אֵשׁ־ நெருப்பு זָרָ֖ה அந்நியமான לִפְנֵ֥י முன்பாக יְהוָֽה׃ யெகோவாவின்
நாதாபும் அபியூவும் யெகோவாவுடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்.
62 וַיִּהְי֣וּ ஆனார்கள் פְקֻדֵיהֶ֗ם எண்ணிக்கை שְׁלֹשָׁ֤ה மூன்று וְעֶשְׂרִים֙ இருபது אֶ֔לֶף ஆயிரம் כָּל־ எல்லா זָכָ֖ר ஆண் מִבֶּן־ மகனிலிருந்து חֹ֣דֶשׁ மாதம் וָמָ֑עְלָה மேலும் כִּ֣י ׀ ஏனென்றால் לֹ֣א இல்லை הָתְפָּקְד֗וּ எண்ணப்பட்டார்கள் בְּתוֹךְ֙ நடுவிலே בְּנֵ֣י புத்திரரின் יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் כִּ֠י ஏனென்றால் לֹא־ இல்லை נִתַּ֤ן கொடுக்கப்பட்டது לָהֶם֙ அவர்களுக்கு נַחֲלָ֔ה சுதந்திரம் בְּת֖וֹךְ நடுவிலே בְּנֵ֥י புத்திரரின் יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலின்
அவர்களில் ஒரு மாத ஆண்பிள்ளையிலிருந்து எண்ணப்பட்டவர்கள் 23,000 பேர்; இஸ்ரவேல் சந்ததியின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கைக்கு உட்படவில்லை.
63 אֵ֚לֶּה இவைகள் פְּקוּדֵ֣י எண்ணிக்கை מֹשֶׁ֔ה மோசேயின் וְאֶלְעָזָ֖ר எலெயாசாரும் הַכֹּהֵ֑ן –ஆசாரியனின் אֲשֶׁ֨ר – פָּֽקְד֜וּ எண்ணினார்கள் אֶת־ – בְּנֵ֤י புத்திரரை יִשְׂרָאֵל֙ இஸ்ரவேலின் בְּעַֽרְבֹ֣ת சமவெளிகளிலே מוֹאָ֔ב மோவாபின் עַ֖ל –அருகே יַרְדֵּ֥ן யோர்தானின் יְרֵחֽוֹ׃ எரிகோவின்
மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகிலிருக்கும் யோர்தானுக்கு அருகிலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் மக்களை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.
64 וּבְאֵ֙לֶּה֙ இவர்களில் לֹא־ இல்லை הָ֣יָה இருந்தான் אִ֔ישׁ மனுஷன் מִפְּקוּדֵ֣י எண்ணிக்கையிலிருந்து מֹשֶׁ֔ה மோசேயின் וְאַהֲרֹ֖ן ஆரோனின் הַכֹּהֵ֑ן –ஆசாரியனின் אֲשֶׁ֥ר – פָּקְד֛וּ எண்ணினார்கள் אֶת־ – בְּנֵ֥י புத்திரரை יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் בְּמִדְבַּ֥ר வனாந்தரத்திலே סִינָֽי׃ சீனாயின்
முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்திரத்தில் இஸ்ரவேல் சந்ததியை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.
65 כִּֽי־ ஏனென்றால் אָמַ֤ר சொன்னார் יְהוָה֙ யெகோவா לָהֶ֔ם அவர்களுக்கு מ֥וֹת சாக יָמֻ֖תוּ சாவார்கள் בַּמִּדְבָּ֑ר –வனாந்தரத்தில் וְלֹא־ மற்றும்–இல்லை נוֹתַ֤ר மீதியிருந்தான் מֵהֶם֙ அவர்களிலிருந்து אִ֔ישׁ மனுஷன் כִּ֚י ஆனால் אִם־ – כָּלֵ֣ב காலேப் בֶּן־ மகன் יְפֻנֶּ֔ה யெப்புன்னேயின் וִיהוֹשֻׁ֖עַ யெகோசுவாவும் בִּן־ மகன் נֽוּן׃ நூனின் ס —
வனாந்திரத்தில் நிச்சயமாக சாவார்கள் என்று யெகோவா அவர்களைக் குறித்துச்சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் மகனாகிய காலேபும் நூனின் மகனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாக இருக்கவில்லை.