1 וַֽיִּגְּשׁ֗וּ –மற்றும்–நெருங்கினார்கள் רָאשֵׁי֙ தலைவர்கள் אֲב֣וֹת பிதாக்களின் הַלְוִיִּ֔ם –லேவியர்களின் אֶל־ –நோக்கி אֶלְעָזָר֙ எலெயாசாரிடம் הַכֹּהֵ֔ן –ஆசாரியனிடம் וְאֶל־ –மற்றும்–நோக்கி יְהוֹשֻׁ֖עַ யோசுவாவிடம் בִּן־ மகன் נ֑וּן நூனின் וְאֶל־ –மற்றும்–நோக்கி רָאשֵׁ֛י தலைவர்களிடம் אֲב֥וֹת பிதாக்களின் הַמַּטּ֖וֹת –கோத்திரங்களின் לִבְנֵ֥י –புத்திரர்களின் יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலின்
அப்பொழுது லேவியர்களின் வம்சப்பிதாக்களின் தலைவர்கள்; கானான்தேசத்தில் இருக்கிற சீலோவிலே ஆசாரியனாகிய எலெயாசாரிடமும், நூனின் மகனாகிய யோசுவாவிடமும், இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரப் பிதாக்களில் உள்ள தலைவர்களிடமும் வந்து:
2 וַיְדַבְּר֨וּ –மற்றும்–பேசினார்கள் אֲלֵיהֶ֜ם அவர்களிடம் בְּשִׁלֹ֗ה –சீலோவில் בְּאֶ֤רֶץ –தேசத்தில் כְּנַ֙עַן֙ கானானின் לֵאמֹ֔ר –சொல்லி יְהוָה֙ யெகோவா צִוָּ֣ה கட்டளையிட்டார் בְיַד־ –கையால் מֹשֶׁ֔ה மோசேயின் לָֽתֶת־ –கொடுக்க לָ֥נוּ எங்களுக்கு עָרִ֖ים பட்டணங்களை לָשָׁ֑בֶת –குடியிருக்க וּמִגְרְשֵׁיהֶ֖ן –மற்றும்–அவற்றின்–மேய்ச்சல்நிலங்களை לִבְהֶמְתֵּֽנוּ׃ –எங்கள்–மிருகங்களுக்கு
நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்களுடைய மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.
3 וַיִּתְּנ֨וּ –மற்றும்–கொடுத்தார்கள் בְנֵי־ புத்திரர் יִשְׂרָאֵ֧ל இஸ்ரவேலின் לַלְוִיִּ֛ם –லேவியர்களுக்கு מִנַּחֲלָתָ֖ם –தங்கள்–சுதந்தரத்திலிருந்து אֶל־ –படி פִּ֣י வாக்கின் יְהוָ֑ה யெகோவாவின் אֶת־ – הֶעָרִ֥ים –பட்டணங்களை הָאֵ֖לֶּה –இவைகளை וְאֶת־ –மற்றும்– מִגְרְשֵׁיהֶֽן׃ அவற்றின்–மேய்ச்சல்நிலங்களையும்
யெகோவாவுடைய கட்டளையின்படியே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய பங்குகளிலே லேவியர்களுக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
4 וַיֵּצֵ֥א –மற்றும்–வந்தது הַגּוֹרָ֖ל –சீட்டு לְמִשְׁפְּחֹ֣ת –குடும்பங்களுக்கு הַקְּהָתִ֑י –கோகாத்தியரின் וַיְהִ֡י –மற்றும்–ஆயிற்று לִבְנֵי֩ –புத்திரர்களுக்கு אַהֲרֹ֨ן ஆரோனின் הַכֹּהֵ֜ן –ஆசாரியனின் מִן־ –இருந்து הַלְוִיִּ֗ם –லேவியர்களிலிருந்து מִמַּטֵּ֣ה –கோத்திரத்திலிருந்து יְ֠הוּדָה யூதாவின் וּמִמַּטֵּ֨ה –மற்றும்–கோத்திரத்திலிருந்து הַשִּׁמְעֹנִ֜י –சிமியோனின் וּמִמַּטֵּ֤ה –மற்றும்–கோத்திரத்திலிருந்து בִנְיָמִן֙ பென்யமீனின் בַּגּוֹרָ֔ל –சீட்டினால் עָרִ֖ים பட்டணங்கள் שְׁלֹ֥שׁ பதின் עֶשְׂרֵֽה׃ மூன்று ס —
கோகாத்தியர்களின் வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது; அந்தச் சீட்டின்படி லேவியர்களில் ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததிக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.
5 וְלִבְנֵ֨י –மற்றும்–புத்திரர்களுக்கு קְהָ֜ת கோகாத்தின் הַנּוֹתָרִ֗ים –மீதியானவர்களுக்கு מִמִּשְׁפְּחֹ֣ת –குடும்பங்களிலிருந்து מַטֵּֽה־ கோத்திரத்தின் אֶ֠פְרַיִם எப்பிராயீமின் וּֽמִמַּטֵּה־ –மற்றும்–கோத்திரத்தின் דָ֞ן தாணின் וּמֵחֲצִ֨י –மற்றும்–பாதி מַטֵּ֧ה கோத்திரத்தின் מְנַשֶּׁ֛ה மனாசேயின் בַּגּוֹרָ֖ל –சீட்டினால் עָרִ֥ים பட்டணங்கள் עָֽשֶׂר׃ பத்து ס —
கோகாத்தின் மற்ற வம்சங்களுக்கு, எப்பிராயீம் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், தாண் கோத்திரத்திலும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பத்து.
6 וְלִבְנֵ֣י –மற்றும்–புத்திரர்களுக்கு גֵרְשׁ֗וֹן கெர்சோனின் מִמִּשְׁפְּח֣וֹת –குடும்பங்களிலிருந்து מַטֵּֽה־ கோத்திரத்தின் יִשָּׂשכָ֣ר இசக்காரின் וּמִמַּטֵּֽה־ –மற்றும்–கோத்திரத்தின் אָ֠שֵׁר ஆசேரின் וּמִמַּטֵּ֨ה –மற்றும்–கோத்திரத்தின் נַפְתָּלִ֜י நப்தலியின் וּ֠מֵחֲצִי –மற்றும்–பாதி מַטֵּ֨ה கோத்திரத்தின் מְנַשֶּׁ֤ה மனாசேயின் בַבָּשָׁן֙ –பாசானில் בַּגּוֹרָ֔ל –சீட்டினால் עָרִ֖ים பட்டணங்கள் שְׁלֹ֥שׁ பதின் עֶשְׂרֵֽה׃ மூன்று ס —
கெர்சோன் வம்சத்தின் மக்களுக்கு, இசக்கார் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானில் இருக்கிற மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.
7 לִבְנֵ֨י –புத்திரர்களுக்கு מְרָרִ֜י மெராரியின் לְמִשְׁפְּחֹתָ֗ם –குடும்பங்களின்படி מִמַּטֵּ֨ה –கோத்திரத்திலிருந்து רְאוּבֵ֤ן ரூபனின் וּמִמַּטֵּה־ –மற்றும்–கோத்திரத்திலிருந்து גָד֙ காத்தின் וּמִמַּטֵּ֣ה –மற்றும்–கோத்திரத்திலிருந்து זְבוּלֻ֔ן செபுலோனின் עָרִ֖ים பட்டணங்கள் שְׁתֵּ֥ים பன்னி עֶשְׂרֵֽה׃ ரெண்டு
மெராரி வம்சத்தின் மக்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு.
8 וַיִּתְּנ֤וּ –மற்றும்–கொடுத்தார்கள் בְנֵֽי־ புத்திரர் יִשְׂרָאֵל֙ இஸ்ரவேலின் לַלְוִיִּ֔ם –லேவியர்களுக்கு אֶת־ – הֶעָרִ֥ים –பட்டணங்களை הָאֵ֖לֶּה –இவைகளை וְאֶת־ –மற்றும்– מִגְרְשֵׁיהֶ֑ן அவற்றின்–மேய்ச்சல்நிலங்களை כַּאֲשֶׁ֨ר –எவ்விதம் צִוָּ֧ה கட்டளையிட்டாரோ יְהוָ֛ה யெகோவா בְּיַד־ –கையால் מֹשֶׁ֖ה மோசேயின் בַּגּוֹרָֽל׃ –சீட்டினால் פ —
இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் மக்கள், யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியர்களுக்குக் கொடுத்தார்கள்.
9 וַֽיִּתְּנ֗וּ –மற்றும்–கொடுத்தார்கள் מִמַּטֵּה֙ –கோத்திரத்திலிருந்து בְּנֵ֣י புத்திரர்களின் יְהוּדָ֔ה யூதாவின் וּמִמַּטֵּ֖ה –மற்றும்–கோத்திரத்திலிருந்து בְּנֵ֣י புத்திரர்களின் שִׁמְע֑וֹן சிமியோனின் אֵ֚ת – הֶֽעָרִ֣ים –பட்டணங்களை הָאֵ֔לֶּה –இவைகளை אֲשֶׁר־ – יִקְרָ֥א அழைக்கப்படுகின்றன אֶתְהֶ֖ן அவற்றை בְּשֵֽׁם׃ –பெயரால்
லேவியின் கோத்திரத்தில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியர்களின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் சந்ததியினர்களுக்கு,
10 וַֽיְהִי֙ –மற்றும்–ஆயிற்று לִבְנֵ֣י –புத்திரர்களுக்கு אַהֲרֹ֔ן ஆரோனின் מִמִּשְׁפְּח֥וֹת –குடும்பங்களிலிருந்து הַקְּהָתִ֖י –கோகாத்தியரின் מִבְּנֵ֣י –புத்திரர்களிலிருந்து לֵוִ֑י லேவியின் כִּ֥י ஏனெனில் לָהֶ֛ם அவர்களுக்கு הָיָ֥ה இருந்தது הַגּוֹרָ֖ל –சீட்டு רִיאשֹׁנָֽה׃ முதலாவது
யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பெயர்பெயராகச் சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் பெயர்களாவன:
11 וַיִּתְּנ֨וּ –மற்றும்–கொடுத்தார்கள் לָהֶ֜ם அவர்களுக்கு אֶת־ – קִרְיַת֩ אַרְבַּ֨ע கிர்யத்–அர்பாவை אֲבִ֧י தகப்பன் הָֽעֲנ֛וֹק –ஆனாக்கின் הִ֥יא அது חֶבְר֖וֹן எப்ரோன் בְּהַ֣ר –மலையில் יְהוּדָ֑ה யூதாவின் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֖הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் סְבִיבֹתֶֽיהָ׃ சுற்றிலும்
யூதாவின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சுற்றியுள்ள வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
12 וְאֶת־ –ஆனால்– שְׂדֵ֥ה வயலை הָעִ֖יר –பட்டணத்தின் וְאֶת־ –மற்றும்– חֲצֵרֶ֑יהָ அதன்–கிராமங்களை נָֽתְנ֛וּ கொடுத்தார்கள் לְכָלֵ֥ב –காலேபுக்கு בֶּן־ மகன் יְפֻנֶּ֖ה யெப்புன்னேயின் בַּאֲחֻזָּתֽוֹ׃ –அவன்–சொத்தாக ס —
பட்டணத்தின் வயல்களையும் அதினுடைய கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்தார்கள்.
13 וְלִבְנֵ֣י ׀ –மற்றும்–புத்திரர்களுக்கு אַהֲרֹ֣ן ஆரோனின் הַכֹּהֵ֗ן –ஆசாரியனின் נָֽתְנוּ֙ கொடுத்தார்கள் אֶת־ – עִיר֙ பட்டணத்தை מִקְלַ֣ט அடைக்கலத்தின் הָרֹצֵ֔חַ –கொலைபாதகனுக்கான אֶת־ – חֶבְר֖וֹן எப்ரோனையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் וְאֶת־ –மற்றும்– לִבְנָ֖ה லிப்னாவையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶֽׁהָ׃ அதன்–மேய்ச்சல்நிலங்களையும்
இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியார்களுக்கு எபிரோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
14 וְאֶת־ –மற்றும்– יַתִּר֙ யத்தீரையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֔הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் וְאֶת־ –மற்றும்– אֶשְׁתְּמֹ֖עַ எஸ்தெமோவாவையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶֽׁהָ׃ அதன்–மேய்ச்சல்நிலங்களையும்
யாத்தீரையும் அதினுடைய வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
15 וְאֶת־ –மற்றும்– חֹלֹן֙ ஹோலோனையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֔הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் וְאֶת־ –மற்றும்– דְּבִ֖ר தெபீரையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶֽׁהָ׃ அதன்–மேய்ச்சல்நிலங்களையும்
ஓலோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், தெபீரையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
16 וְאֶת־ –மற்றும்– עַ֣יִן ஆயினையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֗הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் וְאֶת־ –மற்றும்– יֻטָּה֙ யுத்தாவையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֔הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் אֶת־ – בֵּ֥ית שֶׁ֖מֶשׁ பெத்–ஷெமேஷையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் עָרִ֣ים பட்டணங்கள் תֵּ֔שַׁע ஒன்பது מֵאֵ֕ת –இருந்து שְׁנֵ֥י இரண்டு הַשְּׁבָטִ֖ים –கோத்திரங்களிலிருந்து הָאֵֽלֶּה׃ –இவைகளிலிருந்து פ —
ஆயீனையும் அதினுடைய வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களில் இருக்கிற பட்டணங்கள் ஒன்பது.
17 וּמִמַּטֵּ֣ה –மற்றும்–கோத்திரத்திலிருந்து בִנְיָמִ֔ן பென்யமீனின் אֶת־ – גִּבְע֖וֹן கிபியோனையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் אֶת־ – גֶּ֖בַע கேபாவையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶֽׁהָ׃ அதன்–மேய்ச்சல்நிலங்களையும்
பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் கேபாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
18 אֶת־ – עֲנָתוֹת֙ ஆனதோத்தையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֔הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் וְאֶת־ –மற்றும்– עַלְמ֖וֹן அல்மோனையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் עָרִ֖ים பட்டணங்கள் אַרְבַּֽע׃ நான்கு
ஆனதோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், அல்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
19 כָּל־ எல்லா עָרֵ֥י பட்டணங்கள் בְנֵֽי־ புத்திரர்களின் אַהֲרֹ֖ן ஆரோனின் הַכֹּֽהֲנִ֑ים –ஆசாரியர்களின் שְׁלֹשׁ־ பதின் עֶשְׂרֵ֥ה மூன்று עָרִ֖ים பட்டணங்கள் וּמִגְרְשֵׁיהֶֽן׃ –மற்றும்–அவற்றின்–மேய்ச்சல்நிலங்கள் ס —
ஆசாரியர்களான ஆரோனுடைய சந்ததியார்களின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று.
20 וּלְמִשְׁפְּח֤וֹת –மற்றும்–குடும்பங்களுக்கு בְּנֵֽי־ புத்திரர்களின் קְהָת֙ கோகாத்தின் הַלְוִיִּ֔ם –லேவியர்களின் הַנּוֹתָרִ֖ים –மீதியானவர்களின் מִבְּנֵ֣י –புத்திரர்களிலிருந்து קְהָ֑ת கோகாத்தின் וַֽיְהִי֙ –மற்றும்–ஆயிற்று עָרֵ֣י பட்டணங்கள் גֽוֹרָלָ֔ם அவர்கள்–சீட்டின் מִמַּטֵּ֖ה –கோத்திரத்திலிருந்து אֶפְרָֽיִם׃ எப்பிராயீமின்
லேவியர்களான கோகாத்தின் குடும்பத்தார்களில் மீதியான அவர்களுடைய மற்ற வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே அவர்களுக்குப் பங்குவீதமாக அவர்கள் கொடுத்த பட்டணங்களாவன:
21 וַיִּתְּנ֨וּ –மற்றும்–கொடுத்தார்கள் לָהֶ֜ם அவர்களுக்கு אֶת־ – עִ֨יר பட்டணத்தை מִקְלַ֧ט அடைக்கலத்தின் הָרֹצֵ֛חַ –கொலைபாதகனுக்கான אֶת־ – שְׁכֶ֥ם சீகேமையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֖הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் בְּהַ֣ר –மலையில் אֶפְרָ֑יִם எப்பிராயீமின் וְאֶת־ –மற்றும்– גֶּ֖זֶר கெசேரையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶֽׁהָ׃ அதன்–மேய்ச்சல்நிலங்களையும்
கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
22 וְאֶת־ –மற்றும்– קִבְצַ֙יִם֙ கிப்சாயிமையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֔הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் וְאֶת־ –மற்றும்– בֵּ֥ית חוֹרֹ֖ן பெத்–ஹோரோனையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் עָרִ֖ים பட்டணங்கள் אַרְבַּֽע׃ நான்கு ס —
கிப்சாயீமையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
23 וּמִמַּ֨טֵּה־ –மற்றும்–கோத்திரத்திலிருந்து דָ֔ן தாணின் אֶֽת־ – אֶלְתְּקֵ֖א எல்தெக்கேயையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் אֶֽת־ – גִּבְּת֖וֹן கிப்பெத்தோனையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶֽׁהָ׃ அதன்–மேய்ச்சல்நிலங்களையும்
தாண் கோத்திரத்திலே எல்தெக்கேயையும் அதினுடைய வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
24 אֶת־ – אַיָּלוֹן֙ அய்யாலோனையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֔הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் אֶת־ – גַּת־רִמּ֖וֹן கத்–ரிம்மோனையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் עָרִ֖ים பட்டணங்கள் אַרְבַּֽע׃ நான்கு ס —
ஆயலோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
25 וּמִֽמַּחֲצִית֙ –மற்றும்–பாதி–கோத்திரத்திலிருந்து מַטֵּ֣ה கோத்திரத்தின் מְנַשֶּׁ֔ה மனாசேயின் אֶת־ – תַּעְנַךְ֙ தானாக்கையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֔הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் וְאֶת־ –மற்றும்– גַּת־רִמּ֖וֹן கத்–ரிம்மோனையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் עָרִ֖ים பட்டணங்கள் שְׁתָּֽיִם׃ இரண்டு
மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதினுடைய வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
26 כָּל־ எல்லா עָרִ֥ים பட்டணங்கள் עֶ֖שֶׂר பத்து וּמִגְרְשֵׁיהֶ֑ן –மற்றும்–அவற்றின்–மேய்ச்சல்நிலங்கள் לְמִשְׁפְּח֥וֹת –குடும்பங்களுக்கு בְּנֵֽי־ புத்திரர்களின் קְהָ֖ת கோகாத்தின் הַנּוֹתָרִֽים׃ –மீதியானவர்களின் ס —
கோகாத் வம்சத்தின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பத்து.
27 וְלִבְנֵ֣י –மற்றும்–புத்திரர்களுக்கு גֵרְשׁוֹן֮ கெர்சோனின் מִמִּשְׁפְּחֹ֣ת –குடும்பங்களிலிருந்து הַלְוִיִּם֒ –லேவியர்களின் מֵחֲצִ֞י –பாதி מַטֵּ֣ה கோத்திரத்தின் מְנַשֶּׁ֗ה மனாசேயின் אֶת־ – עִיר֙ பட்டணத்தை מִקְלַ֣ט அடைக்கலத்தின் הָרֹצֵ֔חַ –கொலைபாதகனுக்கான אֶת־ – [גלון] — (גּוֹלָ֤ן) கோலானையும் בַּבָּשָׁן֙ –பாசானில் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֔הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் וְאֶֽת־ –மற்றும்– בְּעֶשְׁתְּרָ֖ה பெயெஸ்தெராவையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் עָרִ֖ים பட்டணங்கள் שְׁתָּֽיִם׃ இரண்டு ס —
லேவியர்களின் வம்சங்களிலே கெர்சோன் வம்சத்தார்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தில் கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
28 וּמִמַּטֵּ֣ה –மற்றும்–கோத்திரத்திலிருந்து יִשָּׂשכָ֔ר இசக்காரின் אֶת־ – קִשְׁי֖וֹן கீஷியோனையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் אֶת־ – דָּֽבְרַ֖ת தாபராத்தையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶֽׁהָ׃ அதன்–மேய்ச்சல்நிலங்களையும்
இசக்காரின் கோத்திரத்திலே கீசோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், தாபராத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
29 אֶת־ – יַרְמוּת֙ யர்மூத்தையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֔הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் אֶת־ – עֵ֥ין גַּנִּ֖ים ஏன்–கன்னீமையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் עָרִ֖ים பட்டணங்கள் אַרְבַּֽע׃ நான்கு ס —
யர்மூத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
30 וּמִמַּטֵּ֣ה –மற்றும்–கோத்திரத்திலிருந்து אָשֵׁ֔ר ஆசேரின் אֶת־ – מִשְׁאָ֖ל மிஷாலையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் אֶת־ – עַבְדּ֖וֹן அப்தோனையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶֽׁהָ׃ அதன்–மேய்ச்சல்நிலங்களையும்
ஆசேரின் கோத்திரத்திலே மிஷயாலையும் அதினுடைய வெளிநிலங்களையும், அப்தோனையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
31 אֶת־ – חֶלְקָת֙ ஹெல்காத்தையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֔הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் וְאֶת־ –மற்றும்– רְחֹ֖ב ரேகோபையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் עָרִ֖ים பட்டணங்கள் אַרְבַּֽע׃ நான்கு ס —
எல்காத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், ரேகோபையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
32 וּמִמַּטֵּ֨ה –மற்றும்–கோத்திரத்திலிருந்து נַפְתָּלִ֜י நப்தலியின் אֶת־ – עִ֣יר ׀ பட்டணத்தை מִקְלַ֣ט அடைக்கலத்தின் הָֽרֹצֵ֗חַ –கொலைபாதகனுக்கான אֶת־ – קֶ֨דֶשׁ கேதேஷையும் בַּגָּלִ֤יל –கலிலேயாவில் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֙הָ֙ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் וְאֶת־ –மற்றும்– חַמֹּ֥ת דֹּאר֙ ஹம்மோத்–தோரையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֔הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் וְאֶת־ –மற்றும்– קַרְתָּ֖ן கர்த்தானையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் עָרִ֖ים பட்டணங்கள் שָׁלֹֽשׁ׃ மூன்று
நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதினுடைய வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தானையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று.
33 כָּל־ எல்லா עָרֵ֥י பட்டணங்கள் הַגֵּרְשֻׁנִּ֖י –கெர்சோனியரின் לְמִשְׁפְּחֹתָ֑ם –குடும்பங்களின்படி שְׁלֹשׁ־ பதின் עֶשְׂרֵ֥ה மூன்று עִ֖יר பட்டணம் וּמִגְרְשֵׁיהֶֽן׃ –மற்றும்–அவற்றின்–மேய்ச்சல்நிலங்கள் ס —
கெர்சோனியர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று.
34 וּלְמִשְׁפְּח֣וֹת –மற்றும்–குடும்பங்களுக்கு בְּנֵֽי־ புத்திரர்களின் מְרָרִי֮ மெராரியின் הַלְוִיִּ֣ם –லேவியர்களின் הַנּוֹתָרִים֒ –மீதியானவர்களின் מֵאֵת֙ –இருந்து מַטֵּ֣ה கோத்திரத்தின் זְבוּלֻ֔ן செபுலோனின் אֶֽת־ – יָקְנְעָ֖ם யொக்னெயாமையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் אֶת־ – קַרְתָּ֖ה கர்த்தாவையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶֽׁהָ׃ அதன்–மேய்ச்சல்நிலங்களையும்
மற்ற லேவியர்களாகிய மெராரி வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
35 אֶת־ – דִּמְנָה֙ திம்னாவையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֔הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் אֶֽת־ – נַהֲלָ֖ל நகலாலையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் עָרִ֖ים பட்டணங்கள் אַרְבַּֽע׃ நான்கு
திம்னாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், நகலாலையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
36 וּמִמַּטֵּ֣ה –மற்றும்–கோத்திரத்திலிருந்து רְאוּבֵ֔ן ரூபனின் אֶת־ – בֶּ֖צֶר பேசேரையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் וְאֶת־ –மற்றும்– יַ֖הְצָה யாகசாவையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶֽׁהָ׃ அதன்–மேய்ச்சல்நிலங்களையும்
ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும், யாகசாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
37 אֶת־ – קְדֵמוֹת֙ கெதேமோத்தையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֔הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் וְאֶת־ –மற்றும்– מֵיפָ֖עַת மேப்பாத்தையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் עָרִ֖ים பட்டணங்கள் אַרְבַּֽע׃ நான்கு ס —
கெதெமோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
38 וּמִמַּטֵּה־ –மற்றும்–கோத்திரத்திலிருந்து גָ֗ד காத்தின் אֶת־ – עִיר֙ பட்டணத்தை מִקְלַ֣ט அடைக்கலத்தின் הָרֹצֵ֔חַ –கொலைபாதகனுக்கான אֶת־ – רָמֹ֥ת ராமோத்தையும் בַּגִּלְעָ֖ד –கிலெயாத்தில் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் וְאֶֽת־ –மற்றும்– מַחֲנַ֖יִם மகனாயிமையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶֽׁהָ׃ அதன்–மேய்ச்சல்நிலங்களையும்
காத் கோத்திரத்திலே கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், மகனாயீமையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
39 אֶת־ – חֶשְׁבּוֹן֙ எஸ்போனையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֔הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் אֶת־ – יַעְזֵ֖ר யாசேரையும் וְאֶת־ –மற்றும்– מִגְרָשֶׁ֑הָ அதன்–மேய்ச்சல்நிலங்களையும் כָּל־ எல்லா עָרִ֖ים பட்டணங்கள் אַרְבַּֽע׃ நான்கு
எஸ்போனையும் அதினுடைய வெளிநிலங்களையும், யாசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
40 כָּל־ எல்லா הֶ֨עָרִ֜ים –பட்டணங்கள் לִבְנֵ֤י –புத்திரர்களுக்கு מְרָרִי֙ மெராரியின் לְמִשְׁפְּחֹתָ֔ם –குடும்பங்களின்படி הַנּוֹתָרִ֖ים –மீதியானவர்களின் מִמִּשְׁפְּח֣וֹת –குடும்பங்களிலிருந்து הַלְוִיִּ֑ם –லேவியர்களின் וַיְהִי֙ –மற்றும்–ஆயிற்று גּוֹרָלָ֔ם அவர்கள்–சீட்டு עָרִ֖ים பட்டணங்கள் שְׁתֵּ֥ים பன்னி עֶשְׂרֵֽה׃ ரெண்டு
இவைகளெல்லாம் லேவியர்களின் மற்ற வம்சங்களாகிய மெராரி வம்சத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள்.
41 כֹּ֚ל எல்லா עָרֵ֣י பட்டணங்கள் הַלְוִיִּ֔ם –லேவியர்களின் בְּת֖וֹךְ –நடுவில் אֲחֻזַּ֣ת சொத்தின் בְּנֵֽי־ புத்திரர்களின் יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் עָרִ֛ים பட்டணங்கள் אַרְבָּעִ֥ים நாற்பது וּשְׁמֹנֶ֖ה –மற்றும்–எட்டு וּמִגְרְשֵׁיהֶֽן׃ –மற்றும்–அவற்றின்–மேய்ச்சல்நிலங்கள்
இஸ்ரவேல் மக்கள் சொந்தமாக்கியிருந்த தேசத்தின் நடுவிலே இருக்கிற லேவியர்களின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களும் உட்பட நாற்பத்தெட்டு.
42 תִּֽהְיֶ֙ינָה֙ இருக்கும் הֶעָרִ֣ים –பட்டணங்கள் הָאֵ֔לֶּה –இவைகள் עִ֣יר பட்டணம் עִ֔יר பட்டணம் וּמִגְרָשֶׁ֖יהָ –மற்றும்–அதன்–மேய்ச்சல்நிலங்கள் סְבִיבֹתֶ֑יהָ சுற்றிலும் כֵּ֖ן அவ்வாறே לְכָל־ –எல்லா הֶעָרִ֥ים –பட்டணங்களுக்கும் הָאֵֽלֶּה׃ –இவைகளுக்கும் ס —
இந்தப் பட்டணங்களில் ஒவ்வொன்றிற்கும் அதைச் சுற்றியுள்ள வெளிநிலங்கள் இருந்தது; எல்லாப் பட்டணங்களுக்கும் அப்படியே இருந்தது.
43 וַיִּתֵּ֤ן –மற்றும்–கொடுத்தார் יְהוָה֙ யெகோவா לְיִשְׂרָאֵ֔ל –இஸ்ரவேலுக்கு אֶת־ – כָּל־ எல்லா הָאָ֔רֶץ –தேசத்தை אֲשֶׁ֥ר – נִשְׁבַּ֖ע ஆணையிட்டார் לָתֵ֣ת –கொடுக்க לַאֲבוֹתָ֑ם –அவர்கள்–பிதாக்களுக்கு וַיִּרָשׁ֖וּהָ –மற்றும்–சுதந்தரித்தார்கள்–அதை וַיֵּ֥שְׁבוּ –மற்றும்–குடியேறினார்கள் בָֽהּ׃ அதில்
இந்தவிதமாகக் யெகோவா இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள்.
44 וַיָּ֨נַח –மற்றும்–இளைப்பாறுதல்–கொடுத்தார் יְהוָ֤ה யெகோவா לָהֶם֙ அவர்களுக்கு מִסָּבִ֔יב –சுற்றிலும் כְּכֹ֥ל –எல்லாவற்றின்படி אֲשֶׁר־ – נִשְׁבַּ֖ע ஆணையிட்டார் לַאֲבוֹתָ֑ם –அவர்கள்–பிதாக்களுக்கு וְלֹא־ –மற்றும்–இல்லை עָ֨מַד நின்றான் אִ֤ישׁ மனிதன் בִּפְנֵיהֶם֙ –அவர்கள்–முகத்திற்கு–முன்பாக מִכָּל־ –எல்லா אֹ֣יְבֵיהֶ֔ם அவர்கள்–பகைவர்களிலிருந்து אֵ֚ת – כָּל־ எல்லா אֹ֣יְבֵיהֶ֔ם அவர்கள்–பகைவர்களை נָתַ֥ן கொடுத்தார் יְהוָ֖ה யெகோவா בְּיָדָֽם׃ –அவர்கள்–கையில்
யெகோவா அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் ஓய்ந்திருக்கச்செய்தார்; அவர்களுடைய எல்லா எதிரிகளிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் எதிரிகளையெல்லாம் யெகோவா அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.
45 לֹֽא־ இல்லை נָפַ֣ל விழுந்தது דָּבָ֔ר வார்த்தை מִכֹּל֙ –எல்லாவற்றிலிருந்து הַדָּבָ֣ר –வார்த்தையின் הַטּ֔וֹב –நல்ல אֲשֶׁר־ – דִּבֶּ֥ר பேசினார் יְהוָ֖ה யெகோவா אֶל־ –நோக்கி בֵּ֣ית வீட்டுக்கு יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் הַכֹּ֖ל –எல்லாம் בָּֽא׃ நிறைவேறிற்று פ —
யெகோவா இஸ்ரவேல் குடும்பத்தார்களுக்குச் சொல்லியிருந்த நல்ல வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறினது.