1 וַיַּֽעַשׂ־ செய்தான்–அவன் ל֥וֹ தனக்கு בָתִּ֖ים வீடுகளை בְּעִ֣יר நகரத்தில்–பட்டணத்தில் דָּוִ֑יד தாவீதின் וַיָּ֤כֶן ஆயத்தம்பண்ணினான் מָקוֹם֙ இடத்தை לַֽאֲר֣וֹן பெட்டிக்கு–ஒரு הָֽאֱלֹהִ֔ים தேவனுடைய–தேவனின் וַיֶּט־ போட்டான்–விரித்தான் ל֖וֹ அதற்கு אֹֽהֶל׃ கூடாரத்தை
அவன் தனக்கு தாவீதின் நகரத்தில் வீடுகளைக் கட்டி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.
2 אָ֚ז அப்பொழுது אָמַ֣ר சொன்னான் דָּוִ֔יד தாவீது לֹ֤א இல்லை לָשֵׂאת֙ சுமக்க אֶת־ –ஐ אֲר֣וֹן பெட்டியை הָֽאֱלֹהִ֔ים தேவனுடைய כִּ֖י ஏனென்றால்–ஆனால் אִם־ அல்லாமல் הַלְוִיִּ֑ם லேவியர்களே כִּי־ ஏனெனில்–அவர்களில் בָ֣ם ׀ அவர்களை בָּחַ֣ר தெரிந்துகொண்டார் יְהוָ֗ה யெகோவா לָשֵׂ֞את சுமக்கவும் אֶת־ –ஐ אֲר֧וֹן பெட்டியை יְהוָ֛ה யெகோவாவின் וּֽלְשָׁרְת֖וֹ ஊழியம்செய்யவும்–அவருக்கு עַד־ என்றென்றைக்கும்–வரை עוֹלָֽם׃ என்றென்றும் ס —
பிறகு தாவீது: லேவியர்கள் தவிர வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கக் கூடாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே யெகோவா தெரிந்துகொண்டார் என்றான்.
3 וַיַּקְהֵ֥ל கூட்டினான் דָּוִ֛יד தாவீது אֶת־ –ஐ כָּל־ எல்லா יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலையும் אֶל־ –க்கு יְרֽוּשָׁלִָ֑ם எருசலேமுக்கு לְהַעֲלוֹת֙ கொண்டுவரவும்–ஏறச்செய்ய אֶת־ –ஐ אֲר֣וֹן பெட்டியை יְהוָ֔ה யெகோவாவின் אֶל־ –க்கு מְקוֹמ֖וֹ அதன்–இடத்திற்கு אֲשֶׁר־ அவன்–எந்த הֵכִ֥ין ஆயத்தம்பண்ணின לֽוֹ׃ அதற்கு
அப்படியே யெகோவாவுடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் இடத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
4 וַיֶּאֱסֹ֥ף கூட்டினான் דָּוִ֛יד தாவீது אֶת־ –ஐ בְּנֵ֥י புத்திரரை–மகன்களை אַֽהֲרֹ֖ן ஆரோனின் וְאֶת־ –ஐயும் הַלְוִיִּֽם׃ லேவியர்களையும்
ஆரோனின் சந்ததிகளையும்,
5 לִבְנֵ֖י புத்திரருக்கு–மகன்களுக்கு קְהָ֑ת கோகாத்தின் אוּרִיאֵ֣ל ஊரியேல் הַשָּׂ֔ר தலைவன் וְאֶחָ֖יו அவன்–சகோதரர்களும் מֵאָ֥ה நூற்று וְעֶשְׂרִֽים׃ இருபது ס —
லேவியர்களாகிய கோகாத் சந்ததியில் பிரபுவாகிய ஊரியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றிருபதுபேரையும்,
6 לִבְנֵ֖י புத்திரருக்கு–மகன்களுக்கு מְרָרִ֑י மெராரியின் עֲשָׂיָ֣ה ஆசாயா הַשָּׂ֔ר தலைவன் וְאֶחָ֖יו அவன்–சகோதரர்களும் מָאתַ֥יִם இருநூற்று וְעֶשְׂרִֽים׃ இருபது ס —
மெராரியின் சந்ததியில் பிரபுவாகிய அசாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூற்றிருபதுபேரையும்,
7 לִבְנֵ֖י புத்திரருக்கு–மகன்களுக்கு גֵּרְשׁ֑וֹם கெர்ஷோமின் יוֹאֵ֣ל யோவேல் הַשָּׂ֔ר தலைவன் וְאֶחָ֖יו அவன்–சகோதரர்களும் מֵאָ֥ה நூற்று וּשְׁלֹשִֽׁים׃ முப்பது ס —
கெர்சோன் மகன்களில் பிரபுவாகிய யோவேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுமுப்பதுபேரையும்,
8 לִבְנֵ֖י புத்திரருக்கு–மகன்களுக்கு אֱלִֽיצָפָ֑ן எலிசாபானின் שְׁמַֽעְיָ֥ה செமாயா הַשָּׂ֖ר தலைவன் וְאֶחָ֥יו அவன்–சகோதரர்களும் מָאתָֽיִם׃ இருநூறு ס —
எலிசாபான் மகன்களில் பிரபுவாகிய செமாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூறுபேரையும்,
9 לִבְנֵ֖י புத்திரருக்கு–மகன்களுக்கு חֶבְר֑וֹן எப்ரோனின் אֱלִיאֵ֥ל எலியேல் הַשָּׂ֖ר தலைவன் וְאֶחָ֥יו அவன்–சகோதரர்களும் שְׁמוֹנִֽים׃ எண்பது ס —
எப்ரோன் சந்ததியில் பிரபுவாகிய ஏலியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய எண்பதுபேரையும்,
10 לִבְנֵ֖י புத்திரருக்கு–மகன்களுக்கு עֻזִּיאֵ֑ל ஊசியேலின் עַמִּינָדָ֣ב அம்மினதாப் הַשָּׂ֔ר தலைவன் וְאֶחָ֕יו அவன்–சகோதரர்களும் מֵאָ֖ה நூற்று וּשְׁנֵ֥ים பன்னிரண்டு–இரண்டும் עָשָֽׂר׃ பத்து–பன்னிரண்டு ס —
ஊசியேல் சந்ததியில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுப்பன்னிரெண்டு பேரையும் தாவீது கூடிவரச்செய்தான்.
11 וַיִּקְרָ֣א அழைத்தான் דָוִ֔יד தாவீது לְצָד֥וֹק சாதோக்கையும் וּלְאֶבְיָתָ֖ר அபியத்தாரையும் הַכֹּֽהֲנִ֑ים ஆசாரியர்களை–குருக்களை וְלַלְוִיִּ֗ם லேவியர்களையும் לְאֽוּרִיאֵ֤ל ஊரியேல் עֲשָׂיָה֙ ஆசாயா וְיוֹאֵ֣ל யோவேல் שְׁמַֽעְיָ֔ה செமாயா וֶאֱלִיאֵ֖ל எலியேல் וְעַמִּינָדָֽב׃ அம்மினதாப்
பின்பு தாவீது ஆசாரியர்களாகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியர்களாகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, ஏலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து,
12 וַיֹּ֣אמֶר சொன்னான் לָהֶ֔ם அவர்களுக்கு אַתֶּ֛ם நீங்கள் רָאשֵׁ֥י தலைவர்கள்–பிதாக்களின் הָאָב֖וֹת பிதாக்களின்–தலைமையானவர்கள் לַלְוִיִּ֑ם லேவியர்களுக்கு הִֽתְקַדְּשׁוּ֙ பரிசுத்தப்படுத்துங்கள் אַתֶּ֣ם நீங்களும் וַאֲחֵיכֶ֔ם உங்கள்–சகோதரர்களும் וְהַֽעֲלִיתֶ֗ם கொண்டுவாருங்கள்–ஏறச்செய்யுங்கள் אֵ֣ת –ஐ אֲר֤וֹן பெட்டியை יְהוָה֙ யெகோவாவின் אֱלֹהֵ֣י தேவனாகிய יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் אֶל־ –க்கு הֲכִינ֖וֹתִי ஆயத்தம்பண்ணின–நான் לֽוֹ׃ அதற்கு
அவர்களை நோக்கி: லேவியர்களில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர்கள், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்செய்த இடத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்களுடைய சகோதரர்களையும் பரிசுத்தம்செய்துகொள்ளுங்கள்.
13 כִּ֛י ஏனெனில்–முன்னே לְמַבָּרִ֥אשׁוֹנָ֖ה முந்தின–முதல்முறை לֹ֣א இல்லை אַתֶּ֑ם நீங்கள் פָּרַ֨ץ உடைத்தார் יְהוָ֤ה யெகோவா אֱלֹהֵ֙ינוּ֙ நம்–தேவனாகிய בָּ֔נוּ நம்மில் כִּי־ ஏனெனில்–இல்லை לֹ֥א இல்லை דְרַשְׁנֻ֖הוּ நாம்–தேடவில்லை כַּמִּשְׁפָּֽט׃ நியாயப்பிரமாணப்படி–முறையாக
முதலில் நீங்கள் அதை சுமக்காததாலும், நாம் நம்முடைய தேவனாகிய யெகோவாவை நியாயமானபடி தேடாமற்போனதாலும், அவர் நமக்குள்ளே அடிவிழச்செய்தார் என்றான்.
14 וַיִּֽתְקַדְּשׁ֔וּ பரிசுத்தப்படுத்தினார்கள் הַכֹּהֲנִ֖ים ஆசாரியர்களும் וְהַלְוִיִּ֑ם லேவியர்களும் לְהַעֲל֕וֹת கொண்டுவர–ஏறச்செய்ய אֶת־ –ஐ אֲר֥וֹן பெட்டியை יְהוָ֖ה யெகோவாவின் אֱלֹהֵ֥י தேவனாகிய יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலின்
ஆசாரியர்களும் லேவியர்களும் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்செய்துகொண்டார்கள்.
15 וַיִּשְׂא֣וּ சுமந்தார்கள் בְנֵֽי־ புத்திரர்–மகன்கள் הַלְוִיִּ֗ם லேவியர்களின் אֵ֚ת –ஐ אֲר֣וֹן பெட்டியை הָֽאֱלֹהִ֔ים தேவனுடைய כַּאֲשֶׁ֛ר –படி צִוָּ֥ה கட்டளையிட்டான் מֹשֶׁ֖ה மோசே כִּדְבַ֣ר வார்த்தையின்படி–பிரகாரமாய் יְהוָ֑ה யெகோவாவின் בִּכְתֵפָ֥ם தோள்களின்மேல்–தங்கள் בַּמֹּט֖וֹת தண்டுகளினால் עֲלֵיהֶֽם׃ அவர்கள்மேல் פ —
பின்பு லேவியர்கள் யெகோவாவுடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபடி தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினால் தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.
16 וַיֹּ֣אמֶר சொன்னான் דָּוִיד֮ தாவீது לְשָׂרֵ֣י தலைவர்களுக்கு–சரதாரர்களுக்கு הַלְוִיִּם֒ லேவியர்களின் לְהַֽעֲמִ֗יד நிறுத்தவும்–நியமிக்கவும் אֶת־ –ஐ אֲחֵיהֶם֙ தங்கள்–சகோதரர்களை הַמְשֹׁ֣רְרִ֔ים பாடகர்களை בִּכְלֵי־ கருவிகளோடு–இசைக்கருவிகளில் שִׁ֛יר பாடல்–இசை נְבָלִ֥ים வீணைகள் וְכִנֹּר֖וֹת சுரமண்டலங்களும் וּמְצִלְתָּ֑יִם கைத்தாளங்களும் מַשְׁמִיעִ֥ים ஒலிக்கச்செய்கிறவர்கள் לְהָרִֽים־ உயர்த்தி–எழுப்பி בְּק֖וֹל சத்தமாய்–குரலில் לְשִׂמְחָֽה׃ சந்தோஷத்தோடு פ —
தாவீது லேவியர்களின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களாகிய பாடகர்களைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான்.
17 וַיַּעֲמִ֣ידוּ நிறுத்தினார்கள் הַלְוִיִּ֗ם லேவியர்கள் אֵ֚ת –ஐ הֵימָ֣ן ஏமானை בֶּן־ மகன்–குமாரனாகிய יוֹאֵ֔ל யோவேலின் וּמִ֨ן־ –இலிருந்தும் אֶחָ֔יו அவன்–சகோதரர்களிலிருந்து אָסָ֖ף ஆசாப்பை בֶּן־ மகன்–குமாரனாகிய בֶּֽרֶכְיָ֑הוּ பெரெக்யாவின் ס — וּמִן־ –இலிருந்தும் בְּנֵ֤י புத்திரரிலிருந்து–மகன்களிலிருந்து מְרָרִי֙ மெராரியின் אֲחֵיהֶ֔ם அவர்கள்–சகோதரர்களிலிருந்து אֵיתָ֖ן ஏத்தானை בֶּן־ மகன்–குமாரனாகிய קֽוּשָׁיָֽהוּ׃ குஷாயாவின்
அப்படியே லேவியர்கள் யோவேலின் மகனாகிய ஏமானையும், அவனுடைய சகோதரர்களில் பெரகியாவின் மகனாகிய ஆசாப்பையும், மெராரியின் சந்ததியான தங்களுடைய சகோதரர்களில் குஷாயாவின் மகனாகிய ஏத்தானையும்,
18 וְעִמָּהֶ֖ם அவர்களோடு אֲחֵיהֶ֣ם அவர்கள்–சகோதரர்களும் הַמִּשְׁנִ֑ים இரண்டாம்–நிலையினர் זְכַרְיָ֡הוּ செகரியா בֵּ֡ן பென் וְיַֽעֲזִיאֵ֡ל யாசியேல் וּשְׁמִֽירָמ֡וֹת செமிராமோத் וִיחִיאֵ֣ל ׀ யெகியேல் וְעֻנִּ֡י உன்னி אֱלִיאָ֡ב எலியாப் וּבְנָיָ֡הוּ பெனாயா וּמַֽעֲשֵׂיָ֡הוּ மாசேயா וּמַתִּתְיָהוּ֩ மத்தித்தியா וֶאֱלִ֨יפְלֵ֜הוּ எலிப்பலேகு וּמִקְנֵיָ֨הוּ மிக்னேயா וְעֹבֵ֥ד אֱדֹ֛ם ஓபேத்–எதோம் וִֽיעִיאֵ֖ל யெகியேல் הַשֹּׁעֲרִֽים׃ வாசல்காப்பாளர்கள்
இவர்களோடு இரண்டாவது வரிசையாகத் தங்களுடைய சகோதரர்களாகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளர்களையும் நிறுத்தினார்கள்.
19 וְהַמְשֹׁ֣רְרִ֔ים பாடகர்களும் הֵימָ֥ן ஏமான் אָסָ֖ף ஆசாப் וְאֵיתָ֑ן ஏத்தான் בִּמְצִלְתַּ֥יִם கைத்தாளங்களால்–வெண்கலமான נְחֹ֖שֶׁת வெண்கல לְהַשְׁמִֽיעַ׃ ஒலிக்கச்செய்ய
பாடகர்களாகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், வெண்கல தொனியுள்ள கைத்தாளங்களை ஒலிக்கச்செய்து பாடினார்கள்.
20 וּזְכַרְיָ֨ה செகரியாவும் וַעֲזִיאֵ֜ל ஆசியேலும் וּשְׁמִֽירָמ֤וֹת செமிராமோத்தும் וִֽיחִיאֵל֙ யெகியேலும் וְעֻנִּ֣י உன்னியும் וֶֽאֱלִיאָ֔ב எலியாபும் וּמַעֲשֵׂיָ֖הוּ மாசேயாவும் וּבְנָיָ֑הוּ பெனாயாவும் בִּנְבָלִ֖ים வீணைகளோடு–வீணைகளினால் עַל־ –மேல் עֲלָמֽוֹת׃ அலாமோத்–என்ற
சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருக்களை வாசித்தார்கள்.
21 וּמַתִּתְיָ֣הוּ மத்தித்தியாவும் וֶאֱלִֽיפְלֵ֗הוּ எலிப்பலேகுவும் וּמִקְנֵיָ֙הוּ֙ மிக்னேயாவும் וְעֹבֵ֣ד אֱדֹ֔ם ஓபேத்–எதோமும் וִֽיעִיאֵ֖ל யெகியேலும் וַעֲזַזְיָ֑הוּ ஆசஸ்யாவும் בְּכִנֹּר֥וֹת சுரமண்டலங்களோடு עַל־ –மேல் הַשְּׁמִינִ֖ית எட்டாம்–சுருதியில் לְנַצֵּֽחַ׃ நடத்த–இசைத்தலைவராக
மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாக வாசித்தார்கள்.
22 וּכְנַנְיָ֥הוּ கெனனியாவும் שַֽׂר־ தலைவன்–முதல்வன் הַלְוִיִּ֖ם லேவியர்களின் בְּמַשָּׂ֑א சுமப்பதில்–பாட்டில் יָסֹר֙ போதிப்பான்–நடத்துவான் בַּמַּשָּׂ֔א சுமப்பதில்–பாட்டில் כִּ֥י ஏனெனில் מֵבִ֖ין அறிந்தவன்–தேர்ச்சி הֽוּא׃ அவன்
லேவியர்களுக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாக இருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையை நடத்தினான்.
23 וּבֶֽרֶכְיָה֙ பெரெக்யாவும் וְאֶלְקָנָ֔ה எல்கானாவும் שֹׁעֲרִ֖ים வாசல்காப்பாளர்கள் לָאָרֽוֹן׃ பெட்டிக்கு–ஆக
பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டிக்கு முன்பாகக் காவல்காத்துவந்தார்கள்.
24 וּשְׁבַנְיָ֡הוּ செபனியாவும் וְיֽוֹשָׁפָ֡ט யோசபாத்தும் וּנְתַנְאֵ֡ל நெதனெயேலும் וַעֲמָשַׂ֡י அமாசாயும் וּ֠זְכַרְיָהוּ செகரியாவும் וּבְנָיָ֤הוּ பெனாயாவும் וֶֽאֱלִיעֶ֙זֶר֙ எலியேசரும் הַכֹּ֣הֲנִ֔ים ஆசாரியர்களும் [מחצצרים] எக்காளங்களை (מַחְצְרִים֙) ஊதுகிறவர்கள் בַּחֲצֹ֣צְר֔וֹת எக்காளங்களால் לִפְנֵ֖י முன்பாக אֲר֣וֹן பெட்டிக்கு–முன்னே הָֽאֱלֹהִ֑ים தேவனுடைய וְעֹבֵ֤ד אֱדֹם֙ ஓபேத்–எதோமும் וִֽיחִיָּ֔ה யெகியாவும் שֹׁעֲרִ֖ים வாசல்காப்பாளர்கள் לָאָרֽוֹן׃ பெட்டிக்கு–ஆக
செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர்கள் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத்ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளிகளாக இருந்தார்கள்.
25 וַיְהִ֥י ஆனான்–இருந்தது דָוִ֛יד தாவீதும் וְזִקְנֵ֥י மூப்பர்களும் יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் וְשָׂרֵ֣י ஆயிரவர்–சேனாதிபதிகளும் הָאֲלָפִ֑ים ஆயிரங்களின் הַהֹֽלְכִ֗ים போகிறவர்கள்–சென்றவர்கள் לְֽהַעֲל֞וֹת கொண்டுவர–ஏறச்செய்ய אֶת־ –ஐ אֲר֧וֹן பெட்டியை בְּרִית־ உடன்படிக்கையின் יְהוָ֛ה யெகோவாவின் מִן־ –இலிருந்து בֵּ֥ית வீட்டிலிருந்து עֹבֵֽד־אֱדֹ֖ם ஓபேத்–எதோமின் בְּשִׂמְחָֽה׃ சந்தோஷத்தோடு ס —
இப்படி தாவீதும், இஸ்ரவேலின் மூப்பர்களும், ஆயிரம்பேர்களின் தலைவர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடு கொண்டுவரச்செய்தார்கள்.
26 וַֽיְהִי֙ ஆனது–இருந்தது בֶּעְזֹ֣ר உதவிசெய்தபோது–தேவன் הָֽאֱלֹהִ֔ים தேவன் אֶ֨ת־ –ஐ הַלְוִיִּ֔ם லேவியர்களை נֹשְׂאֵ֖י சுமக்கிறவர்களை אֲר֣וֹן பெட்டியை בְּרִית־ உடன்படிக்கையின் יְהוָ֑ה யெகோவாவின் וַיִּזְבְּח֥וּ பலியிட்டார்கள் שִׁבְעָֽה־ ஏழு פָרִ֖ים காளைகளையும் וְשִׁבְעָ֥ה ஏழு אֵילִֽים׃ ஆட்டுக்கடாக்களையும்
யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களுக்கு தேவன் தயவு செய்ததால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள்.
27 וְדָוִ֞יד தாவீதும் מְכֻרְבָּ֣ל ׀ அணிந்திருந்தான்–போர்த்தியிருந்தான் בִּמְעִ֣יל அங்கியால்–சால்வையால் בּ֗וּץ மெல்லிய–துணியின் וְכָל־ எல்லா הַלְוִיִּם֙ லேவியர்களும் הַנֹּשְׂאִ֣ים சுமக்கிறவர்களும் אֶת־ –ஐ הָאָר֔וֹן பெட்டியை וְהַמְשֹׁ֣רְרִ֔ים பாடகர்களும் וּכְנַנְיָ֛ה கெனனியாவும் הַשַּׂ֥ר தலைவன் הַמַּשָּׂ֖א சுமப்பதின்–பாட்டின் הַמְשֹֽׁרְרִ֑ים பாடகர்களின் וְעַל־ –மேல் דָּוִ֖יד தாவீதின் אֵפ֥וֹד ஏபோத் בָּֽד׃ சணல்–நார்
தாவீதும், பெட்டியை சுமக்கிற எல்லா லேவியர்களும், பாடகர்களும், பாடகர்களின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளை அணிந்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்திருந்தான்.
28 וְכָל־ எல்லா יִשְׂרָאֵ֗ל இஸ்ரவேலும் מַעֲלִים֙ கொண்டுவருகிறவர்கள்–ஏறச்செய்கிறவர்கள் אֶת־ –ஐ אֲר֣וֹן பெட்டியை בְּרִית־ உடன்படிக்கையின் יְהוָ֔ה யெகோவாவின் בִּתְרוּעָה֙ ஆர்ப்பரிப்போடு וּבְק֣וֹל சத்தத்தோடு–குரலோடு שׁוֹפָ֔ר எக்காளத்தின் וּבַחֲצֹצְר֖וֹת எக்காளங்களோடும் וּבִמְצִלְתָּ֑יִם கைத்தாளங்களோடும் מַשְׁמִעִ֕ים ஒலிக்கச்செய்கிறவர்கள் בִּנְבָלִ֖ים வீணைகளோடும் וְכִנֹּרֽוֹת׃ சுரமண்டலங்களோடும்
அப்படியே இஸ்ரவேலனைத்தும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் சத்தத்தோடும், தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.
29 וַיְהִ֗י ஆனது–இருந்தது אֲרוֹן֙ பெட்டி בְּרִ֣ית உடன்படிக்கையின் יְהוָ֔ה யெகோவாவின் בָּ֖א வந்தது עַד־ –வரை עִ֣יר நகரத்தின்–பட்டணத்தின் דָּוִ֑יד தாவீதின் וּמִיכַ֨ל மீகாலும் בַּת־ மகள்–குமாரத்தியாகிய שָׁא֜וּל சவுலின் נִשְׁקְפָ֣ה ׀ ஜன்னல்வழியாக–எட்டிப்பார்த்தாள் בְּעַ֣ד வழியாக הַחַלּ֗וֹן ஜன்னலின் וַתֵּ֨רֶא கண்டாள் אֶת־ –ஐ הַמֶּ֤לֶךְ ராஜாவாகிய דָּוִיד֙ தாவீது מְרַקֵּ֣ד நடனமாடுவதையும் וּמְשַׂחֵ֔ק விளையாடுவதையும் וַתִּ֥בֶז அலட்சியம்பண்ணினாள் ל֖וֹ அவனை בְּלִבָּֽהּ׃ தன்–இருதயத்தில் פ —
யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரம்வரை வந்தபோது, சவுலின் மகளாகிய மீகாள் பலகணி வழியாகப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன்னுடைய இருதயத்தில் அவமதித்தாள்.