1 לְמַחְלְק֖וֹת –பிரிவுகளுக்கு לְשֹׁעֲרִ֑ים வாசல்காவலர்களுக்கு לַקָּרְחִ֕ים கோர்கியருக்கு מְשֶֽׁלֶמְיָ֥הוּ மெஷெலெமியாகு בֶן־ மகன்– קֹרֵ֖א கோரே מִן־ –இலிருந்து– בְּנֵ֥י புத்திரர்– אָסָֽף׃ ஆசாப்
ஆலயத்தின் வாசல்காக்கிறவர்களின் பிரிவுகளாவன: கோராகியர்கள் சந்ததியான ஆசாபின் சந்ததியிலே கோரேயின் மகன் மெஷெலேமியா என்பவன்,
2 וְלִמְשֶֽׁלֶמְיָ֖הוּ மெஷெலெமியாகுவுக்கும் בָּנִ֑ים புத்திரர் זְכַרְיָ֤הוּ செக்கரியாகு הַבְּכוֹר֙ –மூத்தவன் יְדִֽיעֲאֵ֣ל யெதீயாவேல் הַשֵּׁנִ֔י –இரண்டாமவன் זְבַדְיָ֙הוּ֙ செபதியாகு הַשְּׁלִישִׁ֔י –மூன்றாமவன் יַתְנִיאֵ֖ל யத்னீயேல் הָרְבִיעִֽי׃ –நான்காமவன்
மெஷெலேமியாவின் மகன்கள் மூத்தவனாகிய சகரியாவும்,
3 עֵילָ֤ם ஏலாம் הַחֲמִישִׁי֙ –ஐந்தாமவன் יְהוֹחָנָ֣ן யெகோகானான் הַשִּׁשִּׁ֔י –ஆறாமவன் אֶלְיְהוֹעֵינַ֖י எலியெகோவேனாய் הַשְּׁבִיעִֽי׃ –ஏழாமவன்
யெதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் மகன்களும்,
4 וּלְעֹבֵ֥ד אֱדֹ֖ם ஓபேத்–எதோமுக்கும் בָּנִ֑ים புத்திரர் שְׁמַֽעְיָ֤ה செமாயா הַבְּכוֹר֙ –மூத்தவன் יְהוֹזָבָ֣ד யெகோசாபாத் הַשֵּׁנִ֔י –இரண்டாமவன் יוֹאָ֤ח யோவாக் הַשְּׁלִשִׁי֙ –மூன்றாமவன் וְשָׂכָ֣ר சாக்கார் הָרְבִיעִ֔י –நான்காமவன் וּנְתַנְאֵ֖ל நெதனெயேல் הַחֲמִישִֽׁי׃ –ஐந்தாமவன்
ஓபேத்ஏதோமின் மகன்கள் மூத்தவனாகிய செமாயாவும்,
5 עַמִּיאֵ֤ל அம்மீயேல் הַשִּׁשִּׁי֙ –ஆறாமவன் יִשָׂשכָ֣ר இசக்கார் הַשְּׁבִיעִ֔י –ஏழாமவன் פְּעֻלְּתַ֖י பெகுல்தாய் הַשְּׁמִינִ֑י –எட்டாமவன் כִּ֥י ஏனெனில் בֵרֲכ֖וֹ ஆசீர்வதித்தார்–அவனை אֱלֹהִֽים׃ தேவன் פ —
யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் மகன்களுமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
6 וְלִֽשְׁמַֽעְיָ֤ה செமாயாவுக்கும் בְנוֹ֙ அவன்–மகனுக்கு נוֹלַ֣ד பிறந்தார்கள் בָּנִ֔ים புத்திரர் הַמִּמְשָׁלִ֖ים –ஆளுகிறவர்கள் לְבֵ֣ית –வீட்டுக்கு אֲבִיהֶ֑ם அவர்கள்–தகப்பன் כִּֽי־ ஏனெனில்– גִבּ֥וֹרֵי வலிமையான– חַ֖יִל வீரர் הֵֽמָּה׃ அவர்கள்
அவனுடைய மகனாகிய செமாயாவுக்கும் மகன்கள் பிறந்து, அவர்கள் பெலசாலிகளாக இருந்து, தங்களுடைய தகப்பன் குடும்பத்தார்களை ஆண்டார்கள்.
7 בְּנֵ֣י புத்திரர்– שְׁמַֽעְיָ֗ה செமாயா עָ֠תְנִי ஒத்னி וּרְפָאֵ֨ל ரெபாயேல் וְעוֹבֵ֧ד ஓபேத் אֶלְזָבָ֛ד எல்சாபாத் אֶחָ֖יו அவன்–சகோதரர் בְּנֵי־ புத்திரர்– חָ֑יִל வீரம் אֱלִיה֖וּ எலிகூ וּסְמַכְיָֽהוּ׃ செமக்கியாகு
செமாயாவுக்கு இருந்த மகன்கள் ஒத்னியும், பெலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சபாத் என்னும் அவனுடைய சகோதரர்களும், எலிகூவும் செமகியாவுமே.
8 כָּל־ இவர்கள்–எல்லோரும் אֵ֜לֶּה இவர்கள் מִבְּנֵ֣י ׀ புத்திரர்– עֹבֵ֣דאֱדֹ֗ם ஓபேத்–எதோம் הֵ֤מָּה அவர்கள் וּבְנֵיהֶם֙ அவர்கள்–புத்திரர் וַאֲחֵיהֶ֔ם அவர்கள்–சகோதரர் אִֽישׁ־ ஒவ்வொரு–மனிதனும்– חַ֥יִל வீரமுள்ள בַּכֹּ֖חַ –வலிமையில் לַעֲבֹדָ֑ה –ஊழியத்திற்கு שִׁשִּׁ֥ים அறுபத்– וּשְׁנַ֖יִם இரண்டு לְעֹבֵ֥ד אֱדֹֽם׃ ஓபேத்–எதோமுக்கு
ஓபேத்ஏதோமின் சந்ததிகளும் அவர்களுடைய மகன்களும், சகோதரர்களுமாகிய ஊழியத்திற்குப் பலத்த பெலசாலிகளான அவர்களெல்லோரும் அறுபத்திரண்டுபேர்.
9 וְלִמְשֶֽׁלֶמְיָ֗הוּ மெஷெலெமியாகுவுக்கும் בָּנִ֧ים புத்திரர் וְאַחִ֛ים சகோதரர் בְּנֵי־ புத்திரர்– חָ֖יִל வீரம் שְׁמוֹנָ֥ה பதினெட்டு עָשָֽׂר׃ பேர் ס —
மெஷெலேமியாவின் மகன்களும், சகோதரர்களுமான பெலசாலிகள் பதினெட்டுபேர்.
10 וּלְחֹסָ֥ה கோசாவுக்கும் מִן־ –இலிருந்து– בְּנֵי־ புத்திரர்– מְרָרִ֖י மெராரி בָּנִ֑ים புத்திரர் שִׁמְרִ֤י சிம்ரி הָרֹאשׁ֙ –தலைவன் כִּ֣י ஏனெனில் לֹא־ இல்லை– הָיָ֣ה இருந்தான் בְכ֔וֹר மூத்தவன் וַיְשִׂימֵ֥הוּ வைத்தான்–அவனை אָבִ֖יהוּ அவன்–தகப்பன் לְרֹֽאשׁ׃ –தலைவனாக
மெராரியின் மகன்களில் ஓசா என்பவனுடைய மகன்கள்: சிம்ரி என்னும் தலைவன்; இவன் மூத்தவனாக இல்லாவிட்டாலும் இவனுடைய தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.
11 חִלְקִיָּ֤הוּ கில்கியாகு הַשֵּׁנִי֙ –இரண்டாமவன் טְבַלְיָ֣הוּ தெபலியாகு הַשְּׁלִשִׁ֔י –மூன்றாமவன் זְכַרְיָ֖הוּ செக்கரியாகு הָרְבִעִ֑י –நான்காமவன் כָּל־ எல்லா– בָּנִ֧ים புத்திரர் וְאַחִ֛ים சகோதரர் לְחֹסָ֖ה கோசாவுக்கு שְׁלֹשָׁ֥ה பதின்– עָשָֽׂר׃ மூன்று
இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் மகன்களானவர்கள்; ஓசாவின் மகன்களும் சகோதரர்களும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
12 לְ֠אֵלֶּה –இவர்களுக்கு מַחְלְק֨וֹת பிரிவுகள் הַשֹּֽׁעֲרִ֜ים –வாசல்காவலர்களின் לְרָאשֵׁ֧י –தலைவர்களுக்கு הַגְּבָרִ֛ים –வீரர்களின் מִשְׁמָר֖וֹת காவல்நிலைகள் לְעֻמַּ֣ת –போலவே אֲחֵיהֶ֑ם அவர்கள்–சகோதரர் לְשָׁרֵ֖ת –ஊழியஞ்செய்ய בְּבֵ֥ית –வீட்டில் יְהוָֽה׃ யெகோவா
காவல்காரர்களான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரர்களுக்கு ஒத்த முறையாகக் யெகோவாவுடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாக பணிவிடை செய்ய இவர்கள் பிரிக்கப்பட்டு,
13 וַיַּפִּ֨ילוּ சீட்டுப்போட்டார்கள் גוֹרָל֜וֹת சீட்டுகளை כַּקָּטֹ֧ן –சிறியவனும் כַּגָּד֛וֹל –பெரியவனும் לְבֵ֥ית –வீட்டுக்கு אֲבוֹתָ֖ם அவர்கள்–பிதாக்கள் לְשַׁ֥עַר –வாசலுக்கு וָשָֽׁעַר׃ வாசலாக פ —
தங்கள் பிதாக்களின் குடும்பத்தார்களாகிய சிறியவர்களும், பெரியவர்களுமாக இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
14 וַיִּפֹּ֧ל விழுந்தது הַגּוֹרָ֛ל –சீட்டு מִזְרָ֖חָה கிழக்கே לְשֶֽׁלֶמְיָ֑הוּ செலெமியாவுக்கு וּזְכַרְיָ֨הוּ செக்கரியாகுவும் בְנ֜וֹ அவன்–மகன் יוֹעֵ֣ץ ׀ ஆலோசகன் בְּשֶׂ֗כֶל –புத்தியில் הִפִּ֙ילוּ֙ போட்டார்கள் גּֽוֹרָל֔וֹת சீட்டுகளை וַיֵּצֵ֥א வந்தது גוֹרָל֖וֹ அவன்–சீட்டு צָפֽוֹנָה׃ வடக்கே ס —
கீழ்ப்புறத்திற்கு செலேமியாவுக்கு சீட்டு விழுந்தது; விவேகமுள்ள ஆலோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவனுடைய மகனுக்கு சீட்டு போட்டபோது, அவனுடைய சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
15 לְעֹבֵ֥ד אֱדֹ֖ם ஓபேத்–எதோமுக்கு נֶ֑גְבָּה தெற்கே וּלְבָנָ֖יו அவன்–புத்திரருக்கும் בֵּ֥ית வீடு הָאֲסֻפִּֽים׃ –களஞ்சியங்களின்
ஓபேத்ஏதோமுக்குத் தென்புறத்திற்கும், அவனுடைய மகன்களுக்கு அசுப்பீம் வீட்டிற்கும்,
16 לְשֻׁפִּ֤ים சுப்பீமுக்கும் וּלְחֹסָה֙ கோசாவுக்கும் לַֽמַּעֲרָ֔ב –மேற்கே עִ֚ם –உடன் שַׁ֣עַר வாசல் שַׁלֶּ֔כֶת சல்லெக்கெத் בַּֽמְסִלָּ֖ה –மேடான–வழியில் הָעוֹלָ֑ה –ஏறுகிற מִשְׁמָ֖ר காவல்நிலை לְעֻמַּ֥ת –எதிரே מִשְׁמָֽר׃ காவல்நிலை
சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.
17 לַמִּזְרָח֮ –கிழக்கே הַלְוִיִּ֣ם லேவியர் שִׁשָּׁה֒ ஆறுபேர் לַצָּפ֤וֹנָה –வடக்கே לַיּוֹם֙ –நாளுக்கு אַרְבָּעָ֔ה நான்குபேர் לַנֶּ֥גְבָּה –தெற்கே לַיּ֖וֹם –நாளுக்கு אַרְבָּעָ֑ה நான்குபேர் וְלָאֲסֻפִּ֖ים –களஞ்சியத்திற்கு שְׁנַ֥יִם இரண்டு שְׁנָֽיִם׃ இரண்டு
கிழக்கே லேவியர்களான ஆறுபேரும், வடக்கே பகலிலே நான்குபேர்களும், தெற்கே பகலிலே நான்குபேர்களும், அசுப்பீம் வீட்டின் அருகில் இரண்டிரண்டுபேர்களும்,
18 לַפַּרְבָּ֖ר –பர்பாருக்கு לַֽמַּעֲרָ֑ב –மேற்கே אַרְבָּעָה֙ நான்குபேர் לַֽמְסִלָּ֔ה –மேடான–வழிக்கு שְׁנַ֖יִם இரண்டுபேர் לַפַּרְבָּֽר׃ –பர்பாருக்கு
வெளிப்புறமான வாசல் அருகில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நான்குபேர்களும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேர்களும் வைக்கப்பட்டார்கள்.
19 אֵ֗לֶּה இவை מַחְלְקוֹת֙ பிரிவுகள் הַשֹּׁ֣עֲרִ֔ים –வாசல்காவலர்களின் לִבְנֵ֥י –புத்திரர்களுக்கு הַקָּרְחִ֖י –கோர்கியர் וְלִבְנֵ֥י –புத்திரர்களுக்கும் מְרָרִֽי׃ மெராரி
கோராகின் சந்ததிகளுக்குள்ளும், மெராரியின் சந்ததிகளுக்குள்ளும், வாசல் காக்கிறவர்களின் பிரிவுகள் இவைகளே.
20 וְֽהַלְוִיִּ֑ם லேவியர்களும் אֲחִיָּ֗ה அகியா עַל־ –மேல் אֽוֹצְרוֹת֙ பொக்கிஷங்கள் בֵּ֣ית –வீட்டின் הָאֱלֹהִ֔ים –தேவனின் וּלְאֹֽצְר֖וֹת –பொக்கிஷங்களுக்கும் הַקֳּדָשִֽׁים׃ –பரிசுத்தமானவைகளின்
மற்ற லேவியர்களில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் கவனிக்கிறவனுமாக.
21 בְּנֵ֣י புத்திரர்– לַ֠עְדָּן லாதான் בְּנֵ֨י புத்திரர்– הַגֵּרְשֻׁנִּ֜י –கெர்சோனியர் לְלַעְדָּ֗ן லாதானுக்கு רָאשֵׁ֧י தலைவர்கள்– הָאָב֛וֹת –பிதாக்களின் לְלַעְדָּ֥ן லாதானுக்கு הַגֵּרְשֻׁנִּ֖י –கெர்சோனியனான יְחִיאֵלִֽי׃ யெகியேலி
லாதானின் மகன்கள் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய மகன்களில் தலைமையான குடும்பத்தலைவர்களாக இருந்த யெகியேலியும்,
22 בְּנֵ֖י புத்திரர்– יְחִֽיאֵלִ֑י யெகியேலி זֵתָם֙ சேத்தாம் וְיוֹאֵ֣ל யோவேல் אָחִ֔יו அவன்–சகோதரன் עַל־ –மேல் אֹצְר֖וֹת பொக்கிஷங்கள் בֵּ֥ית –வீட்டின் יְהוָֽה׃ யெகோவா
யெகியேலியின் மகன்களாகிய சேத்தாமும், அவனுடைய சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை கவனிக்கிறவர்களாக இருந்தார்கள்.
23 לַֽעַמְרָמִי֙ அம்ராமியருக்கு לַיִּצְהָרִ֔י இத்சேகாரியருக்கு לַֽחֶבְרוֹנִ֖י எப்ரோனியருக்கு לָֽעָזִּיאֵלִֽי׃ ஊசியேலியருக்கு
அம்ராமியர்களிலும், இத்சாரியர்களிலும், எப்ரோனியர்களிலும், ஊசியேரியர்களிலும், சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாக இருந்தார்கள்.
24 וּשְׁבֻאֵל֙ செபுவேல் בֶּן־ மகன்– גֵּרְשׁ֣וֹם கெர்சோம் בֶּן־ மகன்– מֹשֶׁ֔ה மோசே נָגִ֖יד தலைவன் עַל־ –மேல்– הָאֹצָרֽוֹת׃ –பொக்கிஷங்கள்
மோசேயின் மகனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷக் கண்காணியாக இருந்தான்.
25 וְאֶחָ֖יו அவன்–சகோதரர் לֶֽאֱלִיעֶ֑זֶר எலியேசர் רְחַבְיָ֨הוּ ரெகபியாகு בְנ֜וֹ அவன்–மகன் וִֽישַׁעְיָ֤הוּ ஏசாயாகு בְנוֹ֙ அவன்–மகன் וְיֹרָ֣ם யோராம் בְּנ֔וֹ அவன்–மகன் וְזִכְרִ֥י சிக்ரி בְנ֖וֹ அவன்–மகன் [ושלמות] — (וּשְׁלֹמִ֥ית) செலோமித் בְּנֽוֹ׃ அவன்–மகன்
எலியேசர் மூலமாக அவனுக்கு இருந்த சகோதரர்களானவர்கள், இவனுடைய மகன் ரெகபியாவும், இவனுடைய மகன் எஷாயாவும், இவனுடைய மகன் யோராமும், இவனுடைய மகன் சிக்ரியும், இவனுடைய மகன் செலோமித்துமே.
26 ה֧וּא அவன் שְׁלֹמ֣וֹת செலோமோத் וְאֶחָ֗יו அவன்–சகோதரர் עַ֣ל –மேல் כָּל־ எல்லா– אֹצְר֤וֹת பொக்கிஷங்கள் הַקֳּדָשִׁים֙ –பரிசுத்தமானவைகளின் אֲשֶׁ֨ר அவைகளை הִקְדִּ֜ישׁ அர்ப்பணித்தான் דָּוִ֣יד தாவீது הַמֶּ֗לֶךְ –ராஜா וְרָאשֵׁ֧י தலைவர்கள்– הָאָב֛וֹת –பிதாக்களின் לְשָׂרֵֽי־ –ஆயிரவர்களின்–தலைவர்கள் הָאֲלָפִ֥ים –ஆயிரவர் וְהַמֵּא֖וֹת –நூறுவர் וְשָׂרֵ֥י தலைவர்கள்– הַצָּבָֽא׃ –சேனையின்
ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான குடும்பத்தலைவர்களும், தளபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,
27 מִן־ –இலிருந்து– הַמִּלְחָמ֥וֹת –யுத்தங்களிலிருந்தும் וּמִן־ –இலிருந்து– הַשָּׁלָ֖ל –கொள்ளையிலிருந்தும் הִקְדִּ֑ישׁוּ அர்ப்பணித்தார்கள் לְחַזֵּ֖ק –பலப்படுத்த לְבֵ֥ית –வீட்டை יְהוָֽה׃ யெகோவா
யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படி பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்த செலோமித்தும் அவனுடைய சகோதரர்களும் கவனித்தார்கள்.
28 וְכֹ֨ל எல்லா הַֽהִקְדִּ֜ישׁ –அர்ப்பணிக்கப்பட்டவை שְׁמוּאֵ֤ל சாமுவேல் הָרֹאֶה֙ –தீர்க்கதரிசி וְשָׁא֣וּל சவுல் בֶּן־ மகன்– קִ֔ישׁ கீஸ் וְאַבְנֵ֣ר அப்னேர் בֶּן־ மகன்– נֵ֔ר நேர் וְיוֹאָ֖ב யோவாப் בֶּן־ மகன்– צְרוּיָ֑ה செருயா כֹּ֚ל எல்லா הַמַּקְדִּ֔ישׁ –அர்ப்பணிக்கிறவர் עַ֥ל –மேல் יַד־ கை– שְׁלֹמִ֖ית செலோமித் וְאֶחָֽיו׃ அவன்–சகோதரர் פ —
தீர்க்கதரிசியாகிய சாமுவேலும், கீசின் மகனாகிய சவுலும், நேரின் மகனாகிய அப்னேரும், செருயாவின் மகனாகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவனுடைய சகோதரர்கள் கையின்கீழும் இருந்தது.
29 לַיִּצְהָרִ֞י இத்சேகாரியருக்கு כְּנַנְיָ֣הוּ கெனனியாகு וּבָנָ֗יו அவன்–புத்திரர் לַמְּלָאכָ֤ה –வேலைக்கு הַחִֽיצוֹנָה֙ –வெளிப்புறமான עַל־ –மேல்– יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேல் לְשֹׁטְרִ֖ים –அதிகாரிகளாகவும் וּלְשֹׁפְטִֽים׃ நியாயாதிபதிகளாகவும்
இத்சாரியர்களில் கெனானியாவும் அவனுடைய மகன்களும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரர்களும் அலுவலர்களுமாகவும் இருந்தார்கள்.
30 לַֽחֶבְרוֹנִ֡י எப்ரோனியருக்கு חֲשַׁבְיָהוּ֩ அஷபியாகு וְאֶחָ֨יו அவன்–சகோதரர் בְּנֵי־ புத்திரர்– חַ֜יִל வீரம் אֶ֣לֶף ஆயிரத்– וּשְׁבַע־ எழுநூறு– מֵא֗וֹת பேர் עַ֚ל –மேல் פְּקֻדַּ֣ת மேற்பார்வை יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேல் מֵעֵ֥בֶר –அப்புறம் לַיַּרְדֵּ֖ן –யோர்தானுக்கு מַעְרָ֑בָה மேற்கே לְכֹל֙ –எல்லா מְלֶ֣אכֶת வேலைக்கு יְהוָ֔ה யெகோவா וְלַעֲבֹדַ֖ת –ஊழியத்துக்கும் הַמֶּֽלֶךְ׃ –ராஜாவின்
எப்ரோனியர்களில் அஷபியாவும் அவனுடைய சகோதரர்களுமாகிய ஆயிரத்து எழுநூறு பெலசாலிகள் யோர்தானுக்கு இந்தப்பக்கம் மேற்கே இருக்கிற இஸ்ரவேலின்மேல் யெகோவாவுடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் வைக்கப்பட்டார்கள்.
31 לַֽחֶבְרוֹנִי֙ எப்ரோனியருக்கு יְרִיָּ֣ה யெரியா הָרֹ֔אשׁ –தலைவன் לַֽחֶבְרוֹנִ֥י எப்ரோனியருக்கு לְתֹלְדֹתָ֖יו –தலைமுறைகளுக்கு לְאָב֑וֹת –பிதாக்களுக்கு בִּשְׁנַ֨ת –வருடத்தில் הָֽאַרְבָּעִ֜ים –நாற்பதாவது לְמַלְכ֤וּת –ஆட்சியில் דָּוִיד֙ தாவீது נִדְרָ֔שׁוּ தேடப்பட்டார்கள் וַיִּמָּצֵ֥א கண்டுபிடிக்கப்பட்டார்கள் בָהֶ֛ם அவர்களில் גִּבּ֥וֹרֵי வலிமையான– חַ֖יִל வீரர் בְּיַעְזֵ֥יר யாசேரில் גִּלְעָֽד׃ கிலெயாத்
எப்ரோனியர்களில் எரியாவும் இருந்தான்; அவனுடைய குடும்பத்தார்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைவனாக இருந்தவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருடத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து யாசேரிலே மிகுந்த பலமுள்ள வீரர்கள் காணப்பட்டார்கள்.
32 וְאֶחָ֣יו அவன்–சகோதரர் בְּנֵי־ புத்திரர்– חַ֗יִל வீரம் אַלְפַּ֛יִם இரண்டாயிரத்து– וּשְׁבַ֥ע எழுநூறு– מֵא֖וֹת பேர் רָאשֵׁ֣י தலைவர்கள்– הָאָב֑וֹת –பிதாக்களின் וַיַּפְקִידֵ֞ם நியமித்தான்–அவர்களை דָּוִ֣יד தாவீது הַמֶּ֗לֶךְ –ராஜா עַל־ –மேல்– הָראוּבֵנִ֤י –ரூபனியருக்கும் וְהַגָּדִי֙ –காத்தியருக்கும் וַחֲצִי֙ பாதி– שֵׁ֣בֶט கோத்திரம் הַֽמְנַשִּׁ֔י –மனாசியருக்கும் לְכָל־ –எல்லா– דְּבַ֥ר காரியம் הָאֱלֹהִ֖ים –தேவனின் וּדְבַ֥ר காரியம் הַמֶּֽלֶךְ׃ –ராஜாவின் פ —
பெலசாலிகளாகிய அவனுடைய சகோதரர்கள் இரண்டாயிரத்து எழுநூறு முதன்மை தலைவர்களாக இருந்தார்கள்; அவர்களைத் தாவீது ராஜா தேவனுடைய எல்லாக் காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்திற்காகவும், ரூபனியர்கள்மேலும், காத்தியர்கள்மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.