1 וַיָּ֣חֶל தொடங்கினான் שְׁלֹמֹ֗ה சாலொமோன் לִבְנ֤וֹת கட்ட אֶת־ × בֵּית־ ஆலயத்தை יְהוָה֙ யெகோவாவின் בִּיר֣וּשָׁלִַ֔ם –எருசலேமில் בְּהַר֙ –மலையில் הַמּ֣וֹרִיָּ֔ה –மோரியா אֲשֶׁ֥ר –அது נִרְאָ֖ה காண்பிக்கப்பட்டது לְדָוִ֣יד –தாவீதுக்கு אָבִ֑יהוּ அவன்–தந்தைக்கு אֲשֶׁ֤ר –அது הֵכִין֙ ஆயத்தமாக்கினார் בִּמְק֣וֹם –இடத்தில் דָּוִ֔יד தாவீது בְּגֹ֖רֶן –களத்தில் אָרְנָ֥ן ஒர்னான் הַיְבוּסִֽי׃ –எபூசியனின்
பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் யெகோவாவினால் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த இடத்திலே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான்.
2 וַ֠יָּחֶל தொடங்கினான் לִבְנ֞וֹת கட்ட בַּחֹ֤דֶשׁ –மாதத்தில் הַשֵּׁנִי֙ –இரண்டாம் בַּשֵּׁנִ֔י –இரண்டாவதில் בִּשְׁנַ֥ת –வருடத்தில் אַרְבַּ֖ע நான்கு לְמַלְכוּתֽוֹ׃ –அரசாட்சிக்கு
அவன் தான் ஆட்சிசெய்த நான்காம் வருடம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.
3 וְאֵ֙לֶּה֙ இவை הוּסַ֣ד அடிப்படையிடப்பட்டது שְׁלֹמֹ֔ה சாலொமோன் לִבְנ֖וֹת கட்ட אֶת־ × בֵּ֣ית ஆலயத்தை הָאֱלֹהִ֑ים –தேவனின் הָאֹ֡רֶךְ –நீளம் אַמּ֞וֹת முழம் בַּמִּדָּ֤ה –அளவில் הָרִֽאשׁוֹנָה֙ –முதலாவதில் אַמּ֣וֹת முழம் שִׁשִּׁ֔ים அறுபது וְרֹ֖חַב அகலம் אַמּ֥וֹת முழம் עֶשְׂרִֽים׃ இருபது
தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.
4 וְהָאוּלָ֡ם –மண்டபம் אֲשֶׁר֩ –அது עַל־ –முன் פְּנֵ֨י –முகத்தில் הָאֹ֜רֶךְ –நீளத்தின் עַל־ –முன் פְּנֵ֤י –முகத்தில் רֹֽחַב־ அகலத்தின் הַבַּ֙יִת֙ –ஆலயத்தின் אַמּ֣וֹת முழம் עֶשְׂרִ֔ים இருபது וְהַגֹּ֖בַהּ –உயரம் מֵאָ֣ה நூறு וְעֶשְׂרִ֑ים இருபது וַיְצַפֵּ֥הוּ மூடினான் מִפְּנִ֖ימָה –உள்ளே זָהָ֥ב பொன்னால் טָהֽוֹר׃ பரிசுத்தமான
முன்புற மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபது முழ நீளமும், நூற்றிருபது முழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் மூடினான்.
5 וְאֵ֣ת ׀ –மற்றும் הַבַּ֣יִת –ஆலயத்தை הַגָּד֗וֹל –பெரியதை חִפָּה֙ மூடினான் עֵ֣ץ மரம் בְּרוֹשִׁ֔ים தேவதாரு וַיְחַפֵּ֖הוּ பூசினான் זָהָ֣ב பொன்னால் ט֑וֹב நல்ல וַיַּ֧עַל செய்தான் עָלָ֛יו அதன்மேல் תִּמֹרִ֖ים பேரீச்சமரங்கள் וְשַׁרְשְׁרֽוֹת׃ சங்கிலிகள்
ஆலயத்தின் பெரிய மாளிகையைத் தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் மூடி, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்தரித்து,
6 וַיְצַ֧ף பூசினான் אֶת־ × הַבַּ֛יִת –ஆலயத்தை אֶ֥בֶן கல் יְקָרָ֖ה விலையேறப்பெற்ற לְתִפְאָ֑רֶת –அலங்காரத்திற்கு וְהַזָּהָ֖ב –பொன் זְהַ֥ב பொன் פַּרְוָֽיִם׃ பர்வாயிம்
அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.
7 וַיְחַ֨ף மூடினான் אֶת־ × הַבַּ֜יִת –ஆலயத்தை הַקֹּר֧וֹת –உத்திரங்கள் הַסִּפִּ֛ים –வாசற்படிகள் וְקִֽירוֹתָ֥יו –சுவர்கள் וְדַלְתוֹתָ֖יו –கதவுகள் זָהָ֑ב பொன்னால் וּפִתַּ֥ח செதுக்கினான் כְּרוּבִ֖ים கெரூபின்கள் עַל־ –மேல் הַקִּירֽוֹת׃ –சுவர்களில் ס —
அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், சுவர்களையும், கதவுகளையும் பொன்தகட்டால் மூடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான்.
8 וַיַּ֙עַשׂ֙ செய்தான் אֶת־ × בֵּֽית־ ஆலயத்தை קֹ֣דֶשׁ பரிசுத்தம் הַקֳּדָשִׁ֔ים –பரிசுத்தங்களின் אָרְכּ֞וֹ நீளம் עַל־ –முன் פְּנֵ֤י –முகத்தில் רֹֽחַב־ அகலத்தின் הַבַּ֙יִת֙ –ஆலயத்தின் אַמּ֣וֹת முழம் עֶשְׂרִ֔ים இருபது וְרָחְבּ֖וֹ அகலம் אַמּ֣וֹת முழம் עֶשְׂרִ֑ים இருபது וַיְחַפֵּ֙הוּ֙ பூசினான் זָהָ֣ב பொன்னால் ט֔וֹב நல்ல לְכִכָּרִ֖ים –தாலந்துகள் שֵׁ֥שׁ அறுநூறு מֵאֽוֹת׃ நூறு
மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபது முழமுமாக இருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் மூடினான்.
9 וּמִשְׁקָ֛ל எடை לְמִסְמְר֥וֹת –ஆணிகளுக்கு לִשְׁקָלִ֖ים –சேக்கல்கள் חֲמִשִּׁ֣ים ஐம்பது זָהָ֑ב பொன் וְהָעֲלִיּ֖וֹת –மேல்அறைகள் חִפָּ֥ה மூடினான் זָהָֽב׃ பொன்னால்
ஆணிகளின் எடை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் மூடினான்.
10 וַיַּ֜עַשׂ செய்தான் בְּבֵֽית־ –ஆலயத்தில் קֹ֤דֶשׁ பரிசுத்தம் הַקֳּדָשִׁים֙ –பரிசுத்தங்களின் כְּרוּבִ֣ים கெரூபின்கள் שְׁנַ֔יִם இரண்டு מַעֲשֵׂ֖ה வேலைப்பாடு צַעֲצֻעִ֑ים சிற்பங்கள் וַיְצַפּ֥וּ பூசினார்கள் אֹתָ֖ם அவற்றை זָהָֽב׃ பொன்னால்
அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாக உண்டாக்கினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
11 וְכַנְפֵי֙ –இறக்கைகள் הַכְּרוּבִ֔ים –கெரூபின்களின் אָרְכָּ֖ם நீளம் אַמּ֣וֹת முழம் עֶשְׂרִ֑ים இருபது כְּנַ֨ף இறக்கை הָאֶחָ֜ד –ஒன்றின் לְאַמּ֣וֹת –முழம் חָמֵ֗שׁ ஐந்து מַגַּ֙עַת֙ தொடுகிற לְקִ֣יר –சுவரை הַבַּ֔יִת –ஆலயத்தின் וְהַכָּנָ֤ף –இறக்கை הָאַחֶ֙רֶת֙ –மற்றதின் אַמּ֣וֹת முழம் חָמֵ֔שׁ ஐந்து מַגִּ֕יעַ தொடுகிற לִכְנַ֖ף –இறக்கையை הַכְּר֥וּב –கெரூபின் הָאַחֵֽר׃ –மற்றதின்
அந்தக் கேருபீன்களுடைய சிறகுகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு சிறகு ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மற்ற சிறகு ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது.
12 וּכְנַ֨ף இறக்கை הַכְּר֤וּב –கெரூபின் הָאֶחָד֙ –ஒன்றின் אַמּ֣וֹת முழம் חָמֵ֔שׁ ஐந்து מַגִּ֖יעַ தொடுகிற לְקִ֣יר –சுவரை הַבָּ֑יִת –ஆலயத்தின் וְהַכָּנָ֤ף –இறக்கை הָאַחֶ֙רֶת֙ –மற்றதின் אַמּ֣וֹת முழம் חָמֵ֔שׁ ஐந்து דְּבֵקָ֕ה ஒட்டின לִכְנַ֖ף –இறக்கையுடன் הַכְּר֥וּב –கெரூபின் הָאַחֵֽר׃ –மற்றதின்
மற்றக் கேருபீனின் ஒரு சிறகும் ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மற்ற சிறகும் ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது.
13 כַּנְפֵי֙ இறக்கைகள் הַכְּרוּבִ֣ים –கெரூபின்களின் הָאֵ֔לֶּה –இந்த פֹּֽרְשִׂ֖ים விரிந்த אַמּ֣וֹת முழம் עֶשְׂרִ֑ים இருபது וְהֵ֛ם அவர்கள் עֹמְדִ֥ים நின்றார்கள் עַל־ –மேல் רַגְלֵיהֶ֖ם –கால்களின் וּפְנֵיהֶ֥ם –முகங்கள் לַבָּֽיִת׃ –ஆலயத்திற்கு ס —
இப்படியே அந்தக் கேருபீன்களின் சிறகுகள் இருபதுமுழம் விரிந்திருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியிருந்தது.
14 וַיַּ֙עַשׂ֙ செய்தான் אֶת־ × הַפָּרֹ֔כֶת –திரையை תְּכֵ֥לֶת நீலம் וְאַרְגָּמָ֖ן ஊதா וְכַרְמִ֣יל கருஞ்சிவப்பு וּב֑וּץ மெல்லிய–துணி וַיַּ֥עַל செய்தான் עָלָ֖יו அதன்மேல் כְּרוּבִֽים׃ கெரூபின்கள் ס —
இளநீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவுப்பு நூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டாக்கினான்.
15 וַיַּ֜עַשׂ செய்தான் לִפְנֵ֤י –முன் הַבַּ֙יִת֙ –ஆலயத்தின் עַמּוּדִ֣ים தூண்கள் שְׁנַ֔יִם இரண்டு אַמּ֕וֹת முழம் שְׁלֹשִׁ֥ים முப்பத்தைந்து וְחָמֵ֖שׁ ஐந்து אֹ֑רֶךְ நீளம் וְהַצֶּ֥פֶת –போதிகை אֲשֶׁר־ –அது עַל־ –மேல் רֹאשׁ֖וֹ –தலையின் אַמּ֥וֹת முழம் חָמֵֽשׁ׃ ஐந்து ס —
ஆலயத்திற்கு முன்பாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேல் இருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
16 וַיַּ֤עַשׂ செய்தான் שַׁרְשְׁרוֹת֙ சங்கிலிகள் בַּדְּבִ֔יר –அந்தரங்கத்தில் וַיִּתֵּ֖ן வைத்தான் עַל־ –மேல் רֹ֣אשׁ தலை הָעַמֻּדִ֑ים –தூண்களின் וַיַּ֤עַשׂ செய்தான் רִמּוֹנִים֙ மாதுளைகள் מֵאָ֔ה நூறு וַיִּתֵּ֖ן வைத்தான் בַּֽשַּׁרְשְׁרֽוֹת׃ –சங்கிலிகளில்
சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் செய்து, தூண்களின் முனைகளின் மேல் பற்றவைத்து, நூறு மாதுளம் பழங்களையும் செய்து அந்தச் சங்கிலிகளில் கோர்த்தான்.
17 וַיָּ֤קֶם நிறுத்தினான் אֶת־ × הָֽעַמּוּדִים֙ –தூண்களை עַל־ –முன் פְּנֵ֣י –முகத்தில் הַהֵיכָ֔ל –ஆலயத்தின் אֶחָ֥ד ஒன்று מִיָּמִ֖ין –வலதுபுறம் וְאֶחָ֣ד ஒன்று מֵֽהַשְּׂמֹ֑אול –இடதுபுறம் וַיִּקְרָ֤א அழைத்தான் שֵׁם־ பெயர் [הימיני] — (הַיְמָנִי֙) –வலதின் יָכִ֔ין யாகீன் וְשֵׁ֥ם பெயர் הַשְּׂמָאלִ֖י –இடதின் בֹּֽעַז׃ போவாஸ் ס —
அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் மற்றொன்றை இடது புறத்திலும் நாட்டி, வலதுபுறத் தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத் தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான்.