1 וּמַֽלְכַּת־ –அரசியும்– שְׁבָ֗א சேபாவின் שָֽׁמְעָה֮ கேள்விப்பட்டாள் אֶת־ × שֵׁ֣מַע கேள்வியை שְׁלֹמֹה֒ சாலொமோனின் וַתָּב֣וֹא –வந்தாள் לְנַסּוֹת֩ –சோதிக்க אֶת־ × שְׁלֹמֹ֨ה சாலொமோனை בְחִיד֜וֹת –புதிர்களால் בִּירֽוּשָׁלִַ֗ם –எருசலேமில் בְּחַ֣יִל –படையோடு כָּבֵ֣ד மிகப்பெரிய מְאֹ֡ד மிகவும் וּ֠גְמַלִּים –ஒட்டகங்களும் נֹשְׂאִ֨ים சுமந்துகொண்டிருந்தன בְּשָׂמִ֧ים –சுகந்ததிரவியங்களையும் וְזָהָ֛ב –தங்கத்தையும் לָרֹ֖ב –மிகுதியாக וְאֶ֣בֶן –கல்லையும் יְקָרָ֑ה விலையுயர்ந்த וַתָּבוֹא֙ –வந்தாள் אֶל־ × שְׁלֹמֹ֔ה சாலொமோனிடம் וַתְּדַבֵּ֣ר –பேசினாள் עִמּ֔וֹ –அவனோடு אֵ֛ת × כָּל־ எல்லா– אֲשֶׁ֥ר அதை הָיָ֖ה இருந்தது עִם־ –உடன் לְבָבָֽהּ׃ இருதயத்தில்–அவளின்
சேபாவின் அரசி, சாலொமோனின் புகழைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனை சோதிக்கிறதற்காக, திரளான கூட்டத்தினரோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்திற்கு வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் உரையாடினாள்.
2 וַיַּגֶּד־ –அறிவித்தான்– לָ֥הּ –அவளுக்கு שְׁלֹמֹ֖ה சாலொமோன் אֶת־ × כָּל־ எல்லா– דְּבָרֶ֑יהָ வார்த்தைகளை–அவளின் וְלֹֽא־ –இல்லை– נֶעְלַ֤ם மறைக்கப்பட்டது דָּבָר֙ காரியம் מִשְּׁלֹמֹ֔ה –சாலொமோனிடமிருந்து אֲשֶׁ֧ר அதை לֹ֦א இல்லை הִגִּ֖יד அறிவித்தான் לָֽהּ׃ –அவளுக்கு
அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளுக்கெல்லாம் பதில் கூறினான்; அவளுக்கு பதில் கூறமுடியாதபடி ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.
3 וַתֵּ֙רֶא֙ –கண்டாள் מַֽלְכַּת־ அரசியும்– שְׁבָ֔א சேபாவின் אֵ֖ת × חָכְמַ֣ת ஞானத்தை שְׁלֹמֹ֑ה சாலொமோனின் וְהַבַּ֖יִת –வீட்டையும் אֲשֶׁ֥ר அதை בָּנָֽה׃ கட்டினான்
சேபாவின் அரசி சாலொமோனுடைய பானபாத்திரக்காரர்களையும், அரண்மனையையும்,
4 וּמַאֲכַ֣ל –உணவையும் שֻׁלְחָנ֡וֹ மேஜையின்–அவனின் וּמוֹשַׁ֣ב –இருப்பிடத்தையும் עֲבָדָיו֩ அடியார்களின்–அவனின் וּמַעֲמַ֨ד –நிற்பதையும் מְשָׁרְתָ֜יו பணியாளரின்–அவனின் וּמַלְבּֽוּשֵׁיהֶ֗ם –ஆடைகளையும்–அவர்களின் וּמַשְׁקָיו֙ –பானக்காரரின்–அவனின் וּמַלְבּ֣וּשֵׁיהֶ֔ם –ஆடைகளையும்–அவர்களின் וַעֲלִיָּת֔וֹ –ஏறுவழியையும்–அவனின் אֲשֶׁ֥ר அதை יַעֲלֶ֖ה ஏறினான் בֵּ֣ית வீட்டை יְהוָ֑ה யெகோவாவின் וְלֹא־ –இல்லை– הָ֥יָה இருந்தது ע֛וֹד இனி בָּ֖הּ –அவளிடம் רֽוּחַ׃ ஆவி
பந்தியின் உணவு வகைகளையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் உடைகளையும், அவனுடைய பானபாத்திரக்காரர்களையும், அவர்கள் உடைகளையும், யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமித்து,
5 וַתֹּ֙אמֶר֙ –சொன்னாள் אֶל־ × הַמֶּ֔לֶךְ –அரசனிடம் אֱמֶת֙ உண்மை הַדָּבָ֔ר –வார்த்தை אֲשֶׁ֥ר அதை שָׁמַ֖עְתִּי கேட்டேன் בְּאַרְצִ֑י –என்–தேசத்தில் עַל־ –குறித்து דְּבָרֶ֖יךָ வார்த்தைகளை–உனின் וְעַל־ × חָכְמָתֶֽךָ׃ ஞானத்தை–உனின்
ராஜாவை நோக்கி: உம்முடைய செயல்களையும், உம்முடைய ஞானத்தையும்குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி உண்மைதான்.
6 וְלֹֽא־ –இல்லை– הֶאֱמַ֣נְתִּי நம்பினேன் לְדִבְרֵיהֶ֗ם –வார்த்தைகளை–அவர்களின் עַ֤ד –வரை אֲשֶׁר־ அதை– בָּ֙אתִי֙ வந்தேன் וַתִּרְאֶ֣ינָה –கண்டன עֵינַ֔י கண்கள்–என் וְהִנֵּה֙ –இதோ לֹ֣א இல்லை הֻגַּד־ அறிவிக்கப்பட்டது– לִ֔י –எனக்கு חֲצִ֖י பாதி מַרְבִּ֣ית மிகுதியின் חָכְמָתֶ֑ךָ ஞானத்தை–உனின் יָסַ֕פְתָּ மீறினாய் עַל־ –மேல் הַשְּׁמוּעָ֖ה –கேள்வியை אֲשֶׁ֥ר அதை שָׁמָֽעְתִּי׃ கேட்டேன்
நான் வந்து அதை என் கண்களால் பார்க்கும்வரை அவர்களுடைய வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட புகழ்ச்சியைவிட அதிகம் உண்டாயிருக்கிறது.
7 אַשְׁרֵ֣י பாக்கியம் אֲנָשֶׁ֔יךָ மனிதர்களை–உனின் וְאַשְׁרֵ֖י –பாக்கியம் עֲבָדֶ֣יךָ அடியார்களை–உனின் אֵ֑לֶּה –இவர்கள் הָעֹמְדִ֤ים –நின்றிருக்கிற לְפָנֶ֙יךָ֙ –உன்–முன் תָּמִ֔יד எப்போதும் וְשֹׁמְעִ֖ים –கேட்கிறவர்கள் אֶת־ × חָכְמָתֶֽךָ׃ ஞானத்தை–உனின்
உம்முடைய மக்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரர்களும் பாக்கியவான்கள்.
8 יְהִ֨י இருப்பாராக יְהוָ֤ה யெகோவா אֱלֹהֶ֙יךָ֙ தேவன்–உனின் בָּר֔וּךְ ஸ்தோத்திரிக்கப்படுவாராக אֲשֶׁ֣ר ׀ யார் חָפֵ֣ץ விரும்பினார் בְּךָ֗ –உன்னில் לְתִתְּךָ֤ –வைக்க עַל־ –மேல் כִּסְאוֹ֙ சிங்காசனத்தின்–அவரின் לְמֶ֔לֶךְ –அரசனாக לַיהוָ֖ה –யெகோவாவுக்கு אֱלֹהֶ֑יךָ தேவன்–உனின் בְּאַהֲבַ֨ת –நேசத்தினால் אֱלֹהֶ֤יךָ தேவன்–உனின் אֶת־ × יִשְׂרָאֵל֙ இஸ்ரவேலை לְהַעֲמִיד֣וֹ –நிலைநிறுத்த לְעוֹלָ֔ם –என்றென்றும் וַיִּתֶּנְךָ֤ –வைத்தார்–உன்னை עֲלֵיהֶם֙ –அவர்கள்–மேல் לְמֶ֔לֶךְ –அரசனாக לַעֲשׂ֖וֹת –செய்ய מִשְׁפָּ֥ט நியாயத்தையும் וּצְדָקָֽה׃ –நீதியையும்
உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கச் செய்ய, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய யெகோவா ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்கு சிநேகிக்கிறதாலே, அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள்.
9 וַתִּתֵּ֨ן –கொடுத்தாள் לַמֶּ֜לֶךְ –அரசனுக்கு מֵאָ֥ה நூற்றி וְעֶשְׂרִ֣ים ׀ –இருபது כִּכַּ֣ר தாலந்து זָהָ֗ב தங்கத்தின் וּבְשָׂמִ֛ים –சுகந்ததிரவியங்களையும் לָרֹ֥ב –மிகுதியாக מְאֹ֖ד மிகவும் וְאֶ֣בֶן –கல்லையும் יְקָרָ֑ה விலையுயர்ந்த וְלֹ֤א –இல்லை הָיָה֙ இருந்தது כַּבֹּ֣שֶׂם –சுகந்தத்திரவியம் הַה֔וּא –அந்த אֲשֶׁר־ அதை– נָתְנָ֥ה கொடுத்தாள் מַֽלְכַּת־ அரசியும்– שְׁבָ֖א சேபாவின் לַמֶּ֥לֶךְ –அரசனுக்கு שְׁלֹמֹֽה׃ சாலொமோனின்
அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் அரசி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருபோதும் வரவில்லை.
10 וְגַם־ –மேலும்– עַבְדֵ֤י அடியார்களும் [חירם] — (חוּרָם֙) கூராமின் וְעַבְדֵ֣י –அடியார்களும் שְׁלֹמֹ֔ה சாலொமோனின் אֲשֶׁר־ யார்– הֵבִ֥יאוּ கொண்டுவந்தார்கள் זָהָ֖ב தங்கத்தை מֵאוֹפִ֑יר –ஓபீரிலிருந்து הֵבִ֛יאוּ கொண்டுவந்தார்கள் עֲצֵ֥י மரங்களையும் אַלְגּוּמִּ֖ים அல்கூம்மீமின் וְאֶ֥בֶן –கல்லையும் יְקָרָֽה׃ விலையுயர்ந்த
ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரர்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் வாசனை மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.
11 וַיַּ֣עַשׂ –செய்தான் הַ֠מֶּלֶךְ –அரசன் אֶת־ × עֲצֵ֨י மரங்களையும் הָֽאַלְגּוּמִּ֜ים –அல்கூம்மீமின் מְסִלּ֤וֹת பாதைகளாக לְבֵית־ –வீட்டுக்கு– יְהוָה֙ யெகோவாவின் וּלְבֵ֣ית –வீட்டுக்கும் הַמֶּ֔לֶךְ –அரசனின் וְכִנֹּר֥וֹת –கின்னரங்களையும் וּנְבָלִ֖ים –தம்பூராக்களையும் לַשָּׁרִ֑ים –பாடகர்களுக்கு וְלֹא־ –இல்லை– נִרְא֥וּ காணப்பட்டன כָהֵ֛ם –அவற்றைப்போல לְפָנִ֖ים –முன்னர் בְּאֶ֥רֶץ –தேசத்தில் יְהוּדָֽה׃ யூதாவின்
அந்த வாசனை மரங்களால் ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்கும் ராஜ அரண்மனைக்கும் படிக்கட்டுகளையும், இசைக்கலைஞர்களுக்குச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்டவைகள் அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை.
12 וְהַמֶּ֨לֶךְ –அரசனும் שְׁלֹמֹ֜ה சாலொமோன் נָתַ֣ן கொடுத்தான் לְמַֽלְכַּת־ –அரசியும்– שְׁבָ֗א சேபாவுக்கு אֶת־ × כָּל־ எல்லா– חֶפְצָהּ֙ விருப்பத்தை–அவளின் אֲשֶׁ֣ר அதை שָׁאָ֔לָה கேட்டாள் מִלְּבַ֖ד –தவிர אֲשֶׁר־ அதை– הֵבִ֣יאָה கொண்டுவந்தாள் אֶל־ × הַמֶּ֑לֶךְ –அரசனிடம் וַֽתַּהֲפֹ֛ךְ –திரும்பினாள் וַתֵּ֥לֶךְ –போனாள் לְאַרְצָ֖הּ –தேசத்துக்கு–அவளின் הִ֥יא அவள் וַעֲבָדֶֽיהָ׃ –அடியார்களும்–அவளின் פ —
சேபாவின் அரசி ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைவிட அவள் ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்கு அதிகமாகக் கொடுத்தான்; பின்பு அவள் தன் கூட்டத்தினரோடு தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.
13 וַיְהִי֙ –இருந்தது מִשְׁקַ֣ל நிறை הַזָּהָ֔ב –தங்கத்தின் אֲשֶׁר־ அது– בָּ֥א வந்தது לִשְׁלֹמֹ֖ה –சாலொமோனுக்கு בְּשָׁנָ֣ה –ஆண்டில் אֶחָ֑ת ஒன்றில் שֵׁ֥שׁ ஆறு מֵא֛וֹת நூறு וְשִׁשִּׁ֥ים –அறுபது וָשֵׁ֖שׁ –ஆறும் כִּכְּרֵ֥י தாலந்துகள் זָהָֽב׃ தங்கத்தின்
சிறிய மற்றும் பெரிய வியாபாரிகள் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருடத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து எடையுள்ளதாக இருந்தது.
14 לְבַ֞ד –தவிர מֵאַנְשֵׁ֧י –மனிதரிலிருந்து הַתָּרִ֛ים –வியாபாரிகளின் וְהַסֹּחֲרִ֖ים –வணிகரின் מְבִיאִ֑ים கொண்டுவந்தவர்கள் וְכָל־ –எல்லா– מַלְכֵ֤י அரசர்களும் עֲרַב֙ அரபியாவின் וּפַח֣וֹת –ஆளுநர்களும் הָאָ֔רֶץ –தேசத்தின் מְבִיאִ֛ים கொண்டுவந்தவர்கள் זָהָ֥ב தங்கத்தையும் וָכֶ֖סֶף –வெள்ளியையும் לִשְׁלֹמֹֽה׃ –சாலொமோனுக்கு
அரபுதேசங்களின் அனைத்து ராஜாக்களும், ஆளுநர்களும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.
15 וַיַּ֨עַשׂ –செய்தான் הַמֶּ֧לֶךְ –அரசன் שְׁלֹמֹ֛ה சாலொமோன் מָאתַ֥יִם இருநூறு צִנָּ֖ה பெரிய–கேடகங்களை זָהָ֣ב தங்கத்தின் שָׁח֑וּט அடிக்கப்பட்ட שֵׁ֤שׁ ஆறு מֵאוֹת֙ நூறு זָהָ֣ב தங்கத்தின் שָׁח֔וּט அடிக்கப்பட்ட יַעֲלֶ֖ה ஏறியது עַל־ –மேல் הַצִּנָּ֥ה –பெரிய–கேடகத்தின் הָאֶחָֽת׃ –ஒன்றின்
ராஜாவாகிய சாலொமோன் இருநூறு கேடகங்களை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு அறுநூறு சேக்கல் எடை பொன் தகட்டைச் செலவழித்தான்.
16 וּשְׁלֹשׁ־ –மூன்று– מֵא֤וֹת நூறு מָֽגִנִּים֙ சிறிய–கேடகங்களை זָהָ֣ב தங்கத்தின் שָׁח֔וּט அடிக்கப்பட்ட שְׁלֹ֤שׁ மூன்று מֵאוֹת֙ நூறு זָהָ֔ב தங்கத்தின் יַעֲלֶ֖ה ஏறியது עַל־ –மேல் הַמָּגֵ֣ן –சிறிய–கேடகத்தின் הָאֶחָ֑ת –ஒன்றின் וַיִּתְּנֵ֣ם –வைத்தான்–அவற்றை הַמֶּ֔לֶךְ –அரசன் בְּבֵ֖ית –வீட்டில் יַ֥עַר காட்டின் הַלְּבָנֽוֹן׃ –லெபானோனின் פ —
அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல் எடை பொன்னைச் செலவழித்தான்; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
17 וַיַּ֧עַשׂ –செய்தான் הַמֶּ֛לֶךְ –அரசன் כִּסֵּא־ சிங்காசனத்தை– שֵׁ֖ן தந்தத்தின் גָּד֑וֹל பெரிய וַיְצַפֵּ֖הוּ –பொதிந்தான்–அதை זָהָ֥ב தங்கத்தின் טָהֽוֹר׃ தூய்மையான
ராஜா தந்தத்தால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்.
18 וְשֵׁ֣שׁ –ஆறு מַעֲל֣וֹת படிகள் לַ֠כִּסֵּא –சிங்காசனத்துக்கு וְכֶ֨בֶשׁ –ஏறுபாதையும் בַּזָּהָ֤ב –தங்கத்தில் לַכִּסֵּא֙ –சிங்காசனத்துக்கு מָאֳחָזִ֔ים பிடிக்கப்பட்ட וְיָד֛וֹת –கைப்பிடிகளும் מִזֶּ֥ה –இப்பக்கத்திலிருந்து וּמִזֶּ֖ה –அப்பக்கத்திலும் עַל־ –மேல் מְק֣וֹם இடத்தின் הַשָּׁ֑בֶת –உட்காருதலின் וּשְׁנַ֣יִם –இரண்டு אֲרָי֔וֹת சிங்கங்கள் עֹמְדִ֖ים நின்றிருந்தன אֵ֥צֶל –அருகில் הַיָּדֽוֹת׃ –கைப்பிடிகளின்
அந்தச் சிங்காசனத்திற்குப் பொன்னினால் செய்யப்பட்ட ஆறு படிகளும், ஒரு பாதப்படியும், உட்காரும் இடத்திற்கு இருபுறத்திலும் கை சாய்மானங்களும் இருந்தன; இரண்டு சிங்கங்கள் கை சாய்மானங்கள் அருகே நின்றன.
19 וּשְׁנֵ֧ים –பன்னிரண்டு עָשָׂ֣ר பன்னிரண்டு אֲרָי֗וֹת சிங்கங்கள் עֹמְדִ֥ים நின்றிருந்தன שָׁ֛ם அங்கே עַל־ –மேல் שֵׁ֥שׁ ஆறு הַֽמַּעֲל֖וֹת –படிகளின் מִזֶּ֣ה –இப்பக்கத்திலிருந்து וּמִזֶּ֑ה –அப்பக்கத்திலும் לֹא־ இல்லை– נַעֲשָׂ֥ה செய்யப்பட்டது כֵ֖ן அவ்வாறு לְכָל־ –எல்லா– מַמְלָכָֽה׃ இராஜ்யத்துக்கும்
அந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றன; எந்த ராஜ்ஜியத்திலும் இப்படிச் செய்யப்படவில்லை.
20 וְ֠כֹל –எல்லா כְּלֵ֞י பாத்திரங்களும் מַשְׁקֵ֨ה பானத்தின் הַמֶּ֤לֶךְ –அரசனின் שְׁלֹמֹה֙ சாலொமோனின் זָהָ֔ב தங்கம் וְכֹ֗ל –எல்லா כְּלֵ֛י பாத்திரங்களும் בֵּֽית־ வீட்டின்– יַ֥עַר காட்டின் הַלְּבָנ֖וֹן –லெபானோனின் זָהָ֣ב தங்கம் סָג֑וּר புடையான אֵ֣ין இல்லை כֶּ֗סֶף வெள்ளி נֶחְשָׁ֛ב எண்ணப்பட்டது בִּימֵ֥י –நாட்களில் שְׁלֹמֹ֖ה சாலொமோனின் לִמְאֽוּמָה׃ –ஒன்றுமில்லையாக
ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாகக் கருதப்படவில்லை.
21 כִּֽי־ ஏனெனில்– אֳנִיּ֤וֹת கப்பல்கள் לַמֶּ֙לֶךְ֙ –அரசனின் הֹלְכ֣וֹת போகிறன תַּרְשִׁ֔ישׁ தர்சீசுக்கு עִ֖ם –உடன் עַבְדֵ֣י அடியார்களின் חוּרָ֑ם கூராமின் אַחַת֩ ஒன்று לְשָׁל֨וֹשׁ –மூன்று שָׁנִ֜ים ஆண்டுகளில் תָּב֣וֹאנָה ׀ வருகின்றன אֳנִיּ֣וֹת கப்பல்கள் תַּרְשִׁ֗ישׁ தர்சீசின் נֹֽשְׂאוֹת֙ சுமந்துகொண்டிருந்தன זָהָ֣ב தங்கத்தையும் וָכֶ֔סֶף –வெள்ளியையும் שֶׁנְהַבִּ֥ים தந்தங்களையும் וְקוֹפִ֖ים –குரங்குகளையும் וְתוּכִּיִּֽים׃ –மயில்களையும் פ —
ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரர்களுடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
22 וַיִּגְדַּל֙ –பெரியவனானான் הַמֶּ֣לֶךְ –அரசன் שְׁלֹמֹ֔ה சாலொமோன் מִכֹּ֖ל –எல்லாவற்றிலும் מַלְכֵ֣י அரசர்களின் הָאָ֑רֶץ –பூமியின் לְעֹ֖שֶׁר –செல்வத்திலும் וְחָכְמָֽה׃ –ஞானத்திலும்
பூமியின் அனைத்து ராஜாக்களையும்விட சாலொமோன் ராஜா ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.
23 וְכֹל֙ –எல்லா מַלְכֵ֣י அரசர்களும் הָאָ֔רֶץ –பூமியின் מְבַקְשִׁ֖ים தேடினார்கள் אֶת־ × פְּנֵ֣י முகத்தை שְׁלֹמֹ֑ה சாலொமோனின் לִשְׁמֹ֙עַ֙ –கேட்க אֶת־ × חָכְמָת֔וֹ ஞானத்தை–அவனின் אֲשֶׁר־ அதை– נָתַ֥ן கொடுத்தார் הָאֱלֹהִ֖ים தேவன் בְּלִבּֽוֹ׃ –இருதயத்தில்–அவனின்
சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லோரும் அவனுடைய முகதரிசனத்தைத் தேடினார்கள்.
24 וְהֵ֣ם –அவர்கள் מְבִיאִ֣ים கொண்டுவந்தவர்கள் אִ֣ישׁ ஒவ்வொருவனும் מִנְחָת֡וֹ காணிக்கையை–அவனின் כְּלֵ֣י பாத்திரங்களை כֶסֶף֩ வெள்ளியின் וּכְלֵ֨י –பாத்திரங்களையும் זָהָ֤ב தங்கத்தின் וּשְׂלָמוֹת֙ –ஆடைகளையும் נֵ֣שֶׁק ஆயுதங்களை וּבְשָׂמִ֔ים –சுகந்ததிரவியங்களையும் סוּסִ֖ים குதிரைகளை וּפְרָדִ֑ים –கோவேறுகளையும் דְּבַר־ காரியம்– שָׁנָ֖ה ஆண்டில் בְּשָׁנָֽה׃ –ஆண்டில் פ —
வருடந்தோறும் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
25 וַיְהִ֨י –இருந்தது לִשְׁלֹמֹ֜ה –சாலொமோனுக்கு אַרְבַּעַת֩ நான்கு אֲלָפִ֨ים ஆயிரம் אֻֽרְי֤וֹת தொழுவங்கள் סוּסִים֙ குதிரைகளின் וּמַרְכָּב֔וֹת –ரதங்களும் וּשְׁנֵים־ –பன்னிரண்டு– עָשָׂ֥ר பன்னிரண்டு אֶ֖לֶף ஆயிரம் פָּרָשִׁ֑ים குதிரைவீரர்கள் וַיַּנִּיחֵם֙ –நிறுத்தினான்–அவர்களை בְּעָרֵ֣י –நகரங்களில் הָרֶ֔כֶב –ரதத்தின் וְעִם־ –உடன்– הַמֶּ֖לֶךְ –அரசன் בִּירוּשָׁלִָֽם׃ –எருசலேமில்
சாலொமோனுக்கு நான்காயிரம் குதிரைலாயங்களும் இரதங்களும் இருந்தன, பனிரெண்டாயிரம் குதிரை வீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான்.
26 וַיְהִ֥י –இருந்தான் מוֹשֵׁ֖ל ஆளுகிறவன் בְּכָל־ –எல்லா– הַמְּלָכִ֑ים –அரசர்களின் מִן־ –இலிருந்து הַנָּהָר֙ –நதியின் וְעַד־ –வரை– אֶ֣רֶץ தேசத்தின் פְּלִשְׁתִּ֔ים பெலிஸ்தியரின் וְעַ֖ד –வரையும் גְּב֥וּל எல்லையின் מִצְרָֽיִם׃ எகிப்தின்
நதி துவங்கிப் பெலிஸ்தரின் தேசம்வரை எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற அனைத்து ராஜாக்களையும் அவன் ஆண்டான்.
27 וַיִּתֵּ֨ן –கொடுத்தான் הַמֶּ֧לֶךְ –அரசன் אֶת־ × הַכֶּ֛סֶף –வெள்ளியை בִּירוּשָׁלִַ֖ם –எருசலேமில் כָּאֲבָנִ֑ים –கல்லைகளைப்போல וְאֵ֣ת × הָאֲרָזִ֗ים –கேதுருமரங்களையும் נָתַ֛ן கொடுத்தான் כַּשִּׁקְמִ֥ים –ஆத்திமரங்களைப்போல אֲשֶׁר־ அவை– בַּשְּׁפֵלָ֖ה –பள்ளத்தாக்கில் לָרֹֽב׃ –மிகுதியாக
எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
28 וּמוֹצִיאִ֨ים –கொண்டுவருகிறவர்கள் סוּסִ֧ים குதிரைகளை מִמִּצְרַ֛יִם –எகிப்திலிருந்து לִשְׁלֹמֹ֖ה –சாலொமோனுக்கு וּמִכָּל־ –எல்லா– הָאֲרָצֽוֹת׃ –தேசங்களிலிருந்தும்
எகிப்திலும் மற்ற தேசங்களிலுமிருந்து சாலொமோனுக்குக் குதிரைகள் கொண்டுவரப்பட்டது.
29 וּשְׁאָר֙ –மீதியும் דִּבְרֵ֣י காரியங்கள் שְׁלֹמֹ֔ה சாலொமோனின் הָרִאשֹׁנִ֖ים –முதலாவதும் וְהָאֲחֲרוֹנִ֑ים –கடைசியதும் הֲלֹא־ அல்லவோ– הֵ֣ם அவை כְּתוּבִ֗ים எழுதப்பட்டிருக்கின்றன עַל־ –மேல் דִּבְרֵי֙ காரியங்களில் נָתָ֣ן நாத்தானின் הַנָּבִ֔יא –தீர்க்கதரிசியின் וְעַל־ × נְבוּאַ֞ת தீர்க்கதரிசனத்தில் אֲחִיָּ֣ה அகியாவின் הַשִּֽׁילוֹנִ֗י –சீலோனியனின் וּבַחֲזוֹת֙ –தரிசனங்களிலும் [יעדי] — (יֶעְדּ֣וֹ) இத்தோவின் הַחֹזֶ֔ה –தரிசியின் עַל־ –குறித்து יָרָבְעָ֖ם யாரொபெயாமின் בֶּן־ மகனின்– נְבָֽט׃ நேபாத்தின்
சாலொமோனுடைய ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள மற்ற செயல்கள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புத்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமைக்குறித்து தரிசனம் காண்கிறவனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது.
30 וַיִּמְלֹ֨ךְ –ஆண்டான் שְׁלֹמֹ֧ה சாலொமோன் בִֽירוּשָׁלִַ֛ם –எருசலேமில் עַל־ –மேல் כָּל־ எல்லா– יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் אַרְבָּעִ֥ים நாற்பது שָׁנָֽה׃ ஆண்டுகள்
சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்.
31 וַיִּשְׁכַּ֤ב –படுத்தான் שְׁלֹמֹה֙ சாலொமோன் עִם־ –உடன் אֲבֹתָ֔יו முன்னோர்களின்–அவனின் וַֽיִּקְבְּרֻ֔הוּ –அடக்கம்செய்தார்கள்–அவனை בְּעִ֖יר –நகரத்தில் דָּוִ֣יד தாவீதின் אָבִ֑יו தகப்பனின்–அவனின் וַיִּמְלֹ֛ךְ –ஆண்டான் רְחַבְעָ֥ם ரெகபெயாம் בְּנ֖וֹ மகனின்–அவனின் תַּחְתָּֽיו׃ –பதிலாக–அவனின் פ —
பின்பு சாலொமோன் இறந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.