1 וַיִּקְח֞וּ –மற்றும்–எடுத்தார்கள் כָּל־ எல்லா– עַ֤ם மக்கள் יְהוּדָה֙ யூதாவின் אֶת־ — עֻזִּיָּ֔הוּ உசியாவை וְה֕וּא –மற்றும்–அவன் בֶּן־ மகன்– שֵׁ֥שׁ பதினாறு עֶשְׂרֵ֖ה பத்து שָׁנָ֑ה வயது וַיַּמְלִ֣יכוּ –மற்றும்–ராஜாவாக்கினார்கள் אֹת֔וֹ அவனை תַּ֖חַת –பதிலாக אָבִ֥יו தகப்பனின் אֲמַצְיָֽהוּ׃ அமத்சியா
அப்பொழுது யூதா மக்கள் எல்லோரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் இடத்திலே ராஜாவாக்கினார்கள்.
2 ה֚וּא அவன் בָּנָ֣ה கட்டினான் אֶת־ — אֵיל֔וֹת ஏலாத்தை וַיְשִׁיבֶ֖הָ –மற்றும்–திருப்பிக்கொடுத்தான் לִֽיהוּדָ֑ה –யூதாவுக்கு אַחֲרֵ֥י பிற்பாடு שְׁכַֽב־ படுத்திருந்த– הַמֶּ֖לֶךְ –ராஜா עִם־ –உடன்– אֲבֹתָֽיו׃ பிதாக்களோடே פ —
ராஜா இறந்தபின்பு, இவன் ஏலாத்தைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவுடன் இணைத்துக்கொண்டான்.
3 בֶּן־ மகன்– שֵׁ֨שׁ பதினாறு עֶשְׂרֵ֤ה பத்து שָׁנָה֙ வயது עֻזִּיָּ֣הוּ உசியா בְמָלְכ֔וֹ –ஆண்டபோது וַחֲמִשִּׁ֤ים –மற்றும்–ஐம்பத்து וּשְׁתַּ֙יִם֙ –மற்றும்–இரண்டு שָׁנָ֔ה வருடம் מָלַ֖ךְ ஆண்டான் בִּירוּשָׁלִָ֑ם –எருசலேமில் וְשֵׁ֣ם –மற்றும்–பெயர் אִמּ֔וֹ தாயின் [יכיליה] — (יְכָלְיָ֖ה) யெகொல்யா מִן־ –இலிருந்து– יְרוּשָׁלִָֽם׃ எருசலேம்
உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; எருசலேம் நகரத்தாளான அவனுடைய தாயின் பெயர் எக்கோலியாள்.
4 וַיַּ֥עַשׂ –மற்றும்–செய்தான் הַיָּשָׁ֖ר –நேர்மையானதை בְּעֵינֵ֣י –கண்களில் יְהוָ֑ה யெகோவாவின் כְּכֹ֥ל –எல்லாவற்றின்படி– אֲשֶׁר־ – עָשָׂ֖ה செய்தான் אֲמַצְיָ֥הוּ அமத்சியா אָבִֽיו׃ தகப்பன்
அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்து,
5 וַיְהִי֙ –மற்றும்–ஆனது לִדְרֹ֣שׁ –தேட אֱלֹהִ֔ים தேவனை בִּימֵ֣י –நாட்களில் זְכַרְיָ֔הוּ செகரியாவின் הַמֵּבִ֖ין –புரிந்துகொள்ளுகிற בִּרְאֹ֣ת –தரிசனங்களில் הָאֱלֹהִ֑ים –தேவனின் וּבִימֵי֙ –மற்றும்–நாட்களில் דָּרְשׁ֣וֹ தேடியபோது אֶת־ — יְהוָ֔ה யெகோவாவை הִצְלִיח֖וֹ வாழ்வளித்தான் הָאֱלֹהִֽים׃ –தேவன் ס —
தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதுள்ளவனாக இருந்தான்; அவன் யெகோவாவை தேடின நாட்களில் தேவன் அவனுடைய காரியங்களை வாய்க்கச் செய்தார்.
6 וַיֵּצֵא֙ –மற்றும்–புறப்பட்டான் וַיִּלָּ֣חֶם –மற்றும்–யுத்தம்செய்தான் בַּפְּלִשְׁתִּ֔ים –பெலிஸ்தரோடே וַיִּפְרֹ֞ץ –மற்றும்–இடித்தான் אֶת־ — ח֣וֹמַת சுவரை גַּ֗ת காத்தின் וְאֵת֙ –மற்றும்– חוֹמַ֣ת சுவரை יַבְנֵ֔ה யாப்னேயின் וְאֵ֖ת –மற்றும்– חוֹמַ֣ת சுவரை אַשְׁדּ֑וֹד அஸ்தோத்தின் וַיִּבְנֶ֣ה –மற்றும்–கட்டினான் עָרִ֔ים பட்டணங்களை בְּאַשְׁדּ֖וֹד –அஸ்தோத்திலும் וּבַפְּלִשְׁתִּֽים׃ –மற்றும்–பெலிஸ்தரிடையிலும்
அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு போர்செய்து, காத்தின் மதிலையும், யப்னேயின் மதிலையும், அஸ்தோத்தின் மதிலையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.
7 וַיַּעְזְרֵ֨הוּ –மற்றும்–உதவிசெய்தான் הָֽאֱלֹהִ֜ים –தேவன் עַל־ –மேல்– פְּלִשְׁתִּ֧ים பெலிஸ்தர் וְעַל־ –மற்றும்–மேல்– [הערביים] — (הָֽעַרְבִ֛ים) அரேபியர் הַיֹּשְׁבִ֥ים –குடியிருக்கிற בְּגוּר־בָּ֖עַל –கூர்–பாகாலிலும் וְהַמְּעוּנִֽים׃ –மற்றும்–மெயூனியரிலும்
பெலிஸ்தர்களையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியர்களையும் மெகுனியர்களையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணை நின்றார்.
8 וַיִּתְּנ֧וּ –மற்றும்–கொடுத்தார்கள் הָֽעַמּוֹנִ֛ים –அம்மோனியர் מִנְחָ֖ה காணிக்கை לְעֻזִּיָּ֑הוּ –உசியாவுக்கு וַיֵּ֤לֶךְ –மற்றும்–போனது שְׁמוֹ֙ புகழ் עַד־ –வரை– לְב֣וֹא –வருகை מִצְרַ֔יִם எகிப்து כִּ֥י ஏனெனில் הֶחֱזִ֖יק பலப்படுத்தினான் עַד־ –வரை– לְמָֽעְלָה׃ –மேலாக
அம்மோனியர்கள் உசியாவுக்கு வரிகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய புகழ் எகிப்தின் எல்லைவரை எட்டியது; அவன் மிகவும் பெலங்கொண்டான்.
9 וַיִּ֨בֶן –மற்றும்–கட்டினான் עֻזִּיָּ֤הוּ உசியா מִגְדָּלִים֙ கோபுரங்களை בִּיר֣וּשָׁלִַ֔ם –எருசலேமில் עַל־ –மேல்– שַׁ֧עַר வாசல் הַפִּנָּ֛ה –மூலையின் וְעַל־ –மற்றும்–மேல்– שַׁ֥עַר வாசல் הַגַּ֖יְא –பள்ளத்தாக்கின் וְעַל־ –மற்றும்–மேல்– הַמִּקְצ֑וֹעַ –திருப்பத்தின் וַֽיְחַזְּקֵֽם׃ –மற்றும்–பலப்படுத்தினான்
உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், மதில்களின் மூலைகளின்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான்.
10 וַיִּ֨בֶן –மற்றும்–கட்டினான் מִגְדָּלִ֜ים கோபுரங்களை בַּמִּדְבָּ֗ר –வனாந்திரத்தில் וַיַּחְצֹב֙ –மற்றும்–வெட்டினான் בֹּר֣וֹת கிணறுகளை רַבִּ֔ים அநேக כִּ֤י ஏனெனில் מִקְנֶה־ மந்தை– רַּב֙ மிகுதி הָ֣יָה இருந்தது ל֔וֹ அவனுக்கு וּבַשְּׁפֵלָ֖ה –மற்றும்–தாழ்நிலத்திலும் וּבַמִּישׁ֑וֹר –மற்றும்–சமவெளியிலும் אִכָּרִ֣ים உழவர்கள் וְכֹֽרְמִ֗ים –மற்றும்–திராட்சைத்தோட்டக்காரர்கள் בֶּהָרִים֙ –மலைகளிலும் וּבַכַּרְמֶ֔ל –மற்றும்–கர்மேலிலும் כִּֽי־ – אֹהֵ֥ב நேசிக்கிற אֲדָמָ֖ה நிலத்தை הָיָֽה׃ இருந்தான் ס —
அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும், வயல்வெளியிலேயும், விவசாயிகளும், திராட்சைத்தோட்டக்காரர்களும் உண்டாயிருந்ததால், அவன் வனாந்திரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக கிணறுகளை வெட்டினான்; அவன் வேளாண்மைப் பிரியனாயிருந்தான்.
11 וַיְהִ֣י –மற்றும்–இருந்தது לְעֻזִּיָּ֡הוּ –உசியாவுக்கு חַיִל֩ சேனை עֹשֵׂ֨ה செய்கிற מִלְחָמָ֜ה யுத்தம் יוֹצְאֵ֧י புறப்படுகிற צָבָ֣א படை לִגְד֗וּד –படையினராக בְּמִסְפַּר֙ –எண்ணிக்கையில் פְּקֻדָּתָ֔ם பதிவின் בְּיַד֙ –கையினால் [יעואל] — (יְעִיאֵ֣ל) யெயீயேல் הַסּוֹפֵ֔ר –எழுத்தன் וּמַעֲשֵׂיָ֖הוּ –மற்றும்–மாசெயா הַשּׁוֹטֵ֑ר –அதிகாரி עַ֚ל –மேல் יַד־ கை– חֲנַנְיָ֔הוּ அனனியாவின் מִשָּׂרֵ֖י –தலைவர்களில் הַמֶּֽלֶךְ׃ –ராஜாவின்
உசியாவுக்கு போர்வீரர்களின் படையும் இருந்தது; அது செயலாளனாகிய ஏயெலினாலும் அதிகாரியாகிய மாசேயாவினாலும் எண்ணிக்கைபார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் அணி அணியாகப் போர்செய்யப் புறப்பட்டது.
12 כֹּ֠ל எல்லா מִסְפַּ֞ר எண்ணிக்கை רָאשֵׁ֤י தலைவர்களின் הָאָבוֹת֙ –பிதாக்களின் לְגִבּ֣וֹרֵי –பராக்கிரமசாலிகளின் חָ֔יִל வீரம் אַלְפַּ֖יִם இரண்டாயிரம் וְשֵׁ֥שׁ –மற்றும்–அறுநூறு מֵאֽוֹת׃ நூறு
பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
13 וְעַל־ –மற்றும்–மேல்– יָדָם֩ கையின் חֵ֨יל படை צָבָ֜א சேனை שְׁלֹ֧שׁ மூன்று מֵא֣וֹת நூறு אֶ֗לֶף ஆயிரம் וְשִׁבְעַ֤ת –மற்றும்–ஏழு אֲלָפִים֙ ஆயிரம் וַחֲמֵ֣שׁ –மற்றும்–ஐந்து מֵא֔וֹת நூறு עוֹשֵׂ֥י செய்கிற מִלְחָמָ֖ה யுத்தம் בְּכֹ֣חַ –வல்லமையில் חָ֑יִל வீரம் לַעְזֹ֥ר –உதவிசெய்ய לַמֶּ֖לֶךְ –ராஜாவுக்கு עַל־ –மேல்– הָאוֹיֵֽב׃ –சத்துரு
இவர்களுடைய கையின்கீழ் எதிரிகளுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணை நிற்க, மிகத் திறமையோடு போர்செய்கிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான படை இருந்தது.
14 וַיָּכֶן֩ –மற்றும்–ஆயத்தப்படுத்தினான் לָהֶ֨ם அவர்களுக்கு עֻזִּיָּ֜הוּ உசியா לְכָל־ –எல்லா– הַצָּבָ֗א –சேனைக்கும் מָגִנִּ֤ים கேடகங்களையும் וּרְמָחִים֙ –மற்றும்–ஈட்டிகளையும் וְכ֣וֹבָעִ֔ים –மற்றும்–தலைச்சீராக்களையும் וְשִׁרְיֹנ֖וֹת –மற்றும்–கவசங்களையும் וּקְשָׁת֑וֹת –மற்றும்–வில்லுகளையும் וּלְאַבְנֵ֖י –மற்றும்–கவண் קְלָעִֽים׃ கற்களையும்
இந்தப் படையில் உள்ளவர்களுக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைக்கவசங்களையும், மார்புக்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.
15 וַיַּ֣עַשׂ ׀ –மற்றும்–செய்தான் בִּירוּשָׁלִַ֨ם –எருசலேமில் חִשְּׁבֹנ֜וֹת எந்திரங்களை מַחֲשֶׁ֣בֶת கண்டுபிடிப்பின் חוֹשֵׁ֗ב கண்டுபிடிப்பாளனின் לִהְי֤וֹת –இருக்க עַל־ –மேல்– הַמִּגְדָּלִים֙ –கோபுரங்களிலும் וְעַל־ –மற்றும்–மேல்– הַפִּנּ֔וֹת –மூலைகளிலும் לִירוֹא֙ –எய்ய בַּֽחִצִּ֔ים –அம்புகளை וּבָאֲבָנִ֖ים –மற்றும்–கற்களை גְּדֹל֑וֹת பெரிய וַיֵּצֵ֤א –மற்றும்–போனது שְׁמוֹ֙ புகழ் עַד־ –வரை– לְמֵ֣רָח֔וֹק –தூரத்திற்கு כִּֽי־ – הִפְלִ֥יא அற்புதமாய் לְהֵעָזֵ֖ר –உதவிபெற்றான் עַ֥ד –வரை כִּֽי־ – חָזָֽק׃ பலமானான்
கோபுரங்கள்மேலும் மதிலின் முனையிலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பயன்படுத்துவதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த இயந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவனுடைய புகழ் வெகுதூரம் பரவியது; அவன் பலப்படும்வரை ஆச்சரியமான விதத்தில் அவனுக்கு அநுகூலமுண்டானது.
16 וּכְחֶזְקָת֗וֹ –மற்றும்–பலமானபோது גָּבַ֤הּ மேட்டிமையானது לִבּוֹ֙ இருதயம் עַד־ –வரை– לְהַשְׁחִ֔ית –அழிக்க וַיִּמְעַ֖ל –மற்றும்–துரோகம்செய்தான் בַּיהוָ֣ה –யெகோவாவுக்கு אֱלֹהָ֑יו தேவனுடைய וַיָּבֹא֙ –மற்றும்–போனான் אֶל־ – הֵיכַ֣ל ஆலயத்துக்கு יְהוָ֔ה யெகோவாவின் לְהַקְטִ֖יר –தூபங்காட்ட עַל־ –மேல்– מִזְבַּ֥ח பலிபீடத்தில் הַקְּטֹֽרֶת׃ –தூபத்தின்
அவன் பலப்பட்டபோது, தனக்கு அழிவு ஏற்படும் வரை, அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபம் காட்ட யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
17 וַיָּבֹ֥א –மற்றும்–போனான் אַחֲרָ֖יו பின்னால் עֲזַרְיָ֣הוּ அசரியா הַכֹּהֵ֑ן –ஆசாரியன் וְעִמּ֞וֹ –மற்றும்–அவனோடே כֹּהֲנִ֧ים ׀ ஆசாரியர்கள் לַיהוָ֛ה –யெகோவாவின் שְׁמוֹנִ֖ים எண்பது בְּנֵי־ புத்திரர்– חָֽיִל׃ வீரம்
ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடுகூடக் யெகோவாவின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பின்னே உட்பிரவேசித்து,
18 וַיַּעַמְד֞וּ –மற்றும்–நின்றார்கள் עַל־ –மேல்– עֻזִּיָּ֣הוּ உசியா הַמֶּ֗לֶךְ –ராஜா וַיֹּ֤אמְרוּ –மற்றும்–சொன்னார்கள் לוֹ֙ அவனிடத்தில் לֹא־ இல்லை– לְךָ֣ உனக்கு עֻזִּיָּ֗הוּ உசியா לְהַקְטִיר֙ –தூபங்காட்ட לַֽיהוָ֔ה –யெகோவாவுக்கு כִּ֣י ஏனெனில் לַכֹּהֲנִ֧ים –ஆசாரியர்களுக்கு בְּנֵי־ புத்திரர்– אַהֲרֹ֛ן ஆரோனின் הַמְקֻדָּשִׁ֖ים –பரிசுத்தமாக்கப்பட்ட לְהַקְטִ֑יר –தூபங்காட்ட צֵ֤א வெளியேபோ מִן־ –இலிருந்து– הַמִּקְדָּשׁ֙ –பரிசுத்தஸ்தலம் כִּ֣י ஏனெனில் מָעַ֔לְתָּ துரோகம்செய்தாய் וְלֹֽא־ –மற்றும்–இல்லை– לְךָ֥ உனக்கு לְכָב֖וֹד –மகிமைக்கு מֵיְהוָ֥ה –யெகோவாவிடத்திலிருந்து אֱלֹהִֽים׃ தேவனுடைய
ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, யெகோவாவுக்குத் தூபங்காட்டுகிறது உமக்குரியதல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களுக்கே உரியது; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக இருக்காது என்றார்கள்.
19 וַיִּזְעַף֙ –மற்றும்–கோபமானான் עֻזִּיָּ֔הוּ உசியா וּבְיָד֥וֹ –மற்றும்–கையில் מִקְטֶ֖רֶת தூபகலசம் לְהַקְטִ֑יר –தூபங்காட்ட וּבְזַעְפּ֣וֹ –மற்றும்–கோபத்தில் עִם־ –உடன்– הַכֹּהֲנִ֗ים –ஆசாரியர்கள் וְ֠הַצָּרַעַת –மற்றும்–குஷ்டரோகம் זָרְחָ֨ה உதித்தது בְמִצְח֜וֹ –நெற்றியில் לִפְנֵ֤י –முன்பாக הַכֹּֽהֲנִים֙ –ஆசாரியர்களின் בְּבֵ֣ית –ஆலயத்தில் יְהוָ֔ה யெகோவாவின் מֵעַ֖ל –மேலாக לְמִזְבַּ֥ח –பலிபீடத்தின் הַקְּטֹֽרֶת׃ –தூபத்தின்
அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடு கோபமாகப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் யெகோவாவுடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே தொழுநோய் தோன்றியது.
20 וַיִּ֣פֶן –மற்றும்–திரும்பினான் אֵלָ֡יו அவனிடத்தில் עֲזַרְיָהוּ֩ அசரியா כֹהֵ֨ן ஆசாரியன் הָרֹ֜אשׁ –தலைமையின் וְכָל־ –மற்றும்–எல்லா– הַכֹּהֲנִ֗ים –ஆசாரியர்கள் וְהִנֵּה־ –மற்றும்–இதோ– ה֤וּא அவன் מְצֹרָע֙ குஷ்டரோகி בְּמִצְח֔וֹ –நெற்றியில் וַיַּבְהִל֖וּהוּ –மற்றும்–அவசரமாய்வெளியேற்றினார்கள் מִשָּׁ֑ם –அங்கிருந்து וְגַם־ –மற்றும்–கூட– הוּא֙ அவன் נִדְחַ֣ף விரைந்தான் לָצֵ֔את –வெளியேபோக כִּ֥י ஏனெனில் נִגְּע֖וֹ வாதித்தார் יְהוָֽה׃ யெகோவா
பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் அனைத்து ஆசாரியர்களும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே தொழுநோய் பிடித்தவனென்று கண்டு, அவனை விரைவாக அங்கேயிருந்து வெளியேறச் செய்தார்கள்; யெகோவா தன்னை அடித்ததால் அவன் தானும் வெளியே போக அவசரப்பட்டான்.
21 וַיְהִי֩ –மற்றும்–இருந்தான் עֻזִּיָּ֨הוּ உசியா הַמֶּ֜לֶךְ –ராஜா מְצֹרָ֣ע ׀ குஷ்டரோகி עַד־ –வரை– י֣וֹם நாள் מוֹת֗וֹ மரணத்தின் וַיֵּ֜שֶׁב –மற்றும்–குடியிருந்தான் בֵּ֤ית வீட்டில் [החפשות] — (הַֽחָפְשִׁית֙) தனிமையின் מְצֹרָ֔ע குஷ்டரோகியாக כִּ֥י ஏனெனில் נִגְזַ֖ר விலக்கப்பட்டான் מִבֵּ֣ית –ஆலயத்திலிருந்து יְהוָ֑ה யெகோவாவின் וְיוֹתָ֤ם –மற்றும்–யோதாம் בְּנוֹ֙ மகன் עַל־ –மேல்– בֵּ֣ית வீடு הַמֶּ֔לֶךְ –ராஜாவின் שׁוֹפֵ֖ט நியாயம்தீர்க்கிற אֶת־ — עַ֥ם மக்கள் הָאָֽרֶץ׃ –தேசத்தின்
ராஜாவாகிய உசியா தன் மரணநாள்வரை தொழுநோயாளியாயிருந்து, யெகோவாவுடைய ஆலயத்திற்குப் விலக்கி வைக்கப்பட்டு இருந்ததால், ஒரு தனித்த வீட்டிலே தொழுநோயாளியாக குடியிருந்தான்; அவன் மகனாகிய யோதாம், ராஜாவின் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.
22 וְיֶ֙תֶר֙ –மற்றும்–மீதியான דִּבְרֵ֣י வார்த்தைகள் עֻזִּיָּ֔הוּ உசியாவின் הָרִאשֹׁנִ֖ים –முந்தினவையும் וְהָאֲחֲרֹנִ֑ים –மற்றும்–பிந்தினவையும் כָּתַ֛ב எழுதினான் יְשַֽׁעְיָ֥הוּ ஏசாயா בֶן־ மகன்– אָמ֖וֹץ ஆமோத்சின் הַנָּבִֽיא׃ –தீர்க்கதரிசி
உசியாவின் ஆரம்பம் முதல் கடைசி வரையுள்ள செயல்பாடுகளான மற்ற காரியங்களை ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான்.
23 וַיִּשְׁכַּ֨ב –மற்றும்–படுத்தான் עֻזִּיָּ֜הוּ உசியா עִם־ –உடன்– אֲבֹתָ֗יו பிதாக்களோடே וַיִּקְבְּר֨וּ –மற்றும்–அடக்கம்பண்ணினார்கள் אֹת֤וֹ அவனை עִם־ –உடன்– אֲבֹתָיו֙ பிதாக்களோடே בִּשְׂדֵ֤ה –வயலில் הַקְּבוּרָה֙ –கல்லறையின் אֲשֶׁ֣ר – לַמְּלָכִ֔ים –ராஜாக்களுக்குரிய כִּ֥י ஏனெனில் אָמְר֖וּ சொன்னார்கள் מְצוֹרָ֣ע குஷ்டரோகி ה֑וּא அவன் וַיִּמְלֹ֛ךְ –மற்றும்–ஆண்டான் יוֹתָ֥ם யோதாம் בְּנ֖וֹ மகன் תַּחְתָּֽיו׃ –பதிலாக פ —
உசியா இறந்த பின்பு, மக்கள் அவனைத் தொழுநோயாளியென்று சொல்லி, அவனை அவன் முன்னோர்களுக்கு அருகில், ராஜாக்களை அடக்கம்செய்கிற இடத்திற்கு அருகிலுள்ள நிலத்திலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோதாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.