1 וַֽיִּשְׁבְּת֡וּ நிறுத்தினார்கள் שְׁלֹ֤שֶׁת மூன்று הָאֲנָשִׁ֣ים மனிதர்கள்–அந்த הָ֭אֵלֶּה இந்த מֵעֲנ֣וֹת பதிலளிப்பதை אֶת־ (என்ற) אִיּ֑וֹב இயோபுக்கு כִּ֤י ஏனெனில் ה֖וּא அவன் צַדִּ֣יק நீதிமான் בְּעֵינָֽיו׃ தன்–கண்களில் פ —
யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அவனுக்கு அந்த மூன்று மனிதரும் பதில் சொல்லி முடித்தார்கள்.
2 וַיִּ֤חַר எரிந்தது אַ֨ף ׀ கோபம் אֱלִיה֣וּא எலீகூவின் בֶן־ மகன் בַּרַכְאֵ֣ל பரக்கேலின் הַבּוּזִי֮ பூசியன்–அந்த מִמִּשְׁפַּ֪חַ֫ת குடும்பத்திலிருந்து רָ֥ם ராமின் בְּ֭אִיּוֹב இயோபின்–மீது חָרָ֣ה எரிந்தது אַפּ֑וֹ அவன்–கோபம் עַֽל־ மீது צַדְּק֥וֹ நீதிமானாக்கினதற்காக נַ֝פְשׁ֗וֹ தன்–ஆத்துமாவை מֵאֱלֹהִֽים׃ தேவனைவிட
அதினால் ராமின் வம்சத்தானாகிய பூசியனாகிய பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபம் வந்தது, யோபு, தேவனைவிடத் தன்னைத்தான் நீதிமானாக்கினதினால், அவன்மேலும் அவனுக்குக் கோபம் வந்தது.
3 וּבִשְׁלֹ֣שֶׁת மூன்று רֵעָיו֮ அவன்–நண்பர்களின்–மீதும் חָרָ֪ה எரிந்தது אַ֫פּ֥וֹ அவன்–கோபம் עַ֤ל மீது אֲשֶׁ֣ר ஏனெனில் לֹא־ இல்லை מָצְא֣וּ கண்டுபிடிக்கவில்லை מַעֲנֶ֑ה பதிலை וַ֝יַּרְשִׁ֗יעוּ குற்றவாளியாக்கினார்கள் אֶת־ (என்ற) אִיּֽוֹב׃ இயோபை
கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று நண்பர்களுக்கும் கிடைக்காதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று முடிவு செய்ததால், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் வந்தது.
4 וֶֽאֱלִיה֗וּ எலீகூ חִכָּ֣ה காத்திருந்தான் אֶת־ (என்ற) אִ֭יּוֹב இயோபிடம் בִּדְבָרִ֑ים வார்த்தைகளில் כִּ֤י ஏனெனில் זְֽקֵנִים־ வயதானவர்கள் הֵ֖מָּה அவர்கள் מִמֶּ֣נּוּ அவனைவிட לְיָמִֽים׃ நாட்களில்
அவர்கள் தன்னைவிட வயது முதிர்ந்தவர்களானதினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடியும்வரை காத்திருந்தான்.
5 וַיַּ֤רְא கண்டான் אֱלִיה֗וּא எலீகூ כִּ֘י ஏனெனில் אֵ֤ין இல்லை מַעֲנֶ֗ה பதில் בְּ֭פִי வாயில் שְׁלֹ֥שֶׁת மூன்று הָאֲנָשִׁ֗ים மனிதர்களின்–அந்த וַיִּ֥חַר எரிந்தது אַפּֽוֹ׃ அவன்–கோபம் פ —
அந்த மூன்று மனிதரின் வாயிலும் பதில் பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்குக் கோபம் வந்தது.
6 וַיַּ֤עַן ׀ பதிலளித்தான் אֱלִיה֖וּא எலீகூ בֶן־ மகன் בַּֽרַכְאֵ֥ל பரக்கேலின் הַבּוּזִ֗י பூசியன்–அந்த וַיֹּ֫אמַ֥ר சொன்னான் צָ֘עִ֤יר இளையவன் אֲנִ֣י நான் לְ֭יָמִים நாட்களில் וְאַתֶּ֣ם நீங்களோ יְשִׁישִׁ֑ים முதியவர்கள் עַל־ மீது כֵּ֖ן ஆகையால் זָחַ֥לְתִּי தயங்கினேன் וָֽאִירָ֓א ׀ பயந்தேன் מֵחַוֺּ֖ת தெரிவிக்க דֵּעִ֣י என்–கருத்தை אֶתְכֶֽם׃ உங்களுக்கு
ஆதலால் பரகெயேலின் மகன் எலிகூ என்னும் பூசியன் மறுமொழியாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ வயதானவர்கள்; ஆகையால் நான் பயந்து, என் கருத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்த பயந்திருந்தேன்.
7 אָ֭מַרְתִּי சொன்னேன் יָמִ֣ים நாட்கள் יְדַבֵּ֑רוּ பேசட்டும் וְרֹ֥ב மிகுதியான שָׁ֝נִ֗ים வருடங்கள் יֹדִ֥יעוּ அறிவிக்கட்டும் חָכְמָֽה׃ ஞானத்தை
முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்.
8 אָ֭כֵן ஆயினும் רֽוּחַ־ ஆவி הִ֣יא அது בֶאֱנ֑וֹשׁ மனிதனில் וְנִשְׁמַ֖ת சுவாசமும் שַׁדַּ֣י சர்வவல்லவரின் תְּבִינֵֽם׃ புத்தியளிக்கும்–அவர்களுக்கு
ஆனாலும் மனிதரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லமையுள்ள தேவனுடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
9 לֹֽא־ இல்லை רַבִּ֥ים பெரியவர்கள் יֶחְכָּ֑מוּ ஞானிகளாவார்கள் וּ֝זְקֵנִ֗ים முதியவர்களும் יָבִ֥ינוּ புரிந்துகொள்வார்கள் מִשְׁפָּֽט׃ நியாயத்தை
பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
10 לָכֵ֣ן ஆகையால் אָ֭מַרְתִּי சொன்னேன் שִׁמְעָה־ கேளுங்கள் לִּ֑י எனக்கு אֲחַוֶּ֖ה தெரிவிப்பேன் דֵּעִ֣י என்–கருத்தை אַף־ நானும் אָֽנִי׃ நான்
ஆகையால் நான் சொல்வதைக் கேளுங்கள்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
11 הֵ֤ן இதோ הוֹחַ֨לְתִּי காத்திருந்தேன் לְֽדִבְרֵיכֶ֗ם உங்கள்–வார்த்தைகளுக்காக אָ֭זִין செவிகொடுத்தேன் עַד־ வரை תְּב֥וּנֹֽתֵיכֶ֑ם உங்கள்–புத்திகளுக்கு עַֽד־ வரை תַּחְקְר֥וּן ஆராய்ந்தீர்கள் מִלִּֽין׃ சொற்களை
இதோ, உங்கள் வசனங்கள் முடியும்வரை காத்திருந்தேன்; நீங்கள் சொல்ல முடிந்ததை ஆராய்ந்து தேடும்வரை, உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
12 וְעָֽדֵיכֶ֗ם உங்களை אֶתְבּ֫וֹנָ֥ן கவனித்தேன் וְהִנֵּ֤ה இதோ אֵ֣ין இல்லை לְאִיּ֣וֹב இயோபுக்கு מוֹכִ֑יחַ கடிந்துகொள்பவர் עוֹנֶ֖ה பதிலளிப்பவர் אֲמָרָ֣יו அவன்–வார்த்தைகளுக்கு מִכֶּֽם׃ உங்களில்
நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரிவித்து, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற மறுமொழி சொல்லுகிறவனில்லை.
13 פֶּן־ எச்சரிக்கை תֹּ֣֭אמְרוּ சொல்லாதீர்கள் מָצָ֣אנוּ கண்டுபிடித்தோம் חָכְמָ֑ה ஞானத்தை אֵ֖ל தேவன் יִדְּפֶ֣נּוּ தள்ளுவார்–அவனை לֹא־ இல்லை אִֽישׁ׃ மனிதன்
ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனிதனல்ல, தேவனே அவரை வெற்றி கொள்ளவேண்டும்.
14 וְלֹא־ இல்லை עָרַ֣ךְ வரிசைப்படுத்தினான் אֵלַ֣י என்னிடம் מִלִּ֑ין வார்த்தைகளை וּ֝בְאִמְרֵיכֶ֗ם உங்கள்–சொற்களால் לֹ֣א இல்லை אֲשִׁיבֶֽנּוּ׃ பதிலளிப்பேன்–அவனுக்கு
அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்கு மறுமொழி சொல்வதுமில்லை.
15 חַ֭תּוּ திகைத்தார்கள் לֹא־ இல்லை עָ֣נוּ பதிலளிக்கவில்லை ע֑וֹד இனியும் הֶעְתִּ֖יקוּ நீங்கிவிட்டன מֵהֶ֣ם அவர்களிடமிருந்து מִלִּֽים׃ வார்த்தைகள்
அவர்கள் கலங்கி பிறகு மறுமொழி சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு நின்றுபோனது.
16 וְ֭הוֹחַלְתִּי காத்திருந்தேன் כִּי־ ஏனெனில் לֹ֣א இல்லை יְדַבֵּ֑רוּ பேசவில்லை כִּ֥י ஏனெனில் עָ֝מְד֗וּ நின்றார்கள் לֹא־ இல்லை עָ֥נוּ பதிலளிக்கவில்லை עֽוֹד׃ இனியும்
அவர்கள் பேசமாட்டார்களா என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் மறுமொழி கொடுக்காமலிருந்ததினால்,
17 אַעֲנֶ֣ה பதிலளிப்பேன் אַף־ நானும் אֲנִ֣י நான் חֶלְקִ֑י என்–பங்கை אֲחַוֶּ֖ה தெரிவிப்பேன் דֵעִ֣י என்–கருத்தை אַף־ நானும் אָֽנִי׃ நான்
நானும் மறுமொழியாக எனக்குத் தோன்றியவரை சொல்லுவேன்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன்.
18 כִּ֭י ஏனெனில் מָלֵ֣תִי நிறைந்திருக்கிறேன் מִלִּ֑ים வார்த்தைகளால் הֱ֝צִיקַ֗תְנִי நெருக்குகிறது–என்னை ר֣וּחַ ஆவி בִּטְנִֽי׃ என்–வயிற்றின்
வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
19 הִנֵּֽה־ இதோ בִטְנִ֗י என்–வயிறு כְּיַ֥יִן திராட்சைரசம்போல לֹא־ இல்லை יִפָּתֵ֑חַ திறக்கப்படாத כְּאֹב֥וֹת தோல்பைகளைப்போல חֲ֝דָשִׁ֗ים புதிய יִבָּקֵֽעַ׃ வெடிக்கும்
இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புது தோல்பைகளையே கிழிக்கும் புதுரசத்தைப் போலிருக்கிறது.
20 אֲדַבְּרָ֥ה பேசுவேன் וְיִֽרְוַֽח־ இளைப்பாறுவேன் לִ֑י எனக்கு אֶפְתַּ֖ח திறப்பேன் שְׂפָתַ֣י என்–உதடுகளை וְאֶֽעֱנֶֽה׃ பதிலளிப்பேன்
நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து மறுமொழி சொல்லுவேன்.
21 אַל־ வேண்டாம் נָ֭א தயவுசெய்து אֶשָּׂ֣א பாரபட்சம்காட்டுவேன் פְנֵי־ முகத்தை אִ֑ישׁ மனிதனின் וְאֶל־ மீது אָ֝דָ֗ם மனிதனுக்கு לֹ֣א இல்லை אֲכַנֶּֽה׃ முகஸ்துதிசெய்வேன்
நான் ஒருவனுடைய முகத்தைப் பார்க்காமலும், ஒரு மனிதனுக்கும் ஆசை வார்த்தை பேசாமலும் இருப்பேனாக.
22 כִּ֤י ஏனெனில் לֹ֣א இல்லை יָדַ֣עְתִּי அறியேன் אֲכַנֶּ֑ה முகஸ்துதிசெய்வதை כִּ֝מְעַ֗ט சீக்கிரம் יִשָּׂאֵ֥נִי எடுத்துக்கொள்வார்–என்னை עֹשֵֽׂנִי׃ உண்டாக்கினவர்–என்னை
நான் ஆசை வார்த்தை பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாக என்னை எடுத்துக்கொள்வார்.