1 אַף־ மேலும் לְ֭זֹאת இதற்காக יֶחֱרַ֣ד நடுக்கும் לִבִּ֑י என்–இருதயம் וְ֝יִתַּ֗ר துள்ளுகிறது מִמְּקוֹמֽוֹ׃ அதன்–இடத்திலிருந்து
“இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது.
2 שִׁמְע֤וּ கேளுங்கள் שָׁמ֣וֹעַ கேட்டு בְּרֹ֣גֶז இடிமுழக்கத்தில் קֹל֑וֹ அவர்–குரலை וְ֝הֶ֗גֶה உருமுன்றலும் מִפִּ֥יו அவர்–வாயிலிருந்து יֵצֵֽא׃ வெளியாகும்
தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாகக் கேளுங்கள்.
3 תַּֽחַת־ அதற்குக்கீழ் כָּל־ எல்லா הַשָּׁמַ֥יִם வானங்களின் יִשְׁרֵ֑הוּ நேராக்குகிறார்–அதை וְ֝אוֹר֗וֹ அவர்–ஒளியும் עַל־ மீது כַּנְפ֥וֹת அடிவாரங்களின் הָאָֽרֶץ׃ பூமியின்
அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார்.
4 אַחֲרָ֤יו ׀ அதற்குப்பின் יִשְׁאַג־ அரற்றும் ק֗וֹל குரல் יַ֭רְעֵם இடிமுழக்குகிறார் בְּק֣וֹל குரலில் גְּאוֹנ֑וֹ அவர்–மகத்துவத்தின் וְלֹ֥א இல்லை יְ֝עַקְּבֵ֗ם தடுப்பார்–அவற்றை כִּֽי־ ஏனெனில் יִשָּׁמַ֥ע கேட்கிறது קוֹלֽוֹ׃ அவர்–குரல்
அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறச்செய்கிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.
5 יַרְעֵ֤ם இடிமுழக்குகிறார் אֵ֣ל தேவன் בְּ֭קוֹלוֹ அவர்–குரலில் נִפְלָא֑וֹת அற்புதங்களாக עֹשֶׂ֥ה செய்கிறார் גְ֝דֹל֗וֹת பெரியவற்றை וְלֹ֣א இல்லை נֵדָֽע׃ அறிவோம்
தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்; நாம் விளங்கமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.
6 כִּ֤י ஏனெனில் לַשֶּׁ֨לַג ׀ பனிக்கு יֹאמַ֗ר சொல்கிறார் הֱוֵ֫א ஆகு אָ֥רֶץ பூமியின்–மீது וְגֶ֥שֶׁם மழையும் מָטָ֑ר மழையும் וְ֝גֶ֗שֶׁם மழையும் מִטְר֥וֹת மழைகள் עֻזּֽוֹ׃ அவர்–வல்லமையின்
அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.
7 בְּיַד־ கையில் כָּל־ எல்லா אָדָ֥ם மனிதனின் יַחְתּ֑וֹם முத்திரையிடுகிறார் לָ֝דַ֗עַת அறிய כָּל־ எல்லா אַנְשֵׁ֥י மனிதர்களின் מַעֲשֵֽׂהוּ׃ அவர்–செயலை
தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று, அவர் எல்லா மனிதருடைய கைகளையும் முடக்கிப்போடுகிறார்.
8 וַתָּבֹ֣א போகும் חַיָּ֣ה மிருகம் בְמוֹ־ தன்–பதுங்கிடத்தில் אָ֑רֶב பதுங்குமிடத்தில் וּבִמְע֖וֹנֹתֶ֣יהָ அதன்–உறைவிடங்களில் תִשְׁכֹּֽן׃ தங்கும்
அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.
9 מִן־ இருந்து הַ֭חֶדֶר அறையிலிருந்து תָּב֣וֹא வரும் סוּפָ֑ה புயற்காற்று וּֽמִמְּזָרִ֥ים வடக்கிலிருந்தும் קָרָֽה׃ குளிர்
தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.
10 מִנִּשְׁמַת־ சுவாசத்திலிருந்து אֵ֥ל தேவனின் יִתֶּן־ கொடுக்கப்படும் קָ֑רַח பனி וְרֹ֖חַב அகலமும் מַ֣יִם தண்ணீர்களின் בְּמוּצָֽק׃ உறைந்தது
தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது தண்ணீரின் மேற்பரப்பு உறைந்துபோகும்.
11 אַף־ மேலும் בְּ֭רִי ஈரப்பத்தால் יַטְרִ֣יחַ பாரமாக்குகிறார் עָ֑ב மேகத்தை יָ֝פִ֗יץ சிதறடிக்கிறார் עֲנַ֣ן மேகத்தை אוֹרֽוֹ׃ அவர்–ஒளியின்
அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறவைக்கிறார்.
12 וְה֤וּא அதுவும் מְסִבּ֨וֹת ׀ சுற்றி מִתְהַפֵּ֣ךְ திரும்புகிறது [בתחבולתו] அவர்–திட்டங்களின்படி (בְּתַחְבּוּלֹתָ֣יו) அவர்–திட்டங்களின்படி לְפָעֳלָ֑ם அவற்றின்–செயலுக்காக כֹּ֖ל எல்லா אֲשֶׁ֥ר ஏது יְצַוֵּ֓ם ׀ கட்டளையிடுகிறார்–அவற்றை עַל־ மீது פְּנֵ֖י முகத்தின் תֵבֵ֣ל உலகத்தின் אָֽרְצָה׃ பூமியின்–மீது
அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியவைக்கிறார்.
13 אִם־ என்றால் לְשֵׁ֥בֶט தண்டனைக்காக אִם־ என்றால் לְאַרְצ֑וֹ அவர்–பூமிக்காக אִם־ என்றால் לְ֝חֶ֗סֶד கிருபைக்காக יַמְצִאֵֽהוּ׃ கண்டடையச்செய்வார்–அதை
ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரச்செய்கிறார்.
14 הַאֲזִ֣ינָה செவிகொடு זֹּ֣את இதை אִיּ֑וֹב இயோபே עֲ֝מֹ֗ד நில் וְהִתְבּוֹנֵ֤ן ׀ உற்றுநோக்கு נִפְלְא֬וֹת அற்புதங்களை אֵֽל׃ தேவனின்
யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்.
15 הֲ֭תֵדַע அறிவாயா בְּשׂוּם־ வைக்கும்போது אֱל֣וֹהַּ தேவன் עֲלֵיהֶ֑ם அவற்றின்–மீது וְ֝הוֹפִ֗יעַ பிரகாசிக்கச்செய்தார் א֣וֹר ஒளியை עֲנָנֽוֹ׃ அவர்–மேகத்தின்
தேவன் அவைகளைத் திட்டமிட்டு, தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ?
16 הֲ֭תֵדַע அறிவாயா עַל־ மீது מִפְלְשֵׂי־ பரப்புகளை עָ֑ב மேகத்தின் מִ֝פְלְא֗וֹת அற்புதங்களை תְּמִ֣ים நிறைவானவரின் דֵּעִֽים׃ அறிவுகளின்
மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,
17 אֲשֶׁר־ ஏதுகள் בְּגָדֶ֥יךָ உன்–உடைகள் חַמִּ֑ים சூடானவை בְּהַשְׁקִ֥ט அமைதியாக்கும்போது אֶ֝֗רֶץ பூமியை מִדָּרֽוֹם׃ தென்புறத்திலிருந்து
தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது, உம்முடைய ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையையும் அறிவீரோ?
18 תַּרְקִ֣יעַ பரப்புவாயா עִ֭מּוֹ அவரோடு לִשְׁחָקִ֑ים மேகங்களை חֲ֝זָקִ֗ים வல்லமையானவை כִּרְאִ֥י கண்ணாடியைப்போல מוּצָֽק׃ வார்ப்பின்
செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ?
19 ה֭וֹדִיעֵנוּ அறிவிப்பாயாக–நமக்கு מַה־ என்ன נֹּ֣אמַר சொல்வோம் ל֑וֹ அவருக்கு לֹ֥א־ இல்லை נַ֝עֲרֹ֗ךְ வரிசைப்படுத்தவோம் מִפְּנֵי־ முன்னால் חֹֽשֶׁךְ׃ இருளின்
அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்; இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம்.
20 הַֽיְסֻפַּר־ அறிவிக்கப்படுமா ל֭וֹ அவருக்கு כִּ֣י ஏனெனில் אֲדַבֵּ֑ר பேசுகிறேன்–நான் אִֽם־ என்றால் אָ֥מַר சொன்னான் אִ֝֗ישׁ மனிதன் כִּ֣י ஏனெனில் יְבֻלָּֽע׃ விழுங்கப்படுவான்
நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ? ஒருவன் பேசத்துணிந்தால் அவன் அழிக்கப்பட்டுப்போவானே.
21 וְעַתָּ֤ה ׀ இப்போதும் לֹ֘א இல்லை רָ֤אוּ காண்கிறார்கள் א֗וֹר ஒளியை בָּהִ֣יר பிரகாசமான ה֭וּא அது בַּשְּׁחָקִ֑ים மேகங்களில் וְר֥וּחַ காற்று עָ֝בְרָ֗ה கடந்தது וַֽתְּטַהֲרֵֽם׃ தூய்மையாக்கியது–அவற்றை
இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது,
22 מִ֭צָּפוֹן வடக்கிலிருந்து זָהָ֣ב பொன்னம் יֶֽאֱתֶ֑ה வரும் עַל־ மீது אֱ֝ל֗וֹהַּ தேவன் נ֣וֹרָא பயங்கரமான הֽוֹד׃ மகிமை
ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.
23 שַׁדַּ֣י சர்வவல்லவரை לֹֽא־ இல்லை מְ֭צָאנֻהוּ கண்டுபிடித்தோம்–அவரை שַׂגִּיא־ மிகுதியான כֹ֑חַ வல்லமையின் וּמִשְׁפָּ֥ט நியாயத்தையும் וְרֹב־ மிகுதியான צְ֝דָקָ֗ה நீதியையும் לֹ֣א இல்லை יְעַנֶּֽה׃ உண்டாக்கார்
சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.
24 לָ֭כֵן ஆகையால் יְרֵא֣וּהוּ பயப்படுவார்கள்–அவரை אֲנָשִׁ֑ים மனிதர்கள் לֹֽא־ இல்லை יִ֝רְאֶ֗ה காண்பார் כָּל־ எல்லா חַכְמֵי־ ஞானமுள்ள לֵֽב׃ இருதயத்தின் פ —
ஆகையால் மனிதர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் மனதில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார்” என்றான்.