1 לַמְנַצֵּ֥חַ இசைத–தலைவருக்கு בִּנְגִינ֗וֹת நார்கருவிகள்–மேல் מִזְמ֥וֹר சங்கீதம் לְדָוִֽד׃ தாவீதுவின் בְּקָרְאִ֡י நான்–கூப்பிடுகையில் עֲנֵ֤נִי ׀ பதிலளியும்–எனக்கு אֱלֹ֘הֵ֤י தேவனே צִדְקִ֗י என்–நீதியின் בַּ֭צָּר இக்கட்டத்தில் הִרְחַ֣בְתָּ விரிவாக்கினீர் לִּ֑י எனக்கு חָ֝נֵּ֗נִי கிருபைகொடும் וּשְׁמַ֥ע மற்றும்–கேளும் תְּפִלָּתִֽי׃ என்–ஜெபத்தை
தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது. என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும்.
2 בְּנֵ֥י மனிதர்–புத்திரரே אִ֡ישׁ மனிதனே עַד־ எதுவரை– מֶ֬ה என்ன כְבוֹדִ֣י என்–மகிமையை לִ֭כְלִמָּה அவமானத்துக்கு תֶּאֱהָב֣וּן நேசிக்கிறீர்கள் רִ֑יק வீணானதை תְּבַקְשׁ֖וּ தேடுகிறீர்கள் כָזָ֣ב பொய்யை סֶֽלָה׃ செலா
மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா)
3 וּדְע֗וּ மற்றும்–அறியுங்கள் כִּֽי־ ஏனெனில்– הִפְלָ֣ה வேறுபடுத்தியிருக்கிறார் יְ֭הוָה யெகோவா חָסִ֣יד பக்தனை ל֑וֹ அவருக்கு יְהוָ֥ה யெகோவா יִ֝שְׁמַ֗ע கேள்வார் בְּקָרְאִ֥י நான்–கூப்பிடுகையில் אֵלָֽיו׃ அவரிடம்
பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார்.
4 רִגְז֗וּ நடுங்கள் וְֽאַל־ மற்றும்–வேண்டாம்– תֶּ֫חֱטָ֥אוּ பாவம்செய்யுங்கள் אִמְר֣וּ சொல்லுங்கள் בִ֭לְבַבְכֶם உங்கள்–இருதயத்தில் עַֽל־ மேல்– מִשְׁכַּבְכֶ֗ם உங்கள்–படுக்கையில் וְדֹ֣מּוּ மற்றும்–அமைதியாயிருங்கள் סֶֽלָה׃ செலா
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா)
5 זִבְח֥וּ பலியிடுங்கள் זִבְחֵי־ பலிகளை– צֶ֑דֶק நீதியின் וּ֝בִטְח֗וּ மற்றும்–நம்புங்கள் אֶל־ – יְהוָֽה׃ யெகோவாவில்
நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்.
6 רַבִּ֥ים அனேகர் אֹמְרִים֮ சொல்கிறார்கள் מִֽי־ யார்– יַרְאֵ֪נ֫וּ காண்பிப்பார்–நமக்கு ט֥וֹב நன்மையை נְֽסָה־ உயர்த்தும்– עָ֭לֵינוּ நம்–மேல் א֨וֹר ஒளியை פָּנֶ֬יךָ உன்–முகத்தின் יְהוָֽה׃ யெகோவாவே
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும்.
7 נָתַ֣תָּה கொடுத்தீர் שִׂמְחָ֣ה மகிழ்ச்சியை בְלִבִּ֑י என்–இருதயத்தில் מֵעֵ֬ת காலத்திலிருந்து דְּגָנָ֖ם அவர்கள்–தானியம் וְתִֽירוֹשָׁ֣ם மற்றும்–அவர்கள்–திராட்சைரசம் רָֽבּוּ׃ பெருகியது
அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட, அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர்.
8 בְּשָׁל֣וֹם சமாதானத்தில் יַחְדָּו֮ ஒன்றாக אֶשְׁכְּבָ֪ה படுப்பேன் וְאִ֫ישָׁ֥ן மற்றும்–நித்திரைகொள்வேன் כִּֽי־ ஏனெனில்– אַתָּ֣ה நீர் יְהוָ֣ה யெகோவாவே לְבָדָ֑ד தனிமையாக לָ֝בֶ֗טַח பாதுகாப்பாக תּוֹשִׁיבֵֽנִי׃ உட்காரச்செய்வீர்–என்னை
சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்; யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.