1 לַ֭מְנַצֵּחַ இசைத–தலைவருக்கு עַלְמ֥וּת அல்மூத் לַבֵּ֗ן மகனுக்கு מִזְמ֥וֹר சங்கீதம் לְדָוִֽד׃ தாவீதுவின் אוֹדֶ֣ה நன்றிசொல்வேன் יְ֭הוָה யெகோவாவை בְּכָל־ எல்லா– לִבִּ֑י என்–இருதயத்தில் אֲ֝סַפְּרָ֗ה அறிவிப்பேன் כָּל־ எல்லா– נִפְלְאוֹתֶֽיךָ׃ உன்–அற்புதங்களை
முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
2 אֶשְׂמְחָ֣ה மகிழ்வேன் וְאֶעֶלְצָ֣ה மற்றும்–ஆனந்தமாயிருப்பேன் בָ֑ךְ உன்னில் אֲזַמְּרָ֖ה பாடுவேன் שִׁמְךָ֣ உன்–நாமத்தை עֶלְיֽוֹן׃ உன்னதமானவரே
உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; உன்னதமான தேவனே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
3 בְּשׁוּב־ திரும்புகையில்– אוֹיְבַ֥י என்–எதிரிகள் אָח֑וֹר பின்னோக்கி יִכָּשְׁל֥וּ இடறுவார்களாக וְ֝יֹאבְד֗וּ மற்றும்–அழிவார்களாக מִפָּנֶֽיךָ׃ உன்–முகத்திலிருந்து
என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள்.
4 כִּֽי־ ஏனெனில்– עָ֭שִׂיתָ செய்தீர் מִשְׁפָּטִ֣י என்–நியாயத்தை וְדִינִ֑י மற்றும்–என்–வழக்கை יָשַׁ֥בְתָּ உட்கார்ந்தீர் לְ֝כִסֵּ֗א சிங்காசனத்தில் שׁוֹפֵ֥ט நியாயாதிபதியாக צֶֽדֶק׃ நீதியின்
நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாக சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறீர்.
5 גָּעַ֣רְתָּ கடிந்தீர் ג֭וֹיִם தேசங்களை אִבַּ֣דְתָּ அழித்தீர் רָשָׁ֑ע துன்மானை שְׁמָ֥ם அவர்கள்–நாமத்தை מָ֝חִ֗יתָ அழித்தீர் לְעוֹלָ֥ם என்றென்றும் וָעֶֽד׃ மற்றும்–என்றென்றும்
தேசங்களைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கர்களை அழித்து, அவர்கள் பெயரை என்றென்றைக்கும் இல்லாமல் குலைத்துப்போட்டீர்.
6 הָֽאוֹיֵ֨ב ׀ எதிரியின் תַּ֥מּוּ முடிவாயிற்றன חֳרָב֗וֹת பாழடைவுகள் לָ֫נֶ֥צַח என்றென்றும் וְעָרִ֥ים மற்றும்–நகரங்களை נָתַ֑שְׁתָּ பிடுங்கியுள்ளீர் אָבַ֖ד அழிந்தது זִכְרָ֣ם அவர்கள்–நினைவு הֵֽמָּה׃ அவர்கள்
எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களைத் தரைமட்டமாக்கினீர்; அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துபோனது.
7 וַֽ֭יהוָה மற்றும்–யெகோவா לְעוֹלָ֣ם என்றென்றும் יֵשֵׁ֑ב வீற்றிருக்கிறார் כּוֹנֵ֖ן நிலைநாட்டினார் לַמִּשְׁפָּ֣ט நியாயத்தீர்ப்புக்கு כִּסְאֽוֹ׃ அவருடைய–சிங்காசனத்தை
யெகோவாவோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார்.
8 וְה֗וּא மற்றும்–அவர் יִשְׁפֹּֽט־ நியாயம்தீர்ப்பார்– תֵּבֵ֥ל உலகத்தை בְּצֶ֑דֶק நீதியில் יָדִ֥ין தீர்ப்பார் לְ֝אֻמִּ֗ים மக்களை בְּמֵישָׁרִֽים׃ நேர்மையில்
அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து, எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார்.
9 וִ֘יהִ֤י மற்றும்–இருக்கட்டும் יְהוָ֣ה யெகோவா מִשְׂגָּ֣ב உயர்ந்த–அடைக்கலம் לַדָּ֑ךְ தாழ்த்தப்பட்டவனுக்கு מִ֝שְׂגָּ֗ב உயர்ந்த–அடைக்கலம் לְעִתּ֥וֹת காலங்களில் בַּצָּרָֽה׃ இக்கட்டத்தில்
சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
10 וְיִבְטְח֣וּ மற்றும்–நம்புவார்களாக בְ֭ךָ உன்னில் יוֹדְעֵ֣י அறிகிறவர்கள் שְׁמֶ֑ךָ உன்–நாமத்தை כִּ֤י ஏனெனில் לֹֽא־ இல்லை– עָזַ֖בְתָּ கைவிட்டீர் דֹרְשֶׁ֣יךָ உன்னை–தேடுகிறவர்களை יְהוָֽה׃ யெகோவாவே
யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள்.
11 זַמְּר֗וּ பாடுங்கள் לַ֭יהוָה யெகோவாவுக்கு יֹשֵׁ֣ב வீற்றிருக்கிறவர் צִיּ֑וֹן சீயோனில் הַגִּ֥ידוּ அறிவியுங்கள் בָ֝עַמִּ֗ים மக்களிடத்தில் עֲלִֽילוֹתָֽיו׃ அவருடைய–செயல்களை
சீயோனில் அரசாளுகிற யெகோவாவைப் புகழ்ந்து பாடி, அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்.
12 כִּֽי־ ஏனெனில்– דֹרֵ֣שׁ தேடுகிறவர் דָּ֭מִים இரத்தங்களை אוֹתָ֣ם அவர்களை זָכָ֑ר நினைத்தார் לֹֽא־ இல்லை– שָׁ֝כַ֗ח மறந்தார் צַעֲקַ֥ת கூக்குரலை [עניים] [எளியவர்களின்] (עֲנָוִֽים׃) எளியவர்களின்
ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவர்களை நினைக்கிறார்; எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார்.
13 חָֽנְנֵ֬נִי கிருபைகொடும்–எனக்கு יְהוָ֗ה யெகோவாவே רְאֵ֣ה பாரும் עָ֭נְיִי என்–துன்பத்தை מִשֹּׂנְאָ֑י என்–விரோதிகளிடமிருந்து מְ֝רוֹמְמִ֗י உயர்த்துகிறவரே–என்னை מִשַּׁ֥עֲרֵי வாசல்களிலிருந்து מָֽוֶת׃ மரணத்தின்
மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு,
14 לְמַ֥עַן பொருட்டு אֲסַפְּרָ֗ה அறிவிப்பேன் כָּֽל־ எல்லா– תְּהִלָּ֫תֶ֥יךָ உன்–துதிகளை בְּשַֽׁעֲרֵ֥י வாசல்களில் בַת־ மகள்– צִיּ֑וֹן சீயோனின் אָ֝גִ֗ילָה களிகூருவேன் בִּישׁוּעָתֶֽךָ׃ உன்–இரட்சிப்பில்
தேவனே நீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.
15 טָבְע֣וּ மூழ்கினார்கள் ג֭וֹיִם தேசங்கள் בְּשַׁ֣חַת குழியில் עָשׂ֑וּ செய்தன בְּרֶֽשֶׁת־ வலையில்– ז֥וּ இந்த טָ֝מָ֗נוּ மறைத்தன נִלְכְּדָ֥ה பிடிபட்டது רַגְלָֽם׃ அவர்கள்–பாதம்
தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன.
16 נ֤וֹדַ֨ע ׀ அறியப்பட்டார் יְהוָה֮ யெகோவா מִשְׁפָּ֪ט நியாயத்தை עָ֫שָׂ֥ה செய்தார் בְּפֹ֣עַל செயலில் כַּ֭פָּיו அவன்–கைகளின் נוֹקֵ֣שׁ கண்ணியில்–அகப்பட்டான் רָשָׁ֑ע துன்மான் הִגָּי֥וֹן தியானம் סֶֽלָה׃ செலா
யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.)
17 יָשׁ֣וּבוּ திரும்புவார்களாக רְשָׁעִ֣ים துன்மார்க்கர் לִשְׁא֑וֹלָה பாதாளத்திற்கு כָּל־ எல்லா– גּ֝וֹיִ֗ם தேசங்கள் שְׁכֵחֵ֥י மறக்கிறவர்கள் אֱלֹהִֽים׃ தேவனை
துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
18 כִּ֤י ஏனெனில் לֹ֣א இல்லை לָ֭נֶצַח என்றென்றும் יִשָּׁכַ֣ח மறக்கப்படுவான் אֶבְי֑וֹן எளியவன் תִּקְוַ֥ת நம்பிக்கை [ענוים] [எளியவர்களின்] (עֲ֝נִיִּ֗ים) எளியவர்களின் תֹּאבַ֥ד அழியும் לָעַֽד׃ என்றென்றும்
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.
19 קוּמָ֣ה எழுந்தருளும் יְ֭הוָה யெகோவாவே אַל־ வேண்டாம்– יָעֹ֣ז பலம்பெறட்டும் אֱנ֑וֹשׁ மனிதன் יִשָּׁפְט֥וּ நியாயம்தீர்க்கப்படட்டும் ג֝וֹיִ֗ם தேசங்கள் עַל־ மேல்– פָּנֶֽיךָ׃ உன்–முகத்தில்
எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்
20 שִׁ֘יתָ֤ה வையும் יְהוָ֨ה ׀ யெகோவாவே מוֹרָ֗ה பயத்தை לָ֫הֶ֥ם அவர்களுக்கு יֵדְע֥וּ அறிவார்களாக גוֹיִ֑ם தேசங்கள் אֱנ֖וֹשׁ மனிதர் הֵ֣מָּה அவர்கள் סֶּֽלָה׃ செலா
தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், யெகோவாவே (சேலா).