1 לַמְנַצֵּ֬חַ இசைத்–தலைவனுக்கு לִבְנֵי־ கோராகின்–புத்திரர்களுக்கு קֹ֬רַח கோராகின் מַשְׂכִּֽיל׃ மஸ்கீல் אֱלֹהִ֤ים ׀ தேவனே בְּאָזְנֵ֬ינוּ காதுகளால்–எங்களின் שָׁמַ֗עְנוּ கேட்டோம் אֲבוֹתֵ֥ינוּ பிதாக்கள்–எங்களின் סִפְּרוּ־ சொன்னார்கள்– לָ֑נוּ எங்களுக்கு פֹּ֥עַל செயல் פָּעַ֥לְתָּ செய்தீர் בִֽ֝ימֵיהֶ֗ם அவர்களின்–நாட்களில் בִּ֣ימֵי நாட்களில் קֶֽדֶם׃ பண்டைய
கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல். தேவனே, எங்கள் முன்னோர்களுடைய நாட்களாகிய முற்காலத்தில் நீர் நடப்பித்த செயல்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்களுடைய காதுகளால் கேட்டோம்.
2 אַתָּ֤ה ׀ நீர் יָדְךָ֡ கரத்தால்–உம்முடைய גּוֹיִ֣ם ஜாதிகளை ה֭וֹרַשְׁתָּ நீக்கினீர் וַתִּטָּעֵ֑ם மற்றும்–நட்டினீர்–அவர்களை תָּרַ֥ע தீமை–செய்தீர் לְ֝אֻמִּ֗ים ஜனங்களுக்கு וַֽתְּשַׁלְּחֵֽם׃ மற்றும்–அனுப்பினீர்–அவர்களை
தேவனே நீர் உம்முடைய கையினாலே தேசங்களைத் துரத்தி, இவர்களை நாட்டி; மக்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவச்செய்தீர்.
3 כִּ֤י ஏனெனில் לֹ֪א இல்லை בְחַרְבָּ֡ם வாளால்–அவர்களின் יָ֥רְשׁוּ உடைமையாக்கினார்கள் אָ֗רֶץ நாட்டை וּזְרוֹעָם֮ மற்றும்–புயத்து–அவர்களின் לֹא־ இல்லை– הוֹשִׁ֪יעָ֫ה இரட்சித்தது לָּ֥מוֹ அவர்களுக்கு כִּֽי־ ஆனால்– יְמִֽינְךָ֣ வலக்கரம்–உம்முடைய וּ֭זְרוֹעֲךָ மற்றும்–புயத்து–உம்முடைய וְא֥וֹר மற்றும்–வெளிச்சம் פָּנֶ֗יךָ முகத்தின்–உம்முடைய כִּ֣י ஏனெனில் רְצִיתָֽם׃ விரும்பினீர்–அவர்களை
அவர்கள் தங்களுடைய வாளினால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் கைகளும் அவர்களைப் பாதுகாக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாக இருந்தபடியால், உம்முடைய வலதுகையும், உம்முடைய கையும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது.
4 אַתָּה־ நீர்– ה֣וּא அவர் מַלְכִּ֣י அரசன்–என் אֱלֹהִ֑ים தேவனே צַ֝וֵּ֗ה கட்டளையிடும் יְשׁוּע֥וֹת இரட்சிப்புகளை יַעֲקֹֽב׃ யாகோபின்
தேவனே, நீர் என்னுடைய ராஜா; யாக்கோபுக்கு ஜெயத்தை கட்டளையிடுவீராக.
5 בְּ֭ךָ உம்மால் צָרֵ֣ינוּ எதிரிகளை8–எங்களின் נְנַגֵּ֑חַ மோதுவோம் בְּ֝שִׁמְךָ֗ பெயரால்–உம்முடைய נָב֥וּס மிதிப்போம் קָמֵֽינוּ׃ எழுபவர்களை–எங்களின்
உம்மாலே எங்களுடைய எதிரிகளைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களை உம்முடைய பெயரினால் மிதிப்போம்.
6 כִּ֤י ஏனெனில் לֹ֣א இல்லை בְקַשְׁתִּ֣י வில்லால்–என் אֶבְטָ֑ח நம்புவேன் וְ֝חַרְבִּ֗י மற்றும்–வாள்–என் לֹ֣א இல்லை תוֹשִׁיעֵֽנִי׃ இரட்சிக்கும்–என்னை
என்னுடைய வில்லை நான் நம்பமாட்டேன், என்னுடைய வாள் என்னை பாதுகாப்பதில்லை.
7 כִּ֣י ஏனெனில் ה֭וֹשַׁעְתָּנוּ இரட்சித்தீர்–எங்களை מִצָּרֵ֑ינוּ எதிரிகளிடமிருந்து–எங்களின் וּמְשַׂנְאֵ֥ינוּ மற்றும்–வெறுப்பவர்களை–எங்களின் הֱבִישֽׁוֹתָ׃ வெட்கப்படுத்தினீர்
நீரே எங்களுடைய எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.
8 בֵּֽ֭אלֹהִים தேவனில் הִלַּלְ֣נוּ புகழ்ந்தோம் כָל־ எல்லா– הַיּ֑וֹם நாளும் וְשִׁמְךָ֓ ׀ மற்றும்–பெயரை–உம்முடைய לְעוֹלָ֖ם என்றென்றும் נוֹדֶ֣ה நன்றி–சொல்வோம் סֶֽלָה׃ செலா
தேவனுக்குள் எப்போதும் மேன்மைபாராட்டுவோம்; உமது பெயரை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா)
9 אַף־ ஆனால்– זָ֭נַחְתָּ நிராகரித்தீர் וַתַּכְלִימֵ֑נוּ மற்றும்–அவமானப்படுத்தினீர்–எங்களை וְלֹא־ மற்றும்–வெளியே–இல்லை תֵ֝צֵ֗א வெளியே–போவீர் בְּצִבְאוֹתֵֽינוּ׃ சேனைகளில்–எங்களின்
நீர் எங்களைத் தள்ளிவிட்டு, வெட்கமடையச்செய்கிறீர்; எங்களுடைய படைகளுடனே செல்லாமலிருக்கிறீர்.
10 תְּשִׁיבֵ֣נוּ திருப்பினீர்–எங்களை אָ֭חוֹר பின்னால் מִנִּי־ எதிரியிடமிருந்து– צָ֑ר எதிரி וּ֝מְשַׂנְאֵ֗ינוּ மற்றும்–வெறுப்பவர்கள்–எங்களின் שָׁ֣סוּ கொள்ளையடித்தனர் לָֽמוֹ׃ அவர்களுக்கு
எதிரிக்கு நாங்கள் பின்னிட்டுத் திரும்பிப்போகச்செய்கிறீர்; எங்களுடைய பகைவர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
11 תִּ֭תְּנֵנוּ கொடுப்பீர்–எங்களை כְּצֹ֣אן ஆடுகளை–போல מַאֲכָ֑ל உணவாக וּ֝בַגּוֹיִ֗ם மற்றும்–ஜாதிகளிடையே זֵרִיתָֽנוּ׃ சிதறடித்தீர்–எங்களை
நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, தேசங்களுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.
12 תִּמְכֹּֽר־ விற்பீர்– עַמְּךָ֥ ஜனங்களை–உம்முடைய בְלֹא־ இல்லாமல்– ה֑וֹן செல்வத்துக்கு וְלֹ֥א־ மற்றும்–இல்லை– רִ֝בִּ֗יתָ அதிகரித்தீர் בִּמְחִירֵיהֶֽם׃ விலைகளால்–அவர்களின்
நீர் உம்முடைய மக்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.
13 תְּשִׂימֵ֣נוּ வைப்பீர்–எங்களை חֶ֭רְפָּה நிந்தையாக לִשְׁכֵנֵ֑ינוּ அயலாருக்கு–எங்களின் לַ֥עַג பரிகாசமாக וָ֝קֶ֗לֶס மற்றும்–அலட்சியமாக לִסְבִיבוֹתֵֽינוּ׃ சுற்றிலுள்ளவர்களுக்கு–எங்களின்
எங்களுடைய அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்கு ஏளனத்திற்கும், பழிப்புகளுக்கும் வைக்கிறீர்.
14 תְּשִׂימֵ֣נוּ வைப்பீர்–எங்களை מָ֭שָׁל பழமொழியாக בַּגּוֹיִ֑ם ஜாதிகளிடையே מְנֽוֹד־ தலையாட்டமாக– רֹ֝֗אשׁ தலை בַּל־ இல்லை– אֻמִּֽים׃ ஜனங்களிடையே
நாங்கள் தேசங்களுக்குள்ளே பழமொழியாக இருக்கவும், மக்கள் எங்களைக்குறித்துத் தலைதூக்கவும் செய்கிறீர்.
15 כָּל־ எல்லா– הַ֭יּוֹם நாளும் כְּלִמָּתִ֣י அவமானம்–என் נֶגְדִּ֑י எனக்கு–எதிரே וּבֹ֖שֶׁת மற்றும்–வெட்கம் פָּנַ֣י முகத்தின்–என் כִּסָּֽתְנִי׃ மூடியது–என்னை
நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், எதிரிகளினிமித்தமும், பழிவாங்குகிறவர்னிமித்தமும்,
16 מִ֭קּוֹל குரலிலிருந்து מְחָרֵ֣ף நிந்திப்பவனின் וּמְגַדֵּ֑ף மற்றும்–தூஷிப்பவனின் מִפְּנֵ֥י முகத்திலிருந்து א֝וֹיֵ֗ב எதிரியின் וּמִתְנַקֵּֽם׃ மற்றும்–பழிவாங்குபவனின்
என்னுடைய அவமானம் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது; என்னுடைய முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.
17 כָּל־ எல்லா– זֹ֣את இது בָּ֭אַתְנוּ வந்தது–எங்களுக்கு וְלֹ֣א மற்றும்–இல்லை שְׁכַחֲנ֑וּךָ மறந்தோம்–உம்மை וְלֹֽא־ மற்றும்–இல்லை– שִׁ֝קַּ֗רְנוּ பொய்யுரைத்தோம் בִּבְרִיתֶֽךָ׃ உடன்படிக்கையில்–உம்முடைய
இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்செய்யவும் இல்லை.
18 לֹא־ பின்வாங்கவில்லை– נָס֣וֹג பின்வாங்கியது אָח֣וֹר பின்னால் לִבֵּ֑נוּ இருதயம்–எங்களின் וַתֵּ֥ט மற்றும்–திரும்பியது אֲשֻׁרֵ֗ינוּ அடிச்சுவடுகள்–எங்களின் מִנִּ֥י பாதையிலிருந்து אָרְחֶֽךָ׃ வழியிலிருந்து–உம்முடைய
நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,
19 כִּ֣י ஏனெனில் דִ֭כִּיתָנוּ நசுக்கினீர்–எங்களை בִּמְק֣וֹם இடத்தில் תַּנִּ֑ים குறநரிகளின் וַתְּכַ֖ס மற்றும்–மூடினீர் עָלֵ֣ינוּ எங்கள்–மேல் בְצַלְמָֽוֶת׃ மரணநிழலால்
எங்களுடைய இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்களுடைய காலடி உம்முடைய பாதையைவிட்டு விலகவும் இல்லை.
20 אִם־ மறந்திருந்தால்– שָׁ֭כַחְנוּ மறந்தோம் שֵׁ֣ם பெயரை אֱלֹהֵ֑ינוּ தேவனின்–எங்களின் וַנִּפְרֹ֥שׂ மற்றும்–விரித்தோம் כַּ֝פֵּ֗ינוּ உள்ளங்கைகளை–எங்களின் לְאֵ֣ל தேவனுக்கு זָֽר׃ அந்நிய
நாங்கள் எங்கள் தேவனுடைய பெயரை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,
21 הֲלֹ֣א அறியாதா– אֱ֭לֹהִים தேவன் יַֽחֲקָר־ ஆராய்வார்– זֹ֑את இதை כִּֽי־ ஏனெனில்– ה֥וּא அவர் יֹ֝דֵ֗עַ அறிவார் תַּעֲלֻמ֥וֹת இரகசியங்களை לֵֽב׃ இருதயத்தின்
தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ? இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிந்திருக்கிறாரே.
22 כִּֽי־ ஏனெனில்– עָ֭לֶיךָ உமக்காக הֹרַ֣גְנוּ கொல்லப்படுகிறோம் כָל־ எல்லா– הַיּ֑וֹם நாளும் נֶ֝חְשַׁ֗בְנוּ கருதப்படுகிறோம் כְּצֹ֣אן ஆடுகளை–போல טִבְחָֽה׃ அடித்தலுக்காக
உமக்காக எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.
23 ע֤וּרָה ׀ விழியும் לָ֖מָּה என்ன– תִישַׁ֥ן ׀ தூங்குகிறீர் אֲדֹנָ֑י ஆண்டவரே הָ֝קִ֗יצָה விழிப்பீராக אַל־ வேண்டாம்– תִּזְנַ֥ח நிராகரிப்பீர் לָנֶֽצַח׃ என்றென்றும்
ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் தூங்குகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாமலிரும்.
24 לָֽמָּה־ என்ன– פָנֶ֥יךָ முகத்தை–உம்முடைய תַסְתִּ֑יר மறைக்கிறீர் תִּשְׁכַּ֖ח மறக்கிறீர் עָנְיֵ֣נוּ துன்பத்தை–எங்களின் וְֽלַחֲצֵֽנוּ׃ மற்றும்–உபத்திரவத்தை–எங்களின்
ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்களுடைய துன்பத்தையும் எங்களுடைய நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?
25 כִּ֤י ஏனெனில் שָׁ֣חָה தாழ்ந்தது לֶעָפָ֣ר பொடியில் נַפְשֵׁ֑נוּ ஆத்மா–எங்களின் דָּבְקָ֖ה ஒட்டியது לָאָ֣רֶץ பூமியில் בִּטְנֵֽנוּ׃ வயிறு–எங்களின்
எங்களுடைய ஆத்துமா புழுதிவரை தாழ்ந்திருக்கிறது; எங்களுடைய வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.
26 ק֭וּמָֽה எழும் עֶזְרָ֣תָה உதவியாக לָּ֑נוּ எங்களுக்கு וּ֝פְדֵ֗נוּ மற்றும்–மீட்பீர்–எங்களை לְמַ֣עַן நிமித்தமாக חַסְדֶּֽךָ׃ கிருபையை–உம்முடைய
எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.