1 לַמְנַצֵּ֥חַ இசைத்–தலைவனுக்கு לִבְנֵי־ கோராகின்–புத்திரர்களுக்கு קֹ֑רַח கோராகின் עַֽל־ –மேல் עֲלָמ֥וֹת கன்னிகளை שִֽׁיר׃ பாடல் אֱלֹהִ֣ים தேவன் לָ֭נוּ எங்களுக்கு מַחֲסֶ֣ה அடைக்கலம் וָעֹ֑ז மற்றும்–பலம் עֶזְרָ֥ה உதவி בְ֝צָר֗וֹת உபத்திரவங்களில் נִמְצָ֥א காணப்பட்டது מְאֹֽד׃ மிகவும்
அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல். தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
2 עַל־ –மேல் כֵּ֣ן அதனால் לֹא־ பயப்படமாட்டோம்–இல்லை נִ֭ירָא பயப்படோம் בְּהָמִ֣יר மாறும்போது אָ֑רֶץ பூமி וּבְמ֥וֹט மற்றும்–அசையும்போது הָ֝רִ֗ים மலைகள் בְּלֵ֣ב இருதயத்தில் יַמִּֽים׃ கடல்களின்
ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும்,
3 יֶהֱמ֣וּ ஆர்ப்பரிக்கும் יֶחְמְר֣וּ நுரையிடும் מֵימָ֑יו நீர்கள்–அதனின் יִֽרְעֲשֽׁוּ־ அதிரும்– הָרִ֖ים மலைகள் בְּגַאֲוָת֣וֹ பெருமையால்–அவரின் סֶֽלָה׃ செலா
அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும், நாம் பயப்படமாட்டோம். (சேலா)
4 נָהָ֗ר நதி פְּלָגָ֗יו கால்வாய்கள்–அதனின் יְשַׂמְּח֥וּ மகிழ்விக்கும் עִיר־ நகரை– אֱלֹהִ֑ים தேவனின் קְ֝דֹ֗שׁ பரிசுத்த מִשְׁכְּנֵ֥י உறைவிடங்களை עֶלְיֽוֹן׃ உன்னதத்தின்
ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமான தேவன் தங்கும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும்.
5 אֱלֹהִ֣ים தேவன் בְּ֭קִרְבָּהּ அதன்–நடுவில் בַּל־ அசையாது– תִּמּ֑וֹט அசையும் יַעְזְרֶ֥הָ உதவுவார்–அதற்கு אֱ֝לֹהִ֗ים தேவன் לִפְנ֥וֹת திரும்பும்போது בֹּֽקֶר׃ காலையில்
தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார்.
6 הָמ֣וּ ஆர்ப்பரித்தன ג֭וֹיִם ஜாதிகள் מָ֣טוּ அசைந்தன מַמְלָכ֑וֹת அரசுகள் נָתַ֥ן கொடுத்தார் בְּ֝קוֹל֗וֹ குரலால்–அவரின் תָּמ֥וּג உருகியது אָֽרֶץ׃ பூமி
தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது.
7 יְהוָ֣ה யெகோவா צְבָא֣וֹת சேனைகளின் עִמָּ֑נוּ எங்களோடு מִשְׂגָּֽב־ உயர்ந்த–அரண் לָ֝נוּ எங்களுக்கு אֱלֹהֵ֖י தேவன்– יַעֲקֹ֣ב யாகோபின் סֶֽלָה׃ செலா
சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)
8 לְֽכוּ־ வாருங்கள்– חֲ֭זוּ பாருங்கள் מִפְעֲל֣וֹת செயல்களை יְהוָ֑ה யெகோவாவின் אֲשֶׁר־ யார்– שָׂ֖ם வைத்தார் שַׁמּ֣וֹת பாழ்டிப்புகளை בָּאָֽרֶץ׃ பூமியில்
பூமியிலே அழிவுகளை நடப்பிக்கிற யெகோவாவுடைய செய்கைகளை வந்துபாருங்கள்.
9 מַשְׁבִּ֥ית நிறுத்துகிறார் מִלְחָמוֹת֮ யுத்தங்களை עַד־ வரை– קְצֵ֪ה அடிவாரத்தின் הָ֫אָ֥רֶץ பூமியின் קֶ֣שֶׁת வில்லை יְ֭שַׁבֵּר முறிப்பார் וְקִצֵּ֣ץ மற்றும்–வெட்டுவார் חֲנִ֑ית ஈட்டியை עֲ֝גָל֗וֹת ரதங்களை יִשְׂרֹ֥ף எரிப்பார் בָּאֵֽשׁ׃ நெருப்பில்
அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.
10 הַרְפּ֣וּ அமைதியாயிருங்கள் וּ֭דְעוּ மற்றும்–அறியுங்கள் כִּי־ ஏனெனில்– אָנֹכִ֣י நான் אֱלֹהִ֑ים தேவன் אָר֥וּם உயர்த்தப்படுவேன் בַּ֝גּוֹיִ֗ם ஜாதிகளிடையே אָר֥וּם உயர்த்தப்படுவேன் בָּאָֽרֶץ׃ பூமியில்
நீங்கள் யுத்தம் செய்யாமலிருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் என்று தேவன் சொல்லுகிறார்; தேசங்களுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
11 יְהוָ֣ה யெகோவா צְבָא֣וֹת சேனைகளின் עִמָּ֑נוּ எங்களோடு מִשְׂגָּֽב־ உயர்ந்த–அரண் לָ֝נוּ எங்களுக்கு אֱלֹהֵ֖י தேவன்– יַעֲקֹ֣ב யாகோபின் סֶֽלָה׃ செலா
சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் (சேலா).