1 מִזְמ֗וֹר சங்கீதம் לְאָ֫סָ֥ף ஆசாப்பின் אֱֽלֹהִ֡ים தேவனே בָּ֤אוּ வந்தார்கள் גוֹיִ֨ם ׀ ஜாதிகள் בְּֽנַחֲלָתֶ֗ךָ உமது–சுதந்திரத்திற்குள் טִ֭מְּאוּ தீட்டுப்படுத்தினார்கள் אֶת־ – הֵיכַ֣ל ஆலயத்தை קָדְשֶׁ֑ךָ உமது–பரிசுத்தத்தின் שָׂ֖מוּ வைத்தார்கள் אֶת־ – יְרוּשָׁלִַ֣ם எருசலேமை לְעִיִּֽים׃ இடிபாடுகளாக
ஆசாபின் துதிப் பாடல். தேவனே, அன்னிய தேசத்தார்கள் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.
2 נָֽתְנ֡וּ கொடுத்தார்கள் אֶת־ – נִבְלַ֬ת பிணத்தை עֲבָדֶ֗יךָ உமது–ஊழியர்களின் מַ֭אֲכָל உணவாக לְע֣וֹף பறவைகளுக்கு הַשָּׁמָ֑יִם வானத்தின் בְּשַׂ֥ר மாமிசத்தை חֲ֝סִידֶ֗יךָ உமது–பக்தர்களின் לְחַיְתוֹ־ மிருகங்களுக்கு אָֽרֶץ׃ பூமியின்
உமது ஊழியக்காரர்களின் பிரேதங்களை வானத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் சரீரத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.
3 שָׁפְכ֬וּ சிந்தினார்கள் דָמָ֨ם ׀ அவர்கள்–இரத்தத்தை כַּמַּ֗יִם தண்ணீரைப்–போல סְֽבִ֘יב֤וֹת சுற்றிலும் יְֽרוּשָׁלִָ֗ם எருசலேமின் וְאֵ֣ין இல்லை קוֹבֵֽר׃ அடக்கம்–செய்பவர்
எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்செய்பவருமில்லை.
4 הָיִ֣ינוּ ஆனோம் חֶ֭רְפָּה நிந்தையாக לִשְׁכֵנֵ֑ינוּ நம்–அயலாருக்கு לַ֥עַג பரிகாசமாகவும் וָ֝קֶ֗לֶס அவமானமாகவும் לִסְבִיבוֹתֵֽינוּ׃ நம்–சுற்றியிருப்போருக்கு
எங்களுடைய அயலாருக்கு நிந்தையும், எங்களுடைய சுற்றுப்புறத்தாருக்கு இகழ்ச்சியும், நகைப்புமானோம்.
5 עַד־ எவ்வளவு–காலம் מָ֣ה எவ்வளவு יְ֭הוָה யெகோவா תֶּאֱנַ֣ף கோபப்படுவீர் לָנֶ֑צַח என்றென்றைக்கும் תִּבְעַ֥ר எரியும் כְּמוֹ־ நெருப்பைப்–போல אֵ֝֗שׁ — קִנְאָתֶֽךָ׃ உமது–வைராக்கியம்
எதுவரைக்கும் யெகோவாவே! நீர் என்றைக்கும் கோபமாக இருப்பீரோ? உம்முடைய எரிச்சல் நெருப்பைப்போல் எரியுமோ?
6 שְׁפֹ֤ךְ ஊற்றும் חֲמָתְךָ֨ உமது–கோபத்தை אֶֽל־ – הַגּוֹיִם֮ ஜாதிகள்–மேல் אֲשֶׁ֪ר அவர்கள் לֹא־ அறியாத יְדָ֫ע֥וּךָ உம்மை וְעַ֥ל –மேல் מַמְלָכ֑וֹת ராஜ்யங்கள் אֲשֶׁ֥ר அவைகள் בְּ֝שִׁמְךָ֗ உமது–நாமத்தை לֹ֣א கூப்பிடாத קָרָֽאוּ׃ கூப்பிடாத
உம்மை அறியாத தேசங்கள் மேலும், உமது பெயரை தொழுதுகொள்ளாத ராஜ்ஜியங்கள் மேலும், உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும்.
7 כִּ֭י ஏனெனில் אָכַ֣ל விழுங்கினார்கள் אֶֽת־ – יַעֲקֹ֑ב யாக்கோபை וְֽאֶת־ – נָוֵ֥הוּ அவனுடைய–வாசஸ்தலத்தை הֵשַֽׁמּוּ׃ அழித்தார்கள்
அவர்கள் யாக்கோபை அழித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.
8 אַֽל־ நினைக்காதேயும் תִּזְכָּר־ நினைக்காதேயும் לָנוּ֮ நமக்கு עֲוֺנֹ֪ת அக்கிரமங்களை רִאשֹׁ֫נִ֥ים முந்தைய מַ֭הֵר விரைவாக יְקַדְּמ֣וּנוּ எதிர்கொள்ளட்டும் רַחֲמֶ֑יךָ உமது–இரக்கங்கள் כִּ֖י ஏனெனில் דַלּ֣וֹנוּ தாழ்ந்தோம் מְאֹֽד׃ மிகவும்
முன்னோர்களுடைய அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாமலிரும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாக எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.
9 עָזְרֵ֤נוּ ׀ உதவியும் אֱלֹ֘הֵ֤י தேவனே יִשְׁעֵ֗נוּ நம்–இரட்சிப்பின் עַל־ – דְּבַ֥ר விஷயத்தை כְּבֽוֹד־ மகிமையின் שְׁמֶ֑ךָ உமது–நாமத்தின் וְהַצִּילֵ֥נוּ விடுவியும் וְכַפֵּ֥ר மன்னியும் עַל־ – חַ֝טֹּאתֵ֗ינוּ நம்–பாவங்களை לְמַ֣עַן நிமித்தமாக שְׁמֶֽךָ׃ உமது–நாமத்தின்
எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது பெயரின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்து, உமது பெயருக்காக எங்களை விடுவித்து, எங்களுடைய பாவங்களை மன்னியும்.
10 לָ֤מָּה ׀ ஏன் יֹאמְר֣וּ சொல்லட்டும் הַגּוֹיִם֮ ஜாதிகள் אַיֵּ֪ה எங்கே אֱֽלֹהֵ֫יהֶ֥ם அவர்கள்–தேவன் יִוָּדַ֣ע அறியப்படட்டும் [בגיים] — (בַּגּוֹיִ֣ם) ஜாதிகளிடையே לְעֵינֵ֑ינוּ நம்–கண்களுக்கு–முன்பாக נִ֝קְמַ֗ת பழிவாங்குதல் דַּֽם־ இரத்தத்தின் עֲבָדֶ֥יךָ உமது–ஊழியர்களின் הַשָּׁפֽוּךְ׃ சிந்தப்பட்ட
அவர்களுடைய தேவன் எங்கே என்று அன்னியதேசத்தார் சொல்வானேன்? உமது ஊழியக்காரர்களுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் பழிவாங்குதல் தேசங்களுக்குள்ளே எங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும்.
11 תָּ֤ב֣וֹא வரட்டும் לְפָנֶיךָ֮ உமது–முன்பாக אֶנְקַ֪ת புலம்பல் אָ֫סִ֥יר கைதியின் כְּגֹ֥דֶל பெருமையின்–படி זְרוֹעֲךָ֑ உமது–புயத்தின் ה֝וֹתֵ֗ר விடுவியும் בְּנֵ֣י பிள்ளைகளை תְמוּתָֽה׃ மரணத்தின்
கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது கரத்தினால் உயிரோடு காத்தருளும்.
12 וְהָ֘שֵׁ֤ב திரும்பக்–கொடும் לִשְׁכֵנֵ֣ינוּ நம்–அயலாருக்கு שִׁ֭בְעָתַיִם ஏழு–மடங்காக אֶל־ – חֵיקָ֑ם அவர்கள்–மடியிலே חֶרְפָּ֘תָ֤ם அவர்கள்–நிந்தையை אֲשֶׁ֖ר அவர்கள் חֵרְפ֣וּךָ நிந்தித்தார்கள் אֲדֹנָֽי׃ ஆண்டவரே
ஆண்டவரே, எங்களுடைய அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழு மடங்காக அவர்களுடைய மடியிலே திரும்பச்செய்யும்.
13 וַאֲנַ֤חְנוּ நாங்கள் עַמְּךָ֨ ׀ உமது–மக்கள் וְצֹ֥אן ஆடுகள் מַרְעִיתֶךָ֮ உமது–மேய்ச்சலின் נ֤וֹדֶ֥ה நன்றி–செலுத்துவோம் לְּךָ֗ உமக்கு לְע֫וֹלָ֥ם என்றென்றைக்கும் לְדֹ֥ר தலைமுறை–தலைமுறையாக וָדֹ֑ר — נְ֝סַפֵּ֗ר சொல்லுவோம் תְּהִלָּתֶֽךָ׃ உமது–புகழை
அப்பொழுது, உம்முடைய மக்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.