1 שִׁ֥יר பாடல் מִזְמ֗וֹר சங்கீதம் לִבְנֵ֫י கோராகுடைய–பிள்ளைகளின் קֹ֥רַח கோராகுடைய לַמְנַצֵּ֣חַ இசைத்–தலைவனுக்கு עַל־ – מָחֲלַ֣ת நோய்–மேல் לְעַנּ֑וֹת தாழ்த்தும்படி מַ֝שְׂכִּ֗יל போதனை לְהֵימָ֥ן ஏமானின் הָאֶזְרָחִֽי׃ எச்ராகியனின் יְ֭הוָה யெகோவா אֱלֹהֵ֣י தேவனே יְשׁוּעָתִ֑י என்–இரட்சிப்பின் יוֹם־ நாளில் צָעַ֖קְתִּי கதறினேன் בַלַּ֣יְלָה இரவில் נֶגְדֶּֽךָ׃ உமக்கு–முன்பாக
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல். என்னுடைய இரட்சிப்பின் தேவனாகிய யெகோவாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2 תָּב֣וֹא வரட்டும் לְ֭פָנֶיךָ உமது–முன்பாக תְּפִלָּתִ֑י என்–ஜெபம் הַטֵּֽה־ சாய்யும் אָ֝זְנְךָ֗ உமது–காதை לְרִנָּתִֽי׃ என்–கதறலுக்கு
என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என்னுடைய கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
3 כִּֽי־ ஏனெனில் שָֽׂבְעָ֣ה நிறைந்தது בְרָע֣וֹת தீமைகளால் נַפְשִׁ֑י என்–ஆத்துமா וְחַיַּ֗י என்–வாழ்க்கை לִשְׁא֥וֹל பாதாளத்திற்கு הִגִּֽיעוּ׃ நெருங்கிறது
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது.
4 נֶ֭חְשַׁבְתִּי எண்ணப்பட்டேன் עִם־ – י֣וֹרְדֵי இறங்குகிறவர்களோடு ב֑וֹר குழியின் הָ֝יִ֗יתִי ஆனேன் כְּגֶ֣בֶר மனிதனைப்–போல אֵֽין־ இல்லாத אֱיָֽל׃ வல்லமையின்
நான் குழியில் இறங்குகிறவர்களோடு நினைக்கப்பட்டு, பெலனற்ற மனிதனைப்போல ஆனேன்.
5 בַּמֵּתִ֗ים சத்தவர்களில் חָ֫פְשִׁ֥י விடுதலையாய் כְּמ֤וֹ –போல חֲלָלִ֨ים ׀ கொல்லப்பட்டவர்களின் שֹׁ֥כְבֵי கிடக்கிறவர்கள் קֶ֗בֶר கல்லறையின் אֲשֶׁ֤ר அவர்களை לֹ֣א நினைக்கவில்லை זְכַרְתָּ֣ם நினைக்கவில்லை ע֑וֹד இனிமேல் וְ֝הֵ֗מָּה அவர்கள் מִיָּדְךָ֥ உமது–கரத்திலிருந்து נִגְזָֽרוּ׃ வெட்டப்பட்டார்கள்
மரித்தவர்களில் ஒருவனைப்போல் தள்ளப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுக்கப்பட்டுபோய்க் கல்லறைகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன்.
6 שַׁ֭תַּנִי வைத்தீர் בְּב֣וֹר குழியில் תַּחְתִּיּ֑וֹת ஆழமான בְּ֝מַחֲשַׁכִּ֗ים இருளிடங்களில் בִּמְצֹלֽוֹת׃ ஆழங்களில்
என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.
7 עָ֭לַי என்–மேல் סָמְכָ֣ה சாய்ந்தது חֲמָתֶ֑ךָ உமது–கோபம் וְכָל־ எல்லா מִ֝שְׁבָּרֶ֗יךָ உமது–அலைகளால் עִנִּ֥יתָ வாதித்தீர் סֶּֽלָה׃ செலா
உம்முடைய கோபம் என்னை அமிழ்த்துகிறது; உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா)
8 הִרְחַ֥קְתָּ தூரமாக்கினீர் מְיֻדָּעַ֗י என்–அறிமுகர்களை מִ֫מֶּ֥נִּי என்னிடமிருந்து שַׁתַּ֣נִי வைத்தீர் תוֹעֵב֣וֹת அருவருப்பாக לָ֑מוֹ அவர்களுக்கு כָּ֝לֻ֗א அடைக்கப்பட்டவனாய் וְלֹ֣א புறப்படாமல் אֵצֵֽא׃ புறப்படாமல்
எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; நான் வெளியேற முடியாதபடி அடைபட்டிருக்கிறேன்.
9 עֵינִ֥י என்–கண் דָאֲבָ֗ה தளர்ந்தது מִנִּ֫י –இலிருந்து עֹ֥נִי துயரத்தினால் קְרָאתִ֣יךָ கூப்பிட்டேன் יְהוָ֣ה யெகோவா בְּכָל־ எல்லா י֑וֹם நாளும் שִׁטַּ֖חְתִּי விரித்தேன் אֵלֶ֣יךָ உம்மிடம் כַפָּֽי׃ என்–கரங்களை
துக்கத்தினால் என்னுடைய கண் தொய்ந்துபோனது; யெகோவாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என்னுடைய கைகளை விரிக்கிறேன்.
10 הֲלַמֵּתִ֥ים சத்தவர்களுக்கா תַּעֲשֶׂה־ செய்வீரா פֶּ֑לֶא அதிசயத்தை אִם־ அல்லது רְ֝פָאִ֗ים ஆவிகள் יָק֤וּמוּ ׀ எழுவார்களா יוֹד֬וּךָ நன்றி–செலுத்துவார்களா סֶּֽלָה׃ செலா
இறந்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா)
11 הַיְסֻפַּ֣ר அறிவிக்கப்படுமா בַּקֶּ֣בֶר கல்லறையில் חַסְדֶּ֑ךָ உமது–கிருபை אֱ֝מֽוּנָתְךָ֗ உமது–உண்மை בָּאֲבַדּֽוֹן׃ அழிவில்
கல்லறைக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
12 הֲיִוָּדַ֣ע அறியப்படுமா בַּחֹ֣שֶׁךְ இருளில் פִּלְאֶ֑ךָ உமது–அதிசயம் וְ֝צִדְקָתְךָ֗ உமது–நீதி בְּאֶ֣רֶץ நாட்டில் נְשִׁיָּֽה׃ மறதியின்
இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?
13 וַאֲנִ֤י ׀ நானோ אֵלֶ֣יךָ உம்மிடம் יְהוָ֣ה யெகோவா שִׁוַּ֑עְתִּי கதறினேன் וּ֝בַבֹּ֗קֶר காலையில் תְּֽפִלָּתִ֥י என்–ஜெபம் תְקַדְּמֶֽךָּ׃ உம்மை–எதிர்கொள்ளும்
நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.
14 לָמָ֣ה ஏன் יְ֭הוָה யெகோவா תִּזְנַ֣ח தள்ளுகிறீர் נַפְשִׁ֑י என்–ஆத்துமாவை תַּסְתִּ֖יר மறைக்கிறீர் פָּנֶ֣יךָ உமது–முகத்தை מִמֶּֽנִּי׃ என்னிடமிருந்து
யெகோவாவே, ஏன் என்னுடைய ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
15 עָ֘נִ֤י ஏழையும் אֲנִ֣י நான் וְגֹוֵ֣עַ சாகுகிறவன் מִנֹּ֑עַר இளமையிலிருந்து נָשָׂ֖אתִי சுமந்தேன் אֵמֶ֣יךָ உமது–பயங்களை אָפֽוּנָה׃ திகைகுழப்பேன்
சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.
16 עָ֭לַי என்–மேல் עָבְר֣וּ கடந்தன חֲרוֹנֶ֑יךָ உமது–கோபங்கள் בִּ֝עוּתֶ֗יךָ உமது–பயங்கரங்கள் צִמְּתוּתֻֽנִי׃ அழித்தன
உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடைய பயங்கரங்கள் என்னை அழிக்கிறது.
17 סַבּ֣וּנִי சூழ்ந்தன כַ֭מַּיִם தண்ணீரைப்–போல כָּל־ எல்லா הַיּ֑וֹם நாளும் הִקִּ֖יפוּ வளைத்தன עָלַ֣י என்–மேல் יָֽחַד׃ ஒன்றாக
அவைகள் நாள்தோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, ஒன்றாக என்னை வளைந்துகொள்ளுகிறது.
18 הִרְחַ֣קְתָּ தூரமாக்கினீர் מִ֭מֶּנִּי என்னிடமிருந்து אֹהֵ֣ב நேசிக்கிறவனை וָרֵ֑עַ தோழனையும் מְֽיֻדָּעַ֥י என்–அறிமுகர்கள் מַחְשָֽׁךְ׃ இருள்
நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.