1 תְּפִלָּה֮ ஜெபம் לְמֹשֶׁ֪ה மோசேக்கு אִֽישׁ־ மனிதனாகிய– הָאֱלֹ֫הִ֥ים தேவனின் אֲֽדֹנָ֗י ஆண்டவரே מָע֣וֹן அடைக்கலம் אַ֭תָּה நீர் הָיִ֥יתָ இருந்தீர் לָּ֗נוּ எங்களுக்கு בְּדֹ֣ר தலைமுறை– וָדֹֽר׃ தலைமுறையாக
தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம். ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
2 בְּטֶ֤רֶם ׀ முன்னே הָ֘רִ֤ים மலைகள் יֻלָּ֗דוּ பிறக்கும் וַתְּח֣וֹלֵֽל உருவாக்கினீர் אֶ֣רֶץ பூமியை וְתֵבֵ֑ל உலகத்தையும் וּֽמֵעוֹלָ֥ם நித்தியத்திலிருந்து עַד־ நித்தியம்– ע֝וֹלָ֗ם நித்தியம்வரை אַתָּ֥ה நீர் אֵֽל׃ தேவன்
மலைகள் தோன்றுமுன்பும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர்.
3 תָּשֵׁ֣ב திருப்புகிறீர் אֱ֭נוֹשׁ மனிதனை עַד־ நொறுக்கம்– דַּכָּ֑א நொறுக்கமட்டும் וַ֝תֹּ֗אמֶר சொல்கிறீர் שׁ֣וּבוּ திரும்புங்கள் בְנֵי־ ஆதாமின்– אָדָֽם׃ புத்திரர்களே
நீர் மனிதர்களைத் தூளாக்கி, மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர்.
4 כִּ֤י ஏனெனில் אֶ֪לֶף ஆயிரம் שָׁנִ֡ים ஆண்டுகள் בְּֽעֵינֶ֗יךָ உமது–கண்களில் כְּי֣וֹם நேற்றைய–நாளைப்போல் אֶ֭תְמוֹל நேற்று כִּ֣י கடந்துபோகும் יַעֲבֹ֑ר கடந்துபோகும் וְאַשְׁמוּרָ֥ה இரவின்–ஜாமம்போல் בַלָּֽיְלָה׃ இரவில்
உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது.
5 זְ֭רַמְתָּם அடித்துக்கொண்டுபோகிறீர் שֵׁנָ֣ה தூக்கத்தைப்போல் יִהְי֑וּ ஆவார்கள் בַּ֝בֹּ֗קֶר காலையில் כֶּחָצִ֥יר புல்லைப்போல் יַחֲלֹֽף׃ மாறிப்போகும்
அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
6 בַּ֭בֹּקֶר காலையில் יָצִ֣יץ பூக்கும் וְחָלָ֑ף வளரும் לָ֝עֶ֗רֶב மாலையில் יְמוֹלֵ֥ל வாடிப்போகும் וְיָבֵֽשׁ׃ உலர்ந்துபோகும்
அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுக்கப்பட்டு உலர்ந்துபோகும்.
7 כִּֽי־ ஏனெனில்– כָלִ֥ינוּ அழிந்தோம் בְאַפֶּ֑ךָ உமது–கோபத்தினால் וּֽבַחֲמָתְךָ֥ உமது–உக்கிரத்தினால் נִבְהָֽלְנוּ׃ கலங்கினோம்
நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம்.
8 [שת] வைத்தீர் (שַׁתָּ֣ה) வைத்தீர் עֲוֺנֹתֵ֣ינוּ எங்கள்–அக்கிரமங்களை לְנֶגְדֶּ֑ךָ உமக்கு–முன்பாக עֲ֝לֻמֵ֗נוּ எங்கள்–இரகசியப்–பாவங்களை לִמְא֥וֹר உமது–முகத்தின்–ஒளியில் פָּנֶֽיךָ׃ உமது–முகம்
எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்களுடைய மறைவான பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
9 כִּ֣י ஏனெனில் כָל־ எல்லா– יָ֭מֵינוּ எங்கள்–நாட்கள் פָּנ֣וּ கடந்துபோயின בְעֶבְרָתֶ֑ךָ உமது–கோபத்தில் כִּלִּ֖ינוּ முடித்தோம் שָׁנֵ֣ינוּ எங்கள்–ஆண்டுகளை כְמוֹ־ ஒரு–பெருமூச்சைப்போல்– הֶֽגֶה׃ பெருமூச்சு
எங்களுடைய நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருடங்களைக் கழித்துப்போட்டோம்.
10 יְמֵֽי־ நாட்கள்– שְׁנוֹתֵ֨ינוּ எங்கள்–ஆயுளின் בָהֶ֥ם அவைகளில் שִׁבְעִ֪ים எழுபது שָׁנָ֡ה ஆண்டுகள் וְאִ֤ם அல்லது בִּגְבוּרֹ֨ת ׀ பலமிருந்தால்– שְׁמ֘וֹנִ֤ים எண்பது שָׁנָ֗ה ஆண்டுகள் וְ֭רָהְבָּם அவைகளின்–பெருமையும் עָמָ֣ל வருத்தம் וָאָ֑וֶן துக்கமே כִּי־ ஏனெனில்– גָ֥ז விரைவாய் חִ֝֗ישׁ கடந்துபோகும் וַנָּעֻֽפָה׃ பறந்துபோவோம்
எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம்.
11 מִֽי־ யார்– י֭וֹדֵעַ அறிவான் עֹ֣ז வல்லமையை אַפֶּ֑ךָ உமது–கோபத்தின் וּ֝כְיִרְאָתְךָ֗ உமது–பயத்திற்கேற்ப עֶבְרָתֶֽךָ׃ உமது–உக்கிரத்தை
உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படக்கூடிய விதமாக உமது கடுங்கோபத்தையும் அறிந்துகொள்கிறவன் யார்?
12 לִמְנ֣וֹת எண்ணக்– יָ֭מֵינוּ எங்கள்–நாட்களை כֵּ֣ן அவ்வாறு הוֹדַ֑ע கற்பியும் וְ֝נָבִ֗א பெறுவோம் לְבַ֣ב இருதயத்தை חָכְמָֽה׃ ஞானமுள்ள
நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
13 שׁוּבָ֣ה திரும்பும் יְ֭הוָה யெகோவாவே עַד־ எதுவரை– מָתָ֑י எதுவரை וְ֝הִנָּחֵ֗ם இரக்கம்–காட்டும் עַל־ உமது– עֲבָדֶֽיךָ׃ ஊழியக்காரர்–மேல்
யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்? உமது அடியார்களுக்காகப் பரிதபியும்.
14 שַׂבְּעֵ֣נוּ திருப்தியாக்கும் בַבֹּ֣קֶר காலையில் חַסְדֶּ֑ךָ உமது–கிருபையினால் וּֽנְרַנְּנָ֥ה ஆனந்தமாய்–பாடுவோம் וְ֝נִשְׂמְחָ֗ה மகிழ்ச்சியடைவோம் בְּכָל־ எல்லா– יָמֵֽינוּ׃ எங்கள்–நாட்களிலும்
நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
15 שַׂ֭מְּחֵנוּ மகிழ்ச்சியாக்கும் כִּימ֣וֹת நாட்களுக்கேற்ப עִנִּיתָ֑נוּ சிறுமைப்படுத்தின שְׁ֝נ֗וֹת ஆண்டுகளுக்கேற்ப רָאִ֥ינוּ கண்ட רָעָֽה׃ தீமை
தேவனே நீர் எங்களை சிறுமைப்படுத்திய நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருடங்களுக்கும் இணையாக எங்களை மகிழ்ச்சியாக்கும்.
16 יֵרָאֶ֣ה தெரிவிக்கப்படட்டும் אֶל־ உமது– עֲבָדֶ֣יךָ ஊழியக்காரர்களுக்கு פָעֳלֶ֑ךָ உமது–செயல் וַ֝הֲדָרְךָ֗ உமது–மகத்துவம் עַל־ அவர்களுடைய– בְּנֵיהֶֽם׃ புத்திரர்–மேல்
உமது செயல்கள் உமது ஊழியக்காரர்களுக்கும், உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.
17 וִיהִ֤י ׀ இருப்பதாக נֹ֤עַם தயவு אֲדֹנָ֥י ஆண்டவராகிய אֱלֹהֵ֗ינוּ எங்கள்–தேவனின் עָ֫לֵ֥ינוּ எங்கள்–மேல் וּמַעֲשֵׂ֣ה செயல் יָ֭דֵינוּ எங்கள்–கைகளின் כּוֹנְנָ֥ה நிலைநிறுத்தும் עָלֵ֑ינוּ எங்கள்–மேல் וּֽמַעֲשֵׂ֥ה செயலை יָ֝דֵ֗ינוּ எங்கள்–கைகளின் כּוֹנְנֵֽהוּ׃ நிலைநிறுத்தும்
எங்களுடைய தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.