1 מִזְמ֡וֹר கீர்த்தனை שִׁ֤ירוּ பாடுங்கள் לַֽיהוָ֨ה ׀ யெகோவாவுக்கு שִׁ֣יר பாடலை חָ֭דָשׁ புதிய כִּֽי־ ஏனெனில்– נִפְלָא֣וֹת அதிசயங்களை עָשָׂ֑ה செய்தார் הוֹשִֽׁיעָה־ இரட்சித்தது– לּ֥וֹ அவருக்கு יְ֝מִינ֗וֹ அவர்–வலதுகரமும் וּזְר֥וֹעַ அவர்–பரிசுத்த–புயமும் קָדְשֽׁוֹ׃ அவர்–பரிசுத்தத்தின்
பாடல். யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது.
2 הוֹדִ֣יעַ அறிவித்தார் יְ֭הוָה யெகோவா יְשׁוּעָת֑וֹ தன்–இரட்சிப்பை לְעֵינֵ֥י ஜாதிகளின்–கண்களுக்கு הַ֝גּוֹיִ֗ם ஜாதிகளின் גִּלָּ֥ה வெளிப்படுத்தினார் צִדְקָתֽוֹ׃ தன்–நீதியை
யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி, தமது நீதியை தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கச்செய்தார்.
3 זָ֘כַ֤ר நினைவுகூர்ந்தார் חַסְדּ֨וֹ ׀ தன்–கிருபையை וֶֽאֱֽמוּנָתוֹ֮ தன்–உண்மையையும் לְבֵ֪ית இஸ்ரவேலின்–வீட்டாருக்கு יִשְׂרָ֫אֵ֥ל இஸ்ரவேலின் רָא֥וּ கண்டனர்கள் כָל־ எல்லா– אַפְסֵי־ அந்தங்கள்– אָ֑רֶץ பூமியை אֵ֝֗ת இரட்சிப்பை– יְשׁוּעַ֥ת இரட்சிப்பை אֱלֹהֵֽינוּ׃ எங்கள்–தேவனின்
அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய வெற்றியைக் கண்டது.
4 הָרִ֣יעוּ ஆர்ப்பரியுங்கள் לַֽ֭יהוָה யெகோவாவுக்கு כָּל־ எல்லா– הָאָ֑רֶץ பூமியே פִּצְח֖וּ மகிழ்ச்சியோடு–சிரியுங்கள் וְרַנְּנ֣וּ ஆனந்தமாய்–பாடுங்கள் וְזַמֵּֽרוּ׃ பாடுங்கள்
பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
5 זַמְּר֣וּ பாடுங்கள் לַיהוָ֣ה யெகோவாவுக்கு בְּכִנּ֑וֹר சந்தூரின்–மேல் בְּ֝כִנּ֗וֹר சந்தூரின்–மேல் וְק֣וֹל குரலும் זִמְרָֽה׃ பாடலின்
சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள், சுரமண்டலத்தாலும் பாடலின் சத்தத்தாலும் அவரைப் புகழ்ந்துபாடுங்கள்.
6 בַּ֭חֲצֹ֣צְרוֹת எக்காளங்களினால் וְק֣וֹל குரலும் שׁוֹפָ֑ר எக்காளத்தின் הָ֝רִ֗יעוּ ஆர்ப்பரியுங்கள் לִפְנֵ֤י ׀ முன்பாக הַמֶּ֬לֶךְ ராஜாவாகிய יְהוָֽה׃ யெகோவாவின்
யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்.
7 יִרְעַ֣ם இடிமுழங்கும் הַ֭יָּם கடல் וּמְלֹא֑וֹ அதன்–நிறைவும் תֵּ֝בֵ֗ל உலகம் וְיֹ֣שְׁבֵי அதில்–குடியிருப்பவர்கள் בָֽהּ׃ அதில்
கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக.
8 נְהָר֥וֹת நதிகள் יִמְחֲאוּ־ கைதட்டும்– כָ֑ף கையை יַ֝֗חַד ஒன்றாக הָרִ֥ים மலைகள் יְרַנֵּֽנוּ׃ ஆனந்தமாய்–பாடும்
யெகோவாவுக்கு முன்பாக ஆறுகள் கைதட்டி, மலைகள் ஒன்றாக கெம்பீரித்துப் பாடட்டும்.
9 לִֽפְֽנֵי־ முன்பாக– יְהוָ֗ה யெகோவாவின் כִּ֥י ஏனெனில் בָא֮ வருகிறார் לִשְׁפֹּ֪ט நியாயம்–தீர்க்க הָ֫אָ֥רֶץ பூமியை יִשְׁפֹּֽט־ நியாயம்–தீர்ப்பார் תֵּבֵ֥ל உலகத்தை בְּצֶ֑דֶק நீதியினால் וְ֝עַמִּ֗ים ஜனங்களையும் בְּמֵישָׁרִֽים׃ நேர்மையினால்
அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; உலகத்தை நீதியோடும் மக்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.