1 שִׁ֗יר பாடல் הַֽמַּ֫עֲל֥וֹת –ஆரோகணப்–படிகளின் בְּשׁ֣וּב –திருப்பும்போது יְ֭הוָה யெகோவா אֶת־ –ஐ שִׁיבַ֣ת சிறையிருப்பை– צִיּ֑וֹן சீயோனின் הָ֝יִ֗ינוּ இருந்தோம் כְּחֹלְמִֽים׃ கனவுகாண்பவர்களைப்–போல
ஆரோகண பாடல். சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
2 אָ֤ז அப்பொழுது יִמָּלֵ֪א நிரம்பும் שְׂח֡וֹק சிரிப்பினால் פִּינוּ֮ நம்–வாய் וּלְשׁוֹנֵ֪נוּ மற்றும்–நம்–நாவில் רִ֫נָּ֥ה களிப்பாட்டினால் אָ֭ז அப்பொழுது יֹאמְר֣וּ சொல்வார்கள் בַגּוֹיִ֑ם –தேசங்களிடையே הִגְדִּ֥יל பெரிதாய்ச்செய்தார் יְ֝הוָ֗ה யெகோவா לַעֲשׂ֥וֹת செய்ய– עִם־ –கூட אֵֽלֶּה׃ இவர்களுக்கு
அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
3 הִגְדִּ֣יל பெரிதாய்ச்செய்தார் יְ֭הוָה யெகோவா לַעֲשׂ֥וֹת செய்ய– עִמָּ֗נוּ நம்மோடு הָיִ֥ינוּ இருந்தோம் שְׂמֵחִֽים׃ மகிழ்ச்சியுள்ளவர்களாக
யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
4 שׁוּבָ֣ה திருப்பியருளும்– יְ֭הוָה யெகோவா אֶת־ –ஐ [שבותנו] நம்–சிறையிருப்பை (שְׁבִיתֵ֑נוּ) நம்–சிறையிருப்பை כַּאֲפִיקִ֥ים நீரோடைகளைப்–போல בַּנֶּֽגֶב׃ –தென்–நாட்டில்
யெகோவாவே, தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.
5 הַזֹּרְעִ֥ים –விதைக்கிறவர்கள் בְּדִמְעָ֗ה –கண்ணீரோடு בְּרִנָּ֥ה –களிப்பாட்டோடு יִקְצֹֽרוּ׃ அறுப்பார்கள்
கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.
6 הָ֘ל֤וֹךְ போதல் יֵלֵ֨ךְ ׀ போவான் וּבָכֹה֮ மற்றும்–அழுதல் נֹשֵׂ֪א சுமக்கிறவன் מֶֽשֶׁךְ־ வித்தின்– הַ֫זָּ֥רַע –விதையை בֹּֽ֬א־ வருதல்– יָב֥וֹא வருவான் בְרִנָּ֑ה –களிப்பாட்டோடு נֹ֝שֵׂ֗א சுமக்கிறவன் אֲלֻמֹּתָֽיו׃ தன்–அரிகளை
அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.