1 לְדָוִ֨ד ׀ –தாவீதின் בָּ֘ר֤וּךְ ஸ்தோத்திரிக்கப்படுவாராக יְהוָ֨ה ׀ யெகோவா צוּרִ֗י என்–கன்மலை הַֽמְלַמֵּ֣ד பயிற்சிக்கிறவர் יָדַ֣י என்–கரங்களை לַקְרָ֑ב –போருக்கு אֶ֝צְבְּעוֹתַ֗י என்–விரல்களை לַמִּלְחָמָֽה׃ –யுத்தத்துக்கு
தாவீதின் பாடல். என்னுடைய கைகளைப் போருக்கும் என்னுடைய விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என்னுடைய கன்மலையாகிய யெகோவாவுக்கு நன்றி.
2 חַסְדִּ֥י என்–கிருபை וּמְצוּדָתִי֮ என்–கோட்டையும் מִשְׂגַּבִּ֪י என்–உயர்ந்தச்சிகரும் וּֽמְפַלְטִ֫י என்–விடுவிப்பவரும் לִ֥י எனக்கு מָ֭גִנִּי என்–கேடகமும் וּב֣וֹ அவரிடம் חָסִ֑יתִי அடைக்கலம்புந்தேன் הָרוֹדֵ֖ד அடக்கிவைக்கிறவர் עַמִּ֣י என்–ஜனத்தை תַחְתָּֽי׃ எனக்குக்கீழ்
அவர் என்னுடைய தயாபரரும், என்னுடைய கோட்டையும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என்னுடைய கேடகமும், நான் நம்பினவரும், என்னுடைய மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாக இருக்கிறார்.
3 יְֽהוָ֗ה யெகோவாவே מָה־ என்ன אָ֭דָם மனிதன் וַתֵּדָעֵ֑הוּ அறிந்தீர்–அவனை בֶּן־ மகன் אֱ֝נ֗וֹשׁ மனிதனின் וַֽתְּחַשְּׁבֵֽהוּ׃ நினைத்தீர்–அவனை
யெகோவாவே, மனிதனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
4 אָ֭דָם மனிதன் לַהֶ֣בֶל –மாயைக்கு דָּמָ֑ה ஒப்பானவன் יָ֝מָ֗יו அவன்–நாட்கள் כְּצֵ֣ל –நிழலைப்போல் עוֹבֵֽר׃ கடந்துபோகிறவன்
மனிதன் மாயைக்கு ஒப்பாக இருக்கிறான்; அவனுடைய நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.
5 יְ֭הוָה யெகோவாவே הַט־ சாயும் שָׁמֶ֣יךָ உம்–வானங்களை וְתֵרֵ֑ד இறங்குவீராக גַּ֖ע தொடுவீராக בֶּהָרִ֣ים –மலைகளில் וְֽיֶעֱשָֽׁנוּ׃ புகையும்
யெகோவாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, மலைகள் புகையும்படி அவைகளைத் தொடும்.
6 בְּר֣וֹק மின்னலிடுவீராக בָּ֭רָק மின்னலை וּתְפִיצֵ֑ם சிதறடிப்பீர்–அவர்களை שְׁלַ֥ח அனுப்புவீராக חִ֝צֶּ֗יךָ உம்–அம்புகளை וּתְהֻמֵּֽם׃ கலக்குவீராக–அவர்களை
மின்னல்களை வரவிட்டு எதிரிகளைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கச்செய்யும்.
7 שְׁלַ֥ח அனுப்புவீராக יָדֶ֗יךָ உம்–கரங்களை מִמָּ֫ר֥וֹם –உயரத்திலிருந்து פְּצֵ֣נִי விடுவிப்பீர்–என்னை וְ֭הַצִּילֵנִי விடுவிப்பீர்–என்னையும் מִמַּ֣יִם –தண்ணீர்களிடமிருந்து רַבִּ֑ים அநேகமான מִ֝יַּ֗ד –கரத்திலிருந்து בְּנֵ֣י பிள்ளைகளின் נֵכָֽר׃ அந்நிய
உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, பெருவெள்ளத்திற்கு என்னை விலக்கி இரட்சியும்.
8 אֲשֶׁ֣ר எவர்களின் פִּ֭יהֶם அவர்கள்–வாய் דִּבֶּר־ பேசினார் שָׁ֑וְא வீணை וִֽ֝ימִינָ֗ם அவர்கள்–வலதுகரமும் יְמִ֣ין வலதுகரம் שָֽׁקֶר׃ பொய்யின்
மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
9 אֱֽלֹהִ֗ים தேவே שִׁ֣יר பாடல் חָ֭דָשׁ புதிய אָשִׁ֣ירָה பாடுவேன் לָּ֑ךְ உமக்கு בְּנֵ֥בֶל –வீணையில் עָ֝שׂ֗וֹר பத்து–நாண் אֲזַמְּרָה־ பாடுவேன் לָּֽךְ׃ உமக்கு
யெகோவாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்து நரம்பு வீணையினாலும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
10 הַנּוֹתֵ֥ן கொடுக்கிறவர் תְּשׁוּעָ֗ה இரட்சிப்பை לַמְּלָ֫כִ֥ים –ராஜாக்களுக்கு הַ֭פּוֹצֶה விடுவிக்கிறவர் אֶת־ –ஐ דָּוִ֥ד தாவீதை עַבְדּ֗וֹ தம்–ஊழியனை מֵחֶ֥רֶב –தீய–வாளிலிருந்து רָעָֽה׃ தீய
நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, ஊழியனாகிய தாவீதைப் பொல்லாத வாளுக்குத் தப்புவிக்கிறவர்.
11 פְּצֵ֥נִי விடுவிப்பீர்–என்னை וְהַצִּילֵנִי֮ விடுவிப்பீர்–என்னையும் מִיַּ֪ד –கரத்திலிருந்து בְּֽנֵי־ பிள்ளைகளின் נֵ֫כָ֥ר அந்நிய אֲשֶׁ֣ר எவர்களின் פִּ֭יהֶם அவர்கள்–வாய் דִּבֶּר־ பேசினார் שָׁ֑וְא வீணை וִֽ֝ימִינָ֗ם அவர்கள்–வலதுகரமும் יְמִ֣ין வலதுகரம் שָֽׁקֶר׃ பொய்யின்
மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
12 אֲשֶׁ֤ר எவர்களின் בָּנֵ֨ינוּ ׀ நம்–பிள்ளைகள் כִּנְטִעִים֮ –நடுகைகளைப்போல் מְגֻדָּלִ֪ים வளர்க்கப்பட்ட בִּֽנְעוּרֵ֫יהֶ֥ם –அவர்கள்–இளமையில் בְּנוֹתֵ֥ינוּ நம்–மகளிர்கள் כְזָוִיֹּ֑ת –மூலைகளைப்போல் מְ֝חֻטָּב֗וֹת செதுக்கப்பட்ட תַּבְנִ֥ית வடிவின் הֵיכָֽל׃ அரண்மனையின்
அப்பொழுது எங்களுடைய மகன்கள் இளமையில் ஓங்கி வளருகிற மரக்கன்றுகளைப்போலவும், எங்களுடைய மகள்கள் சித்திரந்தீர்ந்த அரண்மனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள்.
13 מְזָוֵ֣ינוּ நம்–களஞ்சியங்கள் מְלֵאִים֮ நிறைந்த מְפִיקִ֥ים புறப்படப்பண்ணுகிற מִזַּ֗ן –வகையிலிருந்து אֶ֫ל־ –நோக்கி זַ֥ן வகை צֹאונֵ֣נוּ நம்–ஆடுமந்தைகள் מַ֭אֲלִיפוֹת ஆயிரக்கணக்கான מְרֻבָּב֗וֹת பதினாயிரக்கணக்கான בְּחוּצוֹתֵֽינוּ׃ –நம்–தெருக்களில்
எங்களுடைய களஞ்சியங்கள் எல்லாவித பொருட்களையும் கொடுக்கத்தக்கதாக நிரம்பியிருக்கும்; எங்களுடைய கிராமங்களில் எங்களுடைய ஆடுகள் ஆயிரமும் பத்தாயிரமாகப் பலுகும்.
14 אַלּוּפֵ֗ינוּ நம்–காளைகள் מְֽסֻבָּ֫לִ֥ים சுமக்கப்பட்ட אֵֽין־ இல்லை פֶּ֭רֶץ உடைப்பு וְאֵ֣ין இல்லை יוֹצֵ֑את புறப்படுகிறது וְאֵ֥ין இல்லை צְ֝וָחָ֗ה கதறல் בִּרְחֹבֹתֵֽינוּ׃ –நம்–தெருக்களில்
எங்களுடைய எருதுகள் பலத்தவைகளாக இருக்கும்; எதிரி உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இருக்காது; எங்களுடைய வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.
15 אַשְׁרֵ֣י பாக்கியமானது הָ֭עָם –ஜனம் שֶׁכָּ֣כָה இப்படியானது לּ֑וֹ அவனுக்கு אַֽשְׁרֵ֥י பாக்கியமானது הָ֝עָ֗ם –ஜனம் שֶׁיֲהוָ֥ה யெகோவாவே אֱלֹהָֽיו׃ அவன்–தேவனாக
இந்த வித ஆசீர்வாதத்தைப்பெற்ற மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; யெகோவாவை தெய்வமாகக் கொண்டிருக்கிற மக்கள் பாக்கியமுள்ளது.