1 וַיְהִ֡י –மற்றும்–இருந்தது בִּימֵ֣י –நாட்களில் אָ֠חָז ஆகாஸ் בֶּן־ –மகன்– יוֹתָ֨ם யோதாம் בֶּן־ –மகன்– עֻזִּיָּ֜הוּ உசியா מֶ֣לֶךְ –அரசன் יְהוּדָ֗ה யூதா עָלָ֣ה ஏறினான் רְצִ֣ין ரேத்சீன் מֶֽלֶךְ־ –அரசன்– אֲ֠רָם அராம் וּפֶ֨קַח –மற்றும்–பெக்கா בֶּן־ –மகன்– רְמַלְיָ֤הוּ ரெமல்யா מֶֽלֶךְ־ –அரசன்– יִשְׂרָאֵל֙ இஸ்ரவேல் יְר֣וּשָׁלִַ֔ם எருசலேம் לַמִּלְחָמָ֖ה –யுத்தத்திற்கு עָלֶ֑יהָ –அதற்கு–எதிராக וְלֹ֥א –மற்றும்–இல்லை יָכֹ֖ל முடிந்தது לְהִלָּחֵ֥ם –போரிட עָלֶֽיהָ׃ –அதற்கு–எதிராக
உசியாவின் மகனாகிய யோதாமின் மகன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் மகனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமின்மேல் போரிடவந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கமுடியாமல் போனது.
2 וַיֻּגַּ֗ד –மற்றும்–அறிவிக்கப்பட்டது לְבֵ֤ית –வீட்டுக்கு דָּוִד֙ தாவீது לֵאמֹ֔ר –என்று–சொல்ல נָ֥חָֽה தங்கியுள்ளது אֲרָ֖ם அராம் עַל־ –மீது– אֶפְרָ֑יִם எப்பிராயீம் וַיָּ֤נַע –மற்றும்–நடுங்கியது לְבָבוֹ֙ –இருதயம்–அவனுடைய וּלְבַ֣ב –மற்றும்–இருதயம் עַמּ֔וֹ –ஜனத்தின்–அவனுடைய כְּנ֥וֹעַ –நடுங்குவது–போல עֲצֵי־ –மரங்கள்– יַ֖עַר காடு מִפְּנֵי־ –முகத்திலிருந்து– רֽוּחַ׃ காற்று
சீரியர்கள் எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறார்களென்று தாவீதின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜாவின் இருதயமும் அவன் மக்களின் இருதயமும் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறது போல் அசைந்தது.
3 וַיֹּ֣אמֶר –மற்றும்–சொன்னார் יְהוָה֮ யெகோவா אֶֽל־ –நோக்கி– יְשַׁעְיָהוּ֒ ஏசாயா צֵא־ –போ– נָא֙ –தயவுசெய்து לִקְרַ֣את –சந்திக்க אָחָ֔ז ஆகாஸ் אַתָּ֕ה நீ וּשְׁאָ֖ר יָשׁ֣וּב –சேஷயாசூப் בְּנֶ֑ךָ –மகன்–உனது אֶל־ –நோக்கி– קְצֵ֗ה –முனை תְּעָלַת֙ –கால்வாய் הַבְּרֵכָ֣ה –குளம் הָעֶלְיוֹנָ֔ה –மேலான אֶל־ –நோக்கி– מְסִלַּ֖ת –நெடுஞ்சாலை שְׂדֵ֥ה –வயல் כוֹבֵֽס׃ வெளுப்பவன்
அப்பொழுது யெகோவா ஏசாயாவை நோக்கி: நீயும் உனது மகன் சேயார் யாசூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேல்குளத்து மதகின் கடைசிவரை ஆகாசுக்கு எதிர்கொண்டுபோய்,
4 וְאָמַרְתָּ֣ –மற்றும்–சொல் אֵ֠לָיו –அவனுக்கு הִשָּׁמֵ֨ר –எச்சரிக்கையாயிரு וְהַשְׁקֵ֜ט –மற்றும்–அமைதியாயிரு אַל־ –வேண்டாம்– תִּירָ֗א –பயப்படு וּלְבָבְךָ֙ –மற்றும்–இருதயம்–உனது אַל־ –வேண்டாம்– יֵרַ֔ךְ –மெலிந்துபோகட்டும் מִשְּׁנֵ֨י –இரண்டு–இலிருந்து זַנְב֧וֹת –வால்கள் הָאוּדִ֛ים –கொள்ளிகள் הָעֲשֵׁנִ֖ים –புகையும் הָאֵ֑לֶּה –இந்த בָּחֳרִי־ –கடுங்கோபத்தில்– אַ֛ף –கோபம் רְצִ֥ין ரேத்சீன் וַאֲרָ֖ם –மற்றும்–அராம் וּבֶן־ –மற்றும்–மகன்– רְמַלְיָֽהוּ׃ ரெமல்யா
நீ அவனை நோக்கி: சீரியர்கள் எப்பிராயீமோடும், ரெமலியாவின் மகனோடும் உனக்கு விரோதமாக தீய ஆலோசனைசெய்து,
5 יַ֗עַן –ஏனெனில் כִּֽי־ –அதாவது– יָעַ֥ץ ஆலோசனைசெய்தது עָלֶ֛יךָ –உனக்கு–எதிராக אֲרָ֖ם அராம் רָעָ֑ה தீமை אֶפְרַ֥יִם எப்பிராயீம் וּבֶן־ –மற்றும்–மகன்– רְמַלְיָ֖הוּ ரெமல்யா לֵאמֹֽר׃ –என்று–சொல்ல
நாம் யூதாவுக்கு விரோதமாகப்போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, அதற்குத் தபேயாலின் மகனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னார்கள்;
6 נַעֲלֶ֤ה ஏறுவோம் בִֽיהוּדָה֙ –யூதாவுக்கு–எதிராக וּנְקִיצֶ֔נָּה –மற்றும்–பயமுறுத்துவோம்–அதை וְנַבְקִעֶ֖נָּה –மற்றும்–பிளப்போம்–அதை אֵלֵ֑ינוּ –நமக்கு וְנַמְלִ֥יךְ –மற்றும்–அரசனாக–வைப்போம் מֶ֙לֶךְ֙ –அரசன் בְּתוֹכָ֔הּ –நடுவில்–அதன் אֵ֖ת –ஐ בֶּן־ –மகன்– טָֽבְאַֽל׃ தாபியேல் ס —
அதனால் நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார்; இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும்கொண்ட கடுங்கோபத்தினால் உன் இருதயம் துவளவேண்டாம்.
7 כֹּ֥ה –இவ்வாறு אָמַ֖ר சொன்னார் אֲדֹנָ֣י ஆண்டவர் יְהוִ֑ה யெகோவா לֹ֥א இல்லை תָק֖וּם நிலைக்கும் וְלֹ֥א –மற்றும்–இல்லை תִֽהְיֶֽה׃ நடக்கும்
யெகோவாவாகிய ஆண்டவர்: அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை;
8 כִּ֣י –ஏனெனில் רֹ֤אשׁ –தலை אֲרָם֙ அராம் דַּמֶּ֔שֶׂק தமஸ்கு וְרֹ֥אשׁ –மற்றும்–தலை דַּמֶּ֖שֶׂק தமஸ்கு רְצִ֑ין ரேத்சீன் וּבְע֗וֹד –மற்றும்–இன்னும் שִׁשִּׁ֤ים அறுபத்தைந்து וְחָמֵשׁ֙ –மற்றும்–ஐந்து שָׁנָ֔ה வருடங்கள் יֵחַ֥ת நொறுங்கும் אֶפְרַ֖יִם எப்பிராயீம் מֵעָֽם׃ –ஜனமாயிருப்பதிலிருந்து
சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன்; இன்னும் அறுபத்தைந்து வருடங்களிலே எப்பிராயீம் ஒரு மக்கள்கூட்டமாக இராதபடிக்கு நொறுங்குண்டுபோகும்.
9 וְרֹ֤אשׁ –மற்றும்–தலை אֶפְרַ֙יִם֙ எப்பிராயீம் שֹׁמְר֔וֹן சமாரியா וְרֹ֥אשׁ –மற்றும்–தலை שֹׁמְר֖וֹן சமாரியா בֶּן־ –மகன்– רְמַלְיָ֑הוּ ரெமல்யா אִ֚ם –ஆனால் לֹ֣א இல்லை תַאֲמִ֔ינוּ நம்புவீர்கள் כִּ֖י –ஏனெனில் לֹ֥א இல்லை תֵאָמֵֽנוּ׃ நிலைநிற்பீர்கள் ס —
எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசிக்காவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.
10 וַיּ֣וֹסֶף –மற்றும்–தொடர்ந்தார் יְהוָ֔ה யெகோவா דַּבֵּ֥ר –பேச אֶל־ –நோக்கி– אָחָ֖ז ஆகாஸ் לֵאמֹֽר׃ –என்று–சொல்ல
பின்னும் யெகோவா ஆகாசை நோக்கி:
11 שְׁאַל־ –கேள்– לְךָ֣ –உனக்கு א֔וֹת –அடையாளம் מֵעִ֖ם –இடமிருந்து יְהוָ֣ה யெகோவா אֱלֹהֶ֑יךָ –தேவன்–உனது הַעְמֵ֣ק –ஆழமாக்கு שְׁאָ֔לָה –கேள் א֖וֹ –அல்லது הַגְבֵּ֥הַּ –உயர்த்து לְמָֽעְלָה׃ –மேலே
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்;
12 וַיֹּ֖אמֶר –மற்றும்–சொன்னான் אָחָ֑ז ஆகாஸ் לֹא־ இல்லை– אֶשְׁאַ֥ל கேட்பேன் וְלֹֽא־ –மற்றும்–இல்லை– אֲנַסֶּ֖ה சோதிப்பேன் אֶת־ –ஐ– יְהוָֽה׃ யெகோவா
ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் யெகோவாவைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான்.
13 וַיֹּ֕אמֶר –மற்றும்–சொன்னார் שִׁמְעוּ־ –கேளுங்கள்– נָ֖א –தயவுசெய்து בֵּ֣ית –வீடு דָּוִ֑ד தாவீது הַמְעַ֤ט –சிறிய–காரியமா מִכֶּם֙ –உங்களுக்கு הַלְא֣וֹת –சோர்வுறச்செய்வது אֲנָשִׁ֔ים மனிதர்களை כִּ֥י –ஏனெனில் תַלְא֖וּ –சோர்வுறச்செய்கிறீர்கள் גַּ֥ם –கூட אֶת־ –ஐ– אֱלֹהָֽי׃ –தேவனை–என்னுடைய
அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனிதர்களை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?
14 לָ֠כֵן –ஆகையால் יִתֵּ֨ן கொடுப்பார் אֲדֹנָ֥י ஆண்டவர் ה֛וּא அவர் לָכֶ֖ם –உங்களுக்கு א֑וֹת –அடையாளம் הִנֵּ֣ה –இதோ הָעַלְמָ֗ה –கன்னி הָרָה֙ –கர்ப்பமாயிருக்கிறாள் וְיֹלֶ֣דֶת –மற்றும்–பெற்றெடுக்கிறாள் בֵּ֔ן –மகன் וְקָרָ֥את –மற்றும்–அழைப்பாள் שְׁמ֖וֹ –பெயர்–அவனது עִמָּ֥נוּ இம்மானுவேல் אֵֽל׃ —
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.
15 חֶמְאָ֥ה –வெண்ணெய் וּדְבַ֖שׁ –மற்றும்–தேன் יֹאכֵ֑ל சாப்பிடுவான் לְדַעְתּ֛וֹ –அறிந்துகொள்ள–அவனுக்கு מָא֥וֹס –நிராகரிக்க בָּרָ֖ע –தீமையில் וּבָח֥וֹר –மற்றும்–தேர்ந்தெடுக்க בַּטּֽוֹב׃ –நன்மையில்
தீமையை வெறுக்கவும் நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறியும் வயதுவரை அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.
16 כִּ֠י –ஏனெனில் בְּטֶ֨רֶם –முன்பு יֵדַ֥ע அறிவான் הַנַּ֛עַר –சிறுவன் מָאֹ֥ס –நிராகரிக்க בָּרָ֖ע –தீமையில் וּבָחֹ֣ר –மற்றும்–தேர்ந்தெடுக்க בַּטּ֑וֹב –நன்மையில் תֵּעָזֵ֤ב கைவிடப்படும் הָאֲדָמָה֙ –நிலம் אֲשֶׁ֣ר –அதை אַתָּ֣ה நீ קָ֔ץ –வெறுக்கிறாய் מִפְּנֵ֖י –முகத்திலிருந்து שְׁנֵ֥י –இரண்டு מְלָכֶֽיהָ׃ –அரசர்களின்–அதன்
அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.
17 יָבִ֨יא கொண்டுவருவார் יְהוָ֜ה யெகோவா עָלֶ֗יךָ –உன்மீது וְעַֽל־ –மற்றும்–மீது– עַמְּךָ֮ –ஜனத்தின்–உனது וְעַל־ –மற்றும்–மீது– בֵּ֣ית –வீட்டின் אָבִיךָ֒ –தந்தையின்–உனது יָמִים֙ நாட்கள் אֲשֶׁ֣ר –அவை לֹא־ இல்லை– בָ֔אוּ வந்தன לְמִיּ֥וֹם –நாளிலிருந்து סוּר־ –விலகிய– אֶפְרַ֖יִם எப்பிராயீம் מֵעַ֣ל –மேலிருந்து יְהוּדָ֑ה யூதா אֵ֖ת –ஐ מֶ֥לֶךְ –அரசன் אַשּֽׁוּר׃ அசீரியா פ —
எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் யெகோவா உன்மேலும், உன் மக்களின்மேலும், உன் தகப்பனுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரச்செய்வார்.
18 וְהָיָ֣ה ׀ –மற்றும்–இருக்கும் בַּיּ֣וֹם –நாளில் הַה֗וּא –அந்த יִשְׁרֹ֤ק சீழ்க்கையடிப்பார் יְהוָה֙ யெகோவா לַזְּב֔וּב –ஈக்கு אֲשֶׁ֥ר –அது בִּקְצֵ֖ה –முனையில் יְאֹרֵ֣י –நதிகளின் מִצְרָ֑יִם எகிப்து וְלַ֨דְּבוֹרָ֔ה –மற்றும்–தேனீக்கு אֲשֶׁ֖ר –அது בְּאֶ֥רֶץ –நாட்டில் אַשּֽׁוּר׃ அசீரியா
அந்நாட்களிலே, யெகோவா எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியா தேசத்திலிருக்கும் தேனீயையும் சைகைகாட்டி அழைப்பார்.
19 וּבָ֨אוּ –மற்றும்–வரும் וְנָח֤וּ –மற்றும்–தங்கும் כֻלָּם֙ எல்லாம் בְּנַחֲלֵ֣י –பள்ளத்தாக்குகளில் הַבַּתּ֔וֹת –செங்குத்தான וּבִנְקִיקֵ֖י –மற்றும்–பிளவுகளில் הַסְּלָעִ֑ים –பாறைகளின் וּבְכֹל֙ –மற்றும்–எல்லா הַנַּ֣עֲצוּצִ֔ים –முட்புதர்களிலும் וּבְכֹ֖ל –மற்றும்–எல்லா הַנַּהֲלֹלִֽים׃ –மேய்ச்சல்–நிலங்களிலும்
அவைகள் வந்து ஏகமாக வனாந்திரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும்.
20 בַּיּ֣וֹם –நாளில் הַה֡וּא –அந்த יְגַלַּ֣ח சிரைப்பார் אֲדֹנָי֩ ஆண்டவர் בְּתַ֨עַר –சவரக்கத்தியால் הַשְּׂכִירָ֜ה –கூலிக்கு–அமர்த்தப்பட்ட בְּעֶבְרֵ֤י –அப்பக்கத்தில் נָהָר֙ –நதி בְּמֶ֣לֶךְ –அரசனால் אַשּׁ֔וּר அசீரியா אֶת־ –ஐ– הָרֹ֖אשׁ –தலை וְשַׂ֣עַר –மற்றும்–முடி הָרַגְלָ֑יִם –கால்களின் וְגַ֥ם –மற்றும்–கூட אֶת־ –ஐ– הַזָּקָ֖ן –தாடி תִּסְפֶּֽה׃ அகற்றும் ס —
அக்காலத்தில் ஆண்டவர் கூலிக்கு வாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் சிரைத்துப்போடுவிப்பார்.
21 וְהָיָ֖ה –மற்றும்–இருக்கும் בַּיּ֣וֹם –நாளில் הַה֑וּא –அந்த יְחַיֶּה־ –வளர்ப்பான்– אִ֛ישׁ –மனிதன் עֶגְלַ֥ת –கிடாரி בָּקָ֖ר –மாடு וּשְׁתֵּי־ –மற்றும்–இரண்டு– צֹֽאן׃ ஆடுகள்
அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால்,
22 וְהָיָ֗ה –மற்றும்–இருக்கும் מֵרֹ֛ב –மிகுதியிலிருந்து עֲשׂ֥וֹת –உற்பத்தி חָלָ֖ב –பால் יֹאכַ֣ל சாப்பிடுவான் חֶמְאָ֑ה –வெண்ணெய் כִּֽי־ –ஏனெனில்– חֶמְאָ֤ה –வெண்ணெய் וּדְבַשׁ֙ –மற்றும்–தேன் יֹאכֵ֔ל சாப்பிடுவான் כָּל־ –எல்லா– הַנּוֹתָ֖ר –மீதமுள்ளவர் בְּקֶ֥רֶב –நடுவில் הָאָֽרֶץ׃ –நாட்டின்
அவைகள் பூரணமாகப் பால்கறக்கிறதினால் வெண்ணெயைச் சாப்பிடுவான்; தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான்.
23 וְהָיָה֙ –மற்றும்–இருக்கும் בַּיּ֣וֹם –நாளில் הַה֔וּא –அந்த יִֽהְיֶ֣ה இருக்கும் כָל־ –எல்லா– מָק֗וֹם –இடம் אֲשֶׁ֧ר –அங்கே יִֽהְיֶה־ இருக்கும்– שָּׁ֛ם –அங்கே אֶ֥לֶף –ஆயிரம் גֶּ֖פֶן –திராட்சை–கொடி בְּאֶ֣לֶף –ஆயிரம் כָּ֑סֶף –வெள்ளி לַשָּׁמִ֥יר –முட்களுக்கு וְלַשַּׁ֖יִת –மற்றும்–நெருஞ்சிக்கு יִֽהְיֶֽה׃ இருக்கும்
அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு மதிப்புள்ள ஆயிரம் திராட்சைச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும்.
24 בַּחִצִּ֥ים –அம்புகளோடு וּבַקֶּ֖שֶׁת –மற்றும்–வில்லோடு יָ֣בוֹא வருவான் שָׁ֑מָּה –அங்கே כִּי־ –ஏனெனில்– שָׁמִ֥יר –முட்கள் וָשַׁ֖יִת –மற்றும்–நெருஞ்சி תִּֽהְיֶ֥ה இருக்கும் כָל־ –எல்லா– הָאָֽרֶץ׃ –நாடு
தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும்.
25 וְכֹ֣ל –மற்றும்–எல்லா הֶהָרִ֗ים –மலைகள் אֲשֶׁ֤ר –அவை בַּמַּעְדֵּר֙ –மண்வெட்டியால் יֵעָ֣דֵר֔וּן தோண்டப்படும் לֹֽא־ இல்லை– תָב֣וֹא வரும் שָׁ֔מָּה –அங்கே יִרְאַ֖ת –பயம் שָׁמִ֣יר –முட்கள் וָשָׁ֑יִת –மற்றும்–நெருஞ்சி וְהָיָה֙ –மற்றும்–இருக்கும் לְמִשְׁלַ֣ח –மேய்க்க–அனுப்புவதற்கு שׁ֔וֹר –எருது וּלְמִרְמַ֖ס –மற்றும்–மிதிப்பதற்கு שֶֽׂה׃ ஆடு פ —
மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே; முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகமுடியாமல் இருப்பதினால், அவைகள் மாடுகளை மேயவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான்.