1 וּבָעֵ֣ת காலத்தில் הַהִיא֩ அந்த יַעֲמֹ֨ד எழும்புவான் מִֽיכָאֵ֜ל மீக்காயேல் הַשַּׂ֣ר பிரபு הַגָּד֗וֹל பெரிய הָעֹמֵד֮ நிற்கிறவன் עַל־ [over] בְּנֵ֣י புத்திரர்கள் עַמֶּךָ֒ உன்–ஜனத்தின் וְהָיְתָה֙ இருக்கும் עֵ֣ת காலம் צָרָ֔ה உபத்திரவத்தின் אֲשֶׁ֤ר [rel] לֹֽא־ இல்லை נִהְיְתָה֙ நடந்தது מִֽהְי֣וֹת இருந்த–நாள்–முதல் גּ֔וֹי ஜனம் עַ֖ד வரைக்கும் הָעֵ֣ת காலம் הַהִ֑יא அந்த וּבָעֵ֤ת காலத்தில் הַהִיא֙ அந்த יִמָּלֵ֣ט தப்புவான் עַמְּךָ֔ உன்–ஜனம் כָּל־ எல்லா הַנִּמְצָ֖א காணப்படுகிறவன் כָּת֥וּב எழுதப்பட்ட בַּסֵּֽפֶר׃ புஸ்தகத்தில்
உன் மக்களின் பாதுகாப்பிற்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். எந்தவொரு தேசத்தார்களும் தோன்றினதுமுதல் அக்காலம்வரை உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புத்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் மக்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.
2 וְרַבִּ֕ים அநேகர் מִיְּשֵׁנֵ֥י தூங்குகிறவர்களில் אַדְמַת־ மண்–நிலத்தின் עָפָ֖ר பொடியின் יָקִ֑יצוּ விழிப்பார்கள் אֵ֚לֶּה இவர்கள் לְחַיֵּ֣י நித்திய–ஜீவனத்துக்கு עוֹלָ֔ם நித்தியமான וְאֵ֥לֶּה இவர்கள் לַחֲרָפ֖וֹת நிந்தைகளுக்கு לְדִרְא֥וֹן அருவருப்புக்கு עוֹלָֽם׃ நித்தியமான ס [para]
பூமியின் தூளிலே இறந்தவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
3 וְהַ֨מַּשְׂכִּלִ֔ים ஞானமுள்ளவர்கள் יַזְהִ֖רוּ பிரகாசிப்பார்கள் כְּזֹ֣הַר பிரகாசத்தைப்–போல הָרָקִ֑יעַ வானவிரிவின் וּמַצְדִּיקֵי֙ நீதியை–திருப்புகிறவர்கள் הָֽרַבִּ֔ים அநேகரின் כַּכּוֹכָבִ֖ים நட்சத்திரங்களைப்–போல לְעוֹלָ֥ם என்றென்றும் וָעֶֽד׃ என்றென்றும் פ [para]
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
4 וְאַתָּ֣ה நீயோ דָֽנִיֵּ֗אל தானியேலே סְתֹ֧ם மூடு הַדְּבָרִ֛ים வார்த்தைகளை וַחֲתֹ֥ם முத்திரை–போடு הַסֵּ֖פֶר புஸ்தகத்தை עַד־ காலம்–வரைக்கும் עֵ֣ת காலம் קֵ֑ץ முடிவின் יְשֹׁטְט֥וּ அலைவார்கள் רַבִּ֖ים அநேகர் וְתִרְבֶּ֥ה பெருகும் הַדָּֽעַת׃ அறிவு
தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலம்வரை இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக மறைத்துவைத்து, இந்தப் புத்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போகும் என்றான்.
5 וְרָאִ֙יתִי֙ பார்த்தேன் אֲנִ֣י நான் דָנִיֵּ֔אל தானியேல் וְהִנֵּ֛ה இதோ שְׁנַ֥יִם இரண்டு אֲחֵרִ֖ים மற்றவர்கள் עֹמְדִ֑ים நிற்கிறவர்கள் אֶחָ֥ד ஒருவன் הֵ֙נָּה֙ இங்கே לִשְׂפַ֣ת கரையில் הַיְאֹ֔ר ஆற்றின் וְאֶחָ֥ד மற்றொருவன் הֵ֖נָּה அங்கே לִשְׂפַ֥ת கரையில் הַיְאֹֽר׃ ஆற்றின்
அப்பொழுது, தானியேலாகிய நான் நிற்கிற ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு மறுகரையில் ஒருவனுமாக இரண்டுபேர் நிற்கக்கண்டேன்.
6 וַיֹּ֗אמֶר சொன்னான் לָאִישׁ֙ மனிதனுக்கு לְב֣וּשׁ உடுத்திருந்த הַבַּדִּ֔ים பட்டுகளின் אֲשֶׁ֥ר [rel] מִמַּ֖עַל மேலிருந்து לְמֵימֵ֣י நீர்களின்–மேல் הַיְאֹ֑ר ஆற்றின் עַד־ எப்போது–வரைக்கும் מָתַ֖י எப்போது קֵ֥ץ முடிவு הַפְּלָאֽוֹת׃ அதிசயங்களின்
சணல்உடை அணிந்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவரை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் ஆகும் என்று கேட்டான்.
7 וָאֶשְׁמַ֞ע கேட்டேன் אֶת־ [obj] הָאִ֣ישׁ ׀ மனிதனை לְב֣וּשׁ உடுத்திருந்த הַבַּדִּ֗ים பட்டுகளின் אֲשֶׁ֣ר [rel] מִמַּעַל֮ மேலிருந்து לְמֵימֵ֣י நீர்களின்–மேல் הַיְאֹר֒ ஆற்றின் וַיָּ֨רֶם உயர்த்தினான் יְמִינ֤וֹ தன்–வலது–கையை וּשְׂמֹאלוֹ֙ தன்–இடது–கையையும் אֶל־ [dir] הַשָּׁמַ֔יִם வானத்தை–நோக்கி וַיִּשָּׁבַ֖ע ஆணையிட்டான் בְּחֵ֣י ஜீவிக்கிறவர்–மேல் הָעוֹלָ֑ם நித்தியமானவர் כִּי֩ ஏனெனில் לְמוֹעֵ֨ד குறித்த–காலம் מֽוֹעֲדִ֜ים காலங்கள் וָחֵ֗צִי அரையும் וּכְכַלּ֛וֹת முடிகிறபோது נַפֵּ֥ץ சிதறடித்தல் יַד־ கை–வின் עַם־ ஜனம்–வின் קֹ֖דֶשׁ பரிசுத்தமான תִּכְלֶ֥ינָה முடிவுறும் כָל־ எல்லா אֵֽלֶּה׃ இவைகள்
அப்பொழுது சணல்உடை அணிந்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய மனிதன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்திற்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் ஆகும் என்றும்; பரிசுத்த மக்களின் வல்லமையைச் சிதறடித்தல், முடிவு பெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக்கேட்டேன்.
8 וַאֲנִ֥י நான் שָׁמַ֖עְתִּי கேட்டேன் וְלֹ֣א ஆனால்–இல்லை אָבִ֑ין புரிந்தேன் וָאֹ֣מְרָ֔ה சொன்னேன் אֲדֹנִ֕י என்–ஆண்டவரே מָ֥ה என்ன אַחֲרִ֖ית முடிவு אֵֽלֶּה׃ இவைகளின் פ [para]
நான் அதைக் கேட்டும், அதின் அர்த்தத்தை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு எப்படியிருக்கும் என்று கேட்டேன்.
9 וַיֹּ֖אמֶר சொன்னான் לֵ֣ךְ போ דָּנִיֵּ֑אל தானியேலே כִּֽי־ ஏனெனில் סְתֻמִ֧ים மூடப்பட்டவை וַחֲתֻמִ֛ים முத்திரையிடப்பட்டவை הַדְּבָרִ֖ים வார்த்தைகள் עַד־ காலம்–வரைக்கும் עֵ֥ת காலம் קֵֽץ׃ முடிவின்
அதற்கு அவன்: தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலம்வரை புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.
10 יִ֠תְבָּֽרֲרוּ சுத்திகரிக்கப்படுவார்கள் וְיִֽתְלַבְּנ֤וּ வெண்மையாக்கப்படுவார்கள் וְיִצָּֽרְפוּ֙ புடமிடப்படுவார்கள் רַבִּ֔ים அநேகர் וְהִרְשִׁ֣יעוּ தீமைசெய்வார்கள் רְשָׁעִ֔ים தீயவர்கள் וְלֹ֥א ஆனால்–இல்லை יָבִ֖ינוּ புரிந்துகொள்வார்கள் כָּל־ எல்லா רְשָׁעִ֑ים தீயவர்கள் וְהַמַּשְׂכִּלִ֖ים ஞானமுள்ளவர்கள் יָבִֽינוּ׃ புரிந்துகொள்வார்கள்
அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாக விளங்குவார்கள்; துன்மார்க்கர்களோ துன்மார்க்கமாக நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரமாட்டான், ஞானவான்களோ உணர்ந்துகொள்வார்கள்.
11 וּמֵעֵת֙ காலத்திலிருந்து הוּסַ֣ר நீக்கப்படும் הַתָּמִ֔יד தொடர்ச்சியான–பலி וְלָתֵ֖ת நிறுத்த שִׁקּ֣וּץ அருவருப்பான–தை שֹׁמֵ֑ם பாழாக்கும் יָמִ֕ים நாட்கள் אֶ֖לֶף ஆயிரத்து מָאתַ֥יִם இருநூறு וְתִשְׁעִֽים׃ தொண்ணூறு
அனுதினபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு நிலைநிறுத்தப்படும் காலம்முதல் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூறு நாட்கள் ஆகும்.
12 אַשְׁרֵ֥י பாக்கியவன் הַֽמְחַכֶּ֖ה காத்திருக்கிறவன் וְיַגִּ֑יעַ அடைகிறவன் לְיָמִ֕ים நாட்களுக்கு אֶ֕לֶף ஆயிரத்து שְׁלֹ֥שׁ முன்று מֵא֖וֹת நூறு שְׁלֹשִׁ֥ים முப்பத்தி וַחֲמִשָּֽׁה׃ ஐந்து
ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாட்கள்வரை காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.
13 וְאַתָּ֖ה நீயோ לֵ֣ךְ போ לַקֵּ֑ץ முடிவுக்கு וְתָנ֛וּחַ இளைப்பாறுவாய் וְתַעֲמֹ֥ד எழும்புவாய் לְגֹרָלְךָ֖ உன்–பங்குக்கு לְקֵ֥ץ முடிவில் הַיָּמִֽין׃ நாட்களின்
நீயோவென்றால் முடிவுவரும்வரை போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உனக்குரிய பங்கைப்பெற எழுந்திருப்பாய் என்றான்.