1 שִׁמְעוּ־ கேளுங்கள்– זֹ֨את இதை הַכֹּהֲנִ֜ים ஆசாரியர்களே וְהַקְשִׁ֣יבוּ ׀ –மற்றும்–செவிகொடுங்கள் בֵּ֣ית வீட்டாரே– יִשְׂרָאֵ֗ל இஸ்ரவேலின் וּבֵ֤ית –மற்றும்–வீட்டாரே– הַמֶּ֙לֶךְ֙ ராஜாவின் הַאֲזִ֔ינוּ செவிசாயுங்கள் כִּ֥י ஏனெனில் לָכֶ֖ם உங்களுக்கு הַמִּשְׁפָּ֑ט –நியாயத்தீர்ப்பு כִּֽי־ ஏனெனில்– פַח֙ கண்ணி הֱיִיתֶ֣ם ஆனீர்கள் לְמִצְפָּ֔ה மிஸ்பாவுக்கு– וְרֶ֖שֶׁת –மற்றும்–வலை פְּרוּשָׂ֥ה விரிக்கப்பட்டது עַל־ –மேல் תָּבֽוֹר׃ தாபோரின்
ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாயவிசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.
2 וְשַׁחֲטָ֥ה –மற்றும்–கொலையை שֵׂטִ֖ים வழிவிலகியோர் הֶעְמִ֑יקוּ ஆழமாக்கினார்கள் וַאֲנִ֖י –மற்றும்–நான் מוּסָ֥ר ஒழுக்கம் לְכֻלָּֽם׃ எல்லாருக்கும்
நெறிதவறினவர்கள் அதிகமாக வதைசெய்கிறார்கள்; அவர்கள் எல்லோரையும் நான் தண்டிப்பேன்.
3 אֲנִי֙ நான் יָדַ֣עְתִּי அறிந்தேன் אֶפְרַ֔יִם எப்பிராயீமை וְיִשְׂרָאֵ֖ל –மற்றும்–இஸ்ரவேல் לֹֽא־ இல்லை– נִכְחַ֣ד மறைந்தது מִמֶּ֑נִּי என்னிடமிருந்து כִּ֤י ஏனெனில் עַתָּה֙ இப்போது הִזְנֵ֣יתָ விபசாரம்செய்தாய் אֶפְרַ֔יִם எப்பிராயீமே נִטְמָ֖א தீட்டுப்பட்டது יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேல்
எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ வழிவிலகிப்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே.
4 לֹ֤א இல்லை יִתְּנוּ֙ கொடுக்கும் מַ֣עַלְלֵיהֶ֔ם அவர்கள்–செயல்களை לָשׁ֖וּב திரும்புவதற்கு– אֶל־ –நோக்கி אֱלֹֽהֵיהֶ֑ם அவர்கள்–தேவனை כִּ֣י ஏனெனில் ר֤וּחַ ஆவி– זְנוּנִים֙ விபசாரங்களின் בְּקִרְבָּ֔ם அவர்கள்–நடுவில் וְאֶת־ –மற்றும்–ஐ יְהוָ֖ה யெகோவாவை לֹ֥א இல்லை יָדָֽעוּ׃ அறிந்தார்கள்
அவர்கள் தங்கள் தேவனிடத்திற்குத் திரும்புவதற்குத் தங்கள் செயல்களை சரிசெய்யமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; யெகோவாவை அறியார்கள்.
5 וְעָנָ֥ה –மற்றும்–சாட்சிகொடுக்கும் גְאֽוֹן־ பெருமை– יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் בְּפָנָ֑יו அவன்–முகத்திலே וְיִשְׂרָאֵ֣ל –மற்றும்–இஸ்ரவேல் וְאֶפְרַ֗יִם –மற்றும்–எப்பிராயீம் יִכָּֽשְׁלוּ֙ இடறுவார்கள் בַּעֲוֺנָ֔ם அவர்கள்–அக்கிரமத்தில் כָּשַׁ֥ל இடறினான் גַּם־ –கூட– יְהוּדָ֖ה யூதா עִמָּֽם׃ அவர்களோடு
இஸ்ரவேலின் அகந்தை அவர்களுடைய முகத்திற்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறி விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறி விழுவான்.
6 בְּצֹאנָ֣ם அவர்கள்–ஆடுகளோடும்– וּבִבְקָרָ֗ם –மற்றும்–அவர்கள்–மாடுகளோடும்– יֵֽלְכ֛וּ போவார்கள் לְבַקֵּ֥שׁ தேடுவதற்கு– אֶת־ –ஐ יְהוָ֖ה யெகோவாவை וְלֹ֣א –மற்றும்–இல்லை יִמְצָ֑אוּ கண்டுபிடிப்பார்கள் חָלַ֖ץ விலகினார் מֵהֶֽם׃ அவர்களிடமிருந்து
அவர்கள் யெகோவாவை தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.
7 בַּיהוָ֣ה யெகோவாவுக்கு– בָּגָ֔דוּ துரோகம்செய்தார்கள் כִּֽי־ ஏனெனில்– בָנִ֥ים பிள்ளைகளை זָרִ֖ים அந்நியர்களின் יָלָ֑דוּ பெற்றார்கள் עַתָּ֛ה இப்போது יֹאכְלֵ֥ם விழுங்கும்–அவர்களை חֹ֖דֶשׁ மாதம் אֶת־ –ஐ חֶלְקֵיהֶֽם׃ அவர்கள்–பங்குகளை ס §
யெகோவாவுக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்திற்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே அழிக்கப்படுவார்கள்.
8 תִּקְע֤וּ ஊதுங்கள் שׁוֹפָר֙ எக்காளத்தை– בַּגִּבְעָ֔ה கிபியாவில்– חֲצֹצְרָ֖ה நரசிங்கத்தை– בָּרָמָ֑ה ராமாவில்– הָרִ֙יעוּ֙ ஆர்ப்பரியுங்கள் בֵּ֣ית אָ֔וֶן பெத்–ஆவேனில் אַחֲרֶ֖יךָ உனக்குப்–பின்னால் בִּנְיָמִֽין׃ பென்யமீனே
கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள்.
9 אֶפְרַ֙יִם֙ எப்பிராயீம் לְשַׁמָּ֣ה பாழாய்– תִֽהְיֶ֔ה ஆகும் בְּי֖וֹם நாளிலே– תּֽוֹכֵחָ֑ה கண்டிப்பின் בְּשִׁבְטֵי֙ கோத்திரங்களுக்குள்– יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் הוֹדַ֖עְתִּי அறிவித்தேன் נֶאֱמָנָֽה׃ உண்மையானதை
தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாக வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன்.
10 הָיוּ֙ ஆனார்கள் שָׂרֵ֣י பிரபுக்கள்– יְהוּדָ֔ה யூதாவின் כְּמַסִּיגֵ֖י எல்லை–மாற்றுவோர்–போல גְּב֑וּל எல்லையின் עֲלֵיהֶ֕ם அவர்கள்–மேல் אֶשְׁפּ֥וֹךְ ஊற்றுவேன் כַּמַּ֖יִם தண்ணீரைப்போல– עֶבְרָתִֽי׃ என்–கோபத்தை
யூதாவின் பிரபுக்கள் எல்லைகளை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பானார்கள்; அவர்கள்மேல் என் கடுங்கோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன்.
11 עָשׁ֥וּק ஒடுக்கப்பட்ட אֶפְרַ֖יִם எப்பிராயீம் רְצ֣וּץ நொறுக்கப்பட்ட מִשְׁפָּ֑ט நியாயத்தீர்ப்பில்– כִּ֣י ஏனெனில் הוֹאִ֔יל விரும்பினான் הָלַ֖ךְ நடந்தான் אַחֲרֵי־ பின்னால்– צָֽו׃ கட்டளையின்
எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்கி, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.
12 וַאֲנִ֥י –மற்றும்–நான் כָעָ֖שׁ அரிப்பான்–போல לְאֶפְרָ֑יִם எப்பிராயீமுக்கு וְכָרָקָ֖ב –மற்றும்–அழுகல்–போல לְבֵ֥ית வீட்டுக்கு– יְהוּדָֽה׃ யூதாவின்
நான் எப்பிராயீமுக்குப் பூச்சி அரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டிற்கு உளுப்பைப்போலவும் இருப்பேன்.
13 וַיַּ֨רְא –மற்றும்–கண்டான் אֶפְרַ֜יִם எப்பிராயீம் אֶת־ –ஐ חָלְי֗וֹ அவன்–வியாதியை וִֽיהוּדָה֙ –மற்றும்–யூதா אֶת־ –ஐ מְזֹר֔וֹ அவன்–புண்ணை וַיֵּ֤לֶךְ –மற்றும்–போனான் אֶפְרַ֙יִם֙ எப்பிராயீம் אֶל־ –நோக்கி אַשּׁ֔וּר அசீரியாவுக்கு וַיִּשְׁלַ֖ח –மற்றும்–அனுப்பினான் אֶל־ –நோக்கி מֶ֣לֶךְ ராஜா– יָרֵ֑ב யாரேபின் וְה֗וּא –மற்றும்–அவன் לֹ֤א இல்லை יוּכַל֙ திறனுள்ளவனாயிருப்பான் לִרְפֹּ֣א குணமாக்குவதற்கு– לָכֶ֔ם உங்களுக்கு וְלֹֽא־ –மற்றும்–இல்லை– יִגְהֶ֥ה நீக்குவான் מִכֶּ֖ם உங்களிடமிருந்து מָזֽוֹר׃ புண்ணை
எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனிடம் போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் முடியாமற்போனது.
14 כִּ֣י ஏனெனில் אָנֹכִ֤י நான் כַשַּׁ֙חַל֙ சிங்கம்–போல לְאֶפְרַ֔יִם எப்பிராயீமுக்கு וְכַכְּפִ֖יר –மற்றும்–இளஞ்சிங்கம்–போல לְבֵ֣ית வீட்டுக்கு– יְהוּדָ֑ה யூதாவின் אֲנִ֨י நான் אֲנִ֤י நான் אֶטְרֹף֙ கிழிப்பேன் וְאֵלֵ֔ךְ –மற்றும்–போவேன் אֶשָּׂ֖א எடுத்துக்கொள்வேன் וְאֵ֥ין –மற்றும்–இல்லை מַצִּֽיל׃ விடுவிக்கிறவன்
நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே காயப்படுத்திவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமல் எடுத்துக்கொண்டு போவேன்.
15 אֵלֵ֤ךְ போவேன் אָשׁ֙וּבָה֙ திரும்புவேன் אֶל־ –நோக்கி מְקוֹמִ֔י என்–இடத்துக்கு עַ֥ד வரைக்கும் אֲשֶֽׁר־ அவர்கள்– יֶאְשְׁמ֖וּ குற்றமுணர்வார்கள் וּבִקְשׁ֣וּ –மற்றும்–தேடுவார்கள் פָנָ֑י என்–முகத்தை בַּצַּ֥ר நெருக்கத்தில்– לָהֶ֖ם அவர்களுக்கு יְשַׁחֲרֻֽנְנִי׃ தேடுவார்கள்–என்னை
அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடும்வரை நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாகத் தேடுவார்கள்.