1 Ἐν –இல் ἐκείνῳ அந்த τῷ –அந்த καιρῷ, காலத்தில், ἐπορεύθη நடந்தார் ὁ –அந்த Ἰησοῦς இயேசு τοῖς –அந்த σάββασιν ஓய்வுநாட்களில் διὰ –வழியாக τῶν –அந்த σπορίμων; விளைநிலங்களின்; οἱ –அவர்கள் δὲ மேலும் μαθηταὶ சீடர்கள் αὐτοῦ அவருடைய ἐπείνασαν, பசியடைந்தார்கள், καὶ மற்றும் ἤρξαντο தொடங்கினார்கள் τίλλειν கொய்ய στάχυας, கதிர்களை, καὶ மற்றும் ἐσθίειν. புசிக்க.
அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் வயல்வழியே போனார்; அவருடைய சீடர்கள் பசியாக இருந்து, கதிர்களைப் பறித்து, சாப்பிடத் தொடங்கினார்கள்.
2 οἱ –அவர்கள் δὲ மேலும் Φαρισαῖοι, பரிசேயர்கள், ἰδόντες, கண்டு, εἶπαν சொன்னார்கள் αὐτῷ, அவருக்கு, Ἰδοὺ, இதோ, οἱ –அவர்கள் μαθηταί சீடர்கள் σου உன்னுடைய ποιοῦσιν செய்கிறார்கள் ὃ எதை οὐκ இல்லை ἔξεστιν அனுமதியுள்ளது ποιεῖν செய்ய ἐν –இல் σαββάτῳ. ஓய்வுநாளில்.
பரிசேயர்கள் அதைக் கண்டு, அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை உம்முடைய சீடர்கள் செய்கிறார்களே என்றார்கள்.
3 ὁ –அவர் δὲ மேலும் εἶπεν சொன்னார் αὐτοῖς, அவர்களுக்கு, Οὐκ இல்லையா ἀνέγνωτε வாசித்தீர்கள் τί என்ன ἐποίησεν செய்தான் Δαυὶδ, தாவீது, ὅτε எப்போது ἐπείνασεν, பசியடைந்தான், καὶ மற்றும் οἱ –அவர்கள் μετ’ –உடன் αὐτοῦ? அவனுடைய?
அதற்கு அவர்: தாவீதும் அவனோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
4 πῶς எப்படி εἰσῆλθεν நுழைந்தான் εἰς –இல் τὸν –அந்த οἶκον வீட்டில் τοῦ –அவருடைய Θεοῦ, தேவனுடைய, καὶ மற்றும் τοὺς –அந்த ἄρτους அப்பங்களை τῆς –அந்த προθέσεως படைப்பின் ἔφαγον, புசித்தார்கள், ὃ எதை οὐκ இல்லை ἐξὸν அனுமதியுள்ளது ἦν இருந்தது αὐτῷ அவனுக்கு φαγεῖν, புசிக்க, οὐδὲ அல்லது τοῖς –அவர்களுக்கு μετ’ –உடன் αὐτοῦ, அவனுடைய, εἰ தவிர μὴ இல்லை τοῖς –அவர்களுக்கு ἱερεῦσιν ஆசாரியர்களுக்கு μόνοις? மட்டுமே?
அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் புசிக்கக்கூடாத தேவ சமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடு இருந்தவர்களும் புசித்தார்களே.
5 ἢ அல்லது οὐκ இல்லையா ἀνέγνωτε வாசித்தீர்கள் ἐν –இல் τῷ –அந்த νόμῳ, நியாயப்பிரமாணத்தில், ὅτι என்று τοῖς –அந்த σάββασιν ஓய்வுநாட்களில் οἱ –அவர்கள் ἱερεῖς ஆசாரியர்கள் ἐν –இல் τῷ –அந்த ἱερῷ ஆலயத்தில் τὸ –அந்த σάββατον ஓய்வுநாளை βεβηλοῦσιν, மீறுகிறார்கள், καὶ மற்றும் ἀναίτιοί குற்றமற்றவர்கள் εἰσιν? ஆகிறார்கள்?
அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலைநாளாக்கினாலும் குற்றமில்லாமல் இருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?
6 λέγω சொல்லுகிறேன் δὲ மேலும் ὑμῖν, உங்களுக்கு, ὅτι என்று τοῦ –அவருடைய ἱεροῦ ஆலயத்திலும் μεῖζόν பெரியவர் ἐστιν ஆவார் ὧδε. இங்கே.
தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
7 εἰ என்றால் δὲ மேலும் ἐγνώκειτε அறிந்திருந்தால் τί என்ன ἐστιν, ஆகிறது, Ἔλεος இரக்கம் θέλω விரும்புகிறேன் καὶ மற்றும் οὐ இல்லை θυσίαν, பலியை, οὐκ இல்லை ἂν எவ்வாறாயினும் κατεδικάσατε தண்டித்திருப்பீர்கள் τοὺς –அந்த ἀναιτίους. குற்றமற்றவர்களை.
பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
8 κύριος ஆண்டவர் γάρ ஏனெனில் ἐστιν ஆவார் τοῦ –அவருடைய σαββάτου ஓய்வுநாளின் ὁ –அந்த Υἱὸς குமாரன் τοῦ –அவருடைய ἀνθρώπου. மனிதனுடைய.
மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
9 Καὶ மற்றும் μεταβὰς புறப்பட்டு ἐκεῖθεν, அங்கிருந்து, ἦλθεν வந்தார் εἰς –இல் τὴν –அந்த συναγωγὴν ஜெபஆலயத்தில் αὐτῶν. அவர்களுடைய.
அவர் அந்த இடத்தைவிட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்திற்கு வந்தார்.
10 καὶ மற்றும் ἰδοὺ, இதோ, ἄνθρωπος மனிதன் χεῖρα கையை ἔχων உடையவன் ξηράν. சூம்பின. καὶ மற்றும் ἐπηρώτησαν கேட்டார்கள் αὐτὸν, அவரை, λέγοντες, சொல்லி, Εἰ என்றால் ἔξεστιν அனுமதியுள்ளதா τοῖς –அந்த σάββασιν ஓய்வுநாட்களில் θεραπεῦσαι?-- குணமாக்க?– ἵνα –என்று κατηγορήσωσιν குற்றஞ்சாட்டும்படி αὐτοῦ. அவருடைய.
அங்கே சூம்பின கையையுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.
11 ὁ –அவர் δὲ மேலும் εἶπεν சொன்னார் αὐτοῖς, அவர்களுக்கு, Τίς யார் ἔσται இருப்பான் ἐξ –இலிருந்து ὑμῶν உங்களில் ἄνθρωπος, மனிதன், ὃς எவன் ἕξει உடையவனாயிருப்பான் πρόβατον ஆடு ἕν, ஒன்று, καὶ மற்றும் ἐὰν என்றால் ἐμπέσῃ விழுந்தால் τοῦτο இது τοῖς –அந்த σάββασιν ஓய்வுநாட்களில் εἰς –இல் βόθυνον, குழியில், οὐχὶ இல்லையா κρατήσει பிடிப்பான் αὐτὸ அதை καὶ மற்றும் ἐγερεῖ? தூக்குவான்?
அதற்கு அவர்: உங்களில் எந்த மனிதனுக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
12 πόσῳ எவ்வளவு οὖν ஆகையால் διαφέρει மேலானவன் ἄνθρωπος மனிதன் προβάτου? ஆட்டைவிட? ὥστε ஆகவே ἔξεστιν அனுமதியுள்ளது τοῖς –அந்த σάββασιν ஓய்வுநாட்களில் καλῶς நன்மையாக ποιεῖν. செய்ய.
ஆட்டைவிட மனிதனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயம்தான் என்று சொன்னார்.
13 τότε அப்போது λέγει சொல்லுகிறார் τῷ –அந்த ἀνθρώπῳ, மனிதனுக்கு, Ἔκτεινόν நீட்டு σου உன்னுடைய τὴν –அந்த χεῖρα. கையை. καὶ மற்றும் ἐξέτεινεν, நீட்டினான், καὶ மற்றும் ἀπεκατεστάθη, சுகமாக்கப்பட்டது, ὑγιὴς ஆரோக்கியமாக ὡς –போல ἡ –அந்த ἄλλη. மற்றொன்று.
பின்பு அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சுகமானது.
14 ἐξελθόντες புறப்பட்டு δὲ, மேலும், οἱ –அவர்கள் Φαρισαῖοι பரிசேயர்கள் συμβούλιον ஆலோசனை ἔλαβον எடுத்தார்கள் κατ’ –க்கு–எதிராக αὐτοῦ, அவருடைய, ὅπως –எப்படி αὐτὸν அவரை ἀπολέσωσιν. அழிக்கும்படி.
அப்பொழுது, பரிசேயர்கள் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை செய்தார்கள்.
15 Ὁ –அவர் δὲ மேலும் Ἰησοῦς, இயேசு, γνοὺς, அறிந்து, ἀνεχώρησεν விலகிச்சென்றார் ἐκεῖθεν, அங்கிருந்து, καὶ மற்றும் ἠκολούθησαν பின்தொடர்ந்தார்கள் αὐτῷ அவரை [ὄχλοι] கூட்டங்கள் πολλοί, அநேகர், καὶ மற்றும் ἐθεράπευσεν குணமாக்கினார் αὐτοὺς அவர்களை πάντας, எல்லோரையும்,
இயேசு அதை அறிந்து, அந்த இடத்தைவிட்டு விலகிப்போனார். திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அவர்களெல்லோரையும் அவர் சுகமாக்கி,
16 καὶ மற்றும் ἐπετίμησεν எச்சரித்தார் αὐτοῖς அவர்களுக்கு ἵνα –என்று μὴ வேண்டாம் φανερὸν வெளிப்படையாக αὐτὸν அவரை ποιήσωσιν. செய்யும்படி.
தம்மைப் பிரசித்தப்படுத்தாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார்.
17 ἵνα –என்று πληρωθῇ நிறைவேறும்படி τὸ –அந்த ῥηθὲν சொல்லப்பட்டது διὰ –வழியாக Ἠσαΐου ஏசாயா τοῦ –அவரான προφήτου, தீர்க்கதரிசியின், λέγοντος, சொல்கிற,
ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் சொன்னதாவது:
18 Ἰδοὺ இதோ ὁ –அந்த παῖς ஊழியன் μου, என்னுடைய, ὃν யாரை ᾑρέτισα, தெரிந்துகொண்டேன், ὁ –அவர் ἀγαπητός அன்புள்ள μου, என்னுடைய, ‹εἰς› –இல் ὃν யாரில் εὐδόκησεν பிரியமாயிருந்தது ἡ –அந்த ψυχή ஆத்துமா μου. என்னுடைய. θήσω வைப்பேன் τὸ –அந்த Πνεῦμά ஆவியானவரை μου என்னுடைய ἐπ’ –மேல் αὐτόν, அவர்மேல், καὶ மற்றும் κρίσιν நியாயத்தீர்ப்பை τοῖς –அந்த ἔθνεσιν புறஜாதிகளுக்கு ἀπαγγελεῖ. அறிவிப்பார்.
“இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவிற்குப் பிரியமாக இருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரச் செய்வேன், அவர் யூதரல்லாதவர்களுக்கு நியாயத்தை அறிவிப்பார்.
19 οὐκ இல்லை ἐρίσει வாதிடமாட்டார் οὐδὲ அல்லது κραυγάσει, கூக்குரலிடமாட்டார், οὐδὲ அல்லது ἀκούσει கேட்கமாட்டான் τις ஒருவனும் ἐν –இல் ταῖς –அந்த πλατείαις தெருக்களில் τὴν –அந்த φωνὴν குரலை αὐτοῦ. அவருடைய.
வாக்குவாதம் செய்யவும் மாட்டார், சத்தமிடவும் மாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.
20 κάλαμον நாணலை συντετριμμένον நொறுங்கின οὐ இல்லை κατεάξει, முறிக்கமாட்டார், καὶ மற்றும் λίνον திரியை τυφόμενον புகைகிற οὐ இல்லை σβέσει, அணைக்கமாட்டார், ἕως வரை ἂν எவ்வாறாயினும் ἐκβάλῃ வெளிக்கொண்டுவருவார் εἰς –இல் νῖκος வெற்றிக்கு τὴν –அந்த κρίσιν. நியாயத்தீர்ப்பை.
அவர் நியாயத்திற்கு ஜெயம் கிடைக்கச்செய்கிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.
21 καὶ மற்றும் τῷ –அவருடைய ὀνόματι நாமத்தில் αὐτοῦ அவருடைய ἔθνη புறஜாதிகள் ἐλπιοῦσιν. நம்பிக்கைவைப்பார்கள்.
அவருடைய நாமத்தின்மேல் உலகிலுள்ளோர் நம்பிக்கையாக இருப்பார்கள்” என்பதே.
22 Τότε அப்போது προσηνέχθη கொண்டுவரப்பட்டான் αὐτῷ அவரிடம் δαιμονιζόμενος, பிசாசுபிடித்தவன், τυφλὸς குருடன் καὶ மற்றும் κωφός, ஊமையன், καὶ மற்றும் ἐθεράπευσεν குணமாக்கினார் αὐτόν, அவனை, ὥστε ஆகவே τὸν –அந்த κωφὸν ஊமையன் λαλεῖν பேசவும் καὶ மற்றும் βλέπειν. பார்க்கவும்.
அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் பார்க்கவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார்.
23 καὶ மற்றும் ἐξίσταντο வியப்படைந்தார்கள் πάντες எல்லோரும் οἱ –அந்த ὄχλοι, கூட்டங்கள், καὶ மற்றும் ἔλεγον, சொன்னார்கள், Μήτι நிச்சயமாய் οὗτός இவன் ἐστιν ஆவாரா ὁ –அந்த υἱὸς குமாரன் Δαυίδ? தாவீதின்?
மக்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.
24 οἱ –அவர்கள் δὲ மேலும் Φαρισαῖοι, பரிசேயர்கள், ἀκούσαντες, கேட்டு, εἶπον, சொன்னார்கள், Οὗτος இவன் οὐκ இல்லை ἐκβάλλει துரத்துகிறான் τὰ –அந்த δαιμόνια, பிசாசுகளை, εἰ தவிர μὴ இல்லை ἐν –இல் τῷ –அந்த Βεελζεβοὺλ பெயெல்செபூல் ἄρχοντι அதிபதியால் τῶν –அவர்களுடைய δαιμονίων. பிசாசுகளின்.
பரிசேயர்கள் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள்.
25 εἰδὼς அறிந்து δὲ மேலும் τὰς –அந்த ἐνθυμήσεις எண்ணங்களை αὐτῶν, அவர்களுடைய, εἶπεν சொன்னார் αὐτοῖς, அவர்களுக்கு, Πᾶσα எல்லா βασιλεία ராஜ்யமும் μερισθεῖσα பிரிக்கப்பட்ட καθ’ –க்கு–எதிராக ἑαυτῆς தன்னுடைய ἐρημοῦται, பாழாகிறது, καὶ மற்றும் πᾶσα எல்லா πόλις நகரமும் ἢ அல்லது οἰκία வீடும் μερισθεῖσα பிரிக்கப்பட்ட καθ’ –க்கு–எதிராக ἑαυτῆς தன்னுடைய οὐ இல்லை σταθήσεται. நிலைக்காது.
இயேசு அவர்கள் யோசனைகளை அறிந்து, அவர்களைப் பார்த்து: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாகப்போகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.
26 καὶ மற்றும் εἰ என்றால் ὁ –அந்த Σατανᾶς சாத்தான் τὸν –அந்த Σατανᾶν சாத்தானை ἐκβάλλει, துரத்தினால், ἐφ’ –க்கு–எதிராக ἑαυτὸν தன்னையே ἐμερίσθη. பிரிந்திருக்கிறான். πῶς எப்படி οὖν ஆகையால் σταθήσεται நிலைக்கும் ἡ –அந்த βασιλεία ராஜ்யம் αὐτοῦ? அவனுடைய?
சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?
27 καὶ மற்றும் εἰ என்றால் ἐγὼ நான் ἐν –இல் Βεελζεβοὺλ பெயெல்செபூல் ἐκβάλλω துரத்துகிறேன் τὰ –அந்த δαιμόνια, பிசாசுகளை, οἱ –அவர்கள் υἱοὶ மகன்கள் ὑμῶν உங்களின் ἐν –இல் τίνι யாரால் ἐκβάλλουσιν? துரத்துகிறார்கள்? διὰ –நிமித்தம் τοῦτο, இதற்கு, αὐτοὶ அவர்களே κριταὶ நியாயாதிபதிகள் ἔσονται இருப்பார்கள் ὑμῶν. உங்களின்.
நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள்.
28 εἰ என்றால் δὲ மேலும் ἐν –இல் Πνεύματι ஆவியானவரால் Θεοῦ தேவனுடைய ἐγὼ நான் ἐκβάλλω துரத்துகிறேன் τὰ –அந்த δαιμόνια, பிசாசுகளை, ἄρα ஆகையால் ἔφθασεν வந்திருக்கிறது ἐφ’ –மேல் ὑμᾶς உங்கள் ἡ –அந்த βασιλεία ராஜ்யம் τοῦ –அவருடைய Θεοῦ. தேவனுடைய.
நான் தேவனுடைய ஆவியானவராலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே.
29 ἢ அல்லது πῶς எப்படி δύναταί கூடும் τις ஒருவன் εἰσελθεῖν நுழைய εἰς –இல் τὴν –அந்த οἰκίαν வீட்டில் τοῦ –அவருடைய ἰσχυροῦ பலமுள்ளவனின் καὶ மற்றும் τὰ –அந்த σκεύη பாண்டங்களை αὐτοῦ அவனுடைய ἁρπάσαι, கொள்ளையடிக்க, ἐὰν என்றால் μὴ இல்லை πρῶτον முதலில் δήσῃ கட்டுவான் τὸν –அந்த ἰσχυρόν? பலமுள்ளவனை? καὶ மற்றும் τότε அப்போது τὴν –அந்த οἰκίαν வீட்டை αὐτοῦ அவனுடைய διαρπάσει. கொள்ளையடிப்பான்.
அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டிற்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடமுடியும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.
30 ὁ –அவன் μὴ இல்லை ὢν இருக்கிற μετ’ –உடன் ἐμοῦ என்னுடன் κατ’ –க்கு–எதிராக ἐμοῦ எனக்கு ἐστιν; ஆவான்; καὶ மற்றும் ὁ –அவன் μὴ இல்லை συνάγων சேகரிக்கிற μετ’ –உடன் ἐμοῦ என்னுடன் σκορπίζει. சிதறடிக்கிறான்.
என்னோடு இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான்; என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
31 Διὰ –நிமித்தம் τοῦτο இதற்கு λέγω சொல்லுகிறேன் ὑμῖν, உங்களுக்கு, πᾶσα எல்லா ἁμαρτία பாவமும் καὶ மற்றும் βλασφημία தூஷணையும் ἀφεθήσεται மன்னிக்கப்படும் τοῖς –அந்த ἀνθρώποις; மனிதர்களுக்கு; ἡ –அந்த δὲ ஆனால் τοῦ –அவருடைய Πνεύματος ஆவியானவரின் βλασφημία தூஷணை οὐκ இல்லை ἀφεθήσεται மன்னிக்கப்படும்.
ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்த நிந்தனையும் மனிதர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான நிந்தனையோ மனிதர்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
32 καὶ மற்றும் ὃς எவன் ἐὰν என்றாலும் εἴπῃ சொல்வான் λόγον வார்த்தையை κατὰ –க்கு–எதிராக τοῦ –அவருடைய Υἱοῦ குமாரனின் τοῦ –அவருடைய ἀνθρώπου, மனிதனுடைய, ἀφεθήσεται மன்னிக்கப்படும் αὐτῷ; அவனுக்கு; ὃς எவன் δ’ மேலும் ἂν எவ்வாறாயினும் εἴπῃ சொல்வான் κατὰ –க்கு–எதிராக τοῦ –அவருடைய Πνεύματος ஆவியானவரின் τοῦ –அவருடைய Ἁγίου, பரிசுத்த, οὐκ இல்லை ἀφεθήσεται மன்னிக்கப்படும் αὐτῷ, அவனுக்கு, οὔτε இல்லை ἐν –இல் τούτῳ இந்த τῷ –அந்த αἰῶνι யுகத்திலும் οὔτε இல்லை ἐν –இல் τῷ –அந்த μέλλοντι. வரபோகிறதிலும்.
எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
33 Ἢ அல்லது ποιήσατε ஆக்குங்கள் τὸ –அந்த δένδρον மரத்தை καλὸν நல்ல καὶ மற்றும் τὸν –அந்த καρπὸν கனியை αὐτοῦ அவனுடைய καλόν, நல்ல, ἢ அல்லது ποιήσατε ஆக்குங்கள் τὸ –அந்த δένδρον மரத்தை σαπρὸν அழுகிய καὶ மற்றும் τὸν –அந்த καρπὸν கனியை αὐτοῦ அவனுடைய σαπρόν: அழுகிய: ἐκ –இருந்து γὰρ ஏனெனில் τοῦ –அவனுடைய καρποῦ, கனியிலிருந்து, τὸ –அந்த δένδρον மரம் γινώσκεται. அறியப்படுகிறது.
மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.
34 γεννήματα சந்ததிகளே ἐχιδνῶν, விரியன்களின், πῶς எப்படி δύνασθε கூடும் ἀγαθὰ நல்லவை λαλεῖν, பேச, πονηροὶ தீயவர்களாக ὄντες? இருக்கிற? ἐκ –இருந்து γὰρ ஏனெனில் τοῦ –அந்த περισσεύματος நிறைவிலிருந்து τῆς –அந்த καρδίας, இருதயத்தின், τὸ –அந்த στόμα வாய் λαλεῖ. பேசுகிறது.
விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாக இருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
35 ὁ –அந்த ἀγαθὸς நல்ல ἄνθρωπος மனிதன் ἐκ –இருந்து τοῦ –அந்த ἀγαθοῦ நல்ல θησαυροῦ பொக்கிஷத்திலிருந்து ἐκβάλλει வெளிக்கொண்டுவருகிறான் ἀγαθά; நல்லவை; καὶ மற்றும் ὁ –அந்த πονηρὸς தீய ἄνθρωπος மனிதன் ἐκ –இருந்து τοῦ –அந்த πονηροῦ தீய θησαυροῦ பொக்கிஷத்திலிருந்து ἐκβάλλει வெளிக்கொண்டுவருகிறான் πονηρά. தீயவை.
நல்ல மனிதன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனிதன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
36 λέγω சொல்லுகிறேன் δὲ மேலும் ὑμῖν, உங்களுக்கு, ὅτι என்று πᾶν எல்லா ῥῆμα வார்த்தையும் ἀργὸν வீணான ὃ எதை λαλήσουσιν பேசுவார்கள் οἱ –அவர்கள் ἄνθρωποι, மனிதர்கள், ἀποδώσουσιν கணக்குக்கொடுப்பார்கள் περὶ –குறித்து αὐτοῦ அதன்–குறித்து λόγον வார்த்தையை ἐν –இல் ἡμέρᾳ நாளில் κρίσεως. நியாயத்தீர்ப்பின்.
மனிதர்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும்குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
37 ἐκ –இருந்து γὰρ ஏனெனில் τῶν –உன்னுடைய λόγων வார்த்தைகளால் σου, உன்னுடைய, δικαιωθήσῃ, நீதிமானாக்கப்படுவாய், καὶ மற்றும் ἐκ –இருந்து τῶν –உன்னுடைய λόγων வார்த்தைகளால் σου, உன்னுடைய, καταδικασθήσῃ. தண்டிக்கப்படுவாய்.
ஏனென்றால், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
38 Τότε அப்போது ἀπεκρίθησαν பதிலளித்தார்கள் αὐτῷ அவருக்கு τινες சிலர் τῶν –அவர்களில் γραμματέων வேதபாரகர்களின் καὶ மற்றும் Φαρισαίων, பரிசேயர்களின், λέγοντες, சொல்லி, Διδάσκαλε, போதகரே, θέλομεν விரும்புகிறோம் ἀπὸ –இடமிருந்து σοῦ உன்னிடமிருந்து σημεῖον அடையாளத்தை ἰδεῖν. பார்க்க.
அப்பொழுது, வேதபண்டிதர்களிலும் பரிசேயர்களிலும் சிலர் அவரைப் பார்த்து: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள்.
39 ὁ –அவர் δὲ மேலும் ἀποκριθεὶς பதிலளித்து, εἶπεν சொன்னார் αὐτοῖς, அவர்களுக்கு, Γενεὰ தலைமுறை πονηρὰ தீய καὶ மற்றும் μοιχαλὶς விபசாரியான σημεῖον அடையாளத்தை ἐπιζητεῖ, தேடுகிறது, καὶ மற்றும் σημεῖον அடையாளம் οὐ இல்லை δοθήσεται கொடுக்கப்படும் αὐτῇ, அதற்கு, εἰ தவிர μὴ இல்லை τὸ –அந்த σημεῖον அடையாளம் Ἰωνᾶ யோனாவின் τοῦ –அவரான προφήτου. தீர்க்கதரிசியின்.
அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
40 ὥσπερ எப்படியெனில் γὰρ ஏனெனில் ἦν இருந்தான் Ἰωνᾶς யோனா ἐν –இல் τῇ –அந்த κοιλίᾳ வயிற்றில் τοῦ –அவருடைய κήτους மீனின் τρεῖς மூன்று ἡμέρας நாட்கள் καὶ மற்றும் τρεῖς மூன்று νύκτας, இரவுகள், οὕτως அவ்வாறே ἔσται இருப்பான் ὁ –அந்த Υἱὸς குமாரன் τοῦ –அவருடைய ἀνθρώπου மனிதனுடைய ἐν –இல் τῇ –அந்த καρδίᾳ இருதயத்தில் τῆς –அந்த γῆς பூமியின் τρεῖς மூன்று ἡμέρας நாட்கள் καὶ மற்றும் τρεῖς மூன்று νύκτας. இரவுகள்.
யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனிதகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாட்கள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
41 ἄνδρες மனிதர்கள் Νινευῖται நினவேயர்கள் ἀναστήσονται எழும்புவார்கள் ἐν –இல் τῇ –அந்த κρίσει நியாயத்தீர்ப்பில் μετὰ –உடன் τῆς –இந்த γενεᾶς தலைமுறையின் ταύτης, இந்த, καὶ மற்றும் κατακρινοῦσιν தண்டிப்பார்கள் αὐτήν; அதை; ὅτι ஏனெனில் μετενόησαν மனந்திரும்பினார்கள் εἰς –க்கு τὸ –அந்த κήρυγμα பிரசங்கத்திற்கு Ἰωνᾶ; யோனாவின்; καὶ மற்றும் ἰδοὺ, இதோ, πλεῖον மேலானவர் Ἰωνᾶ யோனாவிலும் ὧδε. இங்கே.
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
42 βασίλισσα ராணி νότου தென்னின் ἐγερθήσεται எழுப்பப்படுவாள் ἐν –இல் τῇ –அந்த κρίσει நியாயத்தீர்ப்பில் μετὰ –உடன் τῆς –இந்த γενεᾶς தலைமுறையின் ταύτης, இந்த, καὶ மற்றும் κατακρινεῖ தண்டிப்பாள் αὐτήν; அதை; ὅτι ஏனெனில் ἦλθεν வந்தாள் ἐκ –இருந்து τῶν –அந்த περάτων அந்தங்களிலிருந்து τῆς –அந்த γῆς பூமியின் ἀκοῦσαι கேட்க τὴν –அந்த σοφίαν ஞானத்தை Σολομῶνος; சாலமோனின்; καὶ மற்றும் ἰδοὺ, இதோ, πλεῖον மேலானவர் Σολομῶνος சாலமோனிலும் ὧδε. இங்கே.
தென்தேசத்து ராணி பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
43 Ὅταν எப்போது δὲ மேலும் τὸ –அந்த ἀκάθαρτον அசுத்தமான πνεῦμα ஆவி ἐξέλθῃ புறப்படும் ἀπὸ –இடமிருந்து τοῦ –அவருடைய ἀνθρώπου, மனிதனிடமிருந்து, διέρχεται கடந்துபோகுகிறது δι’ –வழியாக ἀνύδρων நீரற்ற τόπων, இடங்களில், ζητοῦν தேடுகிற ἀνάπαυσιν, இளைப்பாறுதலை, καὶ மற்றும் οὐχ இல்லை εὑρίσκει. கண்டுபிடிக்கிறது.
அசுத்தஆவி ஒரு மனிதனைவிட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:
44 τότε அப்போது λέγει, சொல்லுகிறது, Εἰς –இல் τὸν –என்னுடைய οἶκόν வீட்டிற்கு μου என்னுடைய ἐπιστρέψω, திரும்புவேன், ὅθεν எங்கிருந்து ἐξῆλθον. புறப்பட்டேன். καὶ மற்றும் ἐλθὸν, வந்து, εὑρίσκει கண்டுபிடிக்கிறது σχολάζοντα, வெறுமையாக, 〈καὶ〉 மற்றும் σεσαρωμένον, பெருக்கப்பட்ட, καὶ மற்றும் κεκοσμημένον. அலங்கரிக்கப்பட்ட.
நான் விட்டுவந்த என் வீட்டிற்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, அலங்கரிக்கப்பட்டதாகவும் இருப்பதைப் பார்த்து,
45 τότε அப்போது πορεύεται போகிறது καὶ மற்றும் παραλαμβάνει அழைத்துகொள்கிறது μεθ’ –உடன் ἑαυτοῦ தன்னுடன் ἑπτὰ ஏழு ἕτερα மற்ற πνεύματα ஆவிகளை πονηρότερα தீயவான ἑαυτοῦ, தன்னிலும், καὶ மற்றும் εἰσελθόντα நுழைந்து κατοικεῖ குடியிருக்கிறது ἐκεῖ; அங்கே; καὶ மற்றும் γίνεται ஆகிறது τὰ –அந்த ἔσχατα கடைசி τοῦ –அவருடைய ἀνθρώπου மனிதனுடைய ἐκείνου அந்த χείρονα மோசமான τῶν –அவருடைய πρώτων. முதலாவதிலும். οὕτως இவ்வாறே ἔσται இருக்கும் καὶ மேலும் τῇ –அந்த γενεᾷ தலைமுறைக்கு ταύτῃ இந்த τῇ –அந்த πονηρᾷ. தீய.
திரும்பிப்போய், தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்துக்கொண்டுவந்து, உள்ளே நுழைந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனிதனுடைய முன்னிலைமையைவிட அவனுடைய பின்னிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியார்களுக்கும் நடக்கும் என்றார்.
46 Ἔτι இன்னும் ‹δὲ› மேலும் αὐτοῦ அவருடைய λαλοῦντος பேசுகிறம்போது τοῖς –அந்த ὄχλοις, கூட்டங்களுக்கு, ἰδοὺ, இதோ, ἡ –அந்த μήτηρ தாய் καὶ மற்றும் οἱ –அவர்கள் ἀδελφοὶ சகோதரர்கள் αὐτοῦ அவருடைய εἱστήκεισαν நின்றிருந்தார்கள் ἔξω, வெளியே, ζητοῦντες தேடுகிறவர்கள் αὐτῷ அவருக்கு λαλῆσαι. பேச.
இப்படி அவர் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.
47 εἶπεν சொன்னான் δέ மேலும் τις ஒருவன் αὐτῷ, அவருக்கு, Ἰδοὺ, இதோ, ἡ –அந்த μήτηρ தாய் σου, உன்னுடைய, καὶ மற்றும் οἱ –அவர்கள் ἀδελφοί சகோதரர்கள் σου, உன்னுடைய, ἔξω வெளியே ἑστήκασιν, நிற்கிறார்கள், ζητοῦντές தேடுகிறவர்கள் σοι உனக்கு λαλῆσαι. பேச.
அப்பொழுது, ஒருவன் அவரைப் பார்த்து: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.
48 ὁ –அவர் δὲ மேலும் ἀποκριθεὶς, பதிலளித்து, εἶπεν சொன்னார் τῷ –அந்த λέγοντι சொல்கிறவனுக்கு αὐτῷ, அவருக்கு, Τίς யார் ἐστιν ஆவாள் ἡ –அந்த μήτηρ தாய் μου? என்னுடைய? καὶ மற்றும் τίνες யார் εἰσὶν ஆவார்கள் οἱ –அவர்கள் ἀδελφοί சகோதரர்கள் μου? என்னுடைய?
தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி,
49 καὶ மற்றும் ἐκτείνας நீட்டி τὴν –அந்த χεῖρα கையை αὐτοῦ அவருடைய ἐπὶ –மேல் τοὺς –அவருடைய μαθητὰς சீடர்களை αὐτοῦ அவருடைய εἶπεν, சொன்னார், Ἰδοὺ, இதோ, ἡ –அந்த μήτηρ தாய் μου என்னுடைய καὶ மற்றும் οἱ –அவர்கள் ἀδελφοί சகோதரர்கள் μου. என்னுடைய.
தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!
50 ὅστις எவனாகிலும் γὰρ ஏனெனில் ἂν எவ்வாறாயினும் ποιήσῃ செய்வான் τὸ –அந்த θέλημα சித்தத்தை τοῦ –அவருடைய Πατρός பிதாவின் μου என்னுடைய τοῦ –அவர் ἐν –இல் οὐρανοῖς, பரலோகங்களில், αὐτός அவனே μου என்னுடைய ἀδελφὸς, சகோதரன், καὶ மற்றும் ἀδελφὴ, சகோதரி, καὶ மற்றும் μήτηρ தாய் ἐστίν. ஆவான்.
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான் என்றார்.