1 Ἔλεγεν சொன்னார் δὲ –இப்போது παραβολὴν உவமை αὐτοῖς, அவர்களுக்கு πρὸς –குறித்து τὸ –அதை δεῖν வேண்டும் πάντοτε எப்பொழுதும் προσεύχεσθαι ஜெபிக்க αὐτοὺς, அவர்கள் καὶ மற்றும் μὴ இல்லை ἐνκακεῖν, சோர்ந்துபோகாமல்
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
2 λέγων, சொல்லி Κριτής நியாயாதிபதி τις ஒருவன் ἦν, இருந்தான் ἔν ஒரு τινι ஒரு πόλει, நகரத்தில் τὸν –அந்த Θεὸν தேவனுக்கு μὴ இல்லை φοβούμενος, பயப்படாதவன் καὶ மற்றும் ἄνθρωπον மனிதனை μὴ இல்லை ἐντρεπόμενος. மதிக்காதவன்
ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனிதர்களை மதிக்காதவனுமாக இருந்தான்.
3 χήρα விதவை δὲ –இப்போது ἦν இருந்தாள் ἐν –இல் τῇ –அந்த πόλει நகரத்தில் ἐκείνῃ, அந்த καὶ மற்றும் ἤρχετο வந்தாள் πρὸς –இடத்தில் αὐτὸν, அவனிடம் λέγουσα, சொல்லி Ἐκδίκησόν நியாயம்–செய் με எனக்கு ἀπὸ –இலிருந்து τοῦ –அந்த ἀντιδίκου எதிராளியிடமிருந்து μου. என்
அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.
4 καὶ மற்றும் οὐκ இல்லை ἤθελεν விரும்பினான் ἐπὶ –வரை χρόνον; காலம் μετὰ –பின்பு ταῦτα⇔ இவைகளுக்குப் δὲ –ஆனால் εἶπεν சொன்னான் ἐν –இல் ἑαυτῷ, தனக்குள் Εἰ –ஆனாலும் καὶ –கூட τὸν –அந்த Θεὸν தேவனுக்கு οὐ இல்லை φοβοῦμαι, பயப்படுகிறேன் οὐδὲ இல்லையென்றாலும் ἄνθρωπον மனிதனை ἐντρέπομαι, மதிக்கிறேன்
வெகுநாட்கள்வரை அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனிதர்களை மதிக்காமலும் இருந்தும்,
5 διά –ஆகையால் γε –உண்மையில் τὸ –இந்த παρέχειν கொடுக்கிறாள் μοι எனக்கு κόπον தொல்லை τὴν –இந்த χήραν விதவை ταύτην, இவளுக்கு ἐκδικήσω நியாயம்–செய்வேன் αὐτήν, அவளுக்கு ἵνα –இல்லாவிட்டால் μὴ இல்லை εἰς –இறுதியில் τέλος முடிவு ἐρχομένη, வந்து ὑπωπιάζῃ அலைக்கழிக்கிறாள் με. என்னை
இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவுசெய்யாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
6 Εἶπεν சொன்னார் δὲ –இப்போது ὁ –அந்த Κύριος, ஆண்டவர் Ἀκούσατε கேளுங்கள் τί என்ன ὁ –அந்த κριτὴς நியாயாதிபதி τῆς –உடைய ἀδικίας அநீதியின் λέγει. சொல்கிறான்
பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
7 ὁ –அந்த δὲ –இப்போது Θεὸς தேவன் οὐ இல்லை μὴ இல்லையா ποιήσῃ செய்வார் τὴν –அந்த ἐκδίκησιν நீதியை τῶν –உடைய ἐκλεκτῶν தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு αὐτοῦ, அவருடைய τῶν –அந்த βοώντων கூப்பிடுகிறவர்களின் αὐτῷ அவரிடம் ἡμέρας பகலும் καὶ மற்றும் νυκτός, இரவும் καὶ மற்றும் μακροθυμεῖ நீடிய–பொறுமையாய்–இருக்கிறார் ἐπ’ –குறித்து αὐτοῖς? அவர்களுக்கு
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் காரியத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
8 λέγω சொல்கிறேன் ὑμῖν, உங்களுக்கு ὅτι –என்று ποιήσει செய்வார் τὴν –அந்த ἐκδίκησιν நீதியை αὐτῶν அவர்களுடைய ἐν –இல் τάχει. சீக்கிரத்தில் πλὴν ஆனாலும் ὁ –அந்த Υἱὸς குமாரன் τοῦ –உடைய ἀνθρώπου மனிதனுடைய ἐλθὼν, வந்தபோது ἆρα நிச்சயமாக εὑρήσει கண்டடைவாரா τὴν –அந்த πίστιν விசுவாசத்தை ἐπὶ –மேல் τῆς –அந்த γῆς? பூமியில்
சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனாலும் மனிதகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
9 Εἶπεν சொன்னார் δὲ –இப்போது καὶ –கூட πρός –நோக்கி τινας சிலரை τοὺς –அந்த πεποιθότας நம்பிக்கை–வைத்திருக்கிற ἐφ’ –மேல் ἑαυτοῖς தங்களை ὅτι –என்று εἰσὶν இருக்கிறார்கள் δίκαιοι நீதிமான்கள் καὶ மற்றும் ἐξουθενοῦντας அலட்சியப்படுத்துகிற τοὺς –அந்த λοιποὺς, மற்றவர்களை τὴν –இந்த παραβολὴν உவமையை ταύτην: இதை
அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
10 Ἄνθρωποι மனிதர்கள் δύο இரண்டு ἀνέβησαν ஏறினார்கள் εἰς –இல் τὸ –அந்த ἱερὸν தேவாலயத்தில் προσεύξασθαι; ஜெபிக்க ὁ –அந்த εἷς ஒருவன் Φαρισαῖος, பரிசேயன் καὶ மற்றும் ὁ –அந்த ἕτερος மற்றவன் τελώνης. ஆயக்காரன்
இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன்.
11 ὁ –அந்த Φαρισαῖος, பரிசேயன் σταθεὶς நின்று ταῦτα⇔ இவைகளை «πρὸς –தனக்குள் ἑαυτὸν», தனக்குள் προσηύχετο, ஜெபித்தான் Ὁ –ஓ Θεός, தேவனே εὐχαριστῶ நன்றி–செலுத்துகிறேன் σοι உமக்கு ὅτι –என்று οὐκ இல்லை εἰμὶ இருக்கிறேன் ὥσπερ –போல οἱ –அந்த λοιποὶ மற்ற τῶν –உடைய ἀνθρώπων, மனிதர்கள் ἅρπαγες, பறிப்போர் ἄδικοι, அநீதியானவர்கள் μοιχοί, விபசாரக்காரர் ἢ அல்லது καὶ –கூட ὡς –போல οὗτος இந்த ὁ –அந்த τελώνης. ஆயக்காரன்
பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
12 νηστεύω உபவாசிக்கிறேன் δὶς இரண்டுமுறை τοῦ –உடைய σαββάτου; ஓய்வுநாளில் ἀποδεκατῶ தசமபாகம்–கொடுக்கிறேன் πάντα, எல்லாவற்றிலும் ὅσα எவ்வளவு κτῶμαι. சம்பாதிக்கிறேன்
வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
13 ὁ –அந்த δὲ –ஆனால் τελώνης, ஆயக்காரன் μακρόθεν தூரத்தில் ἑστὼς நின்று οὐκ இல்லை ἤθελεν விரும்பினான் οὐδὲ –கூட τοὺς –அந்த ὀφθαλμοὺς கண்களை ἐπᾶραι உயர்த்த εἰς –நோக்கி τὸν –அந்த οὐρανόν, வானத்தை ἀλλ’ ஆனால் ἔτυπτεν அடித்துக்கொண்டான் τὸ –அவனுடைய στῆθος மார்பை αὐτοῦ, அவனுடைய λέγων சொல்லி Ὁ, –ஓ Θεός, தேவனே ἱλάσθητί கிருபையாயிரும் μοι, எனக்கு τῷ –அந்த ἁμαρτωλῷ! பாவியாகிய
வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான்.
14 λέγω சொல்கிறேன் ὑμῖν, உங்களுக்கு κατέβη இறங்கினான் οὗτος இவன் δεδικαιωμένος நீதிமானாக்கப்பட்டவனாய் εἰς –நோக்கி τὸν –தன் οἶκον வீட்டுக்கு αὐτοῦ, அவனுடைய παρ’ –விட ἐκεῖνον. அவனைவிட ὅτι ஏனெனில் πᾶς ஒவ்வொருவனும் ὁ –அந்த ὑψῶν உயர்த்துகிற ἑαυτὸν தன்னை ταπεινωθήσεται; தாழ்த்தப்படுவான் ὁ –அந்த δὲ –ஆனால் ταπεινῶν தாழ்த்துகிற ἑαυτὸν தன்னை ὑψωθήσεται. உயர்த்தப்படுவான்
அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
15 Προσέφερον கொண்டுவந்தார்கள் δὲ –இப்போது αὐτῷ அவரிடம் καὶ –கூட τὰ –அந்த βρέφη, குழந்தைகளை ἵνα –என்று αὐτῶν அவர்களை ἅπτηται; தொடும்படி ἰδόντες கண்டு δὲ, –இப்போது οἱ –அந்த μαθηταὶ சீடர்கள் ἐπετίμων அதட்டினார்கள் αὐτοῖς. அவர்களை
பின்பு குழந்தைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீடர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
16 ὁ –அந்த δὲ –ஆனால் Ἰησοῦς, இயேசு προσεκαλέσατο அழைத்தார் αὐτὰ, அவர்களை λέγων, சொல்லி Ἄφετε விடுங்கள் τὰ –அந்த παιδία சிறுபிள்ளைகளை ἔρχεσθαι வர πρός –நோக்கி με, என்னிடம் καὶ மற்றும் μὴ இல்லை κωλύετε தடுக்காதீர்கள் αὐτά; அவர்களை τῶν –உடைய γὰρ ஏனெனில் τοιούτων இப்படிப்பட்டவர்களுடையது ἐστὶν ஆகும் ἡ –அந்த βασιλεία ராஜ்யம் τοῦ –உடைய Θεοῦ. தேவனுடைய
இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
17 ἀμὴν ஆமென் λέγω சொல்கிறேன் ὑμῖν, உங்களுக்கு ὃς எவனாகிலும் ἂν –ஆனால் μὴ இல்லை δέξηται ஏற்றுக்கொள்கிறான் τὴν –அந்த βασιλείαν ராஜ்யத்தை τοῦ –உடைய Θεοῦ தேவனுடைய ὡς –போல παιδίον, சிறுபிள்ளை οὐ இல்லை μὴ ஒருபோதும் εἰσέλθῃ நுழைவான் εἰς –இல் αὐτήν. அதில்
எவனாவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
18 Καὶ மற்றும் ἐπηρώτησέν கேட்டான் τις ஒரு αὐτὸν அவரை ἄρχων, அதிகாரி λέγων, சொல்லி Διδάσκαλε போதகரே ἀγαθέ, நல்ல τί என்ன ποιήσας, செய்து ζωὴν ஜீவனை αἰώνιον நித்திய κληρονομήσω? சுதந்தரிப்பேன்
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.
19 εἶπεν சொன்னார் δὲ –இப்போது αὐτῷ அவனுக்கு ὁ –அந்த Ἰησοῦς, இயேசு Τί ஏன் με என்னை λέγεις சொல்கிறாய் ἀγαθόν? நல்லவன் οὐδεὶς ஒருவனும்–இல்லை ἀγαθὸς, நல்லவன் εἰ –அல்லாமல் μὴ இல்லை εἷς, ஒருவர் ὁ –அந்த Θεός. தேவன்
அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
20 τὰς –அந்த ἐντολὰς கற்பனைகளை οἶδας: அறிவாய் Μὴ இல்லை μοιχεύσῃς; விபசாரம்–செய்யாதே Μὴ இல்லை φονεύσῃς; கொலை–செய்யாதே Μὴ இல்லை κλέψῃς; திருடாதே Μὴ இல்லை ψευδομαρτυρήσῃς; பொய்ச்சாட்சி–சொல்லாதே Τίμα கனம்பண்ணு τὸν –அந்த πατέρα தகப்பனை σου, உன் καὶ மற்றும் τὴν –அந்த μητέρα. தாயை
விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கட்டளைகளை நீ தெரிந்திருக்கிறாயே என்றார்.
21 ὁ –அந்த δὲ –ஆனால் εἶπεν, சொன்னான் Ταῦτα இவை πάντα எல்லாவற்றையும் ἐφύλαξα காத்துவந்தேன் ἐκ –இலிருந்து νεότητος இளமையிலிருந்து ‹μου›. என்
அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
22 ἀκούσας கேட்டபின் δὲ, –இப்போது ὁ –அந்த Ἰησοῦς இயேசு εἶπεν சொன்னார் αὐτῷ, அவனுக்கு Ἔτι இன்னும் ἕν ஒன்று σοι உனக்கு λείπει: குறைவாயிருக்கிறது πάντα, எல்லாவற்றையும் ὅσα எவ்வளவு ἔχεις, உனக்குள்ளதை πώλησον, விற்று καὶ மற்றும் διάδος பகிர்ந்துகொடு πτωχοῖς, ஏழைகளுக்கு καὶ மற்றும் ἕξεις உனக்கு–இருக்கும் θησαυρὸν பொக்கிஷம் ἐν –இல் τοῖς –அந்த οὐρανοῖς; பரலோகத்தில் καὶ மற்றும் δεῦρο, வா ἀκολούθει பின்பற்று μοι. என்னை
இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
23 ὁ –அந்த δὲ –ஆனால் ἀκούσας கேட்டபின் ταῦτα, இவைகளை περίλυπος மிகவும்–துக்கமடைந்தான் ἐγενήθη; ஆனான் ἦν இருந்தான் γὰρ ஏனெனில் πλούσιος ஐசுவரியவான் σφόδρα. மிகவும்
அவன் அதிக செல்வந்தனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
24 ἰδὼν கண்டு δὲ –இப்போது αὐτὸν, அவனை ὁ –அந்த Ἰησοῦς இயேசு [περίλυπον மிகவும்–துக்கமடைந்தவனாய் γενόμενον], ஆனவனை εἶπεν, சொன்னார் Πῶς எவ்வளவு δυσκόλως கஷ்டமாய் οἱ –அந்த τὰ –அந்த χρήματα ஐசுவரியங்களை ἔχοντες, உடையவர்கள் εἰς –இல் τὴν –அந்த βασιλείαν ராஜ்யத்தில் τοῦ –உடைய Θεοῦ தேவனுடைய εἰσπορεύονται. நுழைவார்கள்
அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது.
25 εὐκοπώτερον எளிதாயிருக்கும் γάρ ஏனெனில் ἐστιν ஆகும் κάμηλον ஒட்டகம் διὰ –வழியாக τρήματος துவாரத்தின் βελόνης ஊசியின் εἰσελθεῖν, நுழைவது ἢ –விட πλούσιον ஐசுவரியவான் εἰς –இல் τὴν –அந்த βασιλείαν ராஜ்யத்தில் τοῦ –உடைய Θεοῦ தேவனுடைய εἰσελθεῖν. நுழைவது
செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
26 εἶπαν சொன்னார்கள் δὲ –இப்போது οἱ –அந்த ἀκούσαντες, கேட்டவர்கள் Καὶ மற்றும் τίς யார் δύναται கூடும் σωθῆναι? இரட்சிக்கப்பட
அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
27 ὁ –அந்த δὲ –ஆனால் εἶπεν, சொன்னார் Τὰ –அந்த ἀδύνατα கூடாதவைகள் παρὰ –இடத்தில் ἀνθρώποις, மனிதர்களிடம் δυνατὰ கூடியவைகள் παρὰ –இடத்தில் τῷ –அந்த Θεῷ தேவனிடம் ἐστιν. ஆகும்
அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
28 Εἶπεν சொன்னான் δὲ –இப்போது ὁ –அந்த Πέτρος, பேதுரு Ἰδοὺ, இதோ ἡμεῖς நாங்கள் ἀφέντες விட்டுவிட்டு τὰ –அந்த ἴδια எங்களுடையவைகளை ἠκολουθήσαμέν பின்பற்றினோம் σοι. உம்மை
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
29 ὁ –அந்த δὲ –ஆனால் εἶπεν சொன்னார் αὐτοῖς, அவர்களுக்கு Ἀμὴν ஆமென் λέγω சொல்கிறேன் ὑμῖν, உங்களுக்கு ὅτι –என்று οὐδείς ஒருவனும்–இல்லை ἐστιν இருக்கிறான் ὃς எவன் ἀφῆκεν விட்டுவிட்டான் οἰκίαν, வீட்டை ἢ அல்லது γυναῖκα, மனைவியை ἢ அல்லது ἀδελφοὺς, சகோதரர்களை ἢ அல்லது γονεῖς, பெற்றோரை ἢ அல்லது τέκνα, பிள்ளைகளை ἕνεκεν –நிமித்தம் τῆς –உடைய βασιλείας ராஜ்யத்தின் τοῦ –உடைய Θεοῦ, தேவனுடைய
அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,
30 ὃς எவன் οὐχὶ இல்லை μὴ ஒருபோதும் ἀπολάβῃ திரும்ப–பெறுவான் πολλαπλασίονα பன்மடங்கு ἐν –இல் τῷ –இந்த καιρῷ காலத்தில் τούτῳ; இதில் καὶ மற்றும் ἐν –இல் τῷ –அந்த αἰῶνι யுகத்தில் τῷ –அந்த ἐρχομένῳ, வருகிற ζωὴν ஜீவனை αἰώνιον. நித்திய
இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
31 Παραλαβὼν எடுத்துக்கொண்டு δὲ –இப்போது τοὺς –அந்த δώδεκα, பன்னிரண்டுபேரை εἶπεν சொன்னார் πρὸς –நோக்கி αὐτούς, அவர்களை Ἰδοὺ, இதோ ἀναβαίνομεν போகிறோம் εἰς –நோக்கி Ἰερουσαλήμ, எருசலேமுக்கு καὶ மற்றும் τελεσθήσεται நிறைவேற்றப்படும் πάντα எல்லாவற்றையும் τὰ –அந்த γεγραμμένα எழுதப்பட்டவைகள் διὰ –மூலமாய் τῶν –உடைய προφητῶν தீர்க்கதரிசிகளின் τῷ –அந்த Υἱῷ குமாரனுக்கு τοῦ –உடைய ἀνθρώπου. மனிதனுடைய
பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனிதகுமாரனைக்குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
32 παραδοθήσεται ஒப்புக்கொடுக்கப்படுவார் γὰρ ஏனெனில் τοῖς –அந்த ἔθνεσιν, புறஜாதிகளுக்கு καὶ மற்றும் ἐμπαιχθήσεται, பரிகசிக்கப்படுவார் καὶ மற்றும் ὑβρισθήσεται, அவமதிக்கப்படுவார் καὶ மற்றும் ἐμπτυσθήσεται. துப்பப்படுவார்
எப்படியென்றால், அவர் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரிகாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.
33 καὶ மற்றும் μαστιγώσαντες, அடித்தபின் ἀποκτενοῦσιν கொன்றுபோடுவார்கள் αὐτόν; அவரை καὶ மற்றும் τῇ –அந்த ἡμέρᾳ நாளில் τῇ –அந்த τρίτῃ, மூன்றாம் ἀναστήσεται. உயிர்த்தெழுவார்
அவரை சாட்டையினால் அடித்து, கொலைசெய்வார்கள்; மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
34 καὶ மற்றும் αὐτοὶ அவர்கள் οὐδὲν ஒன்றும் τούτων இவைகளில் συνῆκαν; புரிந்துகொள்ளவில்லை καὶ மற்றும் ἦν இருந்தது τὸ –இந்த ῥῆμα வார்த்தை τοῦτο இது κεκρυμμένον மறைக்கப்பட்டிருந்தது ἀπ’ –இலிருந்து αὐτῶν; அவர்களுக்கு καὶ மற்றும் οὐκ இல்லை ἐγίνωσκον அறிந்துகொள்ளவில்லை τὰ –அந்த λεγόμενα. சொல்லப்பட்டவைகளை
இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாக இருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
35 Ἐγένετο நடந்தது δὲ –இப்போது ἐν –இல் τῷ –அந்த ἐγγίζειν நெருங்கும்போது αὐτὸν அவர் εἰς –நோக்கி Ἰεριχὼ, எரிகோவை τυφλός குருடன் τις ஒருவன் ἐκάθητο உட்கார்ந்திருந்தான் παρὰ –அருகே τὴν –அந்த ὁδὸν, வழியோரத்தில் ἐπαιτῶν. பிச்சை–எடுத்துக்கொண்டிருந்தான்
பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
36 ἀκούσας கேட்டு δὲ –இப்போது ὄχλου கூட்டம் διαπορευομένου, கடந்துபோகிறதை ἐπυνθάνετο விசாரித்தான் τί என்ன εἴη என்று τοῦτο. இது
மக்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.
37 ἀπήγγειλαν தெரிவித்தார்கள் δὲ –இப்போது αὐτῷ அவனுக்கு ὅτι, –என்று Ἰησοῦς இயேசு ὁ –அந்த Ναζωραῖος நாசரேயன் παρέρχεται. கடந்துபோகிறார்
நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
38 καὶ மற்றும் ἐβόησεν கூப்பிட்டான் λέγων, சொல்லி Ἰησοῦ, இயேசுவே υἱὲ குமாரனே Δαυίδ, தாவீதின் ἐλέησόν இரக்கம்–வையும் με. என்மேல்
முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான்.
39 καὶ மற்றும் οἱ –அந்த προάγοντες முன்னே–செல்கிறவர்கள் ἐπετίμων அதட்டினார்கள் αὐτῷ, அவனை ἵνα –என்று σιγήσῃ. அமைதியாயிருக்க αὐτὸς அவனோ δὲ –ஆனால் πολλῷ மிகவும் μᾶλλον அதிகமாய் ἔκραζεν, கூப்பிட்டான் Υἱὲ குமாரனே Δαυίδ, தாவீதின் ἐλέησόν இரக்கம்–வையும் με. என்மேல்
இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
40 σταθεὶς நின்று δὲ, –இப்போது ὁ –அந்த Ἰησοῦς இயேசு ἐκέλευσεν கட்டளையிட்டார் αὐτὸν அவனை ἀχθῆναι கொண்டுவரும்படி πρὸς –நோக்கி αὐτόν. அவரிடம் ἐγγίσαντος நெருங்கியபோது δὲ, –இப்போது αὐτοῦ அவனுடைய ἐπηρώτησεν கேட்டார் αὐτόν, அவனை
அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி:
41 Τί என்ன σοι உனக்கு θέλεις விரும்புகிறாய் ποιήσω? செய்ய ὁ –அந்த δὲ –இப்போது εἶπεν, சொன்னான் Κύριε, ஆண்டவரே ἵνα –என்று ἀναβλέψω. பார்வையடையும்படி
நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
42 καὶ மற்றும் ὁ –அந்த Ἰησοῦς இயேசு εἶπεν சொன்னார் αὐτῷ, அவனுக்கு Ἀνάβλεψον; பார்வையடை ἡ –உன் πίστις விசுவாசம் σου உன் σέσωκέν இரட்சித்தது σε. உன்னை
இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
43 καὶ மற்றும் παραχρῆμα உடனே ἀνέβλεψεν, பார்வையடைந்தான் καὶ மற்றும் ἠκολούθει பின்பற்றினான் αὐτῷ, அவரை δοξάζων மகிமைப்படுத்தி τὸν –அந்த Θεόν. தேவனை καὶ மற்றும் πᾶς எல்லா ὁ –அந்த λαὸς, ஜனங்கள் ἰδὼν, கண்டு ἔδωκεν கொடுத்தார்கள் αἶνον துதியை τῷ –அந்த Θεῷ. தேவனுக்கு
உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்னேசென்றான். மக்களெல்லோரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.