1 Τί என்ன οὖν ஆகையால் ἐροῦμεν? சொல்வோம்? ἐπιμένωμεν தொடருவோமா τῇ –ன் ἁμαρτίᾳ, பாவம், ἵνα –ன்பொருட்டு ἡ –ன் χάρις கிருபை πλεονάσῃ? பெருகுமா?
ஆகவே, என்னசொல்லுவோம்? கிருபை பெருகுவதற்காகப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? சொல்லக்கூடாதே.
2 μὴ இல்லையா γένοιτο! ஆகட்டும்! οἵτινες யாரெனில் ἀπεθάνομεν மரித்தோம் τῇ –ன் ἁμαρτίᾳ, பாவம், πῶς எப்படி ἔτι இன்னும் ζήσομεν பிழைப்போம் ἐν –இல் αὐτῇ? அதில்?
பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி வாழ்வோம்?
3 ἢ அல்லது ἀγνοεῖτε அறியாதிருக்கிறீர்களா ὅτι, என்று, ὅσοι எத்தனைபேர் ἐβαπτίσθημεν ஞானஸ்நானம்–பெற்றோம் εἰς –க்காக Χριστὸν கிறிஸ்து Ἰησοῦν, இயேசு, εἰς –க்காக τὸν –ன் θάνατον மரணம் αὐτοῦ அவருடைய ἐβαπτίσθημεν? ஞானஸ்நானம்–பெற்றோம்?
கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமல் இருக்கிறீர்களா?
4 συνετάφημεν ஒன்றாக–அடக்கப்பட்டோம் οὖν ஆகையால் αὐτῷ, அவரோடு, διὰ மூலம் τοῦ –ன் βαπτίσματος ஞானஸ்நானம் εἰς –க்காக τὸν –ன் θάνατον, மரணம், ἵνα –ன்பொருட்டு ὥσπερ எப்படி ἠγέρθη எழுப்பிக்கப்பட்டாரோ Χριστὸς கிறிஸ்து ἐκ –இலிருந்து νεκρῶν, மரித்தோர், διὰ மூலம் τῆς –ன் δόξης மகிமை τοῦ –ன் Πατρός, பிதா, οὕτως அப்படியே καὶ –ம் ἡμεῖς நாம் ἐν –இல் καινότητι புதுமை ζωῆς ஜீவனத்தின் περιπατήσωμεν. நடப்போம்.
மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாக நடந்துகொள்வதற்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டோம்.
5 εἰ ஆனால் γὰρ ஏனெனில் σύμφυτοι ஒன்றாக–நடப்பட்டவர்கள் γεγόναμεν ஆகியிருக்கிறோம் τῷ –ன் ὁμοιώματι சாயல் τοῦ –ன் θανάτου மரணம் αὐτοῦ, அவருடைய, ἀλλὰ ஆனால் καὶ –ம் τῆς –ன் ἀναστάσεως உயிர்த்தெழுதல் ἐσόμεθα; இருப்போம்;
ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
6 τοῦτο இதை γινώσκοντες, அறிந்து, ὅτι என்று ὁ –ன் παλαιὸς பழைய ἡμῶν நம்முடைய ἄνθρωπος மனிதன் συνεσταυρώθη, ஒன்றாக–சிலுவையில்–அறையப்பட்டது, ἵνα –ன்பொருட்டு καταργηθῇ அழிக்கப்படும் τὸ –ன் σῶμα சரீரம் τῆς –ன் ἁμαρτίας, பாவத்தின், τοῦ –ன் μηκέτι இனிமேல்–இல்லை δουλεύειν அடிமைசெய்ய ἡμᾶς நாம் τῇ –ன் ἁμαρτίᾳ. பாவம்.
நாம் இனிப் பாவத்திற்கு அடிமையாக இல்லாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோவதற்காக, நம்முடைய பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
7 ὁ –ன் γὰρ ஏனெனில் ἀποθανὼν, மரித்தவன், δεδικαίωται நீதிமானாக்கப்பட்டிருக்கிறான் ἀπὸ –இலிருந்து τῆς –ன் ἁμαρτίας. பாவம்.
மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
8 εἰ ஆனால் δὲ ஆனால் ἀπεθάνομεν மரித்தோம் σὺν ஒன்றாக Χριστῷ, கிறிஸ்துவோடு, πιστεύομεν விசுவாசிக்கிறோம் ὅτι என்று καὶ –ம் συζήσομεν ஒன்றாக–பிழைப்போம் αὐτῷ, அவரோடு,
எனவே, கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
9 εἰδότες அறிந்து ὅτι என்று Χριστὸς, கிறிஸ்து, ἐγερθεὶς எழுப்பிக்கப்பட்டு ἐκ –இலிருந்து νεκρῶν, மரித்தோர், οὐκέτι இனிமேல்–இல்லை ἀποθνῄσκει; மரிக்கிறார்; θάνατος மரணம் αὐτοῦ அவருடைய οὐκέτι இனிமேல்–இல்லை κυριεύει. ஆண்டுகொள்கிறது.
மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்ளுவதில்லை.
10 ὃ எதை γὰρ ஏனெனில் ἀπέθανεν, மரித்தாரோ, τῇ –ன் ἁμαρτίᾳ பாவம் ἀπέθανεν மரித்தார் ἐφάπαξ; ஒரே–தடவையாக; ὃ எதை δὲ ஆனால் ζῇ, பிழைக்கிறாரோ, ζῇ பிழைக்கிறார் τῷ –ன் Θεῷ. தேவன்.
அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேமுறை மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
11 οὕτως அப்படியே καὶ –ம் ὑμεῖς, நீங்கள், λογίζεσθε எண்ணுங்கள் ἑαυτοὺς உங்களையே εἶναι இருக்க νεκροὺς மரித்தவர்களாய் μὲν உண்மையில் τῇ –ன் ἁμαρτίᾳ, பாவம், ζῶντας பிழைத்தவர்களாய் δὲ ஆனால் τῷ –ன் Θεῷ, தேவன், ἐν –இல் Χριστῷ கிறிஸ்து Ἰησοῦ. இயேசு.
அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
12 Μὴ இல்லை οὖν ஆகையால் βασιλευέτω ஆட்சியாளும் ἡ –ன் ἁμαρτία பாவம் ἐν –இல் τῷ –ன் θνητῷ மரணமுள்ள ὑμῶν உங்களுடைய σώματι, சரீரம், εἰς –க்காக τὸ –ன் ὑπακούειν கீழ்ப்படிய ταῖς –ன் ἐπιθυμίαις இச்சைகள் αὐτοῦ. அதனுடைய.
ஆகவே, நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படிவதற்காக, மரணத்திற்குரிய உங்களுடைய சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யாமல் இருக்கட்டும்.
13 μηδὲ இல்லை–ம் παριστάνετε நிறுத்துங்கள் τὰ –ன் μέλη அங்கங்கள் ὑμῶν, உங்களுடைய, ὅπλα ஆயுதங்கள் ἀδικίας அநீதியின் τῇ –ன் ἁμαρτίᾳ, பாவம், ἀλλὰ ஆனால் παραστήσατε நிறுத்துங்கள் ἑαυτοὺς உங்களையே τῷ –ன் Θεῷ, தேவன், ὡσεὶ –போல் ἐκ –இலிருந்து νεκρῶν மரித்தோர் ζῶντας, பிழைத்தவர்களாய், καὶ மற்றும் τὰ –ன் μέλη அங்கங்கள் ὑμῶν, உங்களுடைய, ὅπλα ஆயுதங்கள் δικαιοσύνης நீதியின் τῷ –ன் Θεῷ. தேவன்.
நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
14 ἁμαρτία பாவம் γὰρ ஏனெனில் ὑμῶν உங்களை οὐ இல்லை κυριεύσει, ஆண்டுகொள்ளும், οὐ இல்லை γάρ ஏனெனில் ἐστε இருக்கிறீர்கள் ὑπὸ –கீழ் νόμον, நியாயப்பிரமாணம், ἀλλὰ ஆனால் ὑπὸ –கீழ் χάριν. கிருபை.
நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறதினால், பாவம் உங்களை மேற்கொள்ளமுடியாது.
15 Τί என்ன οὖν? ஆகையால்? ἁμαρτήσωμεν பாவம்செய்வோமா ὅτι ஏனெனில் οὐκ இல்லை ἐσμὲν இருக்கிறோம் ὑπὸ –கீழ் νόμον, நியாயப்பிரமாணம், ἀλλὰ ஆனால் ὑπὸ –கீழ் χάριν? கிருபை? μὴ இல்லையா γένοιτο! ஆகட்டும்!
இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறதினால், பாவம் செய்யலாமா? செய்யக்கூடாதே.
16 οὐκ இல்லையா οἴδατε அறிகிறீர்கள் ὅτι என்று ᾧ யாருக்கு παριστάνετε நிறுத்துகிறீர்கள் ἑαυτοὺς, உங்களையே, δούλους அடிமைகள் εἰς –க்காக ὑπακοήν, கீழ்ப்படிதல், δοῦλοί அடிமைகள் ἐστε இருக்கிறீர்கள் ᾧ யாருக்கு ὑπακούετε -- கீழ்ப்படிகிறீர்களோ– ἤτοι அதாவது ἁμαρτίας பாவத்தின் εἰς –க்காக θάνατον, மரணம், ἢ அல்லது ὑπακοῆς கீழ்ப்படிதலின் εἰς –க்காக δικαιοσύνην? நீதி?
மரணத்திற்குரிய பாவத்திற்கானாலும், நீதிக்குரிய கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிவதற்காக உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்களா?
17 χάρις கிருபை δὲ ஆனால் τῷ –ன் Θεῷ, தேவன், ὅτι ஏனெனில் ἦτε இருந்தீர்கள் δοῦλοι அடிமைகள் τῆς –ன் ἁμαρτίας, பாவத்தின், ὑπηκούσατε கீழ்ப்படிந்தீர்கள் δὲ ஆனால் ἐκ –இலிருந்து καρδίας, இருதயம், εἰς –க்காக ὃν எதில் παρεδόθητε ஒப்புக்கொடுக்கப்பட்டீர்கள் τύπον மாதிரி διδαχῆς. போதனையின்.
முன்பு நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
18 ἐλευθερωθέντες விடுவிக்கப்பட்டு δὲ ஆனால் ἀπὸ –இலிருந்து τῆς –ன் ἁμαρτίας, பாவம், ἐδουλώθητε அடிமையாக்கப்பட்டீர்கள் τῇ –ன் δικαιοσύνῃ. நீதி.
பாவத்திலிருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
19 ἀνθρώπινον மனிதனுக்குரியதாக λέγω, சொல்கிறேன், διὰ மூலம் τὴν –ன் ἀσθένειαν பலவீனம் τῆς –ன் σαρκὸς மாம்சம் ὑμῶν. உங்களுடைய. ὥσπερ எப்படி γὰρ ஏனெனில் παρεστήσατε நிறுத்தினீர்கள் τὰ –ன் μέλη அங்கங்கள் ὑμῶν உங்களுடைய δοῦλα அடிமைகளாக τῇ –ன் ἀκαθαρσίᾳ, அசுத்தம், καὶ மற்றும் τῇ –ன் ἀνομίᾳ அக்கிரமம் εἰς –க்காக τὴν –ன் ἀνομίαν, அக்கிரமம், οὕτως அப்படியே νῦν இப்போது παραστήσατε நிறுத்துங்கள் τὰ –ன் μέλη அங்கங்கள் ὑμῶν, உங்களுடைய, δοῦλα அடிமைகளாக τῇ –ன் δικαιοσύνῃ நீதி εἰς –க்காக ἁγιασμόν. பரிசுத்தமாக்குதல்.
உங்களுடைய சரீர பலவீனத்தினால் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன். அக்கிரமத்தைச் செய்வதற்காக முன்பே நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதைச் செய்வதற்காக உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.
20 ὅτε எப்போது γὰρ ஏனெனில் δοῦλοι அடிமைகள் ἦτε இருந்தீர்கள் τῆς –ன் ἁμαρτίας, பாவத்தின், ἐλεύθεροι சுதந்திரர்களாய் ἦτε இருந்தீர்கள் τῇ –ன் δικαιοσύνῃ. நீதி.
பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாக இருந்தகாலத்தில் நீதிக்கு விலகினவர்களாக இருந்தீர்கள்.
21 τίνα என்ன οὖν ஆகையால் καρπὸν கனி εἴχετε உடையவர்களாய்–இருந்தீர்கள் τότε, அப்போது, ἐφ’ –மேல் οἷς எதில் νῦν இப்போது ἐπαισχύνεσθε? வெட்கப்படுகிறீர்கள்? τὸ –ன் γὰρ ஏனெனில் τέλος முடிவு ἐκείνων அவைகளின் θάνατος. மரணம்.
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தெரிகிற காரியங்களினாலே அந்தகாலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
22 νυνὶ இப்போது δέ, ஆனால், ἐλευθερωθέντες விடுவிக்கப்பட்டு ἀπὸ –இலிருந்து τῆς –ன் ἁμαρτίας, பாவம், δουλωθέντες அடிமையாக்கப்பட்டு δὲ ஆனால் τῷ –ன் Θεῷ, தேவன், ἔχετε உடையவர்களாய்–இருக்கிறீர்கள் τὸν –ன் καρπὸν கனி ὑμῶν உங்களுடைய εἰς –க்காக ἁγιασμόν; பரிசுத்தமாக்குதல்; τὸ –ன் δὲ ஆனால் τέλος முடிவு ζωὴν ஜீவன் αἰώνιον. நித்தியமான.
இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
23 τὰ –ன் γὰρ ஏனெனில் ὀψώνια சம்பளம் τῆς –ன் ἁμαρτίας பாவத்தின் θάνατος; மரணம்; τὸ –ன் δὲ ஆனால் χάρισμα வரம் τοῦ –ன் Θεοῦ, தேவனுடைய, ζωὴ ஜீவன் αἰώνιος நித்தியமான ἐν –இல் Χριστῷ கிறிஸ்து Ἰησοῦ, இயேசு, τῷ –ன் Κυρίῳ ஆண்டவர் ἡμῶν. நம்முடைய.
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.