1 Παῦλος, பவுல் κλητὸς அழைக்கப்பட்ட ἀπόστολος அபோஸ்தலன் Χριστοῦ, கிறிஸ்து Ἰησοῦ இயேசு διὰ –மூலமாக θελήματος சித்தம் Θεοῦ, தேவன் καὶ மேலும் Σωσθένης, சோஸ்த்தேனேஸ் ὁ –ஆகிய ἀδελφὸς, சகோதரன்
தேவனுடைய விருப்பத்தினாலே கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,
2 τῇ –க்கு ἐκκλησίᾳ சபை τοῦ –ன் Θεοῦ, தேவன் «τῇ –க்கு οὔσῃ இருக்கிற ἐν –இல் Κορίνθῳ»⇔, கொரிந்து «ἡγιασμένοις பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் ἐν –இல் Χριστῷ கிறிஸ்து Ἰησοῦ», இயேசு κλητοῖς அழைக்கப்பட்ட ἁγίοις பரிசுத்தவான்கள் σὺν –உடன் πᾶσιν எல்லா τοῖς –ஆகிய ἐπικαλουμένοις அழைக்கிறவர்கள் τὸ –ஐ ὄνομα நாமம் τοῦ –ன் Κυρίου ஆண்டவர் ἡμῶν, நம்முடைய Ἰησοῦ இயேசு Χριστοῦ, கிறிஸ்து ἐν –இல் παντὶ ஒவ்வொரு τόπῳ, இடத்திலும் αὐτῶν அவர்கள் καὶ மேலும் ἡμῶν. நம்முடைய
கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகவும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாகவும் இருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் அவர்களுக்கும் ஆண்டவராக இருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
3 χάρις கிருபை ὑμῖν உங்களுக்கு καὶ மேலும் εἰρήνη, சமாதானம் ἀπὸ –இலிருந்து Θεοῦ தேவன் Πατρὸς பிதா ἡμῶν, நம்முடைய καὶ மேலும் Κυρίου ஆண்டவர் Ἰησοῦ இயேசு Χριστοῦ. கிறிஸ்து
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
4 Εὐχαριστῶ நன்றிசெலுத்துகிறேன் τῷ –க்கு Θεῷ தேவன் ‹μου› என் πάντοτε எப்பொழுதும் περὶ –குறித்து ὑμῶν, உங்கள் ἐπὶ –மேல் τῇ –ன் χάριτι கிருபை τοῦ –ன் Θεοῦ தேவன் τῇ –ன் δοθείσῃ கொடுக்கப்பட்ட ὑμῖν உங்களுக்கு ἐν –இல் Χριστῷ கிறிஸ்து Ἰησοῦ, இயேசு
கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே உறுதிப்படுத்தப்பட்டபடியே,
5 ὅτι என்றால் ἐν –இல் παντὶ எல்லாவற்றிலும் ἐπλουτίσθητε செல்வமாக்கப்பட்டீர்கள் ἐν –இல் αὐτῷ, அவரில் ἐν –இல் παντὶ எல்லா λόγῳ வார்த்தை καὶ மேலும் πάσῃ எல்லா γνώσει, அறிவு
நீங்கள் இயேசுகிறிஸ்துவிற்குள்ளாக எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், முழு நிறைவுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,
6 καθὼς –போல τὸ –ஆகிய μαρτύριον சாட்சி τοῦ –ன் Χριστοῦ கிறிஸ்து ἐβεβαιώθη உறுதிப்படுத்தப்பட்டது ἐν –இல் ὑμῖν, உங்களில்
அவர் மூலமாக உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
7 ὥστε ஆகையால் ὑμᾶς நீங்கள் μὴ இல்லை ὑστερεῖσθαι, குறைவுபடாதிருக்க ἐν –இல் μηδενὶ ஒரு χαρίσματι, வரம் ἀπεκδεχομένους எதிர்பார்க்கிறவர்களாக τὴν –ஐ ἀποκάλυψιν வெளிப்பாடு τοῦ –ன் Κυρίου ஆண்டவர் ἡμῶν, நம்முடைய Ἰησοῦ இயேசு Χριστοῦ; கிறிஸ்து
அப்படியே நீங்கள் எந்த ஒரு வரத்திலும் குறைவில்லாதவர்களாக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.
8 ὃς யார் καὶ மேலும் βεβαιώσει உறுதிப்படுத்துவார் ὑμᾶς உங்களை ἕως வரையில் τέλους, முடிவு ἀνεγκλήτους குற்றமற்றவர்களாக ἐν –இல் τῇ –ன் ἡμέρᾳ நாள் τοῦ –ன் Κυρίου ஆண்டவர் ἡμῶν, நம்முடைய Ἰησοῦ இயேசு Χριστοῦ. கிறிஸ்து
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இறுதிவரைக்கும் அவர் உங்களை உறுதிப்படுத்துவார்.
9 πιστὸς உண்மையுள்ளவர் ὁ –ஆகிய Θεὸς, தேவன் δι’ –மூலமாக οὗ யார் ἐκλήθητε அழைக்கப்பட்டீர்கள் εἰς –க்கு κοινωνίαν அனுசரணை τοῦ –ன் Υἱοῦ குமாரன் αὐτοῦ, அவர் Ἰησοῦ இயேசு Χριστοῦ, கிறிஸ்து τοῦ –ன் Κυρίου ஆண்டவர் ἡμῶν. நம்முடைய
தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
10 Παρακαλῶ வேண்டிக்கொள்கிறேன் δὲ மேலும் ὑμᾶς, உங்களை ἀδελφοί, சகோதரரே διὰ –மூலமாக τοῦ –ன் ὀνόματος நாமம் τοῦ –ன் Κυρίου ஆண்டவர் ἡμῶν, நம்முடைய Ἰησοῦ இயேசு Χριστοῦ, கிறிஸ்து ἵνα –என்றால் τὸ –ஐ αὐτὸ அதே λέγητε பேசுவீர்களாக πάντες, எல்லாரும் καὶ மேலும் μὴ இல்லை ᾖ இருக்கட்டும் ἐν –இல் ὑμῖν உங்களில் σχίσματα, பிளவுகள் ἦτε இருப்பீர்களாக δὲ மேலும் κατηρτισμένοι பூர்ணமாக்கப்பட்டவர்களாக ἐν –இல் τῷ –ன் αὐτῷ அதே νοῒ, மனம் καὶ மேலும் ἐν –இல் τῇ –ன் αὐτῇ அதே γνώμῃ. தீர்மானம்
சகோதரர்களே, நீங்களெல்லோரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகள் இல்லாமல் ஒரே மனதும் ஒரே யோசனையும் உள்ளவர்களாகச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
11 ἐδηλώθη தெரிவிக்கப்பட்டது γάρ ஏனெனில் μοι எனக்கு περὶ –குறித்து ὑμῶν, உங்கள் ἀδελφοί சகோதரரே μου, என் ὑπὸ –ஆல் τῶν –ன் Χλόης, க்லோயே ὅτι என்று ἔριδες சண்டைகள் ἐν –இல் ὑμῖν உங்களில் εἰσιν. இருக்கின்றன
ஏனென்றால், என் சகோதரர்களே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.
12 λέγω சொல்கிறேன் δὲ மேலும் τοῦτο, இதை ὅτι என்று ἕκαστος ஒவ்வொருவனும் ὑμῶν உங்களில் λέγει, சொல்கிறான் Ἐγὼ நான் μέν ஒருபுறம் εἰμι ஆகிறேன் Παύλου, பவுல் Ἐγὼ நான் δὲ மேலும் Ἀπολλῶ, அப்போல்லோ Ἐγὼ நான் δὲ மேலும் Κηφᾶ, கேபா Ἐγὼ நான் δὲ மேலும் Χριστοῦ. கிறிஸ்து
உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.
13 μεμέρισται பிரிக்கப்பட்டிருக்கிறாரா ὁ –ஆகிய Χριστός? கிறிஸ்து μὴ இல்லையா Παῦλος பவுல் ἐσταυρώθη சிலுவையில்அறையப்பட்டாரா ὑπὲρ –க்காக ὑμῶν? உங்கள் ἢ அல்லது εἰς –க்கு τὸ –ஆகிய ὄνομα நாமம் Παύλου பவுல் ἐβαπτίσθητε? ஞானஸ்நானம்பெற்றீர்களா
கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
14 εὐχαριστῶ நன்றிசெலுத்துகிறேன் [τῷ –க்கு θεῷ] தேவன் ὅτι என்று οὐδένα ஒருவரையும் ὑμῶν உங்களில் ἐβάπτισα, ஞானஸ்நானம்கொடுக்கவில்லை εἰ –ஆனால் μὴ இல்லை Κρίσπον கிரிஸ்ப்புவை καὶ மேலும் Γάϊον, காயுவை
என் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன் என்று ஒருவனும் சொல்லாதபடிக்கு,
15 ἵνα –என்றால் μή இல்லை τις யாராவது εἴπῃ சொல்லட்டும் ὅτι, என்று εἰς –க்கு τὸ –ஆகிய ἐμὸν என் ὄνομα, நாமம் ἐβαπτίσθητε. ஞானஸ்நானம்பெற்றீர்கள்
நான் கிறிஸ்புவிற்கும் காயுவிற்கும்தவிர, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை; இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
16 ἐβάπτισα ஞானஸ்நானம்கொடுத்தேன் δὲ மேலும் καὶ மேலும் τὸν –ஐ Στεφανᾶ ஸ்தெபானா οἶκον; வீடு λοιπὸν, மேறும் οὐκ இல்லை οἶδα அறிகிறேன் εἴ –ஆனால் τινα யாராவது ἄλλον வேறொருவனை ἐβάπτισα. ஞானஸ்நானம்கொடுத்தேன்
ஸ்தேவானுடைய குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் வேறு யாருக்காவது நான் ஞானஸ்நானம் கொடுத்தேனோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது.
17 οὐ இல்லை γὰρ ஏனெனில் ἀπέστειλέν அனுப்பினார் με என்னை Χριστὸς கிறிஸ்து βαπτίζειν, ஞானஸ்நானம்கொடுக்க ἀλλὰ ஆனால் εὐαγγελίζεσθαι; நற்செய்தியறிவிக்க οὐκ இல்லை ἐν –இல் σοφίᾳ ஞானம் λόγου, வார்த்தை ἵνα –என்றால் μὴ இல்லை κενωθῇ வெறுமையாகும் ὁ –ஆகிய σταυρὸς சிலுவை τοῦ –ன் Χριστοῦ. கிறிஸ்து
ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாகப் போகாதபடிக்கு, மனித ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
18 Ὁ –ஆகிய λόγος வார்த்தை γὰρ ஏனெனில் ὁ –ஆகிய τοῦ –ன் σταυροῦ, சிலுவை τοῖς –க்கு μὲν ஒருபுறம் ἀπολλυμένοις அழிகிறவர்களுக்கு μωρία மடமை ἐστίν; ஆகிறது τοῖς –க்கு δὲ மேலும் σῳζομένοις, இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு ἡμῖν, நமக்கு δύναμις வல்லமை Θεοῦ தேவன் ἐστιν. ஆகிறது
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக இருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாக இருக்கிறது.
19 γέγραπται எழுதப்பட்டிருக்கிறது γάρ, ஏனெனில் Ἀπολῶ அழிப்பேன் τὴν –ஐ σοφίαν ஞானம் τῶν –ன் σοφῶν, ஞானிகள் καὶ மேலும் τὴν –ஐ σύνεσιν புத்தி τῶν –ன் συνετῶν புத்திமான்கள் ἀθετήσω. விலக்குவேன்
அந்தப்படி: “ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்” என்று எழுதியிருக்கிறது.
20 ποῦ எங்கே σοφός? ஞானி ποῦ எங்கே γραμματεύς? வேதபாரகன் ποῦ எங்கே συζητητὴς வாதக்காரன் τοῦ –ன் αἰῶνος யுகம் τούτου? இந்த οὐχὶ இல்லையா ἐμώρανεν மடமையாக்கினார் ὁ –ஆகிய Θεὸς தேவன் τὴν –ஐ σοφίαν ஞானம் τοῦ –ன் κόσμου? உலகம்
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?
21 ἐπειδὴ ஏனெனில் γὰρ, ஏனெனில் ἐν –இல் τῇ –ன் σοφίᾳ ஞானம் τοῦ –ன் Θεοῦ, தேவன் οὐκ இல்லை ἔγνω அறிந்தது ὁ –ஆகிய κόσμος உலகம் διὰ –மூலமாக τῆς –ன் σοφίας ஞானம் τὸν –ஐ Θεόν, தேவனை εὐδόκησεν பிரியமவாயிருந்தார் ὁ –ஆகிய Θεὸς, தேவன் διὰ –மூலமாக τῆς –ன் μωρίας மடமை τοῦ –ன் κηρύγματος, பிரசங்கம் σῶσαι இரட்சிக்க τοὺς –ஐ πιστεύοντας, விசுவாசிக்கிறவர்களை
எப்படியென்றால், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாமல் இருந்ததினால், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமானது.
22 ἐπειδὴ ஏனெனில் καὶ மேலும் Ἰουδαῖοι யூதர்கள் σημεῖα அடையாளங்களை αἰτοῦσιν, கேட்கிறார்கள் καὶ மேலும் Ἕλληνες கிரேக்கர்கள் σοφίαν ஞானம் ζητοῦσιν; தேடுகிறார்கள்
யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்;
23 ἡμεῖς நாங்கள் δὲ மேலும் κηρύσσομεν பிரசங்கிக்கிறோம் Χριστὸν கிறிஸ்து ἐσταυρωμένον, சிலுவையில்அறையப்பட்ட Ἰουδαίοις யூதர்களுக்கு μὲν ஒருபுறம் σκάνδαλον, இடர்ச்சல் ἔθνεσιν புறஜாதிகளுக்கு δὲ மேலும் μωρίαν; மடமை
நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதர்களுக்கு இடறலாகவும் கிரேக்கர்களுக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார்.
24 αὐτοῖς அவர்களுக்கு δὲ மேலும் τοῖς –ஆகிய κλητοῖς, அழைக்கப்பட்டவர்கள் Ἰουδαίοις யூதர்களுக்கும் τε மேலும் καὶ மேலும் Ἕλλησιν, கிரேக்கர்களுக்கும் Χριστὸν கிறிஸ்து Θεοῦ தேவன் δύναμιν, வல்லமை καὶ மேலும் Θεοῦ தேவன் σοφίαν. ஞானம்
ஆனாலும் யூதர்களானாலும் கிரேக்கர்களானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாக இருக்கிறார்.
25 ὅτι என்றால் τὸ –ஆகிய μωρὸν மடமையான τοῦ –ன் Θεοῦ, தேவன் σοφώτερον ஞானமுள்ளதாக τῶν –ன் ἀνθρώπων மனிதர்கள் ἐστίν, ஆகிறது καὶ மேலும் τὸ –ஆகிய ἀσθενὲς பலவீனமான τοῦ –ன் Θεοῦ, தேவன் ἰσχυρότερον பலமுள்ளதாக τῶν –ன் ἀνθρώπων. மனிதர்கள்
இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் எனப்படுவது மனிதர்களுடைய ஞானத்திலும் அதிக ஞானமாக இருக்கிறது; தேவனுடைய பலவீனம் எனப்படுவது மனிதர்களுடைய பலத்திலும் அதிக பலமாக இருக்கிறது.
26 Βλέπετε பாருங்கள் γὰρ ஏனெனில் τὴν –ஐ κλῆσιν அழைப்பு ὑμῶν, உங்கள் ἀδελφοί, சகோதரரே ὅτι என்று οὐ இல்லை πολλοὶ அநேகர் σοφοὶ ஞானிகள் κατὰ –படி σάρκα, மாம்சம் οὐ இல்லை πολλοὶ அநேகர் δυνατοί, பலமுள்ளவர்கள் οὐ இல்லை πολλοὶ அநேகர் εὐγενεῖς. நல்லகுலத்தவர்கள்
எப்படியென்றால், சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மனிதர் பார்வையில் ஞானிகள் அநேகர் இல்லை, வல்லவர்கள் அநேகர் இல்லை, பிரபுக்கள் அநேகர் இல்லை.
27 ἀλλὰ ஆனால் τὰ –ஆகிய μωρὰ மடமையானவற்றை τοῦ –ன் κόσμου, உலகம் ἐξελέξατο தேர்ந்தெடுத்தார் ὁ –ஆகிய Θεός, தேவன் ἵνα –என்றால் καταισχύνῃ வெட்கம்படுத்த τοὺς –ஐ σοφούς; ஞானிகளை καὶ மேலும் τὰ –ஆகிய ἀσθενῆ பலவீனமானவற்றை τοῦ –ன் κόσμου, உலகம் ἐξελέξατο தேர்ந்தெடுத்தார் ὁ –ஆகிய Θεός, தேவன் ἵνα –என்றால் καταισχύνῃ வெட்கம்படுத்த τὰ –ஐ ἰσχυρά; பலமுள்ளவற்றை
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
28 καὶ மேலும் τὰ –ஆகிய ἀγενῆ குலமற்றவற்றை τοῦ –ன் κόσμου, உலகம் καὶ மேலும் τὰ –ஆகிய ἐξουθενημένα, அலட்சியமாக்கப்பட்டவற்றை ἐξελέξατο தேர்ந்தெடுத்தார் ὁ –ஆகிய Θεός, தேவன் (καὶ) மேலும் τὰ –ஆகிய μὴ இல்லை ὄντα, இருக்கிறவற்றை ἵνα –என்றால் τὰ –ஆகிய ὄντα இருக்கிறவற்றை καταργήσῃ, நீக்குவார்
உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாக எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார்.
29 ὅπως –என்றால் μὴ இல்லை καυχήσηται மேன்மைபாராட்டுகொள்ளட்டும் πᾶσα எல்லா σὰρξ மாம்சம் ἐνώπιον முன்பாக τοῦ –ன் Θεοῦ. தேவன்
மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.
30 ἐξ –இலிருந்து αὐτοῦ அவர் δὲ, மேலும் ὑμεῖς நீங்கள் ἐστε ஆகிறீர்கள் ἐν –இல் Χριστῷ கிறிஸ்து Ἰησοῦ, இயேசு ὃς யார் ἐγενήθη ஆனார் σοφία ஞானம் ἡμῖν நமக்கு ἀπὸ –இலிருந்து Θεοῦ, தேவன் δικαιοσύνη நீதி τε மேலும் καὶ மேலும் ἁγιασμὸς, பரிசுத்தமாக்குதல் καὶ மேலும் ἀπολύτρωσις; மீட்பு
அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவிற்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,
31 ἵνα, –என்றால் καθὼς –போல γέγραπται, எழுதப்பட்டிருக்கிறது Ὁ –ஆகிய καυχώμενος, மேன்மைபாராட்டுகொள்கிறவன் ἐν –இல் Κυρίῳ ஆண்டவர் καυχάσθω. மேன்மைபாராட்டுகொள்ளட்டும்
அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.