1 Συνεργοῦντες உடன்வேலையாடுகிறவர்களாய் δὲ –ம் καὶ –ம் παρακαλοῦμεν, வேண்டுகிறோம் μὴ இல்லை εἰς –க்கு κενὸν வீணாக τὴν –அந்த χάριν கிருபையை τοῦ –உடைய Θεοῦ தேவனுடைய δέξασθαι பெற்றுக்கொண்டிருக்க ὑμᾶς. உங்களை
தேவனுடைய கிருபையை நீங்கள் வீணாகப் பெற்றுக்கொள்ளாதபடி, தேவனுடைய உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
2 λέγει சொல்கிறார் γάρ, ஏனெனில் Καιρῷ காலத்தில் δεκτῷ ஏற்புடைய ἐπήκουσά கேட்டேன் σου, உன்னை καὶ மற்றும் ἐν –இல் ἡμέρᾳ நாளில் σωτηρίας இரட்சிப்பின் ἐβοήθησά உதவினேன் σοι. உனக்கு ἰδοὺ, இதோ νῦν இப்போது καιρὸς காலம் εὐπρόσδεκτος; ஏற்புடையது ἰδοὺ இதோ νῦν இப்போது ἡμέρα நாள் σωτηρίας. இரட்சிப்பின்
சரியான காலத்திலே நான் உன் வார்த்தையைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே சரியான காலம், இப்பொழுதே மீட்பின் நாள்.
3 μηδεμίαν எந்தவோர்க்கும் ἐν –இல் μηδενὶ எதிலும் διδόντες கொடுக்கிறவர்களாய் προσκοπήν, இடர்ச்சலை ἵνα –க்காக μὴ இல்லை μωμηθῇ பழிக்கப்படும்படி ἡ –அந்த διακονία. ஊழியம்
இந்த ஊழியம் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க, நாங்கள் யாருக்கும் இடறல் உண்டாக்காமல், எல்லாவிதத்திலும், எங்களை தேவ ஊழியர்களாக விளங்கப்பண்ணுகிறோம்.
4 ἀλλ’ ஆனால் ἐν –இல் παντὶ, எல்லாவற்றிலும் συνιστάνοντες பரிந்துரைக்கிறவர்களாய் ἑαυτοὺς நம்மையே ὡς எப்படி Θεοῦ தேவனுடைய διάκονοι, ஊழியக்காரர்களாக ἐν –இல் ὑπομονῇ பொறுமையில் πολλῇ, மிகுந்த ἐν –இல் θλίψεσιν, உபத்திரவங்களில் ἐν –இல் ἀνάγκαις, தேவைகளில் ἐν –இல் στενοχωρίαις, நெருக்கடிகளில்
அதிக பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,
5 ἐν –இல் πληγαῖς, அடிகளில் ἐν –இல் φυλακαῖς, சிறைகளில் ἐν –இல் ἀκαταστασίαις, கலகங்களில் ἐν –இல் κόποις, வேலைகளில் ἐν –இல் ἀγρυπνίαις, தூக்கமின்மைகளில் ἐν –இல் νηστείαις; உபவாசங்களில்
அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,
6 ἐν –இல் ἁγνότητι, தூய்மையில் ἐν –இல் γνώσει, அறிவில் ἐν –இல் μακροθυμίᾳ, நீடியபொறுமையில் ἐν –இல் χρηστότητι, தயவில் ἐν –இல் Πνεύματι ஆவியில் Ἁγίῳ, பரிசுத்தமான ἐν –இல் ἀγάπῃ அன்பில் ἀνυποκρίτῳ; வேடமற்ற
கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமில்லாத அன்பிலும்,
7 ἐν –இல் λόγῳ வார்த்தையில் ἀληθείας, சத்தியத்தின் ἐν –இல் δυνάμει வல்லமையில் Θεοῦ; தேவனுடைய διὰ மூலமாக τῶν –உடைய ὅπλων ஆயுதங்களின் τῆς –உடைய δικαιοσύνης நீதியின் τῶν –உடைய δεξιῶν வலத்தின் καὶ மற்றும் ἀριστερῶν; இடத்தின்
சத்தியவசனத்திலும், தேவபலத்திலும்; நீதியாகிய வலது இடதுபக்கத்து ஆயுதங்களை அணிந்திருக்கிறதிலும்,
8 διὰ மூலமாக δόξης மகிமையின் καὶ மற்றும் ἀτιμίας, அவமானத்தின் διὰ மூலமாக δυσφημίας தீயபேச்சின் καὶ மற்றும் εὐφημίας; நற்பேச்சின் ὡς எப்படி πλάνοι, வஞ்சகர்களாய் καὶ மற்றும் ἀληθεῖς; சத்தியவான்களாய்
கனத்திலும், கனவீனத்திலும், இகழ்ச்சியிலும், புகழ்ச்சியிலும்; ஏமாற்றுபவர்கள் என்று சொல்லப்பட்டாலும், உண்மை உள்ளவர்களாகவும்,
9 ὡς எப்படி ἀγνοούμενοι, அறியப்படாதவர்களாய் καὶ மற்றும் ἐπιγινωσκόμενοι; அறியப்படுகிறவர்களாய் ὡς எப்படி ἀποθνήσκοντες, சாகிறவர்களாய் καὶ மற்றும் ἰδοὺ, இதோ ζῶμεν; உயிரோடுள்ளோம் ὡς எப்படி παιδευόμενοι, தண்டிக்கப்படுகிறவர்களாய் καὶ மற்றும் μὴ இல்லை θανατούμενοι; கொல்லப்படுகிறவர்களாய்
அறியப்படாதவர்கள் என்னப்பட்டாலும் நன்றாகத் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடு இருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,
10 ὡς எப்படி λυπούμενοι, துக்கப்படுகிறவர்களாய் ἀεὶ எப்போதும் δὲ –ம் χαίροντες; மகிழ்கிறவர்களாய் ὡς எப்படி πτωχοὶ, ஏழைகளாய் πολλοὺς அநேகரை δὲ –ம் πλουτίζοντες; செல்வந்தர்களாக்குகிறவர்களாய் ὡς எப்படி μηδὲν ஒன்றுமில்லாதவர்களாய் ἔχοντες, கொண்டிருக்கிறவர்களாய் καὶ மற்றும் πάντα எல்லாவற்றையும் κατέχοντες. உடைமையாக்கிறவர்களாய்
துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகள் என்னப்பட்டாலும் அநேகரை செல்வந்தர்களாக்குகிறவர்களாகவும், ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் எல்லாவற்றையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
11 Τὸ –அந்த στόμα வாய் ἡμῶν நம்முடைய ἀνέῳγεν திறந்திருக்கிறது πρὸς –நோக்கி ὑμᾶς, உங்களை Κορίνθιοι; கொரிந்தியரே ἡ –அந்த καρδία இருதயம் ἡμῶν நம்முடைய πεπλάτυνται. விரிவடைந்திருக்கிறது
கொரிந்தியர்களே, எங்களுடைய வாய் உங்களோடு பேசத் திறந்திருக்கிறது, எங்களுடைய இருதயம் உங்களுக்குத் திறந்திருக்கிறது.
12 οὐ இல்லை στενοχωρεῖσθε நெருக்கப்படுகிறீர்கள் ἐν –இல் ἡμῖν, நம்மால் στενοχωρεῖσθε நெருக்கப்படுகிறீர்கள் δὲ –ம் ἐν –இல் τοῖς –அந்த σπλάγχνοις உள்ளத்தில் ὑμῶν; உங்களுடைய
எங்களுடைய உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்களுடைய உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.
13 τὴν –அந்த δὲ –ம் αὐτὴν அதே ἀντιμισθίαν, பிரதிபலனாய் ὡς எப்படி τέκνοις பிள்ளைகளுக்கு λέγω, சொல்கிறேன் πλατύνθητε விரிவடையுங்கள் καὶ –ம் ὑμεῖς. நீங்களும்
எனவே அதற்குப் பதிலாக நீங்களும் உங்களுடைய இருதயங்களைத் திறவுங்கள் என்று, குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
14 Μὴ இல்லை γίνεσθε ஆகுங்கள் ἑτεροζυγοῦντες அசமமாய்–நுகத்தில்–பூட்டப்பட்டவர்களாய் ἀπίστοις; நம்பிக்கையற்றவர்களோடு τίς என்ன γὰρ ஏனெனில் μετοχὴ பங்கு δικαιοσύνῃ நீதிக்கு καὶ மற்றும் ἀνομίᾳ? அக்கிரமத்துக்கு ἢ அல்லது τίς என்ன κοινωνία அன்னோன்யம் φωτὶ வெளிச்சத்துக்கு πρὸς –நோக்கி σκότος? இருளுக்கு
அவிசுவாசிகளுடன் இணைக்கப்படாமல் இருங்கள்; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?
15 τίς என்ன δὲ –ம் συμφώνησις இசைவு Χριστοῦ கிறிஸ்துவுக்கு πρὸς –நோக்கி Βελιάρ? பெலியாலுக்கு ἢ அல்லது τίς என்ன μερὶς பங்கு πιστῷ விசுவாசிக்கு μετὰ உடன் ἀπίστου? நம்பிக்கையற்றவனோடு
கிறிஸ்துவிற்கும் பேலியாளுக்கும் ஒப்பந்தம் ஏது? அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது?
16 τίς என்ன δὲ –ம் συνκατάθεσις ஒத்துக்கொள்ளுதல் ναῷ ஆலயத்துக்கு Θεοῦ தேவனுடைய μετὰ உடன் εἰδώλων? விக்கிரகங்களோடு ἡμεῖς நாங்கள் γὰρ ஏனெனில் ναὸς ஆலயம் Θεοῦ தேவனுடைய ἐσμεν, நாங்கள் ζῶντος, உயிரோடுள்ள καθὼς எப்படி εἶπεν சொன்னார் ὁ –அந்த Θεὸς, தேவன் ὅτι என்று Ἐνοικήσω குடியிருப்பேன் ἐν –இல் αὐτοῖς, அவர்களுக்குள் καὶ மற்றும் ἐμπεριπατήσω; நடந்திருப்பேன் καὶ மற்றும் ἔσομαι இருப்பேன் αὐτῶν அவர்களுடைய Θεός, தேவனாக καὶ மற்றும் αὐτοὶ அவர்கள் ἔσονταί இருப்பார்கள் μου என்னுடைய λαός. ஜனங்களாக
தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே.
17 διὸ ஆகையால் ἐξέλθατε வெளியேறுங்கள் ἐκ –இலிருந்து μέσου நடுவிலிருந்து αὐτῶν அவர்களுடைய καὶ மற்றும் ἀφορίσθητε, வேறுபடுங்கள் λέγει சொல்கிறார் Κύριος, ஆண்டவர் καὶ மற்றும் ἀκαθάρτου அசுத்தமானதை μὴ இல்லை ἅπτεσθε. தொடுங்கள் κἀγὼ நானும் εἰσδέξομαι ஏற்றுக்கொள்வேன் ὑμᾶς; உங்களை
எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 καὶ மற்றும் ἔσομαι இருப்பேன் ὑμῖν உங்களுக்கு εἰς –க்கு Πατέρα, பிதாவாக καὶ மற்றும் ὑμεῖς நீங்கள் ἔσεσθέ இருப்பீர்கள் μοι எனக்கு εἰς –க்கு υἱοὺς குமாரர்களாகவும் καὶ மற்றும் θυγατέρας, குமாரிகளாகவும் λέγει சொல்கிறார் Κύριος ஆண்டவர் Παντοκράτωρ. சர்வவல்லமையுள்ளவர்
அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாக இருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரர்களும் குமாரத்திகளுமாக இருப்பீர்கள் என்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.