1 Λοιπὸν இறுதியாக οὖν, –ஆகையால் ἀδελφοί, சகோதரர்களே ἐρωτῶμεν கேட்டுக்கொள்கிறோம் ὑμᾶς உங்களை καὶ –மற்றும் παρακαλοῦμεν வேண்டிக்கொள்கிறோம் ἐν –இல் Κυρίῳ ஆண்டவராகிய Ἰησοῦ, இயேசுவில் ἵνα, –என்று καθὼς –எவ்வாறு παρελάβετε பெற்றுக்கொண்டீர்களோ παρ’ –இருந்து ἡμῶν, நம்மிடமிருந்து τὸ –அந்த πῶς எப்படி δεῖ வேண்டும் ὑμᾶς நீங்கள் περιπατεῖν நடக்க καὶ –மற்றும் ἀρέσκειν பிரியப்படுத்த Θεῷ, தேவனுக்கு καθὼς –எவ்வாறு καὶ –உம் περιπατεῖτε, நடக்கிறீர்களோ ἵνα –என்று περισσεύητε மிகுதியாகுவீர்களாக μᾶλλον. அதிகமாய்
அன்றியும், சகோதரர்களே, நீங்கள் இந்தவிதமாக நடக்கவும், தேவனுக்குப் பிரியமாக இருக்கவும்வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாக முன்னேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவிற்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.
2 οἴδατε அறிந்திருக்கிறீர்கள் γὰρ –ஏனெனில் τίνας எவ்வித παραγγελίας கட்டளைகளை ἐδώκαμεν கொடுத்தோம் ὑμῖν, உங்களுக்கு διὰ –மூலமாக τοῦ –உடைய Κυρίου ஆண்டவராகிய Ἰησοῦ. இயேசுவின்
கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த வழிமுறைகளை அறிந்திருக்கிறீர்களே.
3 Τοῦτο இது γάρ –ஏனெனில் ἐστιν ஆகிறது θέλημα சித்தம் τοῦ –உடைய Θεοῦ, தேவனுடைய ὁ –அந்த ἁγιασμὸς பரிசுத்தமாக்குதல் ὑμῶν: உங்களுடைய ἀπέχεσθαι விலகுவது ὑμᾶς நீங்கள் ἀπὸ –இருந்து τῆς –அந்த πορνείας; பரத்தைமையிலிருந்து
நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசித்தனத்திற்கு விலகியிருந்து,
4 εἰδέναι அறிந்திருப்பது ἕκαστον ஒவ்வொருவரும் ὑμῶν உங்களில் τὸ –அந்த ἑαυτοῦ தன்னுடைய σκεῦος, பாத்திரத்தை κτᾶσθαι அடக்கிக்கொள்வது ἐν –இல் ἁγιασμῷ பரிசுத்தத்திலும் καὶ –மற்றும் τιμῇ, கனத்திலும்
தேவனை அறியாத மக்களைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
5 μὴ –அல்ல ἐν –இல் πάθει இச்சையின் ἐπιθυμίας, ஆசையில் καθάπερ –எவ்வாறு καὶ –உம் τὰ –அந்த ἔθνη, புறஜாதியினர் τὰ –அந்த μὴ –அல்ல εἰδότα அறிந்த τὸν –அந்த Θεόν; தேவனை
உங்களில் அவனவன் தன்தன் சரீரத்தைப் பரிசுத்தமாகவும் மரியாதையாகவும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
6 τὸ –அந்த μὴ –அல்ல ὑπερβαίνειν மீறுவது καὶ –மற்றும் πλεονεκτεῖν சுரண்டுவது ἐν –இல் τῷ –அந்த πράγματι, காரியத்தில் τὸν –அந்த ἀδελφὸν சகோதரனை αὐτοῦ; அவனுடைய διότι –ஏனெனில் ἔκδικος பழிவாங்குகிறவர் Κύριος ஆண்டவர் περὶ –குறித்து πάντων எல்லா τούτων, இவைகளைக்குறித்து καθὼς –எவ்வாறு καὶ –உம் προείπαμεν முன்சொன்னோம் ὑμῖν, உங்களுக்கு καὶ –மற்றும் διεμαρτυράμεθα. சாட்சிபகர்ந்தோம்
இந்தக் காரியத்தில் ஒருவனும் தன் சகோதரனை ஏமாற்றாமலும் கெடுதல் செய்யாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்டக் காரியங்கள் எல்லாவற்றையும்குறித்துக் கர்த்தர் நீதியை நிலைநாட்டுகிறவராக இருக்கிறார்.
7 οὐ –அல்ல γὰρ –ஏனெனில் ἐκάλεσεν அழைத்தார் ἡμᾶς நம்மை ὁ –அந்த Θεὸς, தேவன் ἐπὶ –மேல் ἀκαθαρσίᾳ, அசுத்தத்திற்கல்ல ἀλλ’ –ஆனால் ἐν –இல் ἁγιασμῷ. பரிசுத்தத்தில்
தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
8 τοιγαροῦν ஆகையால் ὁ –அந்த ἀθετῶν, புறக்கணிக்கிறவன் οὐκ –அல்ல ἄνθρωπον மனிதனை ἀθετεῖ, புறக்கணிக்கிறான் ἀλλὰ –ஆனால் τὸν –அந்த Θεὸν, தேவனை τὸν –அந்த καὶ –உம் διδόντα கொடுக்கிறவரை τὸ –அந்த Πνεῦμα ஆவியை αὐτοῦ அவருடைய τὸ –அந்த ἅγιον, பரிசுத்த εἰς –க்காக ὑμᾶς. உங்களுக்குள்
ஆகவே, புறக்கணிக்கிறவன் மனிதர்களை அல்ல, தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தருளின தேவனையே புறக்கணிக்கிறான்.
9 Περὶ –குறித்து δὲ –ஆனால் τῆς –அந்த φιλαδελφίας, சகோதர–அன்பைக்குறித்து οὐ –அல்ல χρείαν தேவையை ἔχετε வைத்திருக்கிறீர்கள் γράφειν எழுதுவதற்கு ὑμῖν, உங்களுக்கு αὐτοὶ நீங்களே γὰρ –ஏனெனில் ὑμεῖς நீங்கள் θεοδίδακτοί தேவன்–போதிக்கப்பட்டவர்கள் ἐστε, ஆகிறீர்கள் εἰς –க்காக τὸ –அந்த ἀγαπᾶν அன்புகூருவதற்கு ἀλλήλους. ஒருவரையொருவர்
சகோதர அன்பைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருப்பதற்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்களே.
10 καὶ –மற்றும் γὰρ –ஏனெனில் ποιεῖτε செய்கிறீர்கள் αὐτὸ அதை εἰς –நோக்கி πάντας எல்லா τοὺς –அந்த ἀδελφοὺς சகோதரர்களுக்கு ‹τοὺς› –அந்த ἐν –இல் ὅλῃ முழு τῇ –அந்த Μακεδονίᾳ. மக்கெதோனியாவிலும் Παρακαλοῦμεν வேண்டிக்கொள்கிறோம் δὲ –ஆனால் ὑμᾶς, உங்களை ἀδελφοί, சகோதரர்களே περισσεύειν மிகுதியாக μᾶλλον, அதிகமாய்
அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்கிலும் உள்ள சகோதரர்களெல்லோருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரர்களே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாகப் பெருகவும்;
11 καὶ –மற்றும் φιλοτιμεῖσθαι ஆர்வமாயிருப்பது ἡσυχάζειν அமைதியாயிருக்க καὶ –மற்றும் πράσσειν செய்வது τὰ –அந்த ἴδια, சொந்தமானவைகளை καὶ –மற்றும் ἐργάζεσθαι வேலைசெய்வது ταῖς –அந்த [ἰδίαις] சொந்த χερσὶν கைகளால் ὑμῶν, உங்களுடைய καθὼς –எவ்வாறு ὑμῖν உங்களுக்கு παρηγγείλαμεν, கட்டளையிட்டோம்
அவிசுவாசிகளிடத்தில் ஒழுக்கமாக நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,
12 ἵνα –என்று περιπατῆτε நடப்பீர்களாக εὐσχημόνως மரியாதையாக πρὸς –நோக்கி τοὺς –அந்த ἔξω, வெளியாரை καὶ –மற்றும் μηδενὸς ஒருவருடைய χρείαν தேவையை ἔχητε. வைத்திருக்காதீர்கள்
நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாக இருக்கவிரும்பவும், உங்களுடைய சொந்த வேலைகளைப் பார்க்கவும், உங்களுடைய சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
13 Οὐ –அல்ல θέλομεν விரும்புகிறோம் δὲ –ஆனால் ὑμᾶς உங்களை ἀγνοεῖν, அறியாதிருக்க ἀδελφοί, சகோதரர்களே περὶ –குறித்து τῶν –அந்த κοιμωμένων, நித்திரையாயிருக்கிறவர்களைக்குறித்து ἵνα –என்று μὴ –அல்ல λυπῆσθε, துக்கப்படுவீர்களாக καθὼς –எவ்வாறு καὶ –உம் οἱ –அந்த λοιποὶ, மற்றவர்கள் οἱ –அந்த μὴ –அல்ல ἔχοντες வைத்திருக்கிற ἐλπίδα. நம்பிக்கையை
அன்றியும், சகோதரர்களே, மரித்துப்போனவர்களுக்காக நீங்கள் நம்பிக்கை இல்லாதவர்களான மற்றவர்களைப்போல துக்கப்பட்டு, அறிவில்லாமலிருக்க எனக்கு மனதில்லை.
14 εἰ –என்றால் γὰρ –ஏனெனில் πιστεύομεν விசுவாசிக்கிறோம் ὅτι –என்று Ἰησοῦς இயேசு ἀπέθανεν மரித்தார் καὶ –மற்றும் ἀνέστη, உயிர்த்தெழுந்தார் οὕτως –அவ்வாறே καὶ –உம் ὁ –அந்த Θεὸς, தேவன் τοὺς –அந்த κοιμηθέντας நித்திரையடைந்தவர்களை διὰ –மூலமாக τοῦ –உடைய Ἰησοῦ, இயேசுவின் ἄξει கொண்டுவருவார் σὺν –உடன் αὐτῷ. அவரோடு
இயேசுவானவர் மரித்து, பின்பு உயிரோடு எழுந்திருந்தாரென்று நம்புகிறோமே; அப்படியே இயேசுவிற்குள் மரித்தவர்களையும் தேவன் அவரோடு கொண்டுவருவார்.
15 Τοῦτο இதை γὰρ –ஏனெனில் ὑμῖν உங்களுக்கு λέγομεν சொல்கிறோம் ἐν –இல் λόγῳ வார்த்தையில் Κυρίου, ஆண்டவருடைய ὅτι –என்று ἡμεῖς நாங்கள் οἱ –அந்த ζῶντες உயிரோடிருக்கிறவர்கள் οἱ –அந்த περιλειπόμενοι, மீதமாயிருக்கிறவர்கள் εἰς –வரையில் τὴν –அந்த παρουσίαν வருகையின் τοῦ –உடைய Κυρίου, ஆண்டவருடைய οὐ –அல்ல μὴ –அல்ல φθάσωμεν முந்துவதில்லை τοὺς –அந்த κοιμηθέντας, நித்திரையடைந்தவர்களுக்கு
கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைவரைக்கும் உயிரோடிருக்கும் நாம் மரித்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
16 ὅτι –ஏனெனில் αὐτὸς தாமே ὁ –அந்த Κύριος ஆண்டவர் ἐν –இல் κελεύσματι, ஆணையோடு ἐν –இல் φωνῇ குரலோடு ἀρχαγγέλου, பிரதான–தூதனுடைய καὶ –மற்றும் ἐν –இல் σάλπιγγι எக்காளத்தோடு Θεοῦ. தேவனுடைய καταβήσεται இறங்குவார் ἀπ’ –இருந்து οὐρανοῦ, வானத்திலிருந்து καὶ –மற்றும் οἱ –அந்த νεκροὶ மரித்தவர்கள் ἐν –இல் Χριστῷ கிறிஸ்துவில் ἀναστήσονται எழுந்திருப்பார்கள் πρῶτον. முதலாவதாக
ஏனென்றால், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
17 ἔπειτα பின்பு ἡμεῖς நாங்கள் οἱ –அந்த ζῶντες உயிரோடிருக்கிறவர்கள் οἱ –அந்த περιλειπόμενοι, மீதமாயிருக்கிறவர்கள் ἅμα ஒருமித்து σὺν –உடன் αὐτοῖς, அவர்களோடு ἁρπαγησόμεθα எடுத்துக்கொள்ளப்படுவோம் ἐν –இல் νεφέλαις மேகங்களில் εἰς –க்காக ἀπάντησιν சந்திப்புக்கு τοῦ –உடைய Κυρίου ஆண்டவரின் εἰς –க்காக ἀέρα; ஆகாயத்தில் καὶ –மற்றும் οὕτως –அவ்வாறே πάντοτε எப்போதும் σὺν –உடன் Κυρίῳ ஆண்டவரோடு ἐσόμεθα. இருப்போம்
பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடு ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாக எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம்.
18 Ὥστε ஆகையால் παρακαλεῖτε ஆறுதல்படுத்துங்கள் ἀλλήλους ஒருவரையொருவர் ἐν –இல் τοῖς –அந்த λόγοις வார்த்தைகளால் τούτοις. இவைகளால்
ஆகவே, இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.