1 Παρακαλῶ வேண்டிக்கொள்கிறேன் οὖν, ஆகையால் πρῶτον முதலாவதாக πάντων, எல்லாவற்றிலும் ποιεῖσθαι செய்ய δεήσεις, விண்ணப்பங்களையும் προσευχάς, ஜெபங்களையும் ἐντεύξεις, மன்றாட்டுகளையும் εὐχαριστίας, நன்றிசெலுத்துதல்களையும் ὑπὲρ –க்காக πάντων எல்லா ἀνθρώπων; மனிதர்களுக்காக
நான் முதலாவது சொல்லுகிற புத்தி என்னவென்றால், எல்லா மனிதருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் நன்றிசெலுத்துதலையும் செய்யவேண்டும்;
2 ὑπὲρ –க்காக βασιλέων ராஜாக்களுக்காகவும் καὶ மற்றும் πάντων எல்லா τῶν –ஆகிய ἐν –இல் ὑπεροχῇ மேன்மையில் ὄντων, இருக்கிறவர்களுக்காகவும் ἵνα –ஆக ἤρεμον அமைதியான καὶ மற்றும் ἡσύχιον சாந்தமான βίον வாழ்க்கையை διάγωμεν, நாம்–நடத்துவோம் ἐν –இல் πάσῃ எல்லா εὐσεβείᾳ தேவபக்தியிலும் καὶ மற்றும் σεμνότητι; கனத்திலும்
நாம் எல்லாப் பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும், சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை வாழும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள எல்லோருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
3 τοῦτο இது καλὸν நல்ல καὶ மற்றும் ἀπόδεκτον, ஏற்றுக்கொள்ளத்தக்க ἐνώπιον –முன்பாக τοῦ –ஆகிய Σωτῆρος இரட்சகராகிய ἡμῶν, நம்முடைய Θεοῦ, தேவனுடைய
நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது.
4 ὃς அவர் πάντας எல்லா ἀνθρώπους மனிதர்களும் θέλει விரும்புகிறார் σωθῆναι, இரட்சிக்கப்பட καὶ மற்றும் εἰς –க்கு ἐπίγνωσιν அறிவுக்கு ἀληθείας சத்தியத்தின்– ἐλθεῖν. வர
எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார்.
5 εἷς ஒரே γὰρ ஏனெனில் Θεός, தேவன் εἷς ஒரே καὶ மற்றும் μεσίτης மத்தியஸ்தர் Θεοῦ தேவனுக்கும் καὶ மற்றும் ἀνθρώπων -- மனிதர்களுக்கும் ἄνθρωπος மனிதன் Χριστὸς கிறிஸ்து Ἰησοῦς -- இயேசு
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
6 ὁ –ஆகிய δοὺς கொடுத்தவர் ἑαυτὸν தம்மையே ἀντίλυτρον மீட்கும்–விலையாக ὑπὲρ –க்காக πάντων, எல்லாருக்காகவும் τὸ –ஆகிய μαρτύριον சாட்சி καιροῖς காலங்களில் ἰδίοις, தக்க
எல்லோரையும் மீட்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
7 εἰς –க்கு ὃ அதற்கு ἐτέθην நியமிக்கப்பட்டேன் ἐγὼ, நான் κῆρυξ பிரசங்கியாகவும் καὶ மற்றும் ἀπόστολος-- அப்போஸ்தலனாகவும் ἀλήθειαν சத்தியத்தை λέγω; சொல்கிறேன் οὐ இல்லை ψεύδομαι-- பொய்–சொல்லவில்லை διδάσκαλος போதகனாகவும் ἐθνῶν, புறஜாதிகளுக்கு ἐν –இல் πίστει விசுவாசத்திலும் καὶ மற்றும் ἀληθείᾳ. சத்தியத்திலும்
இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
8 Βούλομαι விரும்புகிறேன் οὖν, ஆகையால் προσεύχεσθαι ஜெபிக்க τοὺς –ஆகிய ἄνδρας புருஷர்கள் ἐν –இல் παντὶ எல்லா τόπῳ, இடத்திலும் ἐπαίροντας உயர்த்தி ὁσίους பரிசுத்தமான χεῖρας, கைகளை χωρὶς இல்லாமல் ὀργῆς கோபமும் καὶ மற்றும் διαλογισμοῦ. தர்க்கமும்
அன்றியும், ஆண்கள் கோபமும், வாக்குவாதமும் இல்லாமல் பரிசுத்தமான கரங்களை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டும் என்று விரும்புகிறேன்.
9 Ὡσαύτως அப்படியே ‹καὶ› மற்றும் γυναῖκας, ஸ்திரீகளும் ἐν –இல் καταστολῇ ஒழுக்கமான κοσμίῳ, நேர்த்தியான μετὰ –உடன் αἰδοῦς நாணத்தோடும் καὶ மற்றும் σωφροσύνης, தெளிவான–புத்தியோடும் κοσμεῖν அலங்கரிக்க ἑαυτάς, தங்களை μὴ வேண்டாம் ἐν –இல் πλέγμασιν, பின்னல்களிலும் καὶ மற்றும் χρυσίῳ, தங்கத்திலும் ἢ –அல்லது μαργαρίταις, முத்துக்களிலும் ἢ –அல்லது ἱματισμῷ ஆடையிலும் πολυτελεῖ, விலையேறப்பெற்ற
பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல்,
10 ἀλλ’ ஆனால் ὃ அது πρέπει தகுதியான γυναιξὶν ஸ்திரீகளுக்கு ἐπαγγελλομέναις அறிக்கையிடுகிற θεοσέβειαν, தேவ–பக்தியை δι’ –மூலம் ἔργων கிரியைகளின்– ἀγαθῶν. நல்ல
தகுதியான ஆடையினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற பெண்களுக்குரிய நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
11 Γυνὴ ஸ்திரீ ἐν –இல் ἡσυχίᾳ அமைதியில் μανθανέτω கற்றுக்கொள்ளட்டும் ἐν –இல் πάσῃ எல்லா ὑποταγῇ; கீழ்ப்படிதலில்
பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும்.
12 διδάσκειν போதிக்க δὲ ஆனால் γυναικὶ ஸ்திரீக்கு οὐκ இல்லை ἐπιτρέπω, அனுமதிக்கவில்லை οὐδὲ –யும்–இல்லை αὐθεντεῖν அதிகாரம்–செலுத்த ἀνδρός, புருஷன்மேல் ἀλλ’ ஆனால் εἶναι இருக்க ἐν –இல் ἡσυχίᾳ; அமைதியில்
உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும்.
13 Ἀδὰμ ஆதாம் γὰρ ஏனெனில் πρῶτος முதலாவது ἐπλάσθη, உருவாக்கப்பட்டார் εἶτα பின்பு Εὕα; ஏவாள்
ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
14 καὶ மற்றும் Ἀδὰμ ஆதாம் οὐκ இல்லை ἠπατήθη; ஏமாற்றப்படவில்லை ἡ –ஆகிய δὲ ஆனால் γυνὴ, ஸ்திரீ ἐξαπατηθεῖσα, ஏமாற்றப்பட்டு ἐν –இல் παραβάσει மீறுதலில் γέγονεν. ஆனாள்
மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
15 σωθήσεται இரட்சிக்கப்படுவாள் δὲ ஆனால் διὰ –மூலம் τῆς –ஆகிய τεκνογονίας, பிள்ளைப்பேறு–மூலம் ἐὰν –ஆனால் μείνωσιν நிலைத்திருப்பார்களானால் ἐν –இல் πίστει, விசுவாசத்திலும் καὶ மற்றும் ἀγάπῃ, அன்பிலும் καὶ மற்றும் ἁγιασμῷ, பரிசுத்தமாக்குதலிலும் μετὰ –உடன் σωφροσύνης. தெளிவான–புத்தியோடும்
அப்படி இருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், குழந்தைப் பெறுவதினாலே காக்கப்படுவாள்.