1 Πρεσβυτέρῳ மூப்பரை μὴ வேண்டாம் ἐπιπλήξῃς, கடிந்து–கொள்ளாதே ἀλλὰ ஆனால் παρακάλει வேண்டிக்கொள் ὡς –போல πατέρα; தகப்பனை νεωτέρους இளையவர்களை ὡς –போல ἀδελφούς; சகோதரர்களை
முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும்,
2 πρεσβυτέρας மூப்பட்டவர்களை ὡς –போல μητέρας; தாய்மார்களை νεωτέρας இளையவர்களை ὡς –போல ἀδελφὰς, சகோதரிகளை ἐν –இல் πάσῃ எல்லா ἁγνείᾳ. தூய்மையோடு
முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு.
3 Χήρας விதவைகளை τίμα, கனம்–செய் τὰς –ஆகிய ὄντως உண்மையாக χήρας; விதவைகளை
ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு.
4 εἰ –ஆனால் δέ ஆனால் τις ஒரு χήρα, விதவை τέκνα பிள்ளைகளையோ ἢ –அல்லது ἔκγονα பேரக்குழந்தைகளையோ ἔχει, உடையவளானால் μανθανέτωσαν கற்றுக்கொள்ளட்டும் πρῶτον முதலாவது τὸν –ஆகிய ἴδιον தங்களுடைய οἶκον வீட்டை εὐσεβεῖν, தேவபக்தி–செய்ய καὶ மற்றும் ἀμοιβὰς பிரதிகாரங்களை ἀποδιδόναι திரும்பிச்–செய்ய τοῖς –ஆகிய προγόνοις; மூதாதையருக்கு τοῦτο இது γάρ ஏனெனில் ἐστιν ஆகிறது ἀπόδεκτον ஏற்றுக்கொள்ளத்தக்க ἐνώπιον –முன்பாக τοῦ –ஆகிய Θεοῦ. தேவனுடைய
விதவையானவளுக்கு குழந்தைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாக நடத்தி, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாக இருக்கிறது.
5 ἡ –ஆகிய δὲ ஆனால் ὄντως உண்மையாக χήρα, விதவை καὶ மற்றும் μεμονωμένη, தனிமையாக்கப்பட்டவள் ἤλπικεν நம்பிக்கையை–வைத்திருக்கிறாள் ἐπὶ –மேல் (τὸν) –ஆகிய Θεὸν, தேவனமேல் καὶ மற்றும் προσμένει நிலைத்திருக்கிறாள் ταῖς –ஆகிய δεήσεσιν, விண்ணப்பங்களிலும் καὶ மற்றும் ταῖς –ஆகிய προσευχαῖς ஜெபங்களிலும் νυκτὸς இரவிலும் καὶ மற்றும் ἡμέρας. பகலிலும்
ஆதரவற்ற விதவையாக இருந்து தனிமையாக இருக்கிறவள் தேவன்மேல் நம்பிக்கையுள்ளவளாக, இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.
6 ἡ –ஆகிய δὲ ஆனால் σπαταλῶσα, சுகபோகத்தில்–வாழ்கிறவள் ζῶσα ஜீவித்திருந்தாலும் τέθνηκεν. மரித்திருக்கிறாள்
சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள்.
7 καὶ மற்றும் ταῦτα இவைகளை παράγγελλε, கட்டளையிடு ἵνα –ஆக ἀνεπίλημπτοι குற்றமற்றவர்களாய் ὦσιν. இருக்கட்டும்
அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.
8 εἰ –ஆனால் δέ ஆனால் τις ஒருவன் τῶν –ஆகிய ἰδίων, தங்களுடையவர்களுக்கும் καὶ மற்றும் μάλιστα விசேஷமாக οἰκείων, வீட்டாருக்கு οὐ இல்லை προνοεῖ, கவனிக்கவில்லையேனில் τὴν –ஆகிய πίστιν விசுவாசத்தை ἤρνηται, மறுத்திருக்கிறான் καὶ மற்றும் ἔστιν ஆகிறான் ἀπίστου அவிசுவாசியைவிட χείρων. கெட்டவன்
ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான்.
9 Χήρα விதவை καταλεγέσθω பட்டியலில்–சேர்க்கப்படட்டும் μὴ வேண்டாம் ἔλαττον குறைவாக ἐτῶν வயது ἑξήκοντα, அறுபது γεγονυῖα ஆனவளாய் ἑνὸς ஒரு ἀνδρὸς புருஷனின்– γυνή, மனைவியாக
அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்து,
10 ἐν –இல் ἔργοις கிரியைகளில் καλοῖς நல்ல μαρτυρουμένη: சாட்சியிடப்பட்டவள் εἰ –ஆனால் ἐτεκνοτρόφησεν, பிள்ளைகளை–வளர்த்தியிருந்தால் εἰ –ஆனால் ἐξενοδόχησεν, விருந்தோம்பல்–செய்திருந்தால் εἰ –ஆனால் ἁγίων பரிசுத்தர்களின்– πόδας பாதங்களை ἔνιψεν, கழுவியிருந்தால் εἰ –ஆனால் θλιβομένοις உபத்திரவப்பட்டவர்களுக்கு ἐπήρκεσεν, உதவியிருந்தால் εἰ –ஆனால் παντὶ எல்லா ἔργῳ கிரியையிலும் ἀγαθῷ நல்ல ἐπηκολούθησεν. பின்பற்றியிருந்தால்
குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
11 νεωτέρας இளைய δὲ ஆனால் χήρας விதவைகளை παραιτοῦ; விலக்கு ὅταν –ஆனால் γὰρ ஏனெனில் καταστρηνιάσωσιν சுகபோகமாய்–கோரியிருந்தால் τοῦ –ஆகிய Χριστοῦ, கிறிஸ்துவுக்கு–எதிராக γαμεῖν விவாகம்–செய்ய θέλουσιν, விரும்புகிறார்கள்
இளம்வயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாக காமஇச்சைகொள்ளும்போது திருமணம் செய்துகொள்ள விரும்பி,
12 ἔχουσαι உடையவர்களாய் κρίμα தீர்ப்பை ὅτι ஏனெனில் τὴν –ஆகிய πρώτην முதலாவது πίστιν விசுவாசத்தை ἠθέτησαν. நிராகரித்தார்கள்
முதலில் கொண்டிருந்த வாக்குறுதியை விட்டுவிடுவதினாலே தண்டிக்கப்படுவார்கள்.
13 ἅμα அதே–சமயத்தில் δὲ ஆனால் καὶ மற்றும் ἀργαὶ சோம்பேறிகளாக μανθάνουσιν, கற்றுக்கொள்கிறார்கள் περιερχόμεναι சுற்றித்திரிகிறவர்களாய் τὰς –ஆகிய οἰκίας; வீடுகளை οὐ இல்லை μόνον மாத்திரம் δὲ ஆனால் ἀργαὶ, சோம்பேறிகளாக ἀλλὰ ஆனால் καὶ மற்றும் φλύαροι வீண்பேச்சுக்காரிகளாகவும் καὶ மற்றும் περίεργοι, வேண்டாததில்–தலையிடுகிறவர்களாகவும் λαλοῦσαι பேசுகிறவர்களாய் τὰ –ஆகிய μὴ வேண்டாத δέοντα. வைகளை
அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
14 βούλομαι விரும்புகிறேன் οὖν ஆகையால் νεωτέρας இளையவர்கள் γαμεῖν, விவாகம்–செய்ய τεκνογονεῖν, பிள்ளைகளை–பெற οἰκοδεσποτεῖν, வீட்டை–நிர்வகிக்க μηδεμίαν எந்தயோர் ἀφορμὴν நிமித்தமும் διδόναι கொடுக்காதிருக்க τῷ –ஆகிய ἀντικειμένῳ எதிராளிக்கு λοιδορίας நிந்தையின்– χάριν. நிமித்தம்
எனவே இளவயதுள்ள விதவைகள் திருமணம்செய்யவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும், எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
15 ἤδη இம்முன்னமே γάρ ஏனெனில் τινες சிலர் ἐξετράπησαν திரும்பினார்கள் ὀπίσω பின்னால் τοῦ –ஆகிய Σατανᾶ. சாத்தானின்–
ஏனென்றால், இதற்குமுன்பு சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.
16 εἴ –ஆனால் τις ஒரு πιστὴ விசுவாசியான ἔχει உடையவளானால் χήρας, விதவைகளை ἐπαρκείτω உதவியானாள் αὐταῖς, அவர்களுக்கு καὶ மற்றும் μὴ வேண்டாம் βαρείσθω பாரம்–சுமக்கப்படட்டும் ἡ –ஆகிய ἐκκλησία, சபை ἵνα –ஆக ταῖς –ஆகிய ὄντως உண்மையாக χήραις விதவைகளுக்கு ἐπαρκέσῃ. உதவியானாள்
விசுவாசியாகிய பெண்ணின் சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்; சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச் சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது.
17 Οἱ –ஆகிய καλῶς நன்றாக προεστῶτες நிர்வகிக்கிற πρεσβύτεροι, மூப்பர்கள் διπλῆς இரட்டிப்பு– τιμῆς கனத்திற்கு ἀξιούσθωσαν, தகுதியுள்ளவர்களாக–எண்ணப்படட்டும் μάλιστα விசேஷமாக οἱ –ஆகிய κοπιῶντες பிரயாசைப்படுகிறவர்கள் ἐν –இல் λόγῳ வார்த்தையிலும் καὶ மற்றும் διδασκαλίᾳ. போதகத்திலும்
நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும்.
18 λέγει சொல்கிறது γὰρ ஏனெனில் ἡ –ஆகிய γραφή, வேதவாக்கியம் Βοῦν மாட்டை ἀλοῶντα போரடிக்கிற οὐ வேண்டாம் φιμώσεις, வாய்–கட்டுவாய் καί, மற்றும் Ἄξιος தகுதியான ὁ –ஆகிய ἐργάτης வேலைக்காரன் τοῦ –ஆகிய μισθοῦ கூலியின்– αὐτοῦ. அவனுடைய
போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக்கூடாது என்றும், வேலைசெய்கிறவன் தன் கூலிக்குத் தகுதியானவன் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.
19 κατὰ –க்கு–எதிராக πρεσβυτέρου மூப்பரமேல் κατηγορίαν, குற்றச்சாட்டை μὴ வேண்டாம் παραδέχου, ஏற்றுக்கொள்ளாதே ἐκτὸς தவிர εἰ –ஆனால் μὴ வேண்டாம் ἐπὶ –மேல் δύο இரண்டு ἢ –அல்லது τριῶν மூன்று μαρτύρων. சாட்சிகள்மேல்
மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் குற்றச்சாட்டை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.
20 Τοὺς –ஆகிய (δὲ) ஆனால் ἁμαρτάνοντας பாவம்–செய்கிறவர்களை ἐνώπιον, –முன்பாக πάντων எல்லாருக்கும்–முன்பாக ἔλεγχε, கடிந்து–கொள் ἵνα –ஆக καὶ மற்றும் οἱ –ஆகிய λοιποὶ, மற்றவர்களும் φόβον பயத்தை ἔχωσιν. உடையவர்களாய்–இருக்கட்டும்
மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவம் செய்தவர்களை எல்லோருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
21 διαμαρτύρομαι சாட்சியமாய்–கூறுகிறேன் ἐνώπιον –முன்பாக τοῦ –ஆகிய Θεοῦ, தேவனுக்கும் καὶ மற்றும் Χριστοῦ கிறிஸ்து– Ἰησοῦ, இயேசுவுக்கும் καὶ மற்றும் τῶν –ஆகிய ἐκλεκτῶν தேர்ந்தெடுக்கப்பட்ட ἀγγέλων, தூதர்களுக்கும்–முன்பாக ἵνα –ஆக ταῦτα இவைகளை φυλάξῃς, காப்பாற்றுவாய் χωρὶς இல்லாமல் προκρίματος, முன்–தீர்ப்பின் μηδὲν ஒன்றும் ποιῶν செய்யாமல் κατὰ –படி πρόσκλισιν. சாய்வின்படி
நீ பட்சபாதத்தோடு ஒன்றும் செய்யாமலும், விசாரிப்பதற்குமுன்பு முடிவுபண்ணாமலும், இவைகளைக் காத்துநடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதர்களுக்கும்முன்பாக, உறுதியாகக் கட்டளையிடுகிறேன்.
22 Χεῖρας கைகளை ταχέως விரைவில் μηδενὶ ஒருவன்மேலும் ἐπιτίθει, வைக்காதே μηδὲ –யும்–இல்லை κοινώνει பங்கேற்றுக்கொள்ளாதே ἁμαρτίαις பாவங்களில் ἀλλοτρίαις; மற்றவர்களுடைய σεαυτὸν உன்னையே ἁγνὸν தூய்மையுள்ளவனாய் τήρει. காத்துக்கொள்
யார்மேலும் சீக்கிரமாகக் கரங்களை வைக்கவேண்டாம்; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தமானவனாகக் காத்துக்கொள்.
23 Μηκέτι இனிமேல் ὑδροπότει, தண்ணீர்–மாத்திரம்–குடிக்காதே ἀλλὰ ஆனால் οἴνῳ திராட்சைரசத்தில் ὀλίγῳ கொஞ்சம் χρῶ, பயன்படுத்து διὰ –நிமித்தம் τὸν –ஆகிய στόμαχον, வயிற்றுக்காகவும் καὶ மற்றும் τὰς –ஆகிய πυκνάς அடிக்கடியான σου உன்னுடைய ἀσθενείας வியாதிகளுக்காகவும்
நீ இனிமேல் தண்ணீர்மட்டும் குடிக்காமல், உன் வயிற்றுக்காகவும், உனக்கு அடிக்கடி வருகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசத்தையும் குடித்துக்கொள்.
24 Τινῶν சிலரின்– ἀνθρώπων மனிதர்களின்– αἱ –ஆகிய ἁμαρτίαι பாவங்கள் πρόδηλοί வெளிப்படையான εἰσιν, ஆகின்றன προάγουσαι முன்–செல்கின்றன εἰς –க்கு κρίσιν; நீதித்தீர்ப்புக்கு τισὶν சிலரின்– δὲ ஆனால் καὶ மற்றும் ἐπακολουθοῦσιν. பின்பற்றுகின்றன
சிலருடைய பாவங்கள் வெளிப்படையாக இருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.
25 ὡσαύτως அப்படியே καὶ, மற்றும் τὰ –ஆகிய ἔργα கிரியைகள் τὰ –ஆகிய καλὰ நல்ல πρόδηλα, வெளிப்படையான καὶ மற்றும் τὰ –ஆகிய ἄλλως வேறுபடியாய் ἔχοντα, உள்ளவை κρυβῆναι மறைக்கப்பட οὐ இல்லை δύνανται. முடியாது
அப்படியே சிலருடைய நல்லசெயல்களும் வெளிப்படையாக இருக்கும்; அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்கமுடியாது.