1 Ἔστιν இருக்கிறது δὲ –யும் πίστις விசுவாசம் ἐλπιζομένων நம்பிக்கைவைக்கப்படுகிறவைகளின் ὑπόστασις, அடிப்படை πραγμάτων காரியங்களின் ἔλεγχος நிரூபணம் οὐ இல்லை βλεπομένων. காணப்படுகிறவைகளின்
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாக இருக்கிறது.
2 ἐν –இல் ταύτῃ இதினால் γὰρ ஏனெனில் ἐμαρτυρήθησαν சாட்சிபெற்றார்கள் οἱ – πρεσβύτεροι. மூப்பர்கள்
அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
3 Πίστει விசுவாசத்தினால் νοοῦμεν உணர்கிறோம் κατηρτίσθαι உருவாக்கப்பட்டதென்று τοὺς – αἰῶνας, யுகங்கள் ῥήματι வார்த்தையினால் Θεοῦ, தேவனுடைய εἰς –க்கு τὸ – μὴ இல்லை ἐκ –இலிருந்து φαινομένων, தோன்றுகிறவைகளிலிருந்து τὸ – βλεπόμενον காணப்படுகிறது γεγονέναι. ஆயிற்றென்று
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம்.
4 Πίστει விசுவாசத்தினால் πλείονα அதிகமான θυσίαν, பலியை Ἅβελ ஆபேல் παρὰ –விட Κάϊν காயீன் προσήνεγκεν செலுத்தினான் τῷ – Θεῷ; தேவனுக்கு δι’ –ஆல் ἧς அதினால் ἐμαρτυρήθη சாட்சிபெற்றான் εἶναι இருக்க δίκαιος, நீதிமான் μαρτυροῦντος சாட்சிகொடுக்கிற ἐπὶ –மேல் τοῖς – δώροις காணிக்கைகளின் αὐτοῦ அவனுடைய τοῦ – Θεοῦ; தேவன் καὶ மற்றும் δι’ –ஆல் αὐτῆς, அதினால் ἀποθανὼν, மரித்தும் ἔτι இன்னும் λαλεῖ. பேசுகிறான்
விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியைவிட மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமான் என்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைப்பற்றி தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
5 Πίστει விசுவாசத்தினால் Ἑνὼχ ஏனோக்கு μετετέθη, எடுத்துக்கொள்ளப்பட்டான் τοῦ – μὴ இல்லை ἰδεῖν காண θάνατον, மரணத்தை καὶ மற்றும் οὐχ இல்லை ηὑρίσκετο, காணப்படவில்லை διότι ஏனெனில் μετέθηκεν எடுத்துக்கொண்டார் αὐτὸν அவனை ὁ – Θεός; தேவன் πρὸ –க்குமுன் γὰρ ஏனெனில் τῆς –உடைய μεταθέσεως, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு μεμαρτύρηται சாட்சிபெற்றிருக்கிறான் εὐαρεστηκέναι பிரியமாயிருந்தானென்று τῷ – Θεῷ. தேவனுக்கு
விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணமடையாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டதினால், அவன் காணப்படாமல் போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே சாட்சிபெற்றான்.
6 χωρὶς இல்லாமல் δὲ –யும் πίστεως, விசுவாசத்தின் ἀδύνατον சாத்தியமற்றது εὐαρεστῆσαι. பிரியமாயிருக்க πιστεῦσαι விசுவாசிக்க γὰρ ஏனெனில் δεῖ வேண்டும் τὸν – προσερχόμενον சேருகிறவன் τῷ – Θεῷ, தேவனிடத்தில் ὅτι – ἔστιν, இருக்கிறாரென்றும் καὶ மற்றும் τοῖς – ἐκζητοῦσιν தேடுகிறவர்களுக்கு αὐτὸν, அவரை μισθαποδότης பலனளிப்பவர் γίνεται. ஆகிறாரென்றும்
விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும்.
7 Πίστει விசுவாசத்தினால் χρηματισθεὶς, எச்சரிக்கப்பட்டு Νῶε நோவா περὶ –குறித்து τῶν –உடைய μηδέπω இன்னும்–இல்லாத βλεπομένων, காணப்படுகிறவைகளின் εὐλαβηθεὶς, பயபக்தியுடன் κατεσκεύασεν கட்டினான் κιβωτὸν பேழையை εἰς –க்கு σωτηρίαν இரட்சிப்புக்காக τοῦ –உடைய οἴκου வீட்டின் αὐτοῦ; அவனுடைய δι’ –ஆல் ἧς அதினால் κατέκρινεν ஆக்கினைத்தீர்த்தான் τὸν – κόσμον, உலகத்தை καὶ மற்றும் τῆς –உடைய κατὰ –படி πίστιν விசுவாசத்தின் δικαιοσύνης, நீதியின் ἐγένετο ஆனான் κληρονόμος. சுதந்தரவாளி
விசுவாசத்தினாலே நோவா அவனுடைய நாட்களிலே பார்க்காதவைகளைப்பற்றி தேவ எச்சரிப்பைப் பெற்று, பயபக்தியுள்ளவனாக, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குக் கப்பலை உண்டாக்கினான்; அதினாலே அவன் உலகம் தண்டனைக்குரியது என்று முடிவுசெய்து, விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு வாரிசானான்.
8 Πίστει விசுவாசத்தினால் καλούμενος, அழைக்கப்பட்டு Ἀβραὰμ ஆபிரகாம் ὑπήκουσεν கீழ்ப்படிந்தான் ἐξελθεῖν புறப்பட εἰς –க்கு τόπον இடத்துக்கு ὃν எந்த ἤμελλεν போகிறவனாயிருந்தான் λαμβάνειν பெற்றுக்கொள்ள εἰς –க்கு κληρονομίαν, சுதந்தரமாக καὶ மற்றும் ἐξῆλθεν, புறப்பட்டான் μὴ இல்லை ἐπιστάμενος அறிந்து ποῦ எங்கே ἔρχεται. போகிறானென்று
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான்.
9 Πίστει விசுவாசத்தினால் παρῴκησεν பரதேசியாய்த்தங்கினான் εἰς –க்கு γῆν தேசத்தில் τῆς –உடைய ἐπαγγελίας, வாக்குத்தத்தத்தின் ὡς –போல ἀλλοτρίαν, அந்நியமான ἐν –இல் σκηναῖς கூடாரங்களில் κατοικήσας குடியிருந்தான் μετὰ –உடன் Ἰσαὰκ ஈசாக்கு καὶ மற்றும் Ἰακὼβ, யாக்கோபு τῶν –உடைய συνκληρονόμων உடன்சுதந்தரவாளிகளான τῆς –உடைய ἐπαγγελίας வாக்குத்தத்தத்தின் τῆς –உடைய αὐτῆς; அதே
விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியனைப்போல வாழ்ந்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் வாரிசாகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;
10 ἐξεδέχετο எதிர்பார்த்திருந்தான் γὰρ ஏனெனில் τὴν – τοὺς – θεμελίους அஸ்திபாரங்களையுடைய ἔχουσαν கொண்டிருக்கிற πόλιν, நகரத்தை ἧς அதின் τεχνίτης கலைஞர் καὶ மற்றும் δημιουργὸς சிருஷ்டிகர் ὁ – Θεός. தேவன்
ஏனென்றால், தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான்.
11 Πίστει விசுவாசத்தினால் καὶ, –யும் αὐτῇ தானே Σάρρᾳ சாராள் [στεῖρα], மலடி δύναμιν வல்லமையை εἰς –க்கு καταβολὴν உற்பத்திக்காக σπέρματος வித்தின் ἔλαβεν, பெற்றாள் καὶ மற்றும் παρὰ –க்கு–அப்பால் καιρὸν காலத்தை ἡλικίας, வயதின் ἐπεὶ ஏனெனில் πιστὸν உண்மையுள்ளவரென்று ἡγήσατο எண்ணினாள் τὸν – ἐπαγγειλάμενον. வாக்குத்தத்தம்–செய்தவரை
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று, வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள்.
12 διὸ ஆகையால் καὶ –யும் ἀφ’ –இலிருந்து ἑνὸς, ஒருவனிலிருந்து ἐγεννήθησαν, பிறந்தார்கள் καὶ மற்றும் ταῦτα இவைகள் νενεκρωμένου, செத்தவனைப்போன்றவனிலிருந்து καθὼς –போல τὰ – ἄστρα நட்சத்திரங்கள் τοῦ –உடைய οὐρανοῦ வானத்தின் τῷ – πλήθει, திரளாகவும் καὶ மற்றும் ὡς –போல ἡ – ἄμμος மணல் ἡ – παρὰ –அருகில் τὸ – χεῖλος கரையில் τῆς –உடைய θαλάσσης, கடலின் ἡ – ἀναρίθμητος. எண்ணிறந்த
எனவே, சரீரம் செத்தவன் என்று நினைக்கப்படும் ஒருவனாலே, வானத்தில் உள்ள அதிகமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணமுடியாத மணலைப்போலவும் அதிக மக்கள் பிறந்தார்கள்.
13 Κατὰ –படி πίστιν விசுவாசத்தின் ἀπέθανον மரித்தார்கள் οὗτοι இவர்கள் πάντες, எல்லாரும் μὴ இல்லை κομισάμενοι பெற்றுக்கொண்டு τὰς – ἐπαγγελίας, வாக்குத்தத்தங்களை ἀλλὰ ஆனால் πόρρωθεν தூரத்திலிருந்து αὐτὰς அவைகளை ἰδόντες, கண்டு καὶ மற்றும் ἀσπασάμενοι, வரவேற்று καὶ மற்றும் ὁμολογήσαντες அறிக்கையிட்டு ὅτι – ξένοι அந்நியர்கள் καὶ மற்றும் παρεπίδημοί பரதேசிகள் εἰσιν இருக்கிறார்கள் ἐπὶ –மேல் τῆς –உடைய γῆς. பூமியின்
இவர்கள் எல்லோரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைப் பெறாமல், தூரத்திலே அவைகளைப் பார்த்து, நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியர்களும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடு மரித்தார்கள்.
14 οἱ – γὰρ ஏனெனில் τοιαῦτα இவ்விதமான λέγοντες, சொல்லுகிறவர்கள் ἐμφανίζουσιν வெளிப்படுத்துகிறார்கள் ὅτι – πατρίδα தாய்நாட்டை ἐπιζητοῦσιν. தேடுகிறார்களென்று
இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சொந்த தேசத்தை தேடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.
15 καὶ மற்றும் εἰ ஆனால் μὲν – ἐκείνης அந்த ἐμνημόνευον, நினைத்திருந்தார்களானால் ἀφ’ –இலிருந்து ἧς எந்த ἐξέβησαν, புறப்பட்டார்களோ εἶχον கொண்டிருந்திருப்பார்கள் ἂν – καιρὸν சமயத்தை ἀνακάμψαι; திரும்பிப்போக
தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்கள் என்றால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்குமே.
16 νῦν இப்பொழுது δὲ –யும் κρείττονος மேன்மையான ὀρέγονται, விரும்புகிறார்கள் τοῦτ’ அதாவது ἔστιν ஆகும் ἐπουρανίου; பரலோகத்தின் διὸ ஆகையால் οὐκ இல்லை ἐπαισχύνεται வெட்கப்படுகிறாரில்லை αὐτοὺς அவர்களுக்கு ὁ – Θεὸς, தேவன் Θεὸς தேவனென்று ἐπικαλεῖσθαι அழைக்கப்பட αὐτῶν; அவர்களுடைய ἡτοίμασεν ஆயத்தம்செய்திருக்கிறார் γὰρ ஏனெனில் αὐτοῖς அவர்களுக்கு πόλιν. நகரத்தை
அதையல்ல, அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகவே, தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.
17 Πίστει விசுவாசத்தினால் προσενήνοχεν செலுத்தினான் Ἀβραὰμ ஆபிரகாம் τὸν – Ἰσαὰκ; ஈசாக்கை πειραζόμενος, சோதிக்கப்பட்டு καὶ மற்றும் τὸν – μονογενῆ ஒரேபேறானவனை προσέφερεν, செலுத்தினான் ὁ – τὰς – ἐπαγγελίας வாக்குத்தத்தங்களை ἀναδεξάμενος ஏற்றுக்கொண்டவன்
மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.
18 πρὸς –க்கு ὃν யாரிடத்தில் ἐλαλήθη, சொல்லப்பட்டிருந்ததோ ὅτι – Ἐν –இல் Ἰσαὰκ ஈசாக்கினிடத்தில் κληθήσεταί அழைக்கப்படும் σοι உனக்கு σπέρμα; சந்ததி
ஈசாக்கிடம் உன் வம்சம் விளங்கும் என்று அவனிடம் சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப தேவன் வல்லவராக இருக்கிறார் என்று நினைத்து,
19 λογισάμενος எண்ணினான் ὅτι – καὶ –யும் ἐκ –இலிருந்து νεκρῶν மரித்தோரிலிருந்து ἐγείρειν -- எழுப்ப δυνατὸς வல்லவர் ὁ – Θεός, தேவன் ὅθεν அதினாலே αὐτὸν அவனை καὶ –யும் ἐν –இல் παραβολῇ, உவமையாக ἐκομίσατο. திரும்பப்பெற்றான்
தன்னுடைய ஒரே மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை ஒப்பனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
20 Πίστει விசுவாசத்தினால் καὶ –யும் περὶ –குறித்து μελλόντων, வரப்போகிறவைகளின் εὐλόγησεν ஆசீர்வதித்தான் Ἰσαὰκ ஈசாக்கு τὸν – Ἰακὼβ யாக்கோபையும் καὶ மற்றும் τὸν – Ἠσαῦ. ஏசாவையும்
விசுவாசத்தினாலே ஈசாக்கு வருகின்ற காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.
21 Πίστει விசுவாசத்தினால் Ἰακὼβ, யாக்கோபு ἀποθνῄσκων, மரிக்கும்போது ἕκαστον ஒவ்வொருவனையும் τῶν –உடைய υἱῶν குமாரர்களின் Ἰωσὴφ யோசேப்பின் εὐλόγησεν, ஆசீர்வதித்தான் καὶ மற்றும் προσεκύνησεν தொழுதுகொண்டான் ἐπὶ –மேல் τὸ – ἄκρον நுனியின் τῆς –உடைய ῥάβδου கோலின் αὐτοῦ. அவனுடைய
விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
22 Πίστει விசுவாசத்தினால் Ἰωσὴφ, யோசேப்பு τελευτῶν, முடிவடையும்போது περὶ –குறித்து τῆς –உடைய ἐξόδου புறப்படுதலின் τῶν –உடைய υἱῶν குமாரர்களின் Ἰσραὴλ இஸ்ரவேலின் ἐμνημόνευσεν, நினைவுகூர்ந்தான் καὶ மற்றும் περὶ –குறித்து τῶν –உடைய ὀστέων எலும்புகளின் αὐτοῦ அவனுடைய ἐνετείλατο. கட்டளையிட்டான்
விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி, தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான்.
23 Πίστει விசுவாசத்தினால் Μωϋσῆς, மோசே γεννηθεὶς, பிறந்தபோது ἐκρύβη ஒளிக்கப்பட்டான் τρίμηνον மூன்றுமாதம் ὑπὸ –ஆல் τῶν –உடைய πατέρων தகப்பன்மார்களால் αὐτοῦ, அவனுடைய διότι ஏனெனில் εἶδον கண்டார்கள் ἀστεῖον அழகான τὸ – παιδίον; குழந்தையை καὶ மற்றும் οὐκ இல்லை ἐφοβήθησαν பயப்படவில்லை τὸ – διάταγμα கட்டளையை τοῦ –உடைய βασιλέως. ராஜாவின்
மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள்.
24 Πίστει விசுவாசத்தினால் Μωϋσῆς, மோசே μέγας பெரியவனானபோது γενόμενος, ஆனபோது ἠρνήσατο மறுத்தான் λέγεσθαι சொல்லப்பட υἱὸς குமாரன் θυγατρὸς குமாரத்தியின் Φαραώ; பார்வோனின்
விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து,
25 μᾶλλον அதிகமாய் ἑλόμενος தெரிந்துகொண்டு συνκακουχεῖσθαι துன்பப்பட τῷ – λαῷ ஜனத்துடன் τοῦ –உடைய Θεοῦ, தேவனுடைய ἢ –விட πρόσκαιρον அற்பகால ἔχειν கொண்டிருக்க ἁμαρτίας பாவத்தின் ἀπόλαυσιν; சுகபோகத்தை
நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
26 μείζονα பெரிதான πλοῦτον செல்வமென்று ἡγησάμενος, எண்ணினான் τῶν –உடைய Αἰγύπτου எகிப்தின் θησαυρῶν, பொக்கிஷங்களைவிட τὸν – ὀνειδισμὸν நிந்தையை τοῦ –உடைய Χριστοῦ; கிறிஸ்துவின் ἀπέβλεπεν நோக்கியிருந்தான் γὰρ ஏனெனில் εἰς –க்கு τὴν – μισθαποδοσίαν. பலனை
இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான்.
27 Πίστει விசுவாசத்தினால் κατέλιπεν விட்டுச்சென்றான் Αἴγυπτον, எகிப்தை μὴ இல்லை φοβηθεὶς பயப்பட்டு τὸν – θυμὸν கோபத்தை τοῦ –உடைய βασιλέως; ராஜாவின் τὸν – γὰρ ஏனெனில் ἀόρατον அதரிசனமானவரை ὡς –போல ὁρῶν, காண்கிறவனாய் ἐκαρτέρησεν. பொறுமையாயிருந்தான்
விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
28 Πίστει விசுவாசத்தினால் πεποίηκεν செய்தான் τὸ – πάσχα பஸ்காவை καὶ மற்றும் τὴν – πρόσχυσιν இரத்தம்–தெளித்தலை τοῦ –உடைய αἵματος, இரத்தத்தின் ἵνα –க்காக μὴ இல்லை ὁ – ὀλοθρεύων சங்காரம்செய்கிறவன் τὰ – πρωτότοκα தலைச்சன்களை θίγῃ தொடாதபடிக்கு αὐτῶν. அவர்களுடைய
விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.
29 Πίστει விசுவாசத்தினால் διέβησαν கடந்தார்கள் τὴν – Ἐρυθρὰν செங் Θάλασσαν, கடலை ὡς –போல διὰ –ஆல் ξηρᾶς உலர்ந்த γῆς; நிலத்தின் ἧς அதின் πεῖραν முயற்சி λαβόντες, எடுத்து οἱ – Αἰγύπτιοι எகிப்தியர்கள் κατεπόθησαν. விழுங்கப்பட்டார்கள்
விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலை உலர்ந்த தரையைக் கடந்துபோவதைப்போலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிக்கடந்துபோகத் துணிந்து மூழ்கிப்போனார்கள்.
30 Πίστει விசுவாசத்தினால் τὰ – τείχη சுவர்கள் Ἰεριχὼ எரிகோவின் ἔπεσαν, விழுந்தன κυκλωθέντα சுற்றிவரப்பட்டு ἐπὶ –வரை ἑπτὰ ஏழு ἡμέρας. நாட்கள்
விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாட்கள் சுற்றிவரப்பட்டு விழுந்தது.
31 Πίστει விசுவாசத்தினால் Ῥαὰβ ராகாப் ἡ – πόρνη, வேசி οὐ இல்லை συναπώλετο அழிந்துபோகவில்லை τοῖς – ἀπειθήσασιν, கீழ்ப்படியாதவர்களுடன் δεξαμένη ஏற்றுக்கொண்டு τοὺς – κατασκόπους வேவுகாரர்களை μετ’ –உடன் εἰρήνης. சமாதானத்துடன்
விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அழிந்துபோகாமல் இருந்தாள்.
32 Καὶ மற்றும் τί என்ன ἔτι இன்னும் λέγω? சொல்லுவேன் ἐπιλείψει போதாது με எனக்கு γὰρ, ஏனெனில் διηγούμενον விவரிக்கிற ὁ – χρόνος, காலம் περὶ –குறித்து Γεδεών, கிதியோன் Βαράκ, பாராக் Σαμψών, சிம்சோன் Ἰεφθάε, யெப்தா Δαυίδ தாவீது τε, –யும் καὶ மற்றும் Σαμουὴλ, சாமுவேல் καὶ மற்றும் τῶν –உடைய προφητῶν; தீர்க்கதரிசிகளின்
பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையும்குறித்து நான் விபரம் சொல்லவேண்டுமென்றால் காலம்போதாது.
33 οἳ அவர்கள் διὰ –ஆல் πίστεως விசுவாசத்தின் κατηγωνίσαντο ஜெயித்தார்கள் βασιλείας, ராஜ்யங்களை εἰργάσαντο நடப்பித்தார்கள் δικαιοσύνην, நீதியை ἐπέτυχον அடைந்தார்கள் ἐπαγγελιῶν, வாக்குத்தத்தங்களை ἔφραξαν அடைத்தார்கள் στόματα வாய்களை λεόντων; சிங்கங்களின்
விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,
34 ἔσβεσαν அவித்தார்கள் δύναμιν வல்லமையை πυρός, நெருப்பின் ἔφυγον தப்பினார்கள் στόματα வாய்களை μαχαίρης, பட்டயத்தின் ἐδυναμώθησαν பலப்படுத்தப்பட்டார்கள் ἀπὸ –இலிருந்து ἀσθενείας, பலவீனத்திலிருந்து ἐγενήθησαν ஆனார்கள் ἰσχυροὶ பலசாலிகள் ἐν –இல் πολέμῳ, யுத்தத்தில் παρεμβολὰς பாளையங்களை ἔκλιναν முறியடித்தார்கள் ἀλλοτρίων. அந்நியர்களின்
அக்கினியின் கோபத்தை அணைத்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியர்களுடைய படைகளை முறியடித்தார்கள்.
35 ἔλαβον பெற்றார்கள் γυναῖκες ஸ்திரீகள் ἐξ –இலிருந்து ἀναστάσεως உயிர்த்தெழுதலிலிருந்து τοὺς – νεκροὺς மரித்தவர்களை αὐτῶν; அவர்களுடைய ἄλλοι வேறுசிலர் δὲ –யும் ἐτυμπανίσθησαν, வதைக்கப்பட்டார்கள் οὐ இல்லை προσδεξάμενοι ஏற்றுக்கொள்ளாமல் τὴν – ἀπολύτρωσιν, மீட்பை ἵνα –க்காக κρείττονος மேன்மையான ἀναστάσεως உயிர்த்தெழுதலை τύχωσιν. அடையும்படிக்கு
பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்;
36 ἕτεροι வேறுசிலர் δὲ –யும் ἐμπαιγμῶν பரிகாசங்களின் καὶ மற்றும் μαστίγων, அடிகளின் πεῖραν அனுபவத்தை ἔλαβον; பெற்றார்கள் ἔτι, இன்னும் δὲ –யும் δεσμῶν விலங்குகளின் καὶ மற்றும் φυλακῆς. சிறையின்
வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்;
37 ἐλιθάσθησαν, கல்லெறியப்பட்டார்கள் 〈ἐπειράσθησαν〉, சோதிக்கப்பட்டார்கள் ἐπρίσθησαν, அறுக்கப்பட்டார்கள் ἐν –இல் φόνῳ கொலையினால் μαχαίρης பட்டயத்தின் ἀπέθανον; மரித்தார்கள் περιῆλθον அலைந்தார்கள் ἐν –இல் μηλωταῖς, ஆட்டுத்தோல்களில் ἐν –இல் αἰγείοις வெள்ளாட்டு δέρμασιν, தோல்களில் ὑστερούμενοι, குறைவுபட்டு θλιβόμενοι, உபத்திரவப்பட்டு κακουχούμενοι; துன்புறுத்தப்பட்டு
கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்;
38 ὧν யாருடைய οὐκ இல்லை ἦν இருந்தது ἄξιος தகுதி ὁ – κόσμος; உலகம் ἐπὶ –மேல் ἐρημίαις வனாந்தரங்களில் πλανώμενοι, அலைந்து καὶ மற்றும் ὄρεσιν, மலைகளில் καὶ மற்றும் σπηλαίοις, குகைகளில் καὶ மற்றும் ταῖς – ὀπαῖς துவாரங்களில் τῆς –உடைய γῆς. பூமியின்
உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள்.
39 Καὶ மற்றும் οὗτοι இவர்கள் πάντες, எல்லாரும் μαρτυρηθέντες சாட்சிபெற்று διὰ –ஆல் τῆς –உடைய πίστεως, விசுவாசத்தின் οὐκ இல்லை ἐκομίσαντο பெற்றுக்கொள்ளவில்லை τὴν – ἐπαγγελίαν; வாக்குத்தத்தத்தை
இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள்.
40 τοῦ –உடைய Θεοῦ தேவன் περὶ –குறித்து ἡμῶν நம்முடைய κρεῖττόν மேன்மையான τι ஒன்றை προβλεψαμένου, முன்குறித்திருக்கிறபடியால் ἵνα –க்காக μὴ இல்லை χωρὶς இல்லாமல் ἡμῶν நம்முடைய τελειωθῶσιν. பூரணமாக்கப்படும்படிக்கு
நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார்.