1 Μετὰ –பிறகு τοῦτο இதன் εἶδον நான்–கண்டேன் τέσσαρας நான்கு ἀγγέλους தூதர்களை ἑστῶτας நின்றிருக்கிற ἐπὶ –மேல் τὰς –அந்த τέσσαρας நான்கு γωνίας மூலைகளில் τῆς –அந்த γῆς, பூமியின் κρατοῦντας பிடித்திருக்கிற τοὺς –அந்த τέσσαρας நான்கு ἀνέμους காற்றுகளை τῆς –அந்த γῆς, பூமியின் ἵνα –என்று μὴ –இல்லை πνέῃ வீசும் ἄνεμος காற்று ἐπὶ –மேல் τῆς –அந்த γῆς, பூமியின் μήτε –இல்லை ἐπὶ –மேல் τῆς –அந்த θαλάσσης, கடலின் μήτε –இல்லை ἐπὶ –மேல் πᾶν எந்த δένδρον. மரத்தின்
இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலோ, கடலின்மேலோ, ஒரு மரத்தின்மேலோ காற்று அடிக்காதபடி பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருப்பதைப் பார்த்தேன்.
2 καὶ மற்றும் εἶδον நான்–கண்டேன் ἄλλον வேறொரு ἄγγελον, தூதனை ἀναβαίνοντα ஏறுகிற ἀπὸ –இலிருந்து ἀνατολῆς உதயத்தின் ἡλίου, சூரியனின் ἔχοντα கொண்டிருக்கிற σφραγῖδα முத்திரையை Θεοῦ தேவனுடைய ζῶντος; ஜீவிக்கிற καὶ மற்றும் ἔκραξεν கூப்பிட்டான் φωνῇ குரலில் μεγάλῃ பெரிய τοῖς –அந்த τέσσαρσιν நான்கு ἀγγέλοις தூதர்களுக்கு οἷς –எவர்களுக்கு ἐδόθη கொடுக்கப்பட்டது αὐτοῖς அவர்களுக்கு ἀδικῆσαι சேதப்படுத்த τὴν –அந்த γῆν பூமியை καὶ மற்றும் τὴν –அந்த θάλασσαν, கடலை
ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலை வைத்திருந்த வேறொரு தூதன் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து ஏறிவருவதைப் பார்த்தேன்; அவன், பூமியையும் கடலையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:
3 λέγων, சொல்லுகிற Μὴ –இல்லை ἀδικήσητε சேதப்படுத்துங்கள் τὴν –அந்த γῆν, பூமியை μήτε –இல்லை τὴν –அந்த θάλασσαν, கடலை μήτε –இல்லை τὰ –அந்த δένδρα, மரங்களை ἄχρι –வரை σφραγίσωμεν முத்திரையிடுவோம் τοὺς –அந்த δούλους அடிமைகளை τοῦ –உடைய Θεοῦ தேவனுடைய ἡμῶν, நம்முடைய ἐπὶ –மேல் τῶν –அந்த μετώπων நெற்றிகளின் αὐτῶν. அவர்களுடைய
நாம் நமது தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றிகளில் முத்திரைப் போடும்வரைக்கும் பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள் என்று அதிக சத்தமாகச் சொன்னான்.
4 Καὶ மற்றும் ἤκουσα நான்–கேட்டேன் τὸν –அந்த ἀριθμὸν எண்ணிக்கையை τῶν –அந்த ἐσφραγισμένων, முத்திரையிடப்பட்டவர்களின் ἑκατὸν நூற்று τεσσεράκοντα நாற்பது τέσσαρες நான்கு χιλιάδες, ஆயிரங்கள் ἐσφραγισμένοι முத்திரையிடப்பட்டவர்கள் ἐκ –இலிருந்து πάσης எல்லா φυλῆς கோத்திரத்தின் υἱῶν புத்திரர்களின் Ἰσραήλ; இஸ்ரவேலின்
முத்திரைபோடப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சொல்வதைக்கேட்டேன்; இஸ்ரவேல் மக்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர்.
5 ἐκ –இலிருந்து φυλῆς கோத்திரத்தின் Ἰούδα, யூதாவின் δώδεκα பன்னிரண்டு χιλιάδες ஆயிரங்கள் ἐσφραγισμένοι; முத்திரையிடப்பட்டவர்கள் ἐκ –இலிருந்து φυλῆς கோத்திரத்தின் Ῥουβὴν, ரூபனின் δώδεκα பன்னிரண்டு χιλιάδες; ஆயிரங்கள் ἐκ –இலிருந்து φυλῆς கோத்திரத்தின் Γὰδ, காத்தின் δώδεκα பன்னிரண்டு χιλιάδες; ஆயிரங்கள்
யூதாகோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
6 ἐκ –இலிருந்து φυλῆς கோத்திரத்தின் Ἀσὴρ, ஆசேரின் δώδεκα பன்னிரண்டு χιλιάδες; ஆயிரங்கள் ἐκ –இலிருந்து φυλῆς கோத்திரத்தின் Νεφθαλὶμ, நப்தலியின் δώδεκα பன்னிரண்டு χιλιάδες; ஆயிரங்கள் ἐκ –இலிருந்து φυλῆς கோத்திரத்தின் Μανασσῆ, மனாசேயின் δώδεκα பன்னிரண்டு χιλιάδες; ஆயிரங்கள்
ஆசேர் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
7 ἐκ –இலிருந்து φυλῆς கோத்திரத்தின் Συμεὼν, சிமியோனின் δώδεκα பன்னிரண்டு χιλιάδες; ஆயிரங்கள் ἐκ –இலிருந்து φυλῆς கோத்திரத்தின் Λευὶ, லேவியின் δώδεκα பன்னிரண்டு χιλιάδες; ஆயிரங்கள் ἐκ –இலிருந்து φυλῆς கோத்திரத்தின் Ἰσσαχὰρ, இசக்காரின் δώδεκα பன்னிரண்டு χιλιάδες; ஆயிரங்கள்
சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
8 ἐκ –இலிருந்து φυλῆς கோத்திரத்தின் Ζαβουλὼν, செபுலோனின் δώδεκα பன்னிரண்டு χιλιάδες; ஆயிரங்கள் ἐκ –இலிருந்து φυλῆς கோத்திரத்தின் Ἰωσὴφ, யோசேப்பின் δώδεκα பன்னிரண்டு χιλιάδες; ஆயிரங்கள் ἐκ –இலிருந்து φυλῆς கோத்திரத்தின் Βενιαμὶν, பென்யமீனின் δώδεκα பன்னிரண்டு χιλιάδες ஆயிரங்கள் ἐσφραγισμένοι. முத்திரையிடப்பட்டவர்கள்
செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
9 Μετὰ –பிறகு ταῦτα இவைகளின் εἶδον, நான்–கண்டேன் καὶ மற்றும் ἰδοὺ, இதோ ὄχλος கூட்டம் πολύς, திரளான ὃν –எந்த ἀριθμῆσαι எண்ண αὐτὸν அதை οὐδεὶς ஒருவனும் ἐδύνατο; கூடவில்லை ἐκ –இலிருந்து παντὸς எல்லா ἔθνους, தேசத்தின் καὶ மற்றும் φυλῶν, கோத்திரங்களின் καὶ மற்றும் λαῶν, ஜனங்களின் καὶ மற்றும் γλωσσῶν, மொழிகளின் ἑστῶτες நின்றிருக்கிறவர்கள் ἐνώπιον –முன்பாக τοῦ –அந்த θρόνου சிங்காசனத்தின் καὶ மற்றும் ἐνώπιον –முன்பாக τοῦ –அந்த Ἀρνίου, ஆட்டுக்குட்டியின் περιβεβλημένους அணிந்திருக்கிற στολὰς அங்கிகளை λευκάς, வெள்ளை καὶ மற்றும் φοίνικες குருத்தோலைகள் ἐν –இல் ταῖς –அந்த χερσὶν கைகளில் αὐτῶν; அவர்களுடைய
இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, எல்லாத் தேசங்களிலும் கோத்திரங்களிலும் மக்களிலும் மொழிக்காரர்களிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணிப்பார்க்க முடியாத திரளான மக்கள்கூட்டம், வெள்ளை அங்கிகளை அணிந்து, தங்களுடைய கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதைக் கண்டேன்.
10 καὶ மற்றும் κράζουσιν கூப்பிடுகிறார்கள் φωνῇ குரலில் μεγάλῃ, பெரிய λέγοντες, சொல்லுகிற Ἡ –அந்த σωτηρία இரட்சிப்பு τῷ –அந்த Θεῷ தேவனுக்கு ἡμῶν, நம்முடைய τῷ –அந்த καθημένῳ அமர்ந்திருக்கிறவருக்கு ἐπὶ –மேல் τῷ –அந்த θρόνῳ, சிங்காசனத்தின் καὶ மற்றும் τῷ –அந்த Ἀρνίῳ! ஆட்டுக்குட்டிக்கு!
அவர்கள் அதிக சத்தமாக: இரட்சிப்பு, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்களுடைய தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரியது என்று ஆர்ப்பரித்தார்கள்.
11 καὶ மற்றும் πάντες எல்லா οἱ –அந்த ἄγγελοι தூதர்கள் εἱστήκεισαν நின்றிருந்தார்கள் κύκλῳ சுற்றிலும் τοῦ –அந்த θρόνου, சிங்காசனத்தின் καὶ மற்றும் τῶν –அந்த πρεσβυτέρων, மூப்பர்களின் καὶ மற்றும் τῶν –அந்த τεσσάρων நான்கு ζῴων, ஜீவராசிகளின் καὶ மற்றும் ἔπεσαν விழுந்தார்கள் ἐνώπιον –முன்பாக τοῦ –அந்த θρόνου சிங்காசனத்தின் ἐπὶ –மேல் τὰ –அந்த πρόσωπα முகங்களின் αὐτῶν, அவர்களுடைய καὶ மற்றும் προσεκύνησαν தொழுதுகொண்டார்கள் τῷ –அந்த Θεῷ, தேவனை
தூதர்கள் எல்லோரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சுற்றிநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:
12 λέγοντες, சொல்லுகிற Ἀμήν! ஆமென்! ἡ –அந்த εὐλογία, ஆசீர்வாதம் καὶ மற்றும் ἡ –அந்த δόξα, மகிமை καὶ மற்றும் ἡ –அந்த σοφία, ஞானம் καὶ மற்றும் ἡ –அந்த εὐχαριστία, ஸ்தோத்திரம் καὶ மற்றும் ἡ –அந்த τιμὴ, கனம் καὶ மற்றும் ἡ –அந்த δύναμις, வல்லமை καὶ மற்றும் ἡ –அந்த ἰσχὺς, பலம் τῷ –அந்த Θεῷ தேவனுக்கு ἡμῶν, நம்முடைய εἰς –க்கு τοὺς –அந்த αἰῶνας யுகங்களின் τῶν –அந்த αἰώνων! யுகங்களின்! ἀμήν. ஆமென்
ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.
13 Καὶ மற்றும் ἀπεκρίθη பதிலளித்தான் εἷς ஒருவன் ἐκ –இலிருந்து τῶν –அந்த πρεσβυτέρων, மூப்பர்களின் λέγων சொல்லுகிற μοι, எனக்கு Οὗτοι இவர்கள் οἱ –அந்த περιβεβλημένοι அணிந்திருக்கிறவர்கள் τὰς –அந்த στολὰς அங்கிகளை τὰς –அந்த λευκὰς, வெள்ளை τίνες யார் εἰσὶν, இருக்கிறார்கள் καὶ மற்றும் πόθεν எங்கிருந்து ἦλθον? வந்தார்கள்
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: வெள்ளை அங்கிகளை அணிந்திருக்கிற இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
14 καὶ மற்றும் εἴρηκα நான்–சொன்னேன் αὐτῷ, அவனுக்கு Κύριέ ஆண்டவரே μου, என்னுடைய σὺ நீர் οἶδας. அறிவீர் καὶ மற்றும் εἶπέν சொன்னான் μοι, எனக்கு Οὗτοί இவர்கள் εἰσιν இருக்கிறார்கள் οἱ –அந்த ἐρχόμενοι வருகிறவர்கள் ἐκ –இலிருந்து τῆς –அந்த θλίψεως உபத்திரவத்தின் τῆς –அந்த μεγάλης, பெரிய καὶ மற்றும் ἔπλυναν துவைத்தார்கள் τὰς –அந்த στολὰς அங்கிகளை αὐτῶν, அவர்களுடைய καὶ மற்றும் ἐλεύκαναν வெண்மையாக்கினார்கள் αὐτὰς அவைகளை ἐν –இல் τῷ –அந்த αἵματι இரத்தத்தில் τοῦ –அந்த Ἀρνίου. ஆட்டுக்குட்டியின்
அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் அதிக உபத்திரவத்தில் இருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே நனைத்து வெண்மையாக்கிக்கொண்டவர்கள்.
15 διὰ –நிமித்தம் τοῦτό, இதன் εἰσιν இருக்கிறார்கள் ἐνώπιον –முன்பாக τοῦ –அந்த θρόνου சிங்காசனத்தின் τοῦ –அந்த Θεοῦ, தேவனுடைய καὶ மற்றும் λατρεύουσιν ஆராதிக்கிறார்கள் αὐτῷ அவரை ἡμέρας பகலும் καὶ மற்றும் νυκτὸς இரவும் ἐν –இல் τῷ –அந்த ναῷ ஆலயத்தில் αὐτοῦ; அவருடைய καὶ மற்றும் ὁ –அந்த καθήμενος அமர்ந்திருக்கிறவர் ἐπὶ –மேல் τοῦ –அந்த θρόνου சிங்காசனத்தின் σκηνώσει தங்கியிருப்பார் ἐπ’ –மேல் αὐτούς. அவர்களை
எனவே, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை ஆராதிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களோடு இருந்து பாதுகாப்பார்.
16 οὐ –இல்லை πεινάσουσιν பசியாயிருப்பார்கள் ἔτι, இனி οὐδὲ –இல்லை διψήσουσιν தாகமாயிருப்பார்கள் ἔτι, இனி οὐδὲ –இல்லை μὴ –இல்லை πέσῃ விழும் ἐπ’ –மேல் αὐτοὺς அவர்களை ὁ –அந்த ἥλιος, சூரியன் οὐδὲ –இல்லை πᾶν எந்த καῦμα; வெப்பமும்
இவர்கள் இனிப் பசியடைவதும் இல்லை, இனித் தாகமடைவதும் இல்லை; வெயிலோ, வெப்பமோ இவர்கள்மேல் படுவதும் இல்லை.
17 ὅτι ஏனெனில் τὸ –அந்த Ἀρνίον ஆட்டுக்குட்டி τὸ –அந்த ἀνὰ –இல் μέσον நடுவில் τοῦ –அந்த θρόνου சிங்காசனத்தின் ποιμανεῖ மேய்ப்பார் αὐτούς, அவர்களை καὶ மற்றும் ὁδηγήσει வழிநடத்துவார் αὐτοὺς அவர்களை ἐπὶ –க்கு ζωῆς ஜீவனின் πηγὰς ஊற்றுகளுக்கு ὑδάτων, தண்ணீர்களின் καὶ மற்றும் ἐξαλείψει துடைப்பார் ὁ –அந்த Θεὸς தேவன் πᾶν எல்லா δάκρυον கண்ணீரை ἐκ –இலிருந்து τῶν –அந்த ὀφθαλμῶν கண்களின் αὐτῶν. அவர்களுடைய
சிங்காசனத்தின் நடுவில் இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றுகளுக்கு நடத்திக்கொண்டு போவார்; தேவனே இவர்களுடைய கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார்” என்றான்.