1 וַיְדַבֵּ֥ר –மற்றும்–பேசினார் יְהוָ֖ה யெகோவா אֶל־ –நோக்கி– מֹשֶׁ֥ה மோசேயிடம் לֵּאמֹֽר׃ –சொல்லி
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
2 זֹ֤את இது תִּֽהְיֶה֙ இருக்கும் תּוֹרַ֣ת சட்டம் הַמְּצֹרָ֔ע –அந்த–துஷ்டரோகமுள்ளவனின் בְּי֖וֹם –நாளில்– טָהֳרָת֑וֹ அவனுடைய–சுத்திகரிப்பின் וְהוּבָ֖א –மற்றும்–கொண்டுவரப்படுவான் אֶל־ –நோக்கி– הַכֹּהֵֽן׃ –அந்த–ஆசாரியனிடம்
“தொழுநோயாளியினுடைய சுத்திகரிப்பின் நாட்களில் அவனுக்குரிய விதிமுறைகள் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும்.
3 וְיָצָא֙ –மற்றும்–வெளியேவருவான் הַכֹּהֵ֔ן –அந்த–ஆசாரியன் אֶל־ –நோக்கி– מִח֖וּץ –வெளியே– לַֽמַּחֲנֶ֑ה –பாளையத்திற்கு– וְרָאָה֙ –மற்றும்–பார்ப்பான் הַכֹּהֵ֔ן –அந்த–ஆசாரியன் וְהִנֵּ֛ה –மற்றும்–இதோ נִרְפָּ֥א குணமானது נֶֽגַע־ வித்தை– הַצָּרַ֖עַת –அந்த–துஷ்டரோகத்தின் מִן־ –இலிருந்து– הַצָּרֽוּעַ׃ –அந்த–துஷ்டரோகமுள்ளவனிடமிருந்து
ஆசாரியன் முகாமிற்கு வெளியே போய்; அவனுடைய தொழுநோய் சுகமாகிவிட்டது என்று கண்டால்,
4 וְצִוָּה֙ –மற்றும்–கட்டளையிடுவான் הַכֹּהֵ֔ן –அந்த–ஆசாரியன் וְלָקַ֧ח –மற்றும்–எடுப்பான் לַמִּטַּהֵ֛ר –சுத்திகரிக்கப்படும்போது– שְׁתֵּֽי־ இரண்டு– צִפֳּרִ֥ים பட்சிகளை חַיּ֖וֹת உயிருள்ள טְהֹר֑וֹת சுத்தமானவைகளை וְעֵ֣ץ –மற்றும்–மரத்தை אֶ֔רֶז கேதுருவின் וּשְׁנִ֥י –மற்றும்–சிகப்பு– תוֹלַ֖עַת புழுவின் וְאֵזֹֽב׃ –மற்றும்–ஈசோப்பை
சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டளையிடுவானாக.
5 וְצִוָּה֙ –மற்றும்–கட்டளையிடுவான் הַכֹּהֵ֔ן –அந்த–ஆசாரியன் וְשָׁחַ֖ט –மற்றும்–அடிப்பான் אֶת־ –ஐ– הַצִּפּ֣וֹר –அந்த–பட்சியை הָאֶחָ֑ת –அந்த–ஒன்றை אֶל־ –நோக்கி– כְּלִי־ பாத்திரத்தின்– חֶ֖רֶשׂ மண்ணின் עַל־ –மேல்– מַ֥יִם தண்ணீர் חַיִּֽים׃ உயிருள்ள
பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பானையிலுள்ள சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லச்சொல்லி,
6 אֶת־ –ஐ– הַצִּפֹּ֤ר –அந்த–பட்சியை הַֽחַיָּה֙ –அந்த–உயிருள்ள יִקַּ֣ח எடுப்பான் אֹתָ֔הּ –அதை– וְאֶת־ –மற்றும்–ஐ– עֵ֥ץ மரத்தை הָאֶ֛רֶז –அந்த–கேதுருவின் וְאֶת־ –மற்றும்–ஐ– שְׁנִ֥י சிகப்பு– הַתּוֹלַ֖עַת –அந்த–புழுவின் וְאֶת־ –மற்றும்–ஐ– הָאֵזֹ֑ב –அந்த–ஈசோப்பை וְטָבַ֨ל –மற்றும்–முழ்குவான் אוֹתָ֜ם –அவற்றை– וְאֵ֣ת ׀ –மற்றும்–ஐ– הַצִּפֹּ֣ר –அந்த–பட்சியை הַֽחַיָּ֗ה –அந்த–உயிருள்ள בְּדַם֙ –இரத்தத்தில்– הַצִּפֹּ֣ר –அந்த–பட்சியின் הַשְּׁחֻטָ֔ה –அந்த–அடிக்கப்பட்ட עַ֖ל –மேல்– הַמַּ֥יִם –அந்த–தண்ணீரின் הַֽחַיִּֽים׃ –அந்த–உயிருள்ள
உயிருள்ள குருவியையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே நனைத்து,
7 וְהִזָּ֗ה –மற்றும்–தெளிப்பான் עַ֧ל –மேல்– הַמִּטַּהֵ֛ר –சுத்திகரிக்கப்படும்போது– מִן־ –இலிருந்து– הַצָּרַ֖עַת –அந்த–துஷ்டரோகத்தின் שֶׁ֣בַע ஏழு פְּעָמִ֑ים முறை וְטִ֣הֲר֔וֹ –மற்றும்–சுத்தமென்று–தீர்ப்பான்–அவனை וְשִׁלַּ֛ח –மற்றும்–விடுவான் אֶת־ –ஐ– הַצִּפֹּ֥ר –அந்த–பட்சியை הַֽחַיָּ֖ה –அந்த–உயிருள்ள עַל־ –மேல்– פְּנֵ֥י முகத்தின்– הַשָּׂדֶֽה׃ –அந்த–வயலின்
தொழுநோய் நீங்கச் சுத்திரிக்கப்படுகிறவன்மேல் ஏழுமுறை தெளித்து, அவனைச் சுத்தம்செய்து, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடுவானாக.
8 וְכִבֶּס֩ –மற்றும்–தோய்ப்பான் הַמִּטַּהֵ֨ר –சுத்திகரிக்கப்படும்போது– אֶת־ –ஐ– בְּגָדָ֜יו அவனுடைய–ஆடைகளை וְגִלַּ֣ח –மற்றும்–சிரையப்பான் אֶת־ –ஐ– כָּל־ எல்லா– שְׂעָר֗וֹ அவனுடைய–முடியை וְרָחַ֤ץ –மற்றும்–கழுவினான் בַּמַּ֙יִם֙ –தண்ணீரில்– וְטָהֵ֔ר –மற்றும்–சுத்தமாவான் וְאַחַ֖ר –மற்றும்–பின்னர்– יָב֣וֹא வருவான் אֶל־ –நோக்கி– הַֽמַּחֲנֶ֑ה –அந்த–பாளையத்திற்கு וְיָשַׁ֛ב –மற்றும்–உட்காருவான் מִח֥וּץ –வெளியே– לְאָהֳל֖וֹ அவனுடைய–கூடாரத்திற்கு שִׁבְעַ֥ת ஏழு יָמִֽים׃ நாட்கள்
சுத்திகரிக்கப்படுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தன் முடி முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாவதற்காக தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்கு வந்து, தன் கூடாரத்திற்கு வெளியே ஏழுநாட்கள் தங்கி,
9 וְהָיָה֩ –மற்றும்–ஆகும் בַיּ֨וֹם –நாளில்– הַשְּׁבִיעִ֜י –அந்த–ஏழாம் יְגַלַּ֣ח சிரையப்பான் אֶת־ –ஐ– כָּל־ எல்லா– שְׂעָר֗וֹ அவனுடைய–முடியை אֶת־ –ஐ– רֹאשׁ֤וֹ அவனுடைய–தலையை וְאֶת־ –மற்றும்–ஐ– זְקָנוֹ֙ அவனுடைய–தாடியை וְאֵת֙ –மற்றும்–ஐ– גַּבֹּ֣ת புருவங்களை עֵינָ֔יו அவனுடைய–கண்களின் וְאֶת־ –மற்றும்–ஐ– כָּל־ எல்லா– שְׂעָר֖וֹ அவனுடைய–முடியை יְגַלֵּ֑חַ சிரையப்பான் וְכִבֶּ֣ס –மற்றும்–தோய்ப்பான் אֶת־ –ஐ– בְּגָדָ֗יו அவனுடைய–ஆடைகளை וְרָחַ֧ץ –மற்றும்–கழுவினான் אֶת־ –ஐ– בְּשָׂר֛וֹ அவனுடைய–மாம்சத்தை בַּמַּ֖יִם –தண்ணீரில்– וְטָהֵֽר׃ –மற்றும்–சுத்தமாவான்
ஏழாம் நாளிலே தன் தலையையும், தாடியையும், புருவங்களையும் தன்னுடைய முடிமுழுவதையும் சிரைத்து, தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பான்.
10 וּבַיּ֣וֹם –மற்றும்–நாளில் הַשְּׁמִינִ֗י –அந்த–எட்டாம் יִקַּ֤ח எடுப்பான் שְׁנֵֽי־ இரண்டு– כְבָשִׂים֙ ஆட்டுக்குட்டிகளை תְּמִימִ֔ים குறையற்றவைகளை וְכַבְשָׂ֥ה –மற்றும்–பெண்–ஆட்டுக்குட்டியை אַחַ֛ת ஒன்று בַּת־ –மகள்– שְׁנָתָ֖הּ அதன்–ஆண்டின் תְּמִימָ֑ה குறையற்றது וּשְׁלֹשָׁ֣ה –மற்றும்–மூன்று עֶשְׂרֹנִ֗ים பத்தில்–ஒன்றுபங்குகள் סֹ֤לֶת மெல்லிய–மாவை מִנְחָה֙ உணவு–காணிக்கையாக בְּלוּלָ֣ה கலக்கப்பட்டது בַשֶּׁ֔מֶן –எண்ணெயில்– וְלֹ֥ג –மற்றும்–லோக் אֶחָ֖ד ஒன்று שָֽׁמֶן׃ எண்ணெய்
“எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒருவயதுடைய பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், உணவுபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஒரு ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன்.
11 וְהֶעֱמִ֞יד –மற்றும்–நிறுத்துவான் הַכֹּהֵ֣ן –அந்த–ஆசாரியன் הַֽמְטַהֵ֗ר –சுத்திகரிக்கின்ற– אֵ֛ת –ஐ– הָאִ֥ישׁ –அந்த–மனிதனை הַמִּטַּהֵ֖ר –சுத்திகரிக்கப்படும்போது– וְאֹתָ֑ם –மற்றும்–அவற்றை– לִפְנֵ֣י –முன்பாக– יְהוָ֔ה யெகோவாவின் פֶּ֖תַח வாசலில் אֹ֥הֶל கூடாரத்தின் מוֹעֵֽד׃ சந்திப்பின்
சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அப்பொருட்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.
12 וְלָקַ֨ח –மற்றும்–எடுப்பான் הַכֹּהֵ֜ן –அந்த–ஆசாரியன் אֶת־ –ஐ– הַכֶּ֣בֶשׂ –அந்த–ஆட்டுக்குட்டியை הָאֶחָ֗ד –அந்த–ஒன்றை וְהִקְרִ֥יב –மற்றும்–அர்ப்பணிப்பான் אֹת֛וֹ –அதை– לְאָשָׁ֖ם –குற்றப்பலியாக– וְאֶת־ –மற்றும்–ஐ– לֹ֣ג லோக் הַשָּׁ֑מֶן –அந்த–எண்ணெயின் וְהֵנִ֥יף –மற்றும்–ஆட்டுவான் אֹתָ֛ם –அவற்றை– תְּנוּפָ֖ה ஆட்டு–காணிக்கையாக לִפְנֵ֥י –முன்பாக– יְהוָֽה׃ யெகோவாவின்
பின்பு, ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,
13 וְשָׁחַ֣ט –மற்றும்–அடிப்பான் אֶת־ –ஐ– הַכֶּ֗בֶשׂ –அந்த–ஆட்டுக்குட்டியை בִּ֠מְקוֹם –இடத்தில்– אֲשֶׁ֨ר –அதை– יִשְׁחַ֧ט அடிப்பான் אֶת־ –ஐ– הַֽחַטָּ֛את –அந்த–பாவநிவாரணபலியை וְאֶת־ –மற்றும்–ஐ– הָעֹלָ֖ה –அந்த–சர்வாங்க–தகனபலியை בִּמְק֣וֹם –இடத்தில்– הַקֹּ֑דֶשׁ –அந்த–பரிசுத்தத்தின் כִּ֡י –ஏனெனில்– כַּ֠חַטָּאת –பாவநிவாரணபலியைப்போல்– הָאָשָׁ֥ם –அந்த–குற்றப்பலி הוּא֙ அது לַכֹּהֵ֔ן –ஆசாரியனுக்கு– קֹ֥דֶשׁ பரிசுத்தம் קָֽדָשִׁ֖ים பரிசுத்தங்களுக்குள்ளான הֽוּא׃ அது
பாவநிவாரணபலியும் சர்வாங்கதகனபலியும் செலுத்தும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.
14 וְלָקַ֣ח –மற்றும்–எடுப்பான் הַכֹּהֵן֮ –அந்த–ஆசாரியன் מִדַּ֣ם –இரத்தத்திலிருந்து– הָאָשָׁם֒ –அந்த–குற்றப்பலியின் וְנָתַן֙ –மற்றும்–வைப்பான் הַכֹּהֵ֔ן –அந்த–ஆசாரியன் עַל־ –மேல்– תְּנ֛וּךְ மடலின் אֹ֥זֶן காதின் הַמִּטַּהֵ֖ר –சுத்திகரிக்கப்படும்போது– הַיְמָנִ֑ית –அந்த–வலதுப்பக்கத்தின் וְעַל־ –மற்றும்–மேல்– בֹּ֤הֶן பெருவிரலின் יָדוֹ֙ அவனுடைய–கையின் הַיְמָנִ֔ית –அந்த–வலதுப்பக்கத்தின் וְעַל־ –மற்றும்–மேல்– בֹּ֥הֶן பெருவிரலின் רַגְל֖וֹ அவனுடைய–காலின் הַיְמָנִֽית׃ –அந்த–வலதுப்பக்கத்தின்
அந்த குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசுவானாக.
15 וְלָקַ֥ח –மற்றும்–எடுப்பான் הַכֹּהֵ֖ן –அந்த–ஆசாரியன் מִלֹּ֣ג –லோக்கிலிருந்து– הַשָּׁ֑מֶן –அந்த–எண்ணெயின் וְיָצַ֛ק –மற்றும்–வார்த்தான் עַל־ –மேல்– כַּ֥ף உள்ளங்கையின் הַכֹּהֵ֖ן –அந்த–ஆசாரியனின் הַשְּׂמָאלִֽית׃ –அந்த–இடதுப்பக்கத்தின்
பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் ஊற்றி
16 וְטָבַ֤ל –மற்றும்–முழ்குவான் הַכֹּהֵן֙ –அந்த–ஆசாரியன் אֶת־ –ஐ– אֶצְבָּע֣וֹ அவனுடைய–விரலை הַיְמָנִ֔ית –அந்த–வலதுப்பக்கத்தின் מִן־ –இலிருந்து– הַשֶּׁ֕מֶן –அந்த–எண்ணெயின் אֲשֶׁ֥ר –அதை– עַל־ –மேல்– כַּפּ֖וֹ அவனுடைய–உள்ளங்கையின் הַשְּׂמָאלִ֑ית –அந்த–இடதுப்பக்கத்தின் וְהִזָּ֨ה –மற்றும்–தெளிப்பான் מִן־ –இலிருந்து– הַשֶּׁ֧מֶן –அந்த–எண்ணெயின் בְּאֶצְבָּע֛וֹ அவனுடைய–விரலினால் שֶׁ֥בַע ஏழு פְּעָמִ֖ים முறை לִפְנֵ֥י –முன்பாக– יְהוָֽה׃ யெகோவாவின்
தன் இடதுகையிலுள்ள எண்ணெயில் தன் வலதுகையின் விரலை நனைத்து, தன் விரலினால் ஏழுமுறை அந்த எண்ணெயில் எடுத்து, யெகோவாவுடைய சந்நிதியில் தெளித்து,
17 וּמִיֶּ֨תֶר –மற்றும்–மீதியிலிருந்து הַשֶּׁ֜מֶן –அந்த–எண்ணெயின் אֲשֶׁ֣ר –அதை– עַל־ –மேல்– כַּפּ֗וֹ அவனுடைய–உள்ளங்கையின் יִתֵּ֤ן வைப்பான் הַכֹּהֵן֙ –அந்த–ஆசாரியன் עַל־ –மேல்– תְּנ֞וּךְ மடலின் אֹ֤זֶן காதின் הַמִּטַּהֵר֙ –சுத்திகரிக்கப்படும்போது– הַיְמָנִ֔ית –அந்த–வலதுப்பக்கத்தின் וְעַל־ –மற்றும்–மேல்– בֹּ֤הֶן பெருவிரலின் יָדוֹ֙ அவனுடைய–கையின் הַיְמָנִ֔ית –அந்த–வலதுப்பக்கத்தின் וְעַל־ –மற்றும்–மேல்– בֹּ֥הֶן பெருவிரலின் רַגְל֖וֹ அவனுடைய–காலின் הַיְמָנִ֑ית –அந்த–வலதுப்பக்கத்தின் עַ֖ל –மேல்– דַּ֥ם இரத்தத்தின் הָאָשָֽׁם׃ –அந்த–குற்றப்பலியின்
தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும், ஏற்கனவே பூசியிருக்கிற குற்றநிவாரணபலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி,
18 וְהַנּוֹתָ֗ר –மற்றும்–அந்த–மீதியானது בַּשֶּׁ֙מֶן֙ –எண்ணெயில்– אֲשֶׁר֙ –அதை– עַל־ –மேல்– כַּ֣ף உள்ளங்கையின் הַכֹּהֵ֔ן –அந்த–ஆசாரியனின் יִתֵּ֖ן வைப்பான் עַל־ –மேல்– רֹ֣אשׁ தலையின் הַמִּטַּהֵ֑ר –சுத்திகரிக்கப்படும்போது– וְכִפֶּ֥ר –மற்றும்–பரிகாரம்செய்வான் עָלָ֛יו –அவன்மேல்– הַכֹּהֵ֖ן –அந்த–ஆசாரியன் לִפְנֵ֥י –முன்பாக– יְהוָֽה׃ யெகோவாவின்
தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய தலையிலே ஊற்றி யெகோவாவுடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
19 וְעָשָׂ֤ה –மற்றும்–செய்வான் הַכֹּהֵן֙ –அந்த–ஆசாரியன் אֶת־ –ஐ– הַ֣חַטָּ֔את –அந்த–பாவநிவாரணபலியை וְכִפֶּ֕ר –மற்றும்–பரிகாரம்செய்வான் עַל־ –மேல்– הַמִּטַּהֵ֖ר –சுத்திகரிக்கப்படும்போது– מִטֻּמְאָת֑וֹ அவனுடைய–அசுத்தத்திலிருந்து וְאַחַ֖ר –மற்றும்–பின்னர்– יִשְׁחַ֥ט அடிப்பான் אֶת־ –ஐ– הָעֹלָֽה׃ –அந்த–சர்வாங்க–தகனபலியை
ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்கதகனபலியைக் கொன்று,
20 וְהֶעֱלָ֧ה –மற்றும்–எரிப்பான் הַכֹּהֵ֛ן –அந்த–ஆசாரியன் אֶת־ –ஐ– הָעֹלָ֥ה –அந்த–சர்வாங்க–தகனபலியை וְאֶת־ –மற்றும்–ஐ– הַמִּנְחָ֖ה –அந்த–உணவு–காணிக்கையை הַמִּזְבֵּ֑חָה –பலிபீடத்தின்மேல்– וְכִפֶּ֥ר –மற்றும்–பரிகாரம்செய்வான் עָלָ֛יו –அவன்மேல்– הַכֹּהֵ֖ן –அந்த–ஆசாரியன் וְטָהֵֽר׃ –மற்றும்–சுத்தமாவான் ס ס
சர்வாங்கதகனபலியையும் உணவுபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாக இருப்பான்.
21 וְאִם־ –ஆனால்– דַּ֣ל ஏழையான ה֗וּא அவன் וְאֵ֣ין –மற்றும்–இல்லை יָדוֹ֮ அவனுடைய–கை מַשֶּׂגֶת֒ எட்டுகிறது וְ֠לָקַח –மற்றும்–எடுப்பான் כֶּ֣בֶשׂ ஆட்டுக்குட்டியை אֶחָ֥ד ஒன்று אָשָׁ֛ם குற்றப்பலியாக לִתְנוּפָ֖ה ஆட்டு–காணிக்கையாக לְכַפֵּ֣ר பரிகாரம்செய்ய עָלָ֑יו –மேல்–அவன் וְעִשָּׂר֨וֹן –மற்றும்–பத்தில்–ஒன்றுபங்கு סֹ֜לֶת மெல்லிய–மாவை אֶחָ֨ד ஒன்று בָּל֥וּל கலக்கப்பட்டது בַּשֶּׁ֛מֶן எண்ணெயில் לְמִנְחָ֖ה உணவு–காணிக்கையாக וְלֹ֥ג –மற்றும்–லோக் שָֽׁמֶן׃ எண்ணெய்
“அவன் இவ்விதம் செய்யமுடியாத ஏழையாக இருந்தால், அவன் தன் பாவநிவிர்த்திக்கென்று அசைவாட்டும் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியையும், உணவுபலிக்கு எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும்,
22 וּשְׁתֵּ֣י –மற்றும்–இரண்டு תֹרִ֗ים காட்டுப்புறாக்களை א֤וֹ அல்லது שְׁנֵי֙ இரண்டு בְּנֵ֣י குஞ்சுகளை יוֹנָ֔ה புறாவின் אֲשֶׁ֥ר –அதை– תַּשִּׂ֖יג எட்டுகிறது יָד֑וֹ அவனுடைய–கை וְהָיָ֤ה –மற்றும்–ஆகும் אֶחָד֙ ஒன்று חַטָּ֔את பாவநிவாரணபலியாக וְהָאֶחָ֖ד –மற்றும்–அந்த–ஒன்று עֹלָֽה׃ சர்வாங்க–தகனபலியாக
தன் தகுதிக்குத் தக்கபடி இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்று பாவநிவாரணபலியாகவும், மற்றொன்று சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தும்படி வாங்கி,
23 וְהֵבִ֨יא –மற்றும்–கொண்டுவருவான் אֹתָ֜ם –ஐ–அவைகளை בַּיּ֧וֹם நாளில் הַשְּׁמִינִ֛י –அந்த–எட்டாம் לְטָהֳרָת֖וֹ அவனுடைய–சுத்திகரிப்புக்காக אֶל־ –நோக்கி– הַכֹּהֵ֑ן –அந்த–ஆசாரியனிடம் אֶל־ –நோக்கி– פֶּ֥תַח வாசலுக்கு אֹֽהֶל־ கூடாரத்தின்– מוֹעֵ֖ד சந்திப்பின் לִפְנֵ֥י முன்பாக יְהוָֽה׃ யெகோவாவின்
தான் சுத்திகரிக்கப்படும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவருவானாக.
24 וְלָקַ֧ח –மற்றும்–எடுப்பான் הַכֹּהֵ֛ן –அந்த–ஆசாரியன் אֶת־ –ஐ– כֶּ֥בֶשׂ ஆட்டுக்குட்டியை הָאָשָׁ֖ם –அந்த–குற்றப்பலியின் וְאֶת־ –மற்றும்–ஐ– לֹ֣ג லோக் הַשָּׁ֑מֶן –அந்த–எண்ணெயின் וְהֵנִ֨יף –மற்றும்–ஆட்டுவான் אֹתָ֧ם –ஐ–அவைகளை הַכֹּהֵ֛ן –அந்த–ஆசாரியன் תְּנוּפָ֖ה ஆட்டு–காணிக்கையாக לִפְנֵ֥י முன்பாக יְהוָֽה׃ யெகோவாவின்
அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் உணவுபலியாக அசைவாட்டி,
25 וְשָׁחַט֮ –மற்றும்–அடிப்பான் אֶת־ –ஐ– כֶּ֣בֶשׂ ஆட்டுக்குட்டியை הָֽאָשָׁם֒ –அந்த–குற்றப்பலியின் וְלָקַ֤ח –மற்றும்–எடுப்பான் הַכֹּהֵן֙ –அந்த–ஆசாரியன் מִדַּ֣ם இரத்தத்திலிருந்து הָֽאָשָׁ֔ם –அந்த–குற்றப்பலியின் וְנָתַ֛ן –மற்றும்–வைப்பான் עַל־ –மேல்– תְּנ֥וּךְ மடலின் אֹֽזֶן־ காதின்– הַמִּטַּהֵ֖ר –அந்த–சுத்திகரிக்கப்படுகிறவனின் הַיְמָנִ֑ית –அந்த–வலதுப்பக்கத்தின் וְעַל־ –மற்றும்–மேல்– בֹּ֤הֶן பெருவிரலின் יָדוֹ֙ அவனுடைய–கையின் הַיְמָנִ֔ית –அந்த–வலதுப்பக்கத்தின் וְעַל־ –மற்றும்–மேல்– בֹּ֥הֶן பெருவிரலின் רַגְל֖וֹ அவனுடைய–காலின் הַיְמָנִֽית׃ –அந்த–வலதுப்பக்கத்தின்
குற்றநிவாரணபலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,
26 וּמִן־ –மற்றும்–இலிருந்து– הַשֶּׁ֖מֶן –அந்த–எண்ணெயின் יִצֹ֣ק வார்ப்பான் הַכֹּהֵ֑ן –அந்த–ஆசாரியன் עַל־ –மேல்– כַּ֥ף உள்ளங்கையின் הַכֹּהֵ֖ן –அந்த–ஆசாரியனின் הַשְּׂמָאלִֽית׃ –அந்த–இடதுப்பக்கத்தின்
அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் ஊற்றி
27 וְהִזָּ֤ה –மற்றும்–தெளிப்பான் הַכֹּהֵן֙ –அந்த–ஆசாரியன் בְּאֶצְבָּע֣וֹ அவனுடைய–விரலால் הַיְמָנִ֔ית –அந்த–வலதுப்பக்கத்தின் מִן־ –இலிருந்து– הַשֶּׁ֕מֶן –அந்த–எண்ணெயின் אֲשֶׁ֥ר –அதை– עַל־ –மேல்– כַּפּ֖וֹ அவனுடைய–உள்ளங்கையிலிருந்து הַשְּׂמָאלִ֑ית –அந்த–இடதுப்பக்கத்தின் שֶׁ֥בַע ஏழு פְּעָמִ֖ים முறை לִפְנֵ֥י முன்பாக יְהוָֽה׃ யெகோவாவின்
தன் இடதுகையிலுள்ள எண்ணெயிலே தன் வலதுவிரலை நனைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுமுறை தெளித்து,
28 וְנָתַ֨ן –மற்றும்–வைப்பான் הַכֹּהֵ֜ן –அந்த–ஆசாரியன் מִן־ –இலிருந்து– הַשֶּׁ֣מֶן ׀ –அந்த–எண்ணெயின் אֲשֶׁ֣ר –அதை– עַל־ –மேல்– כַּפּ֗וֹ அவனுடைய–உள்ளங்கையிலிருந்து עַל־ –மேல்– תְּנ֞וּךְ மடலின் אֹ֤זֶן காதின் הַמִּטַּהֵר֙ –அந்த–சுத்திகரிக்கப்படுகிறவனின் הַיְמָנִ֔ית –அந்த–வலதுப்பக்கத்தின் וְעַל־ –மற்றும்–மேல்– בֹּ֤הֶן பெருவிரலின் יָדוֹ֙ அவனுடைய–கையின் הַיְמָנִ֔ית –அந்த–வலதுப்பக்கத்தின் וְעַל־ –மற்றும்–மேல்– בֹּ֥הֶן பெருவிரலின் רַגְל֖וֹ அவனுடைய–காலின் הַיְמָנִ֑ית –அந்த–வலதுப்பக்கத்தின் עַל־ –மேல்– מְק֖וֹם இடத்தின் דַּ֥ם இரத்தத்தின் הָאָשָֽׁם׃ –அந்த–குற்றப்பலியின்
தன் உள்ளங்கையில் இருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்தின்மேல் பூசி,
29 וְהַנּוֹתָ֗ר –மற்றும்–அந்த–மீதியை מִן־ –இலிருந்து– הַשֶּׁ֙מֶן֙ –அந்த–எண்ணெயின் אֲשֶׁר֙ –அதை– עַל־ –மேல்– כַּ֣ף உள்ளங்கையின் הַכֹּהֵ֔ן –அந்த–ஆசாரியனின் יִתֵּ֖ן வைப்பான் עַל־ –மேல்– רֹ֣אשׁ தலையின் הַמִּטַּהֵ֑ר –அந்த–சுத்திகரிக்கப்படுகிறவனின் לְכַפֵּ֥ר பரிகாரம்செய்ய עָלָ֖יו –மேல்–அவன் לִפְנֵ֥י முன்பாக יְהוָֽה׃ யெகோவாவின்
தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,
30 וְעָשָׂ֤ה –மற்றும்–செய்வான் אֶת־ –ஐ– הָֽאֶחָד֙ –அந்த–ஒன்றை מִן־ –இலிருந்து– הַתֹּרִ֔ים –அந்த–காட்டுப்புறாக்களிலிருந்து א֖וֹ அல்லது מִן־ –இலிருந்து– בְּנֵ֣י குஞ்சுகளிலிருந்து הַיּוֹנָ֑ה –அந்த–புறாவின் מֵאֲשֶׁ֥ר –இலிருந்து–அதை– תַּשִּׂ֖יג எட்டுகிறது יָדֽוֹ׃ அவனுடைய–கை
பின்பு, அவன் தன் பெலத்திற்கும் தகுதிக்கும் தக்கதாக காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து,
31 אֵ֣ת –ஐ– אֲשֶׁר־ –அதை– תַּשִּׂ֞יג எட்டுகிறது יָד֗וֹ அவனுடைய–கை אֶת־ –ஐ– הָאֶחָ֥ד –அந்த–ஒன்றை חַטָּ֛את பாவநிவாரணபலியாக וְאֶת־ –மற்றும்–ஐ– הָאֶחָ֥ד –அந்த–ஒன்றை עֹלָ֖ה சர்வாங்க–தகனபலியாக עַל־ –மேல்– הַמִּנְחָ֑ה –அந்த–உணவு–காணிக்கையின் וְכִפֶּ֧ר –மற்றும்–பரிகாரம்செய்வான் הַכֹּהֵ֛ן –அந்த–ஆசாரியன் עַ֥ל –மேல்– הַמִּטַּהֵ֖ר –அந்த–சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக לִפְנֵ֥י முன்பாக יְהוָֽה׃ யெகோவாவின்
அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, உணவுபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
32 זֹ֣את இதுவே תּוֹרַ֔ת சட்டமாகும் אֲשֶׁר־ –அதை– בּ֖וֹ அவனிடம் נֶ֣גַע வாதை צָרָ֑עַת துஷ்டரோகத்தின் אֲשֶׁ֛ר –அதை– לֹֽא־ இல்லை– תַשִּׂ֥יג எட்டுகிறது יָד֖וֹ அவனுடைய–கை בְּטָהֳרָתֽוֹ׃ அவனுடைய–சுத்திகரிப்பில் פ —
தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கமுடியாத தொழுநோயாளியைக் குறித்த விதிமுறைகள் இதுவே என்றார்.
33 וַיְדַבֵּ֣ר –மற்றும்–பேசினார் יְהוָ֔ה யெகோவா אֶל־ –நோக்கி– מֹשֶׁ֥ה மோசேயிடம் וְאֶֽל־ –மற்றும்–நோக்கி– אַהֲרֹ֖ן ஆரோனிடம் לֵאמֹֽר׃ –சொல்லி
பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
34 כִּ֤י –எப்போது– תָבֹ֙אוּ֙ வருகின்றீர்கள் אֶל־ –நோக்கி– אֶ֣רֶץ தேசத்திற்கு כְּנַ֔עַן கானானின் אֲשֶׁ֥ר –அதை– אֲנִ֛י நான் נֹתֵ֥ן கொடுக்கின்றேன் לָכֶ֖ם உங்களுக்கு לַאֲחֻזָּ֑ה உடைமையாக וְנָתַתִּי֙ –மற்றும்–வைப்பேன் נֶ֣גַע வாதையை צָרַ֔עַת துஷ்டரோகத்தின் בְּבֵ֖ית வீட்டில் אֶ֥רֶץ தேசத்தின் אֲחֻזַּתְכֶֽם׃ உங்களுடைய–உடைமையின்
“நான் உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் சொந்தமான தேசத்தில் ஒரு வீட்டிலே பூசணத்தை நான் வரச்செய்தால்,
35 וּבָא֙ –மற்றும்–வருவான் אֲשֶׁר־ –அதை– ל֣וֹ அவனுக்கு הַבַּ֔יִת –அந்த–வீடு וְהִגִּ֥יד –மற்றும்–தெரிவிப்பான் לַכֹּהֵ֖ן ஆசாரியனிடம் לֵאמֹ֑ר –சொல்லி כְּנֶ֕גַע –போன்ற–வாதை נִרְאָ֥ה காணப்படுகின்றது לִ֖י எனக்கு בַּבָּֽיִת׃ வீட்டில்
அந்த வீட்டிற்குச் சொந்தமானவன் வந்து, வீட்டிலே பூசணம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
36 וְצִוָּ֨ה –மற்றும்–கட்டளையிடுவான் הַכֹּהֵ֜ן –அந்த–ஆசாரியன் וּפִנּ֣וּ –மற்றும்–காலிசெய்வார்கள் אֶת־ –ஐ– הַבַּ֗יִת –அந்த–வீட்டை בְּטֶ֨רֶם முன்பு יָבֹ֤א வருவதற்கு הַכֹּהֵן֙ –அந்த–ஆசாரியன் לִרְא֣וֹת பார்க்க אֶת־ –ஐ– הַנֶּ֔גַע –அந்த–வாதையை וְלֹ֥א –மற்றும்–இல்லை– יִטְמָ֖א அசுத்தமாகும் כָּל־ எல்லா– אֲשֶׁ֣ר –அதை– בַּבָּ֑יִת வீட்டில் וְאַ֥חַר –மற்றும்–பின்னர் כֵּ֛ן அவ்வாறு יָבֹ֥א வருவான் הַכֹּהֵ֖ן –அந்த–ஆசாரியன் לִרְא֥וֹת பார்க்க אֶת־ –ஐ– הַבָּֽיִת׃ –அந்த–வீட்டை
அப்பொழுது வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டுப்படாதபடி, ஆசாரியன் அந்தப் பூசணத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை காலிசெய்துவைக்கச் சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய்,
37 וְרָאָ֣ה –மற்றும்–பார்ப்பான் אֶת־ –ஐ– הַנֶּ֗גַע –அந்த–வாதையை וְהִנֵּ֤ה –மற்றும்–இதோ הַנֶּ֙גַע֙ –அந்த–வாதை בְּקִירֹ֣ת சுவர்களில் הַבַּ֔יִת –அந்த–வீட்டின் שְׁקַֽעֲרוּרֹת֙ பள்ளங்களாக יְרַקְרַקֹּ֔ת பச்சையான א֖וֹ அல்லது אֲדַמְדַּמֹּ֑ת சிவப்பான וּמַרְאֵיהֶ֥ן –மற்றும்–அவைகளின்–தோற்றம் שָׁפָ֖ל தாழ்ந்தது מִן־ –இலிருந்து– הַקִּֽיר׃ –அந்த–சுவரின்
அந்தப் பூசணம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்ற சுவரைவிட பள்ளமாக இருக்கக்கண்டால்,
38 וְיָצָ֧א –மற்றும்–வெளியேறுவான் הַכֹּהֵ֛ן –அந்த–ஆசாரியன் מִן־ –இலிருந்து– הַבַּ֖יִת –அந்த–வீட்டிலிருந்து אֶל־ –நோக்கி– פֶּ֣תַח வாசலுக்கு הַבָּ֑יִת –அந்த–வீட்டின் וְהִסְגִּ֥יר –மற்றும்–தனிமைப்படுத்துவான் אֶת־ –ஐ– הַבַּ֖יִת –அந்த–வீட்டை שִׁבְעַ֥ת ஏழு יָמִֽים׃ நாட்கள்
ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
39 וְשָׁ֥ב –மற்றும்–திரும்புவான் הַכֹּהֵ֖ן –அந்த–ஆசாரியன் בַּיּ֣וֹם நாளில் הַשְּׁבִיעִ֑י –அந்த–ஏழாம் וְרָאָ֕ה –மற்றும்–பார்ப்பான் וְהִנֵּ֛ה –மற்றும்–இதோ פָּשָׂ֥ה பரவியது הַנֶּ֖גַע –அந்த–வாதை בְּקִירֹ֥ת சுவர்களில் הַבָּֽיִת׃ –அந்த–வீட்டின்
ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, பூசணம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்,
40 וְצִוָּה֙ –மற்றும்–கட்டளையிடுவான் הַכֹּהֵ֔ן –அந்த–ஆசாரியன் וְחִלְּצוּ֙ –மற்றும்–பிடுங்குவார்கள் אֶת־ –ஐ– הָ֣אֲבָנִ֔ים –அந்த–கற்களை אֲשֶׁ֥ר –அதை– בָּהֵ֖ן அவைகளில் הַנָּ֑גַע –அந்த–வாதை וְהִשְׁלִ֤יכוּ –மற்றும்–எறிவார்கள் אֶתְהֶן֙ –ஐ–அவைகளை אֶל־ –நோக்கி– מִח֣וּץ வெளியே לָעִ֔יר நகரத்திற்கு אֶל־ –நோக்கி– מָק֖וֹם இடத்திற்கு טָמֵֽא׃ அசுத்தமான
பூசணம் இருக்கும் அந்த இடத்தின் கற்களைப் பெயர்க்கவும், பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,
41 וְאֶת־ –மற்றும்–ஐ– הַבַּ֛יִת –அந்த–வீட்டை יַקְצִ֥עַ சுரண்டுவான் מִבַּ֖יִת உள்ளிலிருந்து סָבִ֑יב சுற்றிலும் וְשָׁפְכ֗וּ –மற்றும்–கொட்டுவார்கள் אֶת־ –ஐ– הֶֽעָפָר֙ –அந்த–மண்ணை אֲשֶׁ֣ר –அதை– הִקְצ֔וּ சுரண்டினார்கள் אֶל־ –நோக்கி– מִח֣וּץ வெளியே לָעִ֔יר நகரத்திற்கு אֶל־ –நோக்கி– מָק֖וֹם இடத்திற்கு טָמֵֽא׃ அசுத்தமான
வீட்டின் உட்புறம் சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும்,
42 וְלָקְחוּ֙ –மற்றும்–எடுப்பார்கள் אֲבָנִ֣ים கற்களை אֲחֵר֔וֹת வேறு וְהֵבִ֖יאוּ –மற்றும்–கொண்டுவருவார்கள் אֶל־ –நோக்கி– תַּ֣חַת பதிலாக הָאֲבָנִ֑ים –அந்த–கற்களுக்கு וְעָפָ֥ר –மற்றும்–மண்ணை אַחֵ֛ר வேறு יִקַּ֖ח எடுப்பான் וְטָ֥ח –மற்றும்–பூசுவான் אֶת־ –ஐ– הַבָּֽיִת׃ –அந்த–வீட்டை
வேறே கற்களை எடுத்துவந்து, அந்தக் கற்களுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
43 וְאִם־ –ஆனால்– יָשׁ֤וּב திரும்புகின்றது הַנֶּ֙גַע֙ –அந்த–வாதை וּפָרַ֣ח –மற்றும்–பூக்கின்றது בַּבַּ֔יִת வீட்டில் אַחַ֖ר பின்னர் חִלֵּ֣ץ பிடுங்கிய אֶת־ –ஐ– הָאֲבָנִ֑ים –அந்த–கற்களை וְאַחֲרֵ֛י –மற்றும்–பின்னர் הִקְצ֥וֹת சுரண்டிய אֶת־ –ஐ– הַבַּ֖יִת –அந்த–வீட்டை וְאַחֲרֵ֥י –மற்றும்–பின்னர் הִטּֽוֹחַ׃ பூசிய
“கற்களைப் பெயர்த்து, வீட்டைச்செதுக்கி, புதிதாகப் பூசினபின்பும், அந்தப் பூசணம் மீண்டும் வீட்டில் வந்ததானால்,
44 וּבָא֙ –மற்றும்–வருவான் הַכֹּהֵ֔ן –அந்த–ஆசாரியன் וְרָאָ֕ה –மற்றும்–பார்ப்பான் וְהִנֵּ֛ה –மற்றும்–இதோ פָּשָׂ֥ה பரவியது הַנֶּ֖גַע –அந்த–வாதை בַּבָּ֑יִת வீட்டில் צָרַ֨עַת துஷ்டரோகம் מַמְאֶ֥רֶת கெடுதியான הִ֛וא அது בַּבַּ֖יִת வீட்டில் טָמֵ֥א அசுத்தமான הֽוּא׃ அது
ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; பூசணம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற பூசணம்; அது தீட்டாயிருக்கும்.
45 וְנָתַ֣ץ –மற்றும்–இடிப்பான் אֶת־ –ஐ– הַבַּ֗יִת –அந்த–வீட்டை אֶת־ –ஐ– אֲבָנָיו֙ அதனுடைய–கற்களையும் וְאֶת־ –மற்றும்–ஐ– עֵצָ֔יו அதனுடைய–மரங்களையும் וְאֵ֖ת –மற்றும்–ஐ– כָּל־ எல்லா– עֲפַ֣ר மண்ணை הַבָּ֑יִת –அந்த–வீட்டின் וְהוֹצִיא֙ –மற்றும்–வெளியே–கொண்டுபோவான் אֶל־ –நோக்கி– מִח֣וּץ வெளியே לָעִ֔יר நகரத்திற்கு אֶל־ –நோக்கி– מָק֖וֹם இடத்திற்கு טָמֵֽא׃ அசுத்தமான
ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கற்களையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும்.
46 וְהַבָּא֙ –மற்றும்–அந்த–வருகின்றவன் אֶל־ –நோக்கி– הַבַּ֔יִת –அந்த–வீட்டிற்கு כָּל־ எல்லா– יְמֵ֖י நாட்களில் הִסְגִּ֣יר தனிமைப்படுத்திய אֹת֑וֹ –ஐ–அதை יִטְמָ֖א அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை
வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
47 וְהַשֹּׁכֵ֣ב –மற்றும்–அந்த–படுக்கின்றவன் בַּבַּ֔יִת வீட்டில் יְכַבֵּ֖ס தோய்ப்பான் אֶת־ –ஐ– בְּגָדָ֑יו அவனுடைய–ஆடைகளை וְהָאֹכֵ֣ל –மற்றும்–அந்த–சாப்பிடுகின்றவன் בַּבַּ֔יִת வீட்டில் יְכַבֵּ֖ס தோய்ப்பான் אֶת־ –ஐ– בְּגָדָֽיו׃ அவனுடைய–ஆடைகளை
அந்த வீட்டிலே உறங்கியவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்.
48 וְאִם־ –ஆனால்– בֹּ֨א வருவதாக יָבֹ֜א வருகின்றான் הַכֹּהֵ֗ן –அந்த–ஆசாரியன் וְרָאָה֙ –மற்றும்–பார்ப்பான் וְ֠הִנֵּה –மற்றும்–இதோ לֹא־ இல்லை– פָשָׂ֤ה பரவியது הַנֶּ֙גַע֙ –அந்த–வாதை בַּבַּ֔יִת வீட்டில் אַחֲרֵ֖י பின்னர் הִטֹּ֣חַ பூசிய אֶת־ –ஐ– הַבָּ֑יִת –அந்த–வீட்டை וְטִהַ֤ר –மற்றும்–சுத்தமென்று–தீர்ப்பான் הַכֹּהֵן֙ –அந்த–ஆசாரியன் אֶת־ –ஐ– הַבַּ֔יִת –அந்த–வீட்டை כִּ֥י –ஏனெனில்– נִרְפָּ֖א குணமானது הַנָּֽגַע׃ –அந்த–வாதை
“ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தப் பூசணம் படரவில்லை என்று கண்டானேயாகில், பூசணம் நீங்கிவிட்டதால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்மானிக்கக்கடவன்.
49 וְלָקַ֛ח –மற்றும்–எடுப்பான் לְחַטֵּ֥א சுத்திகரிக்க אֶת־ –ஐ– הַבַּ֖יִת –அந்த–வீட்டை שְׁתֵּ֣י இரண்டு צִפֳּרִ֑ים பட்சிகளை וְעֵ֣ץ –மற்றும்–மரத்தை אֶ֔רֶז கேதுருவின் וּשְׁנִ֥י –மற்றும்–சிகப்பு תוֹלַ֖עַת புழுவின் וְאֵזֹֽב׃ –மற்றும்–ஈசோப்பை
அப்பொழுது வீட்டைச் சுத்திகரிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து,
50 וְשָׁחַ֖ט –மற்றும்–அடிப்பான் אֶת־ –ஐ– הַצִּפֹּ֣ר –அந்த–பட்சியை הָאֶחָ֑ת –அந்த–ஒன்றை אֶל־ –நோக்கி– כְּלִי־ பாத்திரத்தின்– חֶ֖רֶשׂ மண்ணின் עַל־ –மேல்– מַ֥יִם தண்ணீர் חַיִּֽים׃ உயிருள்ள
ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,
51 וְלָקַ֣ח –மற்றும்–எடுப்பான் אֶת־ –ஐ– עֵֽץ־ மரத்தை– הָ֠אֶרֶז –அந்த–கேதுருவின் וְאֶת־ –மற்றும்–ஐ– הָ֨אֵזֹ֜ב –அந்த–ஈசோப்பையும் וְאֵ֣ת ׀ –மற்றும்–ஐ– שְׁנִ֣י சிகப்பு הַתּוֹלַ֗עַת –அந்த–புழுவின் וְאֵת֮ –மற்றும்–ஐ– הַצִּפֹּ֣ר –அந்த–பட்சியை הַֽחַיָּה֒ –அந்த–உயிருள்ள וְטָבַ֣ל –மற்றும்–முழ்குவான் אֹתָ֗ם –ஐ–அவைகளை בְּדַם֙ இரத்தத்தில் הַצִּפֹּ֣ר –அந்த–பட்சியின் הַשְּׁחוּטָ֔ה –அந்த–அடிக்கப்பட்ட וּבַמַּ֖יִם –மற்றும்–தண்ணீரில் הַֽחַיִּ֑ים –அந்த–உயிருள்ள וְהִזָּ֥ה –மற்றும்–தெளிப்பான் אֶל־ –நோக்கி– הַבַּ֖יִת –அந்த–வீட்டின்மேல் שֶׁ֥בַע ஏழு פְּעָמִֽים׃ முறை
கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் நனைத்து, வீட்டின்மேல் ஏழுமுறை தெளித்து,
52 וְחִטֵּ֣א –மற்றும்–சுத்திகரிப்பான் אֶת־ –ஐ– הַבַּ֔יִת –அந்த–வீட்டை בְּדַם֙ இரத்தத்தில் הַצִּפּ֔וֹר –அந்த–பட்சியின் וּבַמַּ֖יִם –மற்றும்–தண்ணீரில் הַֽחַיִּ֑ים –அந்த–உயிருள்ள וּבַצִּפֹּ֣ר –மற்றும்–பட்சியில் הַחַיָּ֗ה –அந்த–உயிருள்ள וּבְעֵ֥ץ –மற்றும்–மரத்தில் הָאֶ֛רֶז –அந்த–கேதுருவின் וּבָאֵזֹ֖ב –மற்றும்–ஈசோப்பில் וּבִשְׁנִ֥י –மற்றும்–சிகப்பில் הַתּוֹלָֽעַת׃ –அந்த–புழுவின்
குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டைச் சுத்திகரித்து,
53 וְשִׁלַּ֞ח –மற்றும்–விடுவான் אֶת־ –ஐ– הַצִּפֹּ֧ר –அந்த–பட்சியை הַֽחַיָּ֛ה –அந்த–உயிருள்ள אֶל־ –நோக்கி– מִח֥וּץ வெளியே לָעִ֖יר நகரத்திற்கு אֶל־ –நோக்கி– פְּנֵ֣י முகத்திற்கு הַשָּׂדֶ֑ה –அந்த–வயலின் וְכִפֶּ֥ר –மற்றும்–பரிகாரம்செய்வான் עַל־ –மேல்– הַבַּ֖יִת –அந்த–வீட்டின்மேல் וְטָהֵֽר׃ –மற்றும்–சுத்தமாகும்
உயிருள்ள குருவியைப் பட்டணத்திற்கு வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாக இருக்கும்”.
54 זֹ֖את இதுவே הַתּוֹרָ֑ה –அந்த–சட்டம் לְכָל־ எல்லா– נֶ֥גַע வாதையைப்பற்றி הַצָּרַ֖עַת –அந்த–துஷ்டரோகத்தின் וְלַנָּֽתֶק׃ –மற்றும்–நெதெக்கும்
இது சகலவித தொழுநோய்க்கும், சொறிக்கும்,
55 וּלְצָרַ֥עַת –மற்றும்–துஷ்டரோகத்திற்கும் הַבֶּ֖גֶד –அந்த–ஆடையின் וְלַבָּֽיִת׃ –மற்றும்–வீட்டின்
உடைப் பூசணத்திற்கும், வீட்டுப்பூசணத்திற்கும்,
56 וְלַשְׂאֵ֥ת –மற்றும்–திடிப்புக்கும் וְלַסַּפַּ֖חַת –மற்றும்–சிரங்குக்கும் וְלַבֶּהָֽרֶת׃ –மற்றும்–பளப்புத்திரைக்கும்
தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் உரிய விதிமுறை.
57 לְהוֹרֹ֕ת கற்பிக்க בְּי֥וֹם நாளில் הַטָּמֵ֖א –அந்த–அசுத்தமான וּבְי֣וֹם –மற்றும்–நாளில் הַטָּהֹ֑ר –அந்த–சுத்தமான זֹ֥את இதுவே תּוֹרַ֖ת சட்டமாகும் הַצָּרָֽעַת׃ –அந்த–துஷ்டரோகத்தின் ס —
தொழுநோய் மற்றும் பூசணம், எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்கு தொழுநோய்க்குரிய விதிமுறைகள் இதுவே என்றார்.