1 וַיְדַבֵּ֣ר மற்றும்–பேசினார் יְהוָ֔ה யெகோவா אֶל־ –நோக்கி מֹשֶׁ֥ה மோசே וְאֶֽל־ மற்றும்–நோக்கி אַהֲרֹ֖ן ஆரோன் לֵאמֹֽר׃ சொல்லி
யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2 אִ֣ישׁ ஒவ்வொருவன் עַל־ –மேல் דִּגְל֤וֹ –கொடியின்கீழ் בְאֹתֹת֙ –அடையாளங்களோடு לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֔ם தகப்பன்மாரின் יַחֲנ֖וּ பாளயமிறங்குவார்கள் בְּנֵ֣י புத்திரர் יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் מִנֶּ֕גֶד எதிரே סָבִ֥יב சுற்றிலும் לְאֹֽהֶל־ –கூடாரத்தை– מוֹעֵ֖ד ஆராதனையின் יַחֲנֽוּ׃ பாளயமிறங்குவார்கள்
“இஸ்ரவேல் சந்ததியார்கள் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தைச் சேர்ந்த தங்கள் தங்கள் கொடியருகில் தங்களுடைய கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் முகாமிடவேண்டும்.
3 וְהַחֹנִים֙ மற்றும்–பாளயமிறங்குகிறவர்கள் קֵ֣דְמָה கிழக்கே מִזְרָ֔חָה சூரியஉதயத்தில் דֶּ֛גֶל கொடி מַחֲנֵ֥ה பாளயத்தின் יְהוּדָ֖ה யூதாவின் לְצִבְאֹתָ֑ם சேனைகளின்படி וְנָשִׂיא֙ மற்றும்–பிரபு לִבְנֵ֣י –புத்திரருக்கு יְהוּדָ֔ה யூதாவின் נַחְשׁ֖וֹן நகசோன் בֶּן־ –மகன்– עַמִּינָדָֽב׃ அம்மினதாப்
யூதாவின் முகாமின் கொடியை உடைய இராணுவங்கள் சூரியன் உதிக்கும் கிழக்குப்புறத்திலே முகாமிடவேண்டும்; அம்மினதாபின் மகனாகிய நகசோன் யூதா சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
4 וּצְבָא֖וֹ மற்றும்–சேனையும் וּפְקֻדֵיהֶ֑ם மற்றும்–எண்ணப்பட்டவர்களும் אַרְבָּעָ֧ה நான்கு וְשִׁבְעִ֛ים மற்றும்–எழுபது אֶ֖לֶף ஆயிரம் וְשֵׁ֥שׁ மற்றும்–ஆறு מֵאֽוֹת׃ நூறு
எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 74,600 பேர்.
5 וְהַחֹנִ֥ים மற்றும்–பாளயமிறங்குகிறவர்கள் עָלָ֖יו அருகில் מַטֵּ֣ה கோத்திரம் יִשָּׂשכָ֑ר இசக்காரின் וְנָשִׂיא֙ மற்றும்–பிரபு לִבְנֵ֣י –புத்திரருக்கு יִשָּׂשכָ֔ר இசக்காரின் נְתַנְאֵ֖ל நெதனேல் בֶּן־ –மகன்– צוּעָֽר׃ சூவார்
அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூவாரின் மகன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
6 וּצְבָא֖וֹ மற்றும்–சேனையும் וּפְקֻדָ֑יו மற்றும்–எண்ணப்பட்டவர்களும் אַרְבָּעָ֧ה நான்கு וַחֲמִשִּׁ֛ים மற்றும்–ஐம்பது אֶ֖לֶף ஆயிரம் וְאַרְבַּ֥ע மற்றும்–நான்கு מֵאֽוֹת׃ நூறு ס —
எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 54,400 பேர்.
7 מַטֵּ֖ה கோத்திரம் זְבוּלֻ֑ן செபுலோனின் וְנָשִׂיא֙ மற்றும்–பிரபு לִבְנֵ֣י –புத்திரருக்கு זְבוּלֻ֔ן செபுலோனின் אֱלִיאָ֖ב எலியாப் בֶּן־ –மகன்– חֵלֹֽן׃ ஏலோன்
அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏலோனின் மகனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
8 וּצְבָא֖וֹ மற்றும்–சேனையும் וּפְקֻדָ֑יו மற்றும்–எண்ணப்பட்டவர்களும் שִׁבְעָ֧ה ஏழு וַחֲמִשִּׁ֛ים மற்றும்–ஐம்பது אֶ֖לֶף ஆயிரம் וְאַרְבַּ֥ע மற்றும்–நான்கு מֵאֽוֹת׃ நூறு
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 57,400 பேர்.
9 כָּֽל־ எல்லா– הַפְּקֻדִ֞ים –எண்ணப்பட்டவர்கள் לְמַחֲנֵ֣ה –பாளயத்திற்கு יְהוּדָ֗ה யூதாவின் מְאַ֨ת நூறு אֶ֜לֶף ஆயிரம் וּשְׁמֹנִ֥ים மற்றும்–எண்பது אֶ֛לֶף ஆயிரம் וְשֵֽׁשֶׁת־ மற்றும்–ஆறு– אֲלָפִ֥ים ஆயிரம் וְאַרְבַּע־ மற்றும்–நான்கு– מֵא֖וֹת நூறு לְצִבְאֹתָ֑ם சேனைகளின்படி רִאשֹׁנָ֖ה முதலாவதாக יִסָּֽעוּ׃ புறப்படுவார்கள் ס —
எண்ணப்பட்ட யூதாவின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,86,400 பேர்; இவர்கள் பயணத்தில் முதல் முகாமாகப் போகவேண்டும்.
10 דֶּ֣גֶל கொடி מַחֲנֵ֧ה பாளயத்தின் רְאוּבֵ֛ן ரூபனின் תֵּימָ֖נָה தெற்கே לְצִבְאֹתָ֑ם சேனைகளின்படி וְנָשִׂיא֙ மற்றும்–பிரபு לִבְנֵ֣י –புத்திரருக்கு רְאוּבֵ֔ן ரூபனின் אֱלִיצ֖וּר எலிசூர் בֶּן־ –மகன்– שְׁדֵיאֽוּר׃ செதேயூர்
“ரூபனுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் தென்புறத்தில் முகாமிடவேண்டும்; சேதேயூரின் மகனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
11 וּצְבָא֖וֹ மற்றும்–சேனையும் וּפְקֻדָ֑יו மற்றும்–எண்ணப்பட்டவர்களும் שִׁשָּׁ֧ה ஆறு וְאַרְבָּעִ֛ים மற்றும்–நாற்பது אֶ֖לֶף ஆயிரம் וַחֲמֵ֥שׁ மற்றும்–ஐந்து מֵאֽוֹת׃ நூறு
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 46,500 பேர்.
12 וְהַחוֹנִ֥ם மற்றும்–பாளயமிறங்குகிறவர்கள் עָלָ֖יו அருகில் מַטֵּ֣ה கோத்திரம் שִׁמְע֑וֹן சிமியோனின் וְנָשִׂיא֙ மற்றும்–பிரபு לִבְנֵ֣י –புத்திரருக்கு שִׁמְע֔וֹן சிமியோனின் שְׁלֻמִיאֵ֖ל செலுமியேல் בֶּן־ –மகன்– צוּרִֽי־שַׁדָּֽי׃ சூரிஷத்தாய்
அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
13 וּצְבָא֖וֹ மற்றும்–சேனையும் וּפְקֻדֵיהֶ֑ם மற்றும்–எண்ணப்பட்டவர்களும் תִּשְׁעָ֧ה ஒன்பது וַחֲמִשִּׁ֛ים மற்றும்–ஐம்பது אֶ֖לֶף ஆயிரம் וּשְׁלֹ֥שׁ மற்றும்–மூன்று מֵאֽוֹת׃ நூறு
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 59,300 பேர்.
14 וְמַטֵּ֖ה மற்றும்–கோத்திரம் גָּ֑ד காத்தின் וְנָשִׂיא֙ மற்றும்–பிரபு לִבְנֵ֣י –புத்திரருக்கு גָ֔ד காத்தின் אֶלְיָסָ֖ף எல்யாசாப் בֶּן־ –மகன்– רְעוּאֵֽל׃ ரெகுவேல்
அவன் அருகே காத் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ரேகுவேலின் மகனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்கு படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
15 וּצְבָא֖וֹ மற்றும்–சேனையும் וּפְקֻדֵיהֶ֑ם மற்றும்–எண்ணப்பட்டவர்களும் חֲמִשָּׁ֤ה ஐந்து וְאַרְבָּעִים֙ மற்றும்–நாற்பது אֶ֔לֶף ஆயிரம் וְשֵׁ֥שׁ மற்றும்–ஆறு מֵא֖וֹת நூறு וַחֲמִשִּֽׁים׃ மற்றும்–ஐம்பது
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பது 45,650 பேர்.
16 כָּֽל־ எல்லா– הַפְּקֻדִ֞ים –எண்ணப்பட்டவர்கள் לְמַחֲנֵ֣ה –பாளயத்திற்கு רְאוּבֵ֗ן ரூபனின் מְאַ֨ת நூறு אֶ֜לֶף ஆயிரம் וְאֶחָ֨ד மற்றும்–ஒன்று וַחֲמִשִּׁ֥ים மற்றும்–ஐம்பது אֶ֛לֶף ஆயிரம் וְאַרְבַּע־ மற்றும்–நான்கு– מֵא֥וֹת நூறு וַחֲמִשִּׁ֖ים மற்றும்–ஐம்பது לְצִבְאֹתָ֑ם சேனைகளின்படி וּשְׁנִיִּ֖ם மற்றும்–இரண்டாவதாக יִסָּֽעוּ׃ புறப்படுவார்கள் ס —
எண்ணப்பட்ட ரூபனின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,51,450 பேர்; இவர்கள் பயணத்தில் இரண்டாம் முகாமாகப் போகவேண்டும்.
17 וְנָסַ֧ע மற்றும்–புறப்படும் אֹֽהֶל־ கூடாரம்– מוֹעֵ֛ד ஆராதனையின் מַחֲנֵ֥ה பாளயம் הַלְוִיִּ֖ם –லேவியரின் בְּת֣וֹךְ –நடுவில் הַֽמַּחֲנֹ֑ת –பாளயங்களின் כַּאֲשֶׁ֤ר –படி יַחֲנוּ֙ பாளயமிறங்குவார்கள் כֵּ֣ן அவ்வாறே יִסָּ֔עוּ புறப்படுவார்கள் אִ֥ישׁ ஒவ்வொருவன் עַל־ –மேல் יָד֖וֹ –இடத்தில் לְדִגְלֵיהֶֽם׃ –கொடிகளின்படி ס —
“பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியர்களின் இராணுவத்தோடு முகாம்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படி முகாமிடுகிறார்களோ, அப்படியே அவரவர் தங்களுடைய வரிசையிலே தங்களுடைய கொடிகளோடு பிரயாணமாகப் போகவேண்டும்.
18 דֶּ֣גֶל கொடி מַחֲנֵ֥ה பாளயத்தின் אֶפְרַ֛יִם எப்பிராயீமின் לְצִבְאֹתָ֖ם சேனைகளின்படி יָ֑מָּה மேற்கே וְנָשִׂיא֙ மற்றும்–பிரபு לִבְנֵ֣י –புத்திரருக்கு אֶפְרַ֔יִם எப்பிராயீமின் אֱלִישָׁמָ֖ע எலிஷாமா בֶּן־ –மகன்– עַמִּיהֽוּד׃ அம்மியூத்
“எப்பிராயீமுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் மேற்கு புறத்தில் இறங்கவேண்டும், அம்மியூதின் மகனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
19 וּצְבָא֖וֹ மற்றும்–சேனையும் וּפְקֻדֵיהֶ֑ם மற்றும்–எண்ணப்பட்டவர்களும் אַרְבָּעִ֥ים நாற்பது אֶ֖לֶף ஆயிரம் וַחֲמֵ֥שׁ மற்றும்–ஐந்து מֵאֽוֹת׃ நூறு
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 40,500 பேர்.
20 וְעָלָ֖יו மற்றும்–அருகில் מַטֵּ֣ה கோத்திரம் מְנַשֶּׁ֑ה மனாசேயின் וְנָשִׂיא֙ மற்றும்–பிரபு לִבְנֵ֣י –புத்திரருக்கு מְנַשֶּׁ֔ה மனாசேயின் גַּמְלִיאֵ֖ל கமாலியேல் בֶּן־ –மகன்– פְּדָהצֽוּר׃ பெதாசூர்
அவன் அருகே மனாசே கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; பெதாசூரின் மகனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
21 וּצְבָא֖וֹ மற்றும்–சேனையும் וּפְקֻדֵיהֶ֑ם மற்றும்–எண்ணப்பட்டவர்களும் שְׁנַ֧יִם இரண்டு וּשְׁלֹשִׁ֛ים மற்றும்–முப்பது אֶ֖לֶף ஆயிரம் וּמָאתָֽיִם׃ மற்றும்–இருநூறு
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 32,200 பேர்.
22 וּמַטֵּ֖ה மற்றும்–கோத்திரம் בִּנְיָמִ֑ן பென்யமீனின் וְנָשִׂיא֙ மற்றும்–பிரபு לִבְנֵ֣י –புத்திரருக்கு בִנְיָמִ֔ן பென்யமீனின் אֲבִידָ֖ן அபிதான் בֶּן־ –மகன்– גִּדְעֹנִֽי׃ கிதியோனி
அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; கீதெயோனின் மகனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
23 וּצְבָא֖וֹ மற்றும்–சேனையும் וּפְקֻדֵיהֶ֑ם மற்றும்–எண்ணப்பட்டவர்களும் חֲמִשָּׁ֧ה ஐந்து וּשְׁלֹשִׁ֛ים மற்றும்–முப்பது אֶ֖לֶף ஆயிரம் וְאַרְבַּ֥ע மற்றும்–நான்கு מֵאֽוֹת׃ நூறு
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 35,400 பேர்.
24 כָּֽל־ எல்லா– הַפְּקֻדִ֞ים –எண்ணப்பட்டவர்கள் לְמַחֲנֵ֣ה –பாளயத்திற்கு אֶפְרַ֗יִם எப்பிராயீமின் מְאַ֥ת நூறு אֶ֛לֶף ஆயிரம் וּשְׁמֹֽנַת־ மற்றும்–எட்டு– אֲלָפִ֥ים ஆயிரம் וּמֵאָ֖ה மற்றும்–நூறு לְצִבְאֹתָ֑ם சேனைகளின்படி וּשְׁלִשִׁ֖ים மற்றும்–மூன்றாவதாக יִסָּֽעוּ׃ புறப்படுவார்கள் ס —
எண்ணப்பட்ட எப்பிராயீமின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,08,100 பேர்; இவர்கள் பயணத்தில் மூன்றாம் முகாமாகப் போகவேண்டும்.
25 דֶּ֣גֶל கொடி מַחֲנֵ֥ה பாளயத்தின் דָ֛ן தாணின் צָפֹ֖נָה வடக்கே לְצִבְאֹתָ֑ם சேனைகளின்படி וְנָשִׂיא֙ மற்றும்–பிரபு לִבְנֵ֣י –புத்திரருக்கு דָ֔ן தாணின் אֲחִיעֶ֖זֶר அகியேசேர் בֶּן־ –மகன்– עַמִּֽישַׁדָּֽי׃ அம்மிஷத்தாய்
“தாணுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
26 וּצְבָא֖וֹ மற்றும்–சேனையும் וּפְקֻדֵיהֶ֑ם மற்றும்–எண்ணப்பட்டவர்களும் שְׁנַ֧יִם இரண்டு וְשִׁשִּׁ֛ים மற்றும்–அறுபது אֶ֖לֶף ஆயிரம் וּשְׁבַ֥ע மற்றும்–ஏழு מֵאֽוֹת׃ நூறு
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 62,700 பேர்.
27 וְהַחֹנִ֥ים மற்றும்–பாளயமிறங்குகிறவர்கள் עָלָ֖יו அருகில் מַטֵּ֣ה கோத்திரம் אָשֵׁ֑ר ஆசேரின் וְנָשִׂיא֙ மற்றும்–பிரபு לִבְנֵ֣י –புத்திரருக்கு אָשֵׁ֔ר ஆசேரின் פַּגְעִיאֵ֖ל பகியேல் בֶּן־ –மகன்– עָכְרָֽן׃ ஒக்ரான்
அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஓகிரானின் மகனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
28 וּצְבָא֖וֹ மற்றும்–சேனையும் וּפְקֻדֵיהֶ֑ם மற்றும்–எண்ணப்பட்டவர்களும் אֶחָ֧ד ஒன்று וְאַרְבָּעִ֛ים மற்றும்–நாற்பது אֶ֖לֶף ஆயிரம் וַחֲמֵ֥שׁ மற்றும்–ஐந்து מֵאֽוֹת׃ நூறு
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 41,500 பேர்.
29 וּמַטֵּ֖ה மற்றும்–கோத்திரம் נַפְתָּלִ֑י நப்தலியின் וְנָשִׂיא֙ மற்றும்–பிரபு לִבְנֵ֣י –புத்திரருக்கு נַפְתָּלִ֔י நப்தலியின் אֲחִירַ֖ע அகிரா בֶּן־ –மகன்– עֵינָֽן׃ ஏனான்
அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏனானின் மகனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
30 וּצְבָא֖וֹ மற்றும்–சேனையும் וּפְקֻדֵיהֶ֑ם மற்றும்–எண்ணப்பட்டவர்களும் שְׁלֹשָׁ֧ה மூன்று וַחֲמִשִּׁ֛ים மற்றும்–ஐம்பது אֶ֖לֶף ஆயிரம் וְאַרְבַּ֥ע மற்றும்–நான்கு מֵאֽוֹת׃ நூறு
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 53,400 பேர்.
31 כָּל־ எல்லா– הַפְּקֻדִים֙ –எண்ணப்பட்டவர்கள் לְמַ֣חֲנֵה –பாளயத்திற்கு דָ֔ן தாணின் מְאַ֣ת நூறு אֶ֗לֶף ஆயிரம் וְשִׁבְעָ֧ה மற்றும்–ஏழு וַחֲמִשִּׁ֛ים மற்றும்–ஐம்பது אֶ֖לֶף ஆயிரம் וְשֵׁ֣שׁ மற்றும்–ஆறு מֵא֑וֹת நூறு לָאַחֲרֹנָ֥ה கடைசியாக יִסְע֖וּ புறப்படுவார்கள் לְדִגְלֵיהֶֽם׃ –கொடிகளின்படி פ —
எண்ணப்பட்ட தாணின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் 1,57,600 பேர்; இவர்கள் தங்களுடைய கொடிகளோடு கடைசியிலும் போகவேண்டும்”.
32 אֵ֛לֶּה இவர்கள் פְּקוּדֵ֥י எண்ணப்பட்டவர்கள் בְנֵֽי־ –புத்திரர்– יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் כָּל־ எல்லா– פְּקוּדֵ֤י எண்ணப்பட்டவர்கள் הַֽמַּחֲנֹת֙ –பாளயங்களின் לְצִבְאֹתָ֔ם சேனைகளின்படி שֵׁשׁ־ ஆறு– מֵא֥וֹת நூறு אֶ֙לֶף֙ ஆயிரம் וּשְׁלֹ֣שֶׁת மற்றும்–மூன்று אֲלָפִ֔ים ஆயிரம் וַחֲמֵ֥שׁ மற்றும்–ஐந்து מֵא֖וֹת நூறு וַחֲמִשִּֽׁים׃ மற்றும்–ஐம்பது
இவர்களே தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள். முகாம்களிலே தங்கள் தங்கள் இராணுவங்களின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் 6,03,550 பேராயிருந்தார்கள்.
33 וְהַ֨לְוִיִּ֔ם மற்றும்–லேவியர் לֹ֣א இல்லை הָתְפָּקְד֔וּ எண்ணப்படவில்லை בְּת֖וֹךְ –நடுவில் בְּנֵ֣י புத்திரரின் יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் כַּאֲשֶׁ֛ר –படி צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ מֹשֶֽׁה׃ மோசே
லேவியர்களோ, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்குள்ளே எண்ணப்படவில்லை.
34 וַֽיַּעֲשׂ֖וּ மற்றும்–செய்தார்கள் בְּנֵ֣י புத்திரர் יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் כְּ֠כֹל –எல்லாவற்றின்படி אֲשֶׁר־ –எல்லாவற்றின்– צִוָּ֨ה கட்டளையிட்டார் יְהוָ֜ה யெகோவா אֶת־ –ஐ מֹשֶׁ֗ה மோசே כֵּֽן־ அவ்வாறே– חָנ֤וּ பாளயமிறங்கினார்கள் לְדִגְלֵיהֶם֙ –கொடிகளின்படி וְכֵ֣ן மற்றும்–அவ்வாறே נָסָ֔עוּ புறப்பட்டார்கள் אִ֥ישׁ ஒவ்வொருவன் לְמִשְׁפְּחֹתָ֖יו குடும்பங்களின்படி עַל־ –மேல் בֵּ֥ית வீட்டின் אֲבֹתָֽיו׃ தகப்பன்மாரின்
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் முகாமிட்டு, தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சங்களின்படியே பயணப்பட்டுப் போனார்கள்.