1 וַיֹּ֣סֶף தொடர்ந்தான் אִ֭יּוֹב யோபு שְׂאֵ֥ת எடுத்தல் מְשָׁל֗וֹ அவன்–உவமையை וַיֹּאמַֽר׃ சொன்னான்
பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
2 מִֽי־ யார்–கொடுப்பார் יִתְּנֵ֥נִי எனக்குக்–கொடுப்பார் כְיַרְחֵי־ மாதங்கள்–போல קֶ֑דֶם பூர்வகாலத்தின் כִּ֝ימֵ֗י நாட்கள்–போல אֱל֣וֹהַּ தேவன் יִשְׁמְרֵֽנִי׃ என்னைக்–காத்தார்
“கடந்துபோன வருடங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த ஒழுங்கு இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
3 בְּהִלּ֣וֹ பிரகாசிக்கும்போது נֵ֭רוֹ அவர்–விளக்கு עֲלֵ֣י மேல் רֹאשִׁ֑י என்–தலையின் לְ֝אוֹרוֹ அவர்–வெளிச்சத்தால் אֵ֣לֶךְ நடந்தேன் חֹֽשֶׁךְ׃ இருளில்
அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
4 כַּאֲשֶׁ֣ר போல் הָ֭יִיתִי இருந்தேன் בִּימֵ֣י நாட்களில் חָרְפִּ֑י என்–வாலிபப்பருவத்தின் בְּס֥וֹד இரகசியத்தில் אֱ֝ל֗וֹהַּ தேவனின் עֲלֵ֣י மேல் אָהֳלִֽי׃ என்–கூடாரத்தின்
தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது.
5 בְּע֣וֹד இன்னும் שַׁ֭דַּי சர்வவல்லவர் עִמָּדִ֑י என்னோடு סְבִ֖יבוֹתַ֣י என்–சுற்றிலும் נְעָרָֽי׃ என்–பிள்ளைகள்
அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடன் இருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
6 בִּרְחֹ֣ץ கழுவியபோது הֲלִיכַ֣י என்–அடிகளை בְּחֵמָ֑ה வெண்ணெயால் וְצ֥וּר பாறையும் יָצ֥וּק வார்த்தது עִ֝מָּדִ֗י என்னோடு פַּלְגֵי־ எண்ணெய்–ஆறுகளை שָֽׁמֶן׃ எண்ணெயின்
என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் ஒழுங்கு இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
7 בְּצֵ֣אתִי வெளிச்செல்லும்போது שַׁ֣עַר வாசல் עֲלֵי־ மேல் קָ֑רֶת நகரத்தின் בָּ֝רְח֗וֹב வீதியில் אָכִ֥ין ஆயத்தம்–செய்வேன் מוֹשָׁבִֽי׃ என்–ஆசனத்தை
நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் இருக்கையைப் போடும்போது,
8 רָא֣וּנִי என்னைக்–கண்டார்கள் נְעָרִ֣ים வாலிபர்கள் וְנֶחְבָּ֑אוּ ஒளிந்துகொண்டார்கள் וִֽ֝ישִׁישִׁים மூத்தவர்கள் קָ֣מוּ எழுந்தார்கள் עָמָֽדוּ׃ நின்றார்கள்
வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்து நிற்பார்கள்.
9 שָׂ֭רִים பிரபுக்கள் עָצְר֣וּ நிறுத்தினார்கள் בְמִלִּ֑ים வார்த்தைகளில் וְ֝כַ֗ף உள்ளங்கையை יָשִׂ֥ימוּ வைத்தார்கள் לְפִיהֶֽם׃ அவர்கள்–வாயின்மேல்
பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
10 קוֹל־ ஒலி נְגִידִ֥ים தலைவர்களின் נֶחְבָּ֑אוּ ஒளிந்தது וּ֝לְשׁוֹנָ֗ם அவர்கள்–நாவும் לְחִכָּ֥ם அவர்கள்–அண்ணத்துக்கு דָּבֵֽקָה׃ ஒட்டியது
பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
11 כִּ֤י ஏனெனில் אֹ֣זֶן காது שָׁ֭מְעָה கேட்டது וַֽתְּאַשְּׁרֵ֑נִי என்னைப்–பாக்கியமென்றது וְעַ֥יִן கண் רָ֝אֲתָ֗ה கண்டது וַתְּעִידֵֽנִי׃ எனக்கு–சாட்சியளித்தது
என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
12 כִּֽי־ ஏனெனில் אֲ֭מַלֵּט விடுவித்தேன் עָנִ֣י ஏழையை מְשַׁוֵּ֑עַ கதறுகிறவனை וְ֝יָת֗וֹם அனாதையையும் וְֽלֹא־ உதவியவன்–இல்லாத עֹזֵ֥ר உதவியாளன் לֽוֹ׃ அவனுக்கு
முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் காப்பாற்றினேன்.
13 בִּרְכַּ֣ת ஆசீர்வாதம் אֹ֭בֵד அழியும்போரின் עָלַ֣י என்மேல் תָּבֹ֑א வரும் וְלֵ֖ב இருதயம் אַלְמָנָ֣ה விதவையின் אַרְנִֽן׃ மகிழ்ச்சியடையச்செய்வேன்
அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன்.
14 צֶ֣דֶק நீதியை לָ֭בַשְׁתִּי அணிந்தேன் וַיִּלְבָּשֵׁ֑נִי அது–என்னை–அணிந்தது כִּֽמְעִ֥יל மேலாடையைப்–போல וְ֝צָנִ֗יף தலைப்பாகையும் מִשְׁפָּטִֽי׃ என்–நியாயம்
நீதியை அணிந்துகொண்டேன்; அது என் ஆடையாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது.
15 עֵינַ֣יִם கண்கள் הָ֭יִיתִי இருந்தேன் לַֽעִוֵּ֑ר குருடனுக்கு וְרַגְלַ֖יִם கால்களும் לַפִּסֵּ֣חַ நொண்டியவனுக்கு אָֽנִי׃ நான்
நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலாகவும் இருந்தேன்.
16 אָ֣ב தந்தை אָ֭נֹכִֽי நானே לָֽאֶבְיוֹנִ֑ים ஏழைகளுக்கு וְרִ֖ב வழக்கை לֹא־ அறியாததை–ஆராய்வேன் יָדַ֣עְתִּי அறியாததை אֶחְקְרֵֽהוּ׃ ஆராய்வேன்
நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
17 וָֽ֭אֲשַׁבְּרָה முறித்தேன் מְתַלְּע֣וֹת கோணல்–பற்களை עַוָּ֑ל அநீதிக்காரனின் וּ֝מִשִּׁנָּ֗יו அவன்–பற்களிலிருந்து אַשְׁלִ֥יךְ எறிவேன் טָֽרֶף׃ இரையை
நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
18 וָ֭אֹמַר சொன்னேன் עִם־ கூட קִנִּ֣י என்–கூடில் אֶגְוָ֑ע சாகுவேன் וְ֝כַח֗וֹל மணல்–போல אַרְבֶּ֥ה பெருக்குவேன் יָמִֽים׃ நாட்களை
என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்; என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன்.
19 שָׁרְשִׁ֣י என்–வேர் פָת֣וּחַ திறந்தது אֱלֵי־ நோக்கி מָ֑יִם தண்ணீரின் וְ֝טַ֗ל பனியும் יָלִ֥ין தங்கும் בִּקְצִירִֽי׃ என்–அறுவடையில்
என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது.
20 כְּ֭בוֹדִי என்–மகிமை חָדָ֣שׁ புதியதாயிருந்தது עִמָּדִ֑י என்னோடு וְ֝קַשְׁתִּ֗י என்–வில்லும் בְּיָדִ֥י என்–கையில் תַחֲלִֽיף׃ புதுப்பிக்கும்
என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.
21 לִֽי־ எனக்கு שָׁמְע֥וּ கேட்டார்கள் וְיִחֵ֑לּוּ காத்திருந்தார்கள் וְ֝יִדְּמ֗וּ மோனமாயிருந்தார்கள் לְמ֣וֹ என் עֲצָתִֽי׃ ஆலோசனைக்கு
எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.
22 אַחֲרֵ֣י பிறகு דְ֭בָרִי என்–வார்த்தையின் לֹ֣א மாற்றமாட்டார்கள் יִשְׁנ֑וּ மாற்றமாட்டார்கள் וְ֝עָלֵ֗ימוֹ அவர்கள்மேல் תִּטֹּ֥ף சொட்டது מִלָּתִֽי׃ என்–வார்த்தை
என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் மழைத்துளியாக விழுந்தது.
23 וְיִֽחֲל֣וּ காத்திருந்தார்கள் כַמָּטָ֣ר மழை–போல לִ֑י எனக்கு וּ֝פִיהֶ֗ם அவர்கள்–வாயை פָּעֲר֥וּ திறந்தார்கள் לְמַלְקֽוֹשׁ׃ பின்–மழைக்கு
மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
24 אֶשְׂחַ֣ק சிரிப்பேன் אֲ֭לֵהֶם அவர்களிடம் לֹ֣א நம்பமாட்டார்கள் יַאֲמִ֑ינוּ நம்பமாட்டார்கள் וְא֥וֹר வெளிச்சம் פָּ֝נַ֗י என்–முகத்தின் לֹ֣א வீழ்த்தமாட்டார்கள் יַפִּילֽוּן׃ வீழ்த்தமாட்டார்கள்
நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை.
25 אֶֽבֲחַ֣ר தேர்வேன் דַּרְכָּם֮ அவர்கள்–வழியை וְאֵשֵׁ֪ב உட்கார்வேன் רֹ֥אשׁ தலைவராக וְ֭אֶשְׁכּוֹן குடியிருப்பேன் כְּמֶ֣לֶךְ அரசன்–போல בַּגְּד֑וּד சைனியத்தில் כַּאֲשֶׁ֖ר போல אֲבֵלִ֣ים துயருகிறவர்களை יְנַחֵֽם׃ ஆறுதல்படுத்துவான்
அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது, நான் தலைவனாய் அமர்ந்து, படைக்குள் ராஜாவைப்போலவும், துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன்.