1 לַמְנַצֵּ֗חַ இசைத்–தலைவனுக்கு מִזְמ֥וֹר சங்கீதம் לְדָוִֽד׃ தாவீதுக்கு הַשָּׁמַ֗יִם வானங்கள் מְֽסַפְּרִ֥ים அறிவிக்கின்றன כְּבֽוֹד־ மகிமையை– אֵ֑ל தேவனின் וּֽמַעֲשֵׂ֥ה செயல்களை– יָ֝דָ֗יו அவர்–கைகளின் מַגִּ֥יד அறிவிக்கிறது הָרָקִֽיעַ׃ ஆகாயவிரிவு
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது.
2 י֣וֹם நாள் לְ֭יוֹם நாளுக்கு– יַבִּ֣יעַֽ பொழிகிறது אֹ֑מֶר சொல்லை וְלַ֥יְלָה இரவும்– לְּ֝לַ֗יְלָה இரவுக்கு– יְחַוֶּה־ வெளிப்படுத்துகிறது– דָּֽעַת׃ அறிவை
பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
3 אֵֽין־ இல்லை– אֹ֭מֶר சொல் וְאֵ֣ין இல்லை דְּבָרִ֑ים வார்த்தைகள் בְּ֝לִ֗י இல்லாமல்– נִשְׁמָ֥ע கேட்கப்படுகிறது קוֹלָֽם׃ அவர்கள்–குரல்
அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
4 בְּכָל־ எல்லா– הָאָ֨רֶץ ׀ பூமியிலும் יָ֘צָ֤א புறப்பட்டது קַוָּ֗ם அவர்கள்–சத்தம் וּבִקְצֵ֣ה எல்லையிலும்– תֵ֭בֵל உலகின் מִלֵּיהֶ֑ם அவர்கள்–வார்த்தைகள் לַ֝שֶּׁ֗מֶשׁ சூரியனுக்கு– שָֽׂם־ வைத்தார்– אֹ֥הֶל கூடாரத்தை בָּהֶֽם׃ அவைகளில்
ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார்.
5 וְה֗וּא அவர் כְּ֭חָתָן மணவாளனைப்போல– יֹצֵ֣א புறப்படுகிறார் מֵחֻפָּת֑וֹ தம்–மணவறையிலிருந்து יָשִׂ֥ישׂ மகிழ்கிறார் כְּ֝גִבּ֗וֹר வீரனைப்போல– לָר֥וּץ ஓடுவதற்கு– אֹֽרַח׃ பாதையை
அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது.
6 מִקְצֵ֤ה முனையிலிருந்து הַשָּׁמַ֨יִם ׀ வானங்களின் מֽוֹצָא֗וֹ அவரது–புறப்பாடு וּתְקוּפָת֥וֹ அவரது–சுற்றுப்பயணமும் עַל־ –வரை קְצוֹתָ֑ם அவைகளின்–முனைகளின் וְאֵ֥ין இல்லை נִ֝סְתָּ֗ר மறைந்தது מֵֽחַמָּתוֹ׃ அவரது–வெப்பத்திலிருந்து
அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.
7 תּ֘וֹרַ֤ת வேதம்– יְהוָ֣ה யெகோவாவின் תְּ֭מִימָה பரிபூரணமானது מְשִׁ֣יבַת புத்துயிர்ப்பிக்கிறது נָ֑פֶשׁ ஆத்துமாவை עֵד֥וּת சாட்சி יְהוָ֥ה யெகோவாவின் נֶ֝אֱמָנָ֗ה உண்மையானது מַחְכִּ֥ימַת ஞானமாக்குகிறது פֶּֽתִי׃ எளியவனை
யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது.
8 פִּקּ֘וּדֵ֤י கட்டளைகள்– יְהוָ֣ה யெகோவாவின் יְ֭שָׁרִים நேர்மையானவை מְשַׂמְּחֵי־ மகிழ்ச்சியடையச்செய்கின்றன– לֵ֑ב இருதயத்தை מִצְוַ֥ת கற்பனை יְהוָ֥ה யெகோவாவின் בָּ֝רָ֗ה தூய்மையானது מְאִירַ֥ת பிரகாசிக்கிறது עֵינָֽיִם׃ கண்களை
யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது.
9 יִרְאַ֤ת பயம் יְהוָ֨ה ׀ யெகோவாவின் טְהוֹרָה֮ சுத்தமானது עוֹמֶ֪דֶת நிலைத்திருக்கிறது לָ֫עַ֥ד என்றென்றைக்கும் מִֽשְׁפְּטֵי־ நியாயத்தீர்ப்புகள்– יְהוָ֥ה யெகோவாவின் אֱמֶ֑ת உண்மை צָֽדְק֥וּ நீதியானவை יַחְדָּֽו׃ ஒருமித்து
யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன.
10 הַֽנֶּחֱמָדִ֗ים விரும்பத்தக்கவை מִ֭זָּהָב தங்கத்தைவிட– וּמִפַּ֣ז பசும்பொன்னைவிட– רָ֑ב மிகுந்த וּמְתוּקִ֥ים இனிமையானவை– מִ֝דְּבַ֗שׁ தேனைவிட– וְנֹ֣פֶת தேன்கூட்டின்– צוּפִֽים׃ சொட்டுகளைவிட
அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன.
11 גַּֽם־ மேலும்– עַ֭בְדְּךָ உம்–அடியான் נִזְהָ֣ר எச்சரிக்கப்படுகிறான் בָּהֶ֑ם அவைகளால் בְּ֝שָׁמְרָ֗ם கைக்கொள்வதிலே– עֵ֣קֶב பலன் רָֽב׃ மிகுந்தது
அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
12 שְׁגִיא֥וֹת தவறுகளை מִֽי־ யார்– יָבִ֑ין புரிந்துகொள்வான் מִֽנִּסְתָּר֥וֹת மறைவானவைகளிலிருந்து– נַקֵּֽנִי׃ என்னை–சுத்திகரியும்
தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்? மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும்.
13 גַּ֤ם மேலும் מִזֵּדִ֨ים ׀ அகந்தையுள்ளவர்களிடமிருந்து חֲשֹׂ֬ךְ காத்திரும் עַבְדֶּ֗ךָ உம்–அடியானை אַֽל־ வேண்டாம்– יִמְשְׁלוּ־ ஆளட்டும்– בִ֣י என்னை אָ֣ז அப்போது אֵיתָ֑ם நான்–உத்தமனாவேன் וְ֝נִקֵּ֗יתִי சுத்தமாவேன் מִפֶּ֥שַֽׁע மீறுதலிலிருந்து– רָֽב׃ பெரிய
துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன்.
14 יִֽהְי֥וּ இருக்கட்டும் לְרָצ֨וֹן ׀ பிரியமாக– אִמְרֵי־ வார்த்தைகள்– פִ֡י என்–வாயின் וְהֶגְי֣וֹן தியானமும் לִבִּ֣י என்–இருதயத்தின் לְפָנֶ֑יךָ உம்–முன்பாக יְ֝הוָ֗ה யெகோவா צוּרִ֥י என்–கன்மலையே וְגֹאֲלִֽי׃ என்–மீட்பரே
என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.