1 לַמְנַצֵּ֬חַ ׀ இசைத்–தலைவனுக்கு לְעֶֽבֶד־ அடியானுக்கு– יְהוָ֬ה யெகோவாவின் לְדָוִֽד׃ தாவீதுக்கு–ஒரு נְאֻֽם־ வாக்கு– פֶּ֣שַׁע மீறுதலின் לָ֭רָשָׁע துன்மார்க்கனுக்கு בְּקֶ֣רֶב இருதயத்தில்– לִבִּ֑י என்–இருதயத்தின் אֵֽין־ இல்லை– פַּ֥חַד பயம் אֱ֝לֹהִ֗ים தேவனின் לְנֶ֣גֶד முன்பாக– עֵינָֽיו׃ அவன்–கண்களின்
இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல். துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை.
2 כִּֽי־ ஏனெனில்– הֶחֱלִ֣יק முகஸ்துதிச்செய்கிறான் אֵלָ֣יו அவனிடம் בְּעֵינָ֑יו அவன்–கண்களில் לִמְצֹ֖א கண்டுபிடிக்க עֲוֺנ֣וֹ அவன்–அக்கிரமத்தை לִשְׂנֹֽא׃ வெறுக்க
அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான்.
3 דִּבְרֵי־ வார்த்தைகள்– פִ֭יו அவன்–வாயின் אָ֣וֶן அநீதியும் וּמִרְמָ֑ה வஞ்சனையும் חָדַ֖ל நிறுத்தினார் לְהַשְׂכִּ֣יל அறிவுள்ளவனாக לְהֵיטִֽיב׃ நன்மைசெய்ய
அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
4 אָ֤וֶן ׀ அநீதியை יַחְשֹׁ֗ב திட்டமிடுகிறான் עַֽל־ மேல்– מִשְׁכָּ֫ב֥וֹ அவன்–படுக்கையின் יִ֭תְיַצֵּב நிலைநிறுக்கிறான் עַל־ வழியில்– דֶּ֣רֶךְ வழி לֹא־ இல்லை– ט֑וֹב நல்ல רָ֝֗ע தீமையை לֹ֣א இல்லை יִמְאָֽס׃ வெறுக்கிறான்
அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான்.
5 יְ֭הוָה யெகோவா בְּהַשָּׁמַ֣יִם வானங்களில்– חַסְדֶּ֑ךָ உம்–கிருபை אֱ֝מֽוּנָתְךָ֗ உம்–உண்மை עַד־ வரையிலும்– שְׁחָקִֽים׃ மேகங்களின்
யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது.
6 צִדְקָֽתְךָ֨ ׀ உம்–நீதி כְּֽהַרְרֵי־ தேவமலைகளைப்–போல אֵ֗ל தேவனே מִ֭שְׁפָּטֶךָ உம்–நியாயம் תְּה֣וֹם ஆழத்தைப்–போல רַבָּ֑ה பெரியது אָ֤דָֽם־ மனிதனை– וּבְהֵמָ֖ה மிருகத்தையும் תוֹשִׁ֣יעַ இரட்சிக்கிறீர் יְהוָֽה׃ யெகோவா
உமது நீதி மகத்தான மலைகள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
7 מַה־ எவ்வளவு– יָּקָ֥ר அருமையானது חַסְדְּךָ֗ உம்–கிருபை אֱלֹ֫הִ֥ים தேவனே וּבְנֵ֥י மனுபுத்திரரும்– אָדָ֑ם ஆதாமின் בְּצֵ֥ל நிழலில்– כְּ֝נָפֶ֗יךָ உம்–சிறகுகளின் יֶחֱסָיֽוּן׃ அடைக்கலம்புகிறார்கள்
தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
8 יִ֭רְוְיֻן திருப்தியடைவார்கள் מִדֶּ֣שֶׁן கொழுப்பிலிருந்து– בֵּיתֶ֑ךָ உம்–வீட்டின் וְנַ֖חַל ஆறும்– עֲדָנֶ֣יךָ உம்–இன்பங்களின் תַשְׁקֵֽם׃ குடிக்கச்செய்வீர்–அவர்களை
உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
9 כִּֽי־ ஏனெனில்– עִ֭מְּךָ உம்முடன் מְק֣וֹר இருக்கிறது–என்னும் חַיִּ֑ים ஜீவனின் בְּ֝אוֹרְךָ֗ உம்–ஒளியில் נִרְאֶה־ காண்கிறோம்– אֽוֹר׃ ஒளியை
வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
10 מְשֹׁ֣ךְ நீட்டியும் חַ֭סְדְּךָ உம்–கிருபையை לְיֹדְעֶ֑יךָ உம்மை–அறிகிறவர்களுக்கு וְ֝צִדְקָֽתְךָ֗ உம்–நீதியையும் לְיִשְׁרֵי־ செம்மையான– לֵֽב׃ இருதயத்தினருக்கு
உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.
11 אַל־ வேண்டாம்– תְּ֭בוֹאֵנִי வராதிருக்கட்டும்–என்மேல் רֶ֣גֶל கால் גַּאֲוָ֑ה பெருமையின் וְיַד־ கையும்– רְ֝שָׁעִ֗ים துன்மார்க்கரின் אַל־ வேண்டாம்– תְּנִדֵֽנִי׃ நடுங்கம்செய்யாதிருக்கட்டும்–என்னை
பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக.
12 שָׁ֣ם அங்கே נָ֭פְלוּ வீழ்ந்தனர் פֹּ֣עֲלֵי செய்கிறவர்கள்– אָ֑וֶן அநீதியின் דֹּ֝ח֗וּ தள்ளப்பட்டனர் וְלֹא־ இல்லை– יָ֥כְלוּ இயலாதிருந்தனர் קֽוּם׃ எழுந்திருக்க
அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்; எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.