1 לְדָוִ֨ד ׀ தாவீதுக்கு–ஒரு אַל־ வேண்டாம்– תִּתְחַ֥ר எரிச்சல்கொள் בַּמְּרֵעִ֑ים தீமைசெய்கிறவர்களினால் אַל־ வேண்டாம்– תְּ֝קַנֵּ֗א பொறாமைப்படு בְּעֹשֵׂ֥י செய்கிறவர்களினால்– עַוְלָֽה׃ அநீதியை
தாவீதின் பாடல். பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
2 כִּ֣י ஏனெனில் כֶ֭חָצִיר புல்லைப்–போல מְהֵרָ֣ה விரைவாக יִמָּ֑לוּ வாடுவார்கள் וּכְיֶ֥רֶק பச்சையான–பயிரைப்–போல דֶּ֝֗שֶׁא பயிரின் יִבּוֹלֽוּן׃ கருகுவார்கள்
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள்.
3 בְּטַ֣ח நம்பு בַּֽ֭יהוָה யெகோவாவில் וַעֲשֵׂה־ செய்– ט֑וֹב நன்மையை שְׁכָן־ குடியிரு– אֶ֝֗רֶץ நாட்டில் וּרְעֵ֥ה மேய் אֱמוּנָֽה׃ உண்மையை
யெகோவாவை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
4 וְהִתְעַנַּ֥ג இன்பம்கொள் עַל־ மேல்– יְהוָ֑ה யெகோவாவில் וְיִֽתֶּן־ கொடுப்பார்– לְ֝ךָ֗ உனக்கு מִשְׁאֲלֹ֥ת விருப்பங்களை– לִבֶּֽךָ׃ உன்–இருதயத்தின்
யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
5 גּ֣וֹל ஒப்படை עַל־ மேல்– יְהוָ֣ה யெகோவாவின் דַּרְכֶּ֑ךָ உன்–வழியை וּבְטַ֥ח நம்பு עָ֝לָ֗יו அவர்மேல் וְה֣וּא அவரே יַעֲשֶֽׂה׃ செய்வார்
உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார்.
6 וְהוֹצִ֣יא வெளிக்கொணர்வார் כָא֣וֹר ஒளியைப்–போல צִדְקֶ֑ךָ உன்–நீதியை וּ֝מִשְׁפָּטֶ֗ךָ உன்–நியாயத்தையும் כַּֽצָּהֳרָֽיִם׃ நண்பகலைப்–போல
உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார்.
7 דּ֤וֹם ׀ அமைதியாயிரு לַיהוָה֮ யெகோவாவுக்கு וְהִתְח֪וֹלֵ֫ל பொறுமையாய்–காத்திரு ל֥וֹ அவருக்கு אַל־ வேண்டாம்– תִּ֭תְחַר எரிச்சல்கொள் בְּמַצְלִ֣יחַ வெற்றிபெறுகிறவனில்– דַּרְכּ֑וֹ அவன்–வழியில் בְּ֝אִ֗ישׁ மனிதனில்– עֹשֶׂ֥ה செய்கிறவன் מְזִמּֽוֹת׃ தீய–திட்டங்களை
யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே.
8 הֶ֣רֶף விடு מֵ֭אַף கோபத்திலிருந்து– וַעֲזֹ֣ב கைவிடு חֵמָ֑ה சீற்றத்தை אַל־ வேண்டாம்– תִּ֝תְחַ֗ר எரிச்சல்கொள் אַךְ־ நிச்சயமாக– לְהָרֵֽעַ׃ தீமைசெய்ய
கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
9 כִּֽי־ ஏனெனில்– מְ֭רֵעִים தீமைசெய்கிறவர்கள் יִכָּרֵת֑וּן அறுப்புண்டுபோவார்கள் וְקֹוֵ֥י காத்திருக்கிறவர்களோ– יְ֝הוָ֗ה யெகோவாவுக்கு הֵ֣מָּה அவர்களே יִֽירְשׁוּ־ சுதந்தரிப்பார்கள்– אָֽרֶץ׃ நாட்டை
பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
10 וְע֣וֹד இன்னும் מְ֭עַט சிறிது וְאֵ֣ין இல்லை רָשָׁ֑ע துன்மார்க்கன் וְהִתְבּוֹנַ֖נְתָּ கவனித்துப்பார்ப்பாய் עַל־ மேல்– מְקוֹמ֣וֹ அவன்–இடத்தை וְאֵינֶֽנּוּ׃ இல்லை–அவன்
இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
11 וַעֲנָוִ֥ים சாந்தமானவர்களோ יִֽירְשׁוּ־ சுதந்தரிப்பார்கள்– אָ֑רֶץ நாட்டை וְ֝הִתְעַנְּג֗וּ இன்பம்கொள்வார்கள் עַל־ மேல்– רֹ֥ב மிகுதியான שָׁלֽוֹם׃ சமாதானத்தின்
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
12 זֹמֵ֣ם சதிசெய்கிறான் רָ֭שָׁע துன்மார்க்கன் לַצַּדִּ֑יק நீதிமானுக்கு–எதிராக וְחֹרֵ֖ק கடிக்கிறான் עָלָ֣יו அவன்மேல் שִׁנָּֽיו׃ அவன்–பற்களை
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, அவன்மேல் பல்லைக் கடிக்கிறான்.
13 אֲדֹנָ֥י ஆண்டவர் יִשְׂחַק־ சிரிப்பார்– ל֑וֹ அவனை כִּֽי־ ஏனெனில்– רָ֝אָ֗ה காண்கிறார் כִּֽי־ ஏனெனில்– יָבֹ֥א வரும் יוֹמֽוֹ׃ அவன்–நாள்
ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.
14 חֶ֤רֶב ׀ வாள் פָּֽתְח֣וּ உருவினார்கள் רְשָׁעִים֮ துன்மார்க்கர் וְדָרְכ֪וּ வளைத்தார்கள் קַ֫שְׁתָּ֥ם அவர்கள்–வில்லை לְ֭הַפִּיל வீழ்த்த עָנִ֣י எளியவனை וְאֶבְי֑וֹן ஏழையையும் לִ֝טְב֗וֹחַ கொல்ல יִשְׁרֵי־ செம்மையான– דָֽרֶךְ׃ வழியினரை
சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும், செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும், துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.
15 חַ֭רְבָּם அவர்கள்–வாள் תָּב֣וֹא வரும் בְלִבָּ֑ם அவர்கள்–இருதயத்தில் וְ֝קַשְּׁתוֹתָ֗ם அவர்கள்–வில்களும் תִּשָּׁבַֽרְנָה׃ முறிந்துபோகும்
ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்; அவர்கள் வில்லுகள் முறியும்.
16 טוֹב־ நன்மையானது– מְ֭עַט சிறிது לַצַּדִּ֑יק நீதிமானுக்கு מֵ֝הֲמ֗וֹן மிகுதியைவிட– רְשָׁעִ֥ים துன்மார்க்கரின் רַבִּֽים׃ அநேகரின்
அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
17 כִּ֤י ஏனெனில் זְרוֹע֣וֹת புயங்கள்– רְ֭שָׁעִים துன்மார்க்கரின் תִּשָּׁבַ֑רְנָה முறிந்துபோகும் וְסוֹמֵ֖ךְ தாங்குகிறவர் צַדִּיקִ֣ים நீதிமான்களை יְהוָֽה׃ யெகோவா
துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்; நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.
18 יוֹדֵ֣עַ அறிகிறார் יְ֭הוָה யெகோவா יְמֵ֣י நாட்களை– תְמִימִ֑ם உத்தமரின் וְ֝נַחֲלָתָ֗ם அவர்கள்–சொத்தும் לְעוֹלָ֥ם என்றென்றைக்கும் תִּהְיֶֽה׃ இருக்கும்
உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
19 לֹֽא־ இல்லை– יֵ֭בֹשׁוּ வெட்கப்படுவார்கள் בְּעֵ֣ת காலத்தில்– רָעָ֑ה தீமையின் וּבִימֵ֖י பஞ்சநாட்களிலும்– רְעָב֣וֹן பஞ்சத்தின் יִשְׂבָּֽעוּ׃ திருப்தியடைவார்கள்
அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
20 כִּ֤י ஏனெனில் רְשָׁעִ֨ים ׀ துன்மார்க்கர் יֹאבֵ֗דוּ அழிவார்கள் וְאֹיְבֵ֣י பகைவர்களும்– יְ֭הוָה யெகோவாவின் כִּיקַ֣ר அருமையைப்–போல כָּרִ֑ים மேய்ச்சல்நிலங்களின் כָּל֖וּ தீர்ந்துபோவார்கள் בֶעָשָׁ֣ן புகையில்– כָּֽלוּ׃ தீர்ந்துபோவார்கள்
துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள், யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள்.
21 לֹוֶ֣ה கடன்வாங்குகிறான் רָ֭שָׁע துன்மார்க்கன் וְלֹ֣א இல்லை– יְשַׁלֵּ֑ם திருப்பிச்செலுத்துகிறான் וְ֝צַדִּ֗יק நீதிமானோ– חוֹנֵ֥ן இரக்கம்காட்டுகிறான் וְנוֹתֵֽן׃ கொடுக்கிறான்
துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
22 כִּ֣י ஏனெனில் מְ֭בֹרָכָיו அவரால்–ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் יִ֣ירְשׁוּ சுதந்தரிப்பார்கள் אָ֑רֶץ நாட்டை וּ֝מְקֻלָּלָ֗יו அவரால்–சபிக்கப்பட்டவர்களோ יִכָּרֵֽתוּ׃ அறுப்புண்டுபோவார்கள்
அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள்.
23 מֵ֭יְהוָה யெகோவாவிலிருந்து מִֽצְעֲדֵי־ அடிவைப்புகள்– גֶ֥בֶר மனிதனின் כּוֹנָ֗נוּ உறுதிப்படுத்தப்படுகின்றன וְדַרְכּ֥וֹ அவன்–வழியில் יֶחְפָּֽץ׃ மகிழ்கிறார்
நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
24 כִּֽי־ ஏனெனில்– יִפֹּ֥ל விழுவான் לֹֽא־ இல்லை– יוּטָ֑ל வீசப்படுவான் כִּֽי־ ஏனெனில்– יְ֝הוָ֗ה யெகோவா סוֹמֵ֥ךְ தாங்குகிறார் יָדֽוֹ׃ அவன்–கையை
அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
25 נַ֤עַר ׀ இளைஞனாக הָיִ֗יתִי இருந்தேன் גַּם־ ஆம்– זָ֫קַ֥נְתִּי முதியவனானேன் וְֽלֹא־ இல்லை– רָ֭אִיתִי கண்டதில்லை צַדִּ֣יק நீதிமான் נֶעֱזָ֑ב கைவிடப்பட்டதை וְ֝זַרְע֗וֹ அவன்–வித்தும் מְבַקֶּשׁ־ தேடுகிறதாக– לָֽחֶם׃ அப்பத்தை
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை.
26 כָּל־ நாள்–முழுவதும் הַ֭יּוֹם நாளின் חוֹנֵ֣ן இரக்கம்காட்டுகிறான் וּמַלְוֶ֑ה கடன்கொடுக்கிறான் וְ֝זַרְע֗וֹ அவன்–வித்தும் לִבְרָכָֽה׃ ஆசீர்வாதமாக
அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
27 ס֣וּר விலகு מֵ֭רָע தீமையிலிருந்து וַעֲשֵׂה־ செய்– ט֗וֹב நன்மையை וּשְׁכֹ֥ן குடியிரு לְעוֹלָֽם׃ என்றென்றைக்கும்
தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
28 כִּ֤י ஏனெனில் יְהוָ֨ה ׀ யெகோவா אֹ֘הֵ֤ב நேசிக்கிறார் מִשְׁפָּ֗ט நியாயத்தை וְלֹא־ இல்லை– יַעֲזֹ֣ב கைவிடுவார் אֶת־ என்னும்– חֲ֭סִידָיו அவர்–பரிசுத்தவான்களை לְעוֹלָ֣ם என்றென்றைக்கும் נִשְׁמָ֑רוּ காக்கப்படுவார்கள் וְזֶ֖רַע வித்தோ– רְשָׁעִ֣ים துன்மார்க்கரின் נִכְרָֽת׃ அறுப்புண்டுபோகும்
யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும்.
29 צַדִּיקִ֥ים நீதிமான்கள் יִֽירְשׁוּ־ சுதந்தரிப்பார்கள்– אָ֑רֶץ நாட்டை וְיִשְׁכְּנ֖וּ குடியிருப்பார்கள் לָעַ֣ד என்றென்றைக்கும் עָלֶֽיהָ׃ அதன்மேல்
நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள்.
30 פִּֽי־ வாய்– צַ֭דִּיק நீதிமானின் יֶהְגֶּ֣ה தியானிக்கும் חָכְמָ֑ה ஞானத்தை וּ֝לְשׁוֹנ֗וֹ அவன்–நாவும் תְּדַבֵּ֥ר பேசும் מִשְׁפָּֽט׃ நியாயத்தை
நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
31 תּוֹרַ֣ת வேதம்– אֱלֹהָ֣יו அவன்–தேவனின் בְּלִבּ֑וֹ அவன்–இருதயத்தில் לֹ֖א இல்லை תִמְעַ֣ד வழுவும் אֲשֻׁרָיו׃ அவன்–அடிகள்
அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
32 צוֹפֶ֣ה பார்க்கிறான் רָ֭שָׁע துன்மார்க்கன் לַצַּדִּ֑יק நீதிமானை וּ֝מְבַקֵּ֗שׁ தேடுகிறான் לַהֲמִיתוֹ׃ கொல்ல–அவனை
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
33 יְ֭הוָה யெகோவா לֹא־ இல்லை– יַעַזְבֶ֣נּוּ கைவிடுவார்–அவனை בְיָד֑וֹ அவன்–கையில் וְלֹ֥א இல்லை יַ֝רְשִׁיעֶ֗נּוּ குற்றவாளியாக்குவார்–அவனை בְּהִשָּׁפְטֽוֹ׃ நியாயந்தீர்க்கப்படும்போது–அவன்
யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.
34 קַוֵּ֤ה காத்திரு אֶל־ நோக்கி– יְהוָ֨ה ׀ யெகோவாவை וּשְׁמֹ֬ר காத்திரு דַּרְכּ֗וֹ அவர்–வழியை וִֽ֭ירוֹמִמְךָ உயர்த்துவார்–உன்னை לָרֶ֣שֶׁת சுதந்தரிக்க– אָ֑רֶץ நாட்டை בְּהִכָּרֵ֖ת அறுப்புண்டுபோகும்போது– רְשָׁעִ֣ים துன்மார்க்கர் תִּרְאֶֽה׃ காண்பாய்
நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய்.
35 רָ֭אִיתִי கண்டேன் רָשָׁ֣ע துன்மார்க்கனை עָרִ֑יץ கொடுங்கோலனாக וּ֝מִתְעָרֶ֗ה பரவுகிறவனாக– כְּאֶזְרָ֥ח தேசத்து–மரம்போல רַעֲנָֽן׃ பச்சையான
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
36 וַ֭יַּֽעֲבֹר கடந்துபோனார் וְהִנֵּ֣ה இதோ אֵינֶ֑נּוּ இல்லை–அவன் וָֽ֝אֲבַקְשֵׁ֗הוּ தேடினேன்–அவனை וְלֹ֣א இல்லை נִמְצָֽא׃ காணப்பட்டான்
ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், அவன் காணப்படவில்லை.
37 שְׁמָר־ கவனி– תָּ֭ם உத்தமனை וּרְאֵ֣ה பார் יָשָׁ֑ר செம்மையானவனை כִּֽי־ ஏனெனில்– אַחֲרִ֖ית பின்முடிவு לְאִ֣ישׁ மனிதனுக்கு– שָׁלֽוֹם׃ சமாதானத்தின்
நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனிதனுடைய முடிவு சமாதானம்.
38 וּֽ֭פֹשְׁעִים மீறுகிறவர்களோ– נִשְׁמְד֣וּ அழிக்கப்படுவார்கள் יַחְדָּ֑ו ஒன்றாக אַחֲרִ֖ית பின்முடிவு רְשָׁעִ֣ים துன்மார்க்கரின் נִכְרָֽתָה׃ அறுப்புண்டுபோகும்
அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு.
39 וּתְשׁוּעַ֣ת இரட்சிப்போ– צַ֭דִּיקִים நீதிமான்களின் מֵיְהוָ֑ה யெகோவாவிலிருந்து מָֽ֝עוּזָּ֗ם அவர்கள்–அரண் בְּעֵ֣ת காலத்தில்– צָרָֽה׃ நெருக்கத்தின்
நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
40 וַֽיַּעְזְרֵ֥ם உதவுவார்–அவர்களுக்கு יְהוָ֗ה யெகோவா וַֽיְפַ֫לְּטֵ֥ם தப்புவிப்பார்–அவர்களை יְפַלְּטֵ֣ם தப்புவிப்பார்–அவர்களை מֵ֭רְשָׁעִים துன்மார்க்கரிலிருந்து– וְיוֹשִׁיעֵ֑ם இரட்சிப்பார்–அவர்களை כִּי־ ஏனெனில்– חָ֥סוּ அடைக்கலம்புகுந்தார்கள் בֽוֹ׃ அவரில்
யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.