1 מִזְמ֗וֹר சங்கீதம் לְאָ֫סָ֥ף ஆசாப்புக்கு– אֵ֤ל ׀ வல்லமையுள்ளவர் אֱֽלֹהִ֡ים தேவன் יְֽהוָ֗ה யெகோவா דִּבֶּ֥ר பேசினார் וַיִּקְרָא־ மற்றும்–அழைத்தார்– אָ֑רֶץ பூமியை מִמִּזְרַח־ கிழக்கிலிருந்து– שֶׁ֝֗מֶשׁ சூரியனின் עַד־ வரை– מְבֹאֽוֹ׃ மேற்கின்
ஆசாபின் பாடல். வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, சூரியன் உதிக்கும்திசை தொடங்கி அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.
2 מִצִּיּ֥וֹן சீயோனிலிருந்து מִכְלַל־ பூரணமான– יֹ֗פִי அழகு אֱלֹהִ֥ים தேவன் הוֹפִֽיעַ׃ பிரகாசித்தார்
அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
3 יָ֤בֹ֥א வருவார் אֱלֹהֵ֗ינוּ தேவன்–எங்களின் וְֽאַל־ மற்றும்–இல்லை– יֶ֫חֱרַ֥שׁ மௌனமாயிருப்பார் אֵשׁ־ நெருப்பு– לְפָנָ֥יו முன்பாக–அவரின் תֹּאכֵ֑ל விழுங்கும் וּ֝סְבִיבָ֗יו மற்றும்–சுற்றிலும்–அவரின் נִשְׂעֲרָ֥ה புயல்வீசும் מְאֹֽד׃ மிகவும்
நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்; அவருக்கு முன்பு அக்கினி அழியும்; அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும்.
4 יִקְרָ֣א அழைப்பார் אֶל־ –நோக்கி הַשָּׁמַ֣יִם வானங்களை מֵעָ֑ל மேலிருந்து וְאֶל־ மற்றும்–நோக்கி– הָ֝אָ֗רֶץ பூமியை לָדִ֥ין நியாயம்தீர்க்க– עַמּֽוֹ׃ மக்களை–அவரின்
அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
5 אִסְפוּ־ கூட்டுங்கள்– לִ֥י எனக்கு– חֲסִידָ֑י பரிசுத்தவான்களை–என் כֹּרְתֵ֖י உடன்படிக்கை–செய்தவர்கள்– בְרִיתִ֣י உடன்படிக்கையை–என் עֲלֵי־ –மேல்– זָֽבַח׃ பலியின்
பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
6 וַיַּגִּ֣ידוּ மற்றும்–அறிவிக்கும் שָׁמַ֣יִם வானங்கள் צִדְק֑וֹ நீதியை–அவரின் כִּֽי־ ஏனெனில்– אֱלֹהִ֓ים ׀ தேவன் שֹׁפֵ֖ט நியாயாதிபதி ה֣וּא அவரே סֶֽלָה׃ சேலா
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா)
7 שִׁמְעָ֤ה கேள் עַמִּ֨י ׀ மக்களே–என் וַאֲדַבֵּ֗רָה மற்றும்–பேசுவேன் יִ֭שְׂרָאֵל இஸ்ரவேலே וְאָעִ֣ידָה மற்றும்–சாட்சிபகர்வேன் בָּ֑ךְ உனக்கு– אֱלֹהִ֖ים தேவன் אֱלֹהֶ֣יךָ தேவன்–உன் אָנֹֽכִי׃ நானே
என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன்.
8 לֹ֣א இல்லை עַל־ –குறித்து זְ֭בָחֶיךָ பலிகளை–உன் אוֹכִיחֶ֑ךָ கடிந்துகொள்வேன்–உன்னை וְעוֹלֹתֶ֖יךָ மற்றும்–சர்வாங்க–தகனபலிகளை–உன் לְנֶגְדִּ֣י முன்பாக–என் תָמִֽיד׃ எப்போதும்
உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
9 לֹא־ இல்லை– אֶקַּ֣ח எடுப்பேன் מִבֵּיתְךָ֣ வீட்டிலிருந்து–உன் פָ֑ר காளையை מִ֝מִּכְלְאֹתֶ֗יךָ தொழுவங்களிலிருந்து–உன் עַתּוּדִֽים׃ வெள்ளாட்டுக்கடாக்களை
உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும், உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
10 כִּי־ ஏனெனில்– לִ֥י எனக்கு– כָל־ எல்லா– חַיְתוֹ־ மிருகங்கள்– יָ֑עַר காட்டின் בְּ֝הֵמ֗וֹת மிருகங்கள் בְּהַרְרֵי־ மலைகளின்– אָֽלֶף׃ ஆயிரத்தின்
எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
11 יָ֭דַעְתִּי அறிவேன் כָּל־ எல்லா– ע֣וֹף பறவைகளை הָרִ֑ים மலைகளின் וְזִ֥יז மற்றும்–ஜீவன் שָׂ֝דַ֗י வயல்வெளியின் עִמָּדִֽי׃ என்னோடு
மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
12 אִם־ ஆனால்– אֶ֭רְעַב பசியாயிருந்தால் לֹא־ இல்லை– אֹ֣מַר சொல்வேன் לָ֑ךְ உனக்கு כִּי־ ஏனெனில்– לִ֥י எனக்கு– תֵ֝בֵ֗ל உலகமும் וּמְלֹאָֽהּ׃ மற்றும்–நிறைவும்–அதன்
நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
13 הַֽ֭אוֹכַל உண்பேனா בְּשַׂ֣ר இறைச்சியை אַבִּירִ֑ים காளைகளின் וְדַ֖ם மற்றும்–இரத்தத்தை עַתּוּדִ֣ים வெள்ளாட்டுக்கடாக்களின் אֶשְׁתֶּֽה׃ குடிப்பேனா
நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
14 זְבַ֣ח பலியிடு לֵאלֹהִ֣ים தேவனுக்கு– תּוֹדָ֑ה நன்றியை וְשַׁלֵּ֖ם மற்றும்–செலுத்து לְעֶלְי֣וֹן உன்னதமானவருக்கு– נְדָרֶֽיךָ׃ பொருத்தனைகளை–உன்
நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி;
15 וּ֭קְרָאֵנִי மற்றும்–கூப்பிடு–என்னை בְּי֣וֹם நாளில்– צָרָ֑ה நெருக்கத்தின் אֲ֝חַלֶּצְךָ֗ விடுவிப்பேன்–உன்னை וּֽתְכַבְּדֵֽנִי׃ மற்றும்–மகிமைப்படுத்துவாய்–என்னை
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
16 וְלָ֤רָשָׁ֨ע ׀ மற்றும்–துன்மார்க்கனுக்கு אָ֘מַ֤ר சொன்னார் אֱלֹהִ֗ים தேவன் מַה־ என்ன– לְּ֭ךָ உனக்கு– לְסַפֵּ֣ר விவரிக்க– חֻקָּ֑י கட்டளைகளை–என் וַתִּשָּׂ֖א மற்றும்–எடுத்தாய் בְרִיתִ֣י உடன்படிக்கையை–என் עֲלֵי־ –மேல்– פִֽיךָ׃ வாயின்–உன்
தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
17 וְ֭אַתָּה மற்றும்–நீ שָׂנֵ֣אתָ வெறுத்தாய் מוּסָ֑ר ஒழுக்கத்தை וַתַּשְׁלֵ֖ךְ மற்றும்–எறிந்தாய் דְּבָרַ֣י வார்த்தைகளை–என் אַחֲרֶֽיךָ׃ பின்னால்–உன்
அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
18 אִם־ ஆனால்– רָאִ֣יתָ கண்டாய் גַ֭נָּב திருடனை וַתִּ֣רֶץ மற்றும்–ஓடினாய் עִמּ֑וֹ அவனோடு וְעִ֖ם மற்றும்–கூட מְנָאֲפִ֣ים விபசாரிகளுடன் חֶלְקֶֽךָ׃ பங்கு–உன்
நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
19 פִּ֭יךָ வாய்–உன் שָׁלַ֣חְתָּ அனுப்பினாய் בְרָעָ֑ה தீமையில் וּ֝לְשׁוֹנְךָ֗ மற்றும்–நாவு–உன் תַּצְמִ֥יד பொருத்துகிறது מִרְמָֽה׃ வஞ்சகத்தை
உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது.
20 תֵּ֭שֵׁב உட்கார்ந்து בְּאָחִ֣יךָ சகோதரன்–உன்–எதிராக תְדַבֵּ֑ר பேசுகிறாய் בְּבֶֽן־ மகன்–எதிராக– אִ֝מְּךָ֗ தாயின்–உன் תִּתֶּן־ கொடுக்கிறாய்– דֹּֽפִי׃ குற்றச்சாட்டை
நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, உன்னுடைய சொந்த சகோதரனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
21 אֵ֤לֶּה இவைகளை עָשִׂ֨יתָ ׀ செய்தாய் וְֽהֶחֱרַ֗שְׁתִּי மற்றும்–மௌனமாயிருந்தேன் דִּמִּ֗יתָ நினைத்தாய் הֱֽיוֹת־ இருப்பதாக– אֶֽהְיֶ֥ה இருப்பேன் כָמ֑וֹךָ உன்னைப்போல் אוֹכִיחֲךָ֖ கடிந்துகொள்வேன்–உன்னை וְאֶֽעֶרְכָ֣ה மற்றும்–வரிசைப்படுத்துவேன் לְעֵינֶֽיךָ׃ கண்களுக்குமுன்–உன்
இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
22 בִּֽינוּ־ புரிந்துகொள்ளுங்கள்– נָ֣א தயவாய் זֹ֭את இதை שֹׁכְחֵ֣י மறப்பவர்களே אֱל֑וֹהַּ தேவனை פֶּן־ இல்லையெனில்– אֶ֝טְרֹ֗ף கிழித்துப்போடுவேன் וְאֵ֣ין மற்றும்–இல்லை מַצִּֽיל׃ விடுவிப்பவன்
தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
23 זֹבֵ֥חַ பலியிடுகிறவன் תּוֹדָ֗ה நன்றியை יְֽכַ֫בְּדָ֥נְנִי மகிமைப்படுத்துவான்–என்னை וְשָׂ֥ם மற்றும்–ஏற்படுத்துகிறவன் דֶּ֑רֶךְ வழியை אַ֝רְאֶ֗נּוּ காண்பிப்பேன்–அவனுக்கு בְּיֵ֣שַׁע இரட்சிப்பில்– אֱלֹהִֽים׃ தேவனின்
நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன்னுடைய வழியைச் சரிசெய்கிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.