1 לַמְנַצֵּ֗חַ இசைத்–தலைவனுக்கு מַשְׂכִּ֥יל போதகச்சங்கீதம் לְדָוִֽד׃ தாவீதுக்கு בְּב֤וֹא ׀ வந்தபோது דּוֹאֵ֣ג தோவேக் הָאֲדֹמִי֮ எதோமியன் וַיַּגֵּ֪ד மற்றும்–அறிவித்தான் לְשָׁ֫א֥וּל சாவூலிடம் וַיֹּ֥אמֶר மற்றும்–சொன்னான் ל֑וֹ அவனுக்கு בָּ֥א வந்தான் דָ֝וִ֗ד தாவீது אֶל־ –நோக்கி בֵּ֥ית வீட்டை– אֲחִימֶֽלֶךְ׃ அகீமெலெக்கின் מַה־ என்ன– תִּתְהַלֵּ֣ל பெருமைபாராட்டுகிறாய் בְּ֭רָעָה தீமையில் הַגִּבּ֑וֹר வல்லவனே חֶ֥סֶד கிருபை אֵ֝֗ל தேவனின் כָּל־ எல்லா– הַיּֽוֹם׃ நாளும்
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அகிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறியபோது பாடப்பட்ட பாடல். பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளும் உள்ளது.
2 הַ֭וּוֹת அழிவை תַּחְשֹׁ֣ב திட்டமிடும் לְשׁוֹנֶ֑ךָ நாவு–உன் כְּתַ֥עַר சவரக்கத்தியைப்போல்– מְ֝לֻטָּ֗שׁ கூர்மையாக்கப்பட்ட עֹשֵׂ֥ה செய்கிறது רְמִיָּֽה׃ வஞ்சகத்தை
நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய், கபடுசெய்யும் உன்னுடைய நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
3 אָהַ֣בְתָּ விரும்பினாய் רָּ֣ע தீமையை מִטּ֑וֹב நன்மையைவிட שֶׁ֓קֶר ׀ பொய்யை מִדַּבֵּ֖ר பேசுவதைவிட צֶ֣דֶק நீதியை סֶֽלָה׃ சேலா
நன்மையைவிட தீமையையும், யாதார்த்தம் பேசுகிறதைவிட பொய்யையும் விரும்புகிறாய். (சேலா)
4 אָהַ֥בְתָּ விரும்பினாய் כָֽל־ எல்லா– דִּבְרֵי־ வார்த்தைகளை– בָ֗לַע விழுங்குதலின் לְשׁ֣וֹן நாவு מִרְמָֽה׃ வஞ்சகத்தின்
கபடமுள்ள நாவே, அழிக்கும் எல்லா வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்;
5 גַּם־ இருவரும்– אֵל֮ வல்லமையுள்ளவர் יִתָּצְךָ֪ இடிப்பார்–உன்னை לָ֫נֶ֥צַח நித்தியமாக יַחְתְּךָ֣ பிடுங்குவார்–உன்னை וְיִסָּחֲךָ֣ மற்றும்–பிடுங்குவார்–உன்னை מֵאֹ֑הֶל கூடாரத்திலிருந்து וְשֵֽׁרֶשְׁךָ֨ மற்றும்–வேரை–உன் מֵאֶ֖רֶץ பூமியிலிருந்து– חַיִּ֣ים உயிர்களின் סֶֽלָה׃ சேலா
தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் குடியிருப்பிலிருந்து பிடுங்கி, நீ உயிருள்ளோர் தேசத்தில் இல்லாதபடி உன்னை அழித்துப்போடுவார். (சேலா)
6 וְיִרְא֖וּ மற்றும்–காண்பார்கள் צַדִּיקִ֥ים நீதிமான்கள் וְיִירָ֗אוּ மற்றும்–பயப்படுவார்கள் וְעָלָ֥יו மற்றும்–அவனைக்குறித்து יִשְׂחָֽקוּ׃ நகைப்பார்கள்
நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப் பார்த்து சிரித்து:
7 הִנֵּ֤ה இதோ הַגֶּ֗בֶר மனிதன் לֹ֤א இல்லை יָשִׂ֥ים வைக்கமாட்டான் אֱלֹהִ֗ים தேவனை מָֽע֫וּזּ֥וֹ அரண்–அவனின் וַ֭יִּבְטַח மற்றும்–நம்பினான் בְּרֹ֣ב மிகுதியில்– עָשְׁר֑וֹ ஐசுவரியத்தின்–அவனின் יָ֝עֹ֗ז பலப்பட்டான் בְּהַוָּתֽוֹ׃ அழிவில்–அவனின்
இதோ, தேவனைத் தன்னுடைய பெலனாக கருதாமல், தன்னுடைய செல்வப்பெருக்கத்தை நம்பி, தன்னுடைய தீமையில் பலத்துக்கொண்ட மனிதன் இவன்தான் என்பார்கள்.
8 וַאֲנִ֤י ׀ மற்றும்–நான் כְּזַ֣יִת ஒலிவமரத்தைப்போல் רַ֭עֲנָן பசுமையான בְּבֵ֣ית வீட்டில்– אֱלֹהִ֑ים தேவனின் בָּטַ֥חְתִּי நம்பினேன் בְחֶֽסֶד־ கிருபையில்– אֱ֝לֹהִ֗ים தேவனின் עוֹלָ֥ם என்றென்றும் וָעֶֽד׃ மற்றும்–என்றென்றும்
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
9 אוֹדְךָ֣ நன்றிசெலுத்துவேன்–உமக்கு לְ֭עוֹלָם என்றென்றும் כִּ֣י ஏனெனில் עָשִׂ֑יתָ செய்தீர் וַאֲקַוֶּ֖ה மற்றும்–காத்திருப்பேன் שִׁמְךָ֥ நாமத்தை–உம் כִֽי־ ஏனெனில்– ט֝֗וֹב நல்லது נֶ֣גֶד முன்பாக– חֲסִידֶֽיךָ׃ பரிசுத்தவான்களை–உம்
நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது பெயருக்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாக இருக்கிறது.