1 לַמְנַצֵּ֥חַ இசைத்தலைவனுக்கு מִזְמ֗וֹר சங்கீதம் לְדָוִ֥ד தாவீதின் שִֽׁיר׃ பாடல் לְךָ֤ உனக்கு דֻֽמִיָּ֬ה அமைதியாக תְהִלָּ֓ה துதியை אֱלֹ֘הִ֥ים தேவனே בְּצִיּ֑וֹן சீயோனில் וּ֝לְךָ֗ உனக்கும் יְשֻׁלַּם־ செலுத்தப்படும் נֶֽדֶר׃ பொருத்தனை
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல். தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும்.
2 שֹׁמֵ֥עַ கேட்கிறவரே תְּפִלָּ֑ה பிரார்த்தனையை עָ֝דֶ֗יךָ உன்னிடம் כָּל־ எல்லா בָּשָׂ֥ר மாம்சம் יָבֹֽאוּ׃ வரும்
ஜெபத்தைக் கேட்கிறவரே, மனிதர்கள் அனைவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
3 דִּבְרֵ֣י வார்த்தைகள் עֲ֭וֺנֹת அக்கிரமங்களின் גָּ֣בְרוּ மேோங்கின מֶ֑נִּי என்னைவிட פְּ֝שָׁעֵ֗ינוּ நம்முடைய–மீறுதல்களை אַתָּ֥ה நீயே תְכַפְּרֵֽם׃ மன்னிப்பீர்
அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவனே நீரோ எங்களுடைய மீறுதல்களை மன்னிக்கிறீர்.
4 אַשְׁרֵ֤י ׀ பேற்பெற்றவன் תִּֽבְחַ֣ר தேர்ந்தெடுக்கிறாய் וּתְקָרֵב֮ நெருக்கிறாய் יִשְׁכֹּ֪ן குடியிருப்பான் חֲצֵ֫רֶ֥יךָ உன்–முற்றங்களில் נִ֭שְׂבְּעָה திருப்தியடைவோம் בְּט֣וּב நன்மையில் בֵּיתֶ֑ךָ உன்–வீட்டின் קְ֝דֹ֗שׁ பரிசுத்தமான הֵיכָלֶֽךָ׃ உன்–ஆலயத்தின்
உம்முடைய ஆலயமுற்றங்களில் குடியிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.
5 נ֤וֹרָא֨וֹת ׀ பயங்கரமானவற்றால் בְּצֶ֣דֶק நீதியில் תַּ֭עֲנֵנוּ பதிலளிப்பீர்–நமக்கு אֱלֹהֵ֣י தேவனே יִשְׁעֵ֑נוּ நம்முடைய–இரட்சிப்பின் מִבְטָ֥ח நம்பிக்கை כָּל־ எல்லா קַצְוֵי־ அக்கரைகளின் אֶ֝֗רֶץ பூமியின் וְיָ֣ם கடலின் רְחֹקִֽים׃ தொலைவான
பூமியின் கடைசி எல்லைகளிலும் தூரமான கடல்களிலும் உள்ளவர்கள் எல்லோரும் நம்பும் நம்பிக்கையாக இருக்கிற எங்களுடைய இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்திரவு அருளுகிறீர்.
6 מֵכִ֣ין நிலைப்படுத்துகிறவர் הָרִ֣ים மலைகளை בְּכֹח֑וֹ அவர்–பலத்தால் נֶ֝אְזָ֗ר அரைகட்டையானவர் בִּגְבוּרָֽה׃ வலிமையால்
வல்லமையைக் கட்டிக்கொண்டு, உம்முடைய பலத்தினால் மலைகளை உறுதிப்படுத்தி,
7 מַשְׁבִּ֤יחַ ׀ அமைதியாக்குகிறவர் שְׁא֣וֹן ஆர்ப்பரிப்பை יַ֭מִּים கடல்களின் שְׁא֥וֹן ஆர்ப்பரிப்பை גַּלֵּיהֶ֗ם அவற்றின்–அலைகளின் וַהֲמ֥וֹן ஆர்ப்பரிப்பையையும் לְאֻמִּֽים׃ மக்களின்
கடல்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், மக்களின் குழப்பத்தையும் அமர்த்துகிறீர்.
8 וַיִּ֤ירְא֨וּ ׀ பயப்பட்டார்கள் יֹשְׁבֵ֣י குடியிருக்கிறவர்கள் קְ֭צָוֺת அக்கரைகளின் מֵאוֹתֹתֶ֑יךָ உன்–அடையாளங்களிலிருந்து מ֤וֹצָֽאֵי־ வெளிப்படுதல்களின் בֹ֖קֶר காலையின் וָעֶ֣רֶב மாலையின் תַּרְנִֽין׃ ஆர்ப்பரிக்கச்செய்கிறாய்
பூமியின் கடைசி இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களுக்காக பயப்படுகிறார்கள்; காலையையும், மாலையையும் சந்தோஷப்படச்செய்கிறீர்.
9 פָּקַ֥דְתָּ சந்தித்தீர் הָאָ֨רֶץ ׀ பூமியை וַתְּשֹׁ֪קְקֶ֡הָ நீர்பாய்ச்சினீர்–அதை רַבַּ֬ת மிகுதியாக תַּעְשְׁרֶ֗נָּה செழிப்பாக்குகிறீர்–அதை פֶּ֣לֶג நீரோடை אֱ֭לֹהִים தேவனின் מָ֣לֵא நிறைந்தது מָ֑יִם தண்ணீரால் תָּכִ֥ין ஆயத்தம்–செய்கிறீர் דְּ֝גָנָ֗ם அவர்கள்–தானியத்தை כִּי־ ஏனெனில் כֵ֥ן அப்படி תְּכִינֶֽהָ׃ ஆயத்தம்–செய்கிறீர்–அதை
தேவனே நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.
10 תְּלָמֶ֣יהָ அதன்–சால்களை רַ֭וֵּה நனைத்தீர் נַחֵ֣ת தாழ்த்தீர் גְּדוּדֶ֑יהָ அதன்–கட்டிகளை בִּרְבִיבִ֥ים மழையால் תְּ֝מֹגְגֶ֗נָּה கரைக்கிறீர்–அதை צִמְחָ֥הּ அதன்–முளையை תְּבָרֵֽךְ׃ ஆசீர்வதிக்கிறீர்
அதின் வரப்புகள் தணியும்படி அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையச்செய்து, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.
11 עִ֭טַּרְתָּ முடிசூட்டினீர் שְׁנַ֣ת ஆண்டை טוֹבָתֶ֑ךָ உன்–நன்மையின் וּ֝מַעְגָּלֶ֗יךָ உன்–பாதைகள் יִרְעֲפ֥וּן சொட்டுகின்றன דָּֽשֶׁן׃ கொழுமையை
வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாகப் பொழிகிறது.
12 יִ֭רְעֲפוּ சொட்டுகின்றன נְא֣וֹת மேய்ச்சல்–நிலங்கள் מִדְבָּ֑ר வனாந்தரத்தின் וְ֝גִ֗יל களிப்பையும் גְּבָע֥וֹת குன்றுகள் תַּחְגֹּֽרְנָה׃ அரைகட்டுகின்றன
வனாந்திர பசும்புல்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாக இருக்கிறது.
13 לָבְשׁ֬וּ உடுத்திருக்கின்றன כָרִ֨ים ׀ புல்வெளிகள் הַצֹּ֗אן ஆடுகளை וַעֲמָקִ֥ים பள்ளத்தாக்குகளும் יַֽעַטְפוּ־ போர்த்திக்கொண்டிருக்கின்றன בָ֑ר தானியத்தை יִ֝תְרוֹעֲע֗וּ ஆர்ப்பரிக்கின்றன אַף־ உண்மையில் יָשִֽׁירוּ׃ பாடுகின்றன
மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.