1 לַמְנַצֵּ֥חַ இசைத்–தலைவனுக்கு בִּנְגִינֹ֑ת நாரக்கருவிகளின்–மேல் מִזְמ֖וֹר சங்கீதம் לְאָסָ֣ף ஆசாபின் שִֽׁיר׃ பாடல் נוֹדָ֣ע அறியப்பட்டவர் בִּֽיהוּדָ֣ה யூதாவில்– אֱלֹהִ֑ים தேவன் בְּ֝יִשְׂרָאֵ֗ל இஸ்ரவேலில்– גָּד֥וֹל பெரியது שְׁמֽוֹ׃ நாமம்–அவர்
அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது.
2 וַיְהִ֣י ஆனது בְשָׁלֵ֣ם சாலேமில்– סֻכּ֑וֹ கூடாரம்–அவர் וּמְע֖וֹנָת֣וֹ வாசஸ்தலமும்–அவர் בְצִיּֽוֹן׃ சீயோனில்
சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.
3 שָׁ֭מָּה அங்கே שִׁבַּ֣ר உடைத்தார் רִשְׁפֵי־ நெருப்புகளை– קָ֑שֶׁת வில்லின் מָגֵ֬ן கேடகத்தையும் וְחֶ֖רֶב வாளையும் וּמִלְחָמָ֣ה யுத்தத்தையும் סֶֽלָה׃ செலா
அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா)
4 נָ֭אוֹר பிரகாசமுள்ளவர் אַתָּ֥ה நீர் אַדִּ֗יר மகத்தானவர் מֵֽהַרְרֵי־ மலைகளைவிட– טָֽרֶף׃ இரையின்
மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர்.
5 אֶשְׁתּוֹלְל֨וּ ׀ கள்ளப்பட்டனார்கள் אַבִּ֣ירֵי வலிமையுள்ளோர்– לֵ֭ב இருதயத்தின் נָמ֣וּ தூங்கினார்கள் שְׁנָתָ֑ם தூக்கத்தை–அவர்களின் וְלֹא־ இல்லை– מָצְא֖וּ கண்டுபிடிக்கவில்லை כָל־ எல்லா– אַנְשֵׁי־ மனிதர்கள்– חַ֣יִל பராக்கிரமத்தின் יְדֵיהֶֽם׃ கைகளை–அவர்களின்
தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, உறங்கி அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.
6 מִ֭גַּעֲרָ֣תְךָ கடிந்துரையிலிருந்து–உம் אֱלֹהֵ֣י தேவனே– יַעֲקֹ֑ב யாக்கோபின் נִ֝רְדָּ֗ם மயக்கமடைந்தது וְרֶ֣כֶב ரதமும் וָסֽוּס׃ குதிரையும்
யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
7 אַתָּ֤ה ׀ நீர் נ֥וֹרָא பயங்கரமானவர் אַ֗תָּה நீர் וּמִֽי־ யார்– יַעֲמֹ֥ד நிற்கும் לְפָנֶ֗יךָ முன்பாக–உம் מֵאָ֥ז அன்றிலிருந்து– אַפֶּֽךָ׃ கோபத்தின்–உம்
நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
8 מִ֭שָּׁמַיִם வானங்களிலிருந்து הִשְׁמַ֣עְתָּ கேட்கச்செய்தீர் דִּ֑ין நியாயத்தை אֶ֖רֶץ பூமி יָֽרְאָ֣ה பயந்தது וְשָׁקָֽטָה׃ அமைதியாயிருந்தது
நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவனே நீர் எழுந்தருளினபோது,
9 בְּקוּם־ எழுகிறபோது– לַמִּשְׁפָּ֥ט நியாயத்திற்கு– אֱלֹהִ֑ים தேவன் לְהוֹשִׁ֖יעַ இரட்சிக்க כָּל־ எல்லா– עַנְוֵי־ சாந்தமுள்ளோரை– אֶ֣רֶץ பூமியின் סֶֽלָה׃ செலா
வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)
10 כִּֽי־ ஏனெனில்– חֲמַ֣ת கோபம்– אָדָ֣ם ஆதாமின் תּוֹדֶ֑ךָּ துதிக்கும்–உம்மை שְׁאֵרִ֖ית மீதியை– חֵמֹ֣ת கோபங்களின் תַּחְגֹּֽר׃ கட்டிக்கொள்வீர்
மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
11 נִֽדֲר֣וּ நேர்ந்துகொள்ளுங்கள் וְשַׁלְּמוּ֮ செலுத்துங்கள் לַיהוָ֪ה யெகோவாவுக்கு– אֱֽלֹהֵ֫יכֶ֥ם தேவனே–உங்கள் כָּל־ எல்லா– סְבִיבָ֑יו சுற்றுப்புறத்தார்கள்–அவர் יוֹבִ֥ילוּ கொண்டுவருவார்கள் שַׁ֝֗י காணிக்கையை לַמּוֹרָֽא׃ பயங்கரமானவருக்கு
பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும்.
12 יִ֭בְצֹר கட்டுவார் ר֣וּחַ ஆவியை– נְגִידִ֑ים தலைவர்களின் נ֝וֹרָ֗א பயங்கரமானவர் לְמַלְכֵי־ ராஜாக்களுக்கு– אָֽרֶץ׃ பூமியின்
பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.