1 כִּֽי־ ஏனென்றால்– תֵ֭שֵׁב உட்காரும்போது לִלְח֣וֹם உண்ணும்படி אֶת־ ∅ מוֹשֵׁ֑ל ஆளுனரோடு בִּ֥ין நன்றாக– תָּ֝בִ֗ין உணர்வாய் אֶת־ ∅ אֲשֶׁ֥ר எதை– לְפָנֶֽיךָ׃ நின்–முன்பாக–உள்ளதை
நீ ஒரு அதிபதியோடு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாகக் கவனித்துப்பார்.
2 וְשַׂמְתָּ֣ வைப்பாய் שַׂכִּ֣ין கத்தியை בְּלֹעֶ֑ךָ நின்–தொண்டையில் אִם־ என்றால்– בַּ֖עַל உடையவன்– נֶ֣פֶשׁ பசியின் אָֽתָּה׃ நீ
நீ சாப்பாட்டு பிரியனாக இருந்தால், உன்னுடைய தொண்டையிலே கத்தியை வை.
3 אַל־ வேண்டாம்– תִּ֭תְאָו ஆசைப்படாதே לְמַטְעַמּוֹתָ֑יו அவன்–ருசியான–உணவுகளை וְ֝ה֗וּא அது– לֶ֣חֶם ரொட்டி כְּזָבִֽים׃ பொய்களின்
அவனுடைய ருசியுள்ள உணவுகள்மீது ஆசைப்படாதே; அவைகள் வஞ்சக உணவாக இருக்கலாம்.
4 אַל־ வேண்டாம்– תִּיגַ֥ע உழைக்காதே לְֽהַעֲשִׁ֑יר செல்வந்தனாகும்படி מִֽבִּינָתְךָ֥ நின்–புத்தியிலிருந்து חֲדָֽל׃ விலகு
செல்வந்தனாகவேண்டுமென்று முயற்சிக்காதே; சுயபுத்தியைச் சாராதே.
5 [התעוף] ∅ (הֲתָ֤עִיף) பறக்குவாயா– עֵינֶ֥יךָ நின்–கண்களை בּ֗וֹ அதின்மேல் וְֽאֵ֫ינֶ֥נּוּ அது–இல்லை כִּ֤י ஏனென்றால் עָשֹׂ֣ה உண்டாக்கும்– יַעֲשֶׂה־ செய்யும்– לּ֣וֹ தனக்கு כְנָפַ֑יִם சிறகுகளை כְּ֝נֶ֗שֶׁר கழுகைப்போல்– [ועיף] ∅ (יָע֥וּף) பறக்கும் הַשָּׁמָֽיִם׃ வானத்தை פ ¶
இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு, வானில் பறந்துபோகும்.
6 אַל־ வேண்டாம்– תִּלְחַ֗ם உண்ணாதே אֶת־ ∅ לֶ֭חֶם ரொட்டியை– רַ֣ע தீய– עָ֑יִן கண்ணனின் וְאַל־ வேண்டாம்– [תתאו] ∅ (תִּ֝תְאָ֗יו) ஆசைப்படாதே לְמַטְעַמֹּתָֽיו׃ அவன்–ருசியான–உணவுகளை
பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே; அவனுடைய ருசியுள்ள உணவுகளில் ஆசைப்படாதே.
7 כִּ֤י ׀ ஏனென்றால் כְּמוֹ־ போல்– שָׁעַ֥ר எண்ணுகிறான் בְּנַפְשׁ֗וֹ தன்–ஆத்மாவில் כֶּ֫ן־ அப்படியே– ה֥וּא அவன் אֱכֹ֣ל உண்ணு וּ֭שְׁתֵה குடி יֹ֣אמַר சொல்வான் לָ֑ךְ நினக்கு וְ֝לִבּ֗וֹ அவன்–இருதயமோ בַּל־ இல்லை– עִמָּֽךְ׃ நின்னோடு
அவனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவனும் இருக்கிறான்; சாப்பிடும், குடியும் என்று அவன் உன்னோடு சொன்னாலும், அவனுடைய இருதயம் உன்னோடு இருக்காது.
8 פִּֽתְּךָ־ நின்–துண்டை– אָכַ֥לְתָּ நீ–உண்டாய் תְקִיאֶ֑נָּה கக்குவாய் וְ֝שִׁחַ֗תָּ நின்–கெடுத்துவிடுவாய் דְּבָרֶ֥יךָ நின்–வார்த்தைகளை הַנְּעִימִֽים׃ இனிமையானவை
நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து, உன்னுடைய இனிய சொற்களை இழந்துபோவாய்.
9 בְּאָזְנֵ֣י காதுகளில்– כְ֭סִיל மூடனின் אַל־ வேண்டாம்– תְּדַבֵּ֑ר பேசாதே כִּֽי־ ஏனென்றால்– יָ֝ב֗וּז அசட்டை–செய்வான் לְשֵׂ֣כֶל விவேகத்தை– מִלֶּֽיךָ׃ நின்–வார்த்தைகளின்
மூடனுடைய காதுகள் கேட்கப் பேசாதே; அவன் உன்னுடைய வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை செய்வான்.
10 אַל־ வேண்டாம்– תַּ֭סֵּג நீக்காதே גְּב֣וּל எல்லையை– עוֹלָ֑ם பழமையான וּבִשְׂדֵ֥י வயல்களில்– יְ֝תוֹמִ֗ים அனாதைகளின் אַל־ வேண்டாம்– תָּבֹֽא׃ நுழையாதே
பழைய எல்லைக்கல்லை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
11 כִּֽי־ ஏனென்றால்– גֹאֲלָ֥ם அவர்களின்–மீட்பர் חָזָ֑ק பலமுள்ளவர் הֽוּא־ அவரே– יָרִ֖יב வாதாடுவார் אֶת־ ∅ רִיבָ֣ם அவர்களின்–வழக்கை אִתָּֽךְ׃ நின்னோடு
அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
12 הָבִ֣יאָה கொண்டுவா לַמּוּסָ֣ר உபதேசத்துக்கு– לִבֶּ֑ךָ நின்–இருதயத்தை וְ֝אָזְנֶ֗ךָ நின்–காதையும் לְאִמְרֵי־ வார்த்தைகளுக்கு– דָֽעַת׃ அறிவின்
உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் காதுகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
13 אַל־ வேண்டாம்– תִּמְנַ֣ע தடுக்காதே מִנַּ֣עַר பிள்ளையிடமிருந்து מוּסָ֑ר உபதேசத்தை כִּֽי־ ஏனென்றால்– תַכֶּ֥נּוּ அவனை–அடிப்பாய் בַ֝שֵּׁ֗בֶט கோலினால் לֹ֣א இல்லை יָמֽוּת׃ சாவான்
பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான்.
14 אַ֭תָּה நீ בַּשֵּׁ֣בֶט கோலினால் תַּכֶּ֑נּוּ அவனை–அடிப்பாய் וְ֝נַפְשׁ֗וֹ அவன்–ஆத்மாவை מִשְּׁא֥וֹל பாதாளத்திலிருந்து תַּצִּֽיל׃ மீட்பாய்
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
15 בְּ֭נִי என்–மகனே אִם־ என்றால்– חָכַ֣ם ஞானமுள்ளதாக–இருந்தால் לִבֶּ֑ךָ நின்–இருதயம் יִשְׂמַ֖ח மகிழ்ச்சியடையும் לִבִּ֣י என்–இருதயம் גַם־ மேலும்– אָֽנִי׃ நான்
என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், என்னிலே என்னுடைய இருதயம் மகிழும்.
16 וְתַעְלֹ֥זְנָה களிப்படையும் כִלְיוֹתָ֑י என்–அகத்துறுப்புகள் בְּדַבֵּ֥ר பேசும்போது– שְׂ֝פָתֶ֗יךָ நின்–உதடுகள் מֵישָׁרִֽים׃ நீதியானவை
உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என்னுடைய உள்மனம் மகிழும்.
17 אַל־ வேண்டாம்– יְקַנֵּ֣א பொறாமைப்படாதே לִ֭בְּךָ நின்–இருதயம் בַּֽחַטָּאִ֑ים பாவிகளின்மேல் כִּ֥י ஏனென்றால் אִם־ என்றால்– בְּיִרְאַת־ பயத்தில்– יְ֝הוָ֗ה யெகோவாவின் כָּל־ எல்லா– הַיּֽוֹם׃ நாளும்
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாள்தோறும் யெகோவாவைப் பற்றும் பயத்தோடு இரு.
18 כִּ֭י ஏனென்றால் אִם־ என்றால்– יֵ֣שׁ உண்டு אַחֲרִ֑ית முடிவு וְ֝תִקְוָתְךָ֗ நின்–நம்பிக்கையும் לֹ֣א இல்லை תִכָּרֵֽת׃ அறுபடாது
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.
19 שְׁמַע־ கேள்– אַתָּ֣ה நீ בְנִ֣י என்–மகனே וַחֲכָ֑ם ஞானமுள்ளவனாகு וְאַשֵּׁ֖ר வழிநடத்து בַּדֶּ֣רֶךְ வழியில்– לִבֶּֽךָ׃ நின்–இருதயத்தை
என் மகனே, நீ கேட்டு ஞானமடைந்து, உன்னுடைய இருதயத்தை நல்வழியிலே நடத்து.
20 אַל־ வேண்டாம்– תְּהִ֥י இருக்காதே בְסֹֽבְאֵי־ மதுபானம்–செய்வோரில்– יָ֑יִן திராட்சைரசத்தின் בְּזֹלֲלֵ֖י பெருந்திண்பர்களில்– בָשָׂ֣ר இறைச்சியின் לָֽמוֹ׃ அவர்களுக்கு
மதுபானப்பிரியர்களோடும், இறைச்சி அதிகமாக சாப்பிடுகிறவர்களோடும் சேராதே.
21 כִּי־ ஏனென்றால்– סֹבֵ֣א மதுபானியும் וְ֭זוֹלֵל பெருந்திண்பனும் יִוָּרֵ֑שׁ தரித்திரனாவான் וּ֝קְרָעִ֗ים கிழிந்த–உடைகளை תַּלְבִּ֥ישׁ உடுப்பிக்கும் נוּמָֽה׃ தூக்கம்
குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கிழிந்த துணிகளை அணிவிக்கும்.
22 שְׁמַ֣ע கேள் לְ֭אָבִיךָ நின்–தகப்பனுக்கு– זֶ֣ה இவன் יְלָדֶ֑ךָ நின்னைப்–பெற்றவன் וְאַל־ வேண்டாம்– תָּ֝ב֗וּז அசட்டை–செய்யாதே כִּֽי־ ஏனென்றால்– זָקְנָ֥ה முதிர்ந்தவளானால் אִמֶּֽךָ׃ நின்–தாய்
உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன்னுடைய தாய் வயதானவளாகும்போது அவளை புறக்கணிக்காதே.
23 אֱמֶ֣ת உண்மையை קְ֭נֵה வாங்கு וְאַל־ வேண்டாம்– תִּמְכֹּ֑ר விற்காதே חָכְמָ֖ה ஞானத்தையும் וּמוּסָ֣ר உபதேசத்தையும் וּבִינָֽה׃ புத்தியையும்
சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.
24 [גול] ∅ (גִּ֣יל) மகிழ்ச்சியை– [יגול] ∅ (יָ֭גִיל) மகிழ்ச்சியடைவான் אֲבִ֣י தகப்பன்– צַדִּ֑יק நீதிமானின் [יולד] ∅ (וְיוֹלֵ֥ד) பெற்றவன்– חָ֝כָ֗ם ஞானமுள்ளவனை [וישמח־] ∅ (יִשְׂמַח־) மகிழ்ச்சியடைவான்– בּֽוֹ׃ அவனில்
நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
25 יִֽשְׂמַח־ மகிழ்ச்சியடைவான்– אָבִ֥יךָ நின்–தகப்பன் וְאִמֶּ֑ךָ நின்–தாயும் וְ֝תָגֵ֗ל களிப்படைவாள் יֽוֹלַדְתֶּֽךָ׃ நின்னைப்–பெற்றவள்
உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.
26 תְּנָֽה־ கொடுப்பாயாக– בְנִ֣י என்–மகனே לִבְּךָ֣ நின்–இருதயத்தை לִ֑י எனக்கு וְ֝עֵינֶ֗יךָ நின்–கண்களும் דְּרָכַ֥י என்–வழிகளை [תרצנה] ∅ (תִּצֹּֽרְנָה׃) காக்கட்டும்
என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு; உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக.
27 כִּֽי־ ஏனென்றால்– שׁוּחָ֣ה ஆழமான–குழி עֲמֻקָּ֣ה ஆழமான זוֹנָ֑ה வேசி וּבְאֵ֥ר இடுக்கான–கிணறும் צָ֝רָ֗ה நெருக்கமான נָכְרִיָּֽה׃ அந்நியப்பெண்
ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி; அந்நியனுடைய மனைவி இடுக்கமான கிணறு.
28 אַף־ மேலும்– הִ֭יא அவள் כְּחֶ֣תֶף பதுங்குபவன்போல்– תֶּֽאֱרֹ֑ב பதியிருப்பாள் וּ֝בוֹגְדִ֗ים துரோகிகளை בְּאָדָ֥ם மனிதரில் תּוֹסִֽף׃ பெருக்கிவிடுவாள்
அவள் கொள்ளைக்காரனைப்போல் ஒளிந்திருந்து, மனிதர்களுக்குள்ளே பாவிகளைப் பெருகச்செய்கிறாள்.
29 לְמִ֨י யாருக்கு א֥וֹי ஐயோ לְמִ֪י யாருக்கு אֲב֡וֹי அய்யோ לְמִ֤י யாருக்கு [מדונים] ∅ (מִדְיָנִ֨ים ׀) சண்டைகள் לְמִ֥י யாருக்கு שִׂ֗יחַ உரையாடல் לְ֭מִי யாருக்கு פְּצָעִ֣ים காயங்கள் חִנָּ֑ם வீணாக לְ֝מִ֗י யாருக்கு חַכְלִל֥וּת சிவப்பு– עֵינָֽיִם׃ கண்கள்
ஐயோ, யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தம்கலங்கின கண்கள்?
30 לַֽמְאַחֲרִ֥ים தாமதிப்பவர்களுக்கு– עַל־ ∅ הַיָּ֑יִן திராட்சைரசத்தின்மேல் לַ֝בָּאִ֗ים வருகிறவர்களுக்கு– לַחְקֹ֥ר தேடும்படி– מִמְסָֽךְ׃ கலப்பு–மதுவை
மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி வாழ்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானே.
31 אַל־ வேண்டாம்– תֵּ֥רֶא பார்க்காதே יַיִן֮ திராட்சைரசத்தை כִּ֪י ஏனென்றால் יִתְאַ֫דָּ֥ם சிவப்பாகிறது כִּֽי־ ஏனென்றால்– יִתֵּ֣ן கொடுக்கிறது [בכיס] ∅ (בַּכּ֣וֹס) கிண்ணத்தில் עֵינ֑וֹ தன்–கண்ணை יִ֝תְהַלֵּ֗ךְ செல்கிறது בְּמֵישָׁרִֽים׃ செம்மையாக
மதுபானம் இரத்த நிறமாக இருந்து, பாத்திரத்தில் பளபளப்பாகத் தோன்றும்போது, நீ அதைப் பார்க்காதே; அது மெதுவாக இறங்கும்.
32 אַ֭חֲרִיתוֹ அதன்–முடிவில் כְּנָחָ֣שׁ பாம்பைப்போல்– יִשָּׁ֑ךְ கடிக்கும் וּֽכְצִפְעֹנִ֥י நாகப்பாம்பைப்போலும்– יַפְרִֽשׁ׃ கொட்டும்
முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
33 עֵ֭ינֶיךָ நின்–கண்கள் יִרְא֣וּ காணும் זָר֑וֹת அந்நியப்–பெண்களை וְ֝לִבְּךָ֗ நின்–இருதயமும் יְדַבֵּ֥ר பேசும் תַּהְפֻּכֽוֹת׃ வக்கிரமானவை
உன் கண்கள் ஒழுங்கீனமான பெண்களை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
34 וְ֭הָיִיתָ ஆவாய் כְּשֹׁכֵ֣ב படுத்திருப்பவன்போல்– בְּלֶב־ நடுவில்– יָ֑ם கடலின் וּ֝כְשֹׁכֵ֗ב படுத்திருப்பவன்போலும்– בְּרֹ֣אשׁ நுனியில்– חִבֵּֽל׃ பாய்மரத்தின்
நீ நடுக்கடலிலே தூங்குகிறவனைப்போலவும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலவும் இருப்பாய்.
35 הִכּ֥וּנִי அடித்தார்கள்–என்னை בַל־ இல்லை– חָלִיתִי֮ வலித்தேன் הֲלָמ֗וּנִי தாக்கினார்கள்–என்னை בַּל־ இல்லை– יָ֫דָ֥עְתִּי அறிந்தேன் מָתַ֥י எப்போது אָקִ֑יץ விழிப்பேன் א֝וֹסִ֗יף மேலும்–தேடுவேன் אֲבַקְשֶׁ֥נּוּ அதை–தேடுவேன் עֽוֹד׃ மீண்டும்
என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.