1 אַל־ வேண்டாம்– תְּ֭קַנֵּא பொறாமைப்படாதே בְּאַנְשֵׁ֣י மனிதரின்மேல்– רָעָ֑ה தீமையின் וְאַל־ வேண்டாம்– [תתאו] ∅ (תִּ֝תְאָ֗יו) ஆசைப்படாதே לִהְי֥וֹת இருக்கும்படி אִתָּֽם׃ அவர்களோடு
பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடு இருக்கவும் விரும்பாதே.
2 כִּי־ ஏனென்றால்– שֹׁ֭ד அழிவை יֶהְגֶּ֣ה தியானிக்கும் לִבָּ֑ם அவர்கள்–இருதயம் וְ֝עָמָ֗ל துன்பத்தையும்– שִׂפְתֵיהֶ֥ם அவர்கள்–உதடுகள் תְּדַבֵּֽרְנָה׃ பேசும்
அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும்.
3 בְּ֭חָכְמָה ஞானத்தினால்– יִבָּ֣נֶה கட்டப்படும் בָּ֑יִת வீடு וּ֝בִתְבוּנָ֗ה புத்தியினாலும்– יִתְכּוֹנָֽן׃ நிலைநிறுத்தப்படும்
வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.
4 וּ֭בְדַעַת அறிவினாலும்– חֲדָרִ֣ים அறைகள் יִמָּלְא֑וּ நிரம்பும் כָּל־ எல்லா– ה֖וֹן செல்வம் יָקָ֣ר விலையேறப்பெற்றதும் וְנָעִֽים׃ இனிமையானதும்
அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.
5 גֶּֽבֶר־ மனிதன்– חָכָ֥ם ஞானமுள்ளவன் בַּע֑וֹז பலத்தில் וְאִֽישׁ־ மனிதனும்– דַּ֝֗עַת அறிவின் מְאַמֶּץ־ திடப்படுத்துகிறான்– כֹּֽחַ׃ வலிமையை
ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன்னுடைய வல்லமையை அதிகரிக்கச்செய்கிறான்.
6 כִּ֣י ஏனென்றால் בְ֭תַחְבֻּלוֹת தந்திரங்களினால்– תַּעֲשֶׂה־ செய்வாய்– לְּךָ֣ நினக்கு מִלְחָמָ֑ה யுத்தத்தை וּ֝תְשׁוּעָ֗ה விடுதலையும்– בְּרֹ֣ב மிகுதியில்– יוֹעֵֽץ׃ ஆலோசனைகளின்
நல்யோசனைசெய்து யுத்தம்செய்; ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும்.
7 רָאמ֣וֹת உயர்ந்தவை לֶֽאֱוִ֣יל மூடனுக்கு חָכְמ֑וֹת ஞானங்கள் בַּ֝שַּׁ֗עַר வாசலில்– לֹ֣א இல்லை יִפְתַּח־ திறப்பான்– פִּֽיהוּ׃ தன்–வாயை
மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்; அவன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாயைத் திறக்கமாட்டான்.
8 מְחַשֵּׁ֥ב திட்டமிடுகிறவன் לְהָרֵ֑עַ தீமை–செய்ய ל֝֗וֹ அவனை– בַּֽעַל־ உடையவன்– מְזִמּ֥וֹת தந்திரங்களின் יִקְרָֽאוּ׃ அழைப்பார்கள்
தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான்.
9 זִמַּ֣ת திட்டம்– אִוֶּ֣לֶת மூடத்தனத்தின் חַטָּ֑את பாவம் וְתוֹעֲבַ֖ת அருவருப்பும்– לְאָדָ֣ם மனிதனுக்கு לֵֽץ׃ பரிகாசகன்
தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன்.
10 הִ֭תְרַפִּיתָ சோர்வடைந்தால் בְּי֥וֹם நாளில்– צָרָ֗ה சங்கடத்தின் צַ֣ר குறுகியது כֹּחֶֽכָה׃ நின்–பலம்
ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால், உன்னுடைய பெலன் குறுகினது.
11 הַ֭צֵּל மீட்பாய் לְקֻחִ֣ים கொண்டுபோகப்படுகிறவர்களை לַמָּ֑וֶת மரணத்துக்கு וּמָטִ֥ים சாய்கிறவர்களையும் לַ֝הֶ֗רֶג கொலைக்கு אִם־ என்றால்– תַּחְשֽׂוֹךְ׃ தடுக்காதே
மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும் விடுவிக்க முடிந்தால் விடுவி.
12 כִּֽי־ ஏனென்றால்– תֹאמַ֗ר சொல்வாய் הֵן֮ இதோ לֹא־ இல்லை– יָדַ֪עְנ֫וּ அறியவில்லை זֶ֥ה இதை הֲֽלֹא־ அல்லவா– תֹ֘כֵ֤ן நிறையத்துகிறவர்– לִבּ֨וֹת ׀ இருதயங்களை הֽוּא־ அவரே– יָבִ֗ין அறிவார் וְנֹצֵ֣ר காக்கிறவரும்– נַ֭פְשְׁךָ நின்–ஆத்மாவை ה֣וּא அவர் יֵדָ֑ע அறிவார் וְהֵשִׁ֖יב திரும்பக்–கொடுப்பார் לְאָדָ֣ם மனிதனுக்கு כְּפָעֳלֽוֹ׃ அவன்–செயலின்படி
அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியமாட்டாரோ? உன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவர் கவனிக்கமாட்டாரோ? அவர் மனிதர்களுக்கு அவனவன் செயல்களுக்கு தக்கதாகப் பலனளிக்கமாட்டாரோ?
13 אֱכָל־ உண்ணு– בְּנִ֣י என்–மகனே דְבַ֣שׁ தேனை כִּי־ ஏனென்றால்– ט֑וֹב நல்லது וְנֹ֥פֶת தேன்–அடையும் מָ֝ת֗וֹק இனிப்பானது עַל־ ∅ חִכֶּֽךָ׃ நின்–அண்ணாக்கின்மேல்
என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும்.
14 כֵּ֤ן ׀ அப்படியே– דְּעֶ֥ה அறிவாய் חָכְמָ֗ה ஞானத்தை לְנַ֫פְשֶׁ֥ךָ நின்–ஆத்மாவுக்கு אִם־ என்றால்– מָ֭צָאתָ நீ–கண்டுபிடித்தால் וְיֵ֣שׁ உண்டு אַחֲרִ֑ית முடிவு וְ֝תִקְוָתְךָ֗ நின்–நம்பிக்கையும் לֹ֣א இல்லை תִכָּרֵֽת׃ அறுபடாது פ ¶
அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.
15 אַל־ வேண்டாம்– תֶּאֱרֹ֣ב பதியிருக்காதே רָ֭שָׁע தீயவனே לִנְוֵ֣ה வாசஸ்தலத்துக்கு– צַדִּ֑יק நீதிமானின் אַֽל־ வேண்டாம்– תְּשַׁדֵּ֥ד பாழப்படுத்தாதே רִבְצוֹ׃ அவன்–தங்குமிடத்தை
துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.
16 כִּ֤י ஏனென்றால் שֶׁ֨בַע ׀ ஏழு– יִפּ֣וֹל விழுவான் צַדִּ֣יק நீதிமான் וָקָ֑ם எழும்புவான் וּ֝רְשָׁעִ֗ים தீயவர்களோ– יִכָּשְׁל֥וּ இடறுவார்கள் בְרָעָֽה׃ தீமையில்
நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கர்களோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
17 בִּנְפֹ֣ל விழும்போது– [אויביך] ∅ (אֽ֭וֹיִבְךָ) நின்–பகைவனின் אַל־ வேண்டாம்– תִּשְׂמָ֑ח மகிழ்ச்சியடையாதே וּ֝בִכָּשְׁל֗וֹ அவன்–இடறும்போதும் אַל־ வேண்டாம்– יָגֵ֥ל களிப்படையாதே לִבֶּֽךָ׃ நின்–இருதயம்
உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக.
18 פֶּן־ இல்லாவிட்டால்– יִרְאֶ֣ה காணுவார் יְ֭הוָה யெகோவா וְרַ֣ע தீமையாகவும்– בְּעֵינָ֑יו அவர்–பார்வையில் וְהֵשִׁ֖יב திரும்பிக்–கொடுப்பார் מֵעָלָ֣יו அவனிடமிருந்து אַפּֽוֹ׃ தம்–கோபத்தை
யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்; அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
19 אַל־ வேண்டாம்– תִּתְחַ֥ר கோபம்–கொள்ளாதே בַּמְּרֵעִ֑ים தீமை–செய்வோரின்மேல் אַל־ வேண்டாம்– תְּ֝קַנֵּ֗א பொறாமைப்படாதே בָּרְשָׁעִֽים׃ தீயவர்களின்மேல்
பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
20 כִּ֤י ׀ ஏனென்றால் לֹֽא־ இல்லை– תִהְיֶ֣ה இருக்காது אַחֲרִ֣ית முடிவு לָרָ֑ע தீயவனுக்கு נֵ֖ר விளக்கு– רְשָׁעִ֣ים தீயவர்களின் יִדְעָֽךְ׃ அணைந்துபோகும்
துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும்.
21 יְרָֽא־ பயப்படு– אֶת־ ∅ יְהוָ֣ה யெகோவாவுக்கு בְּנִ֣י என்–மகனே וָמֶ֑לֶךְ ராஜாவுக்கும் עִם־ உடன்– שׁ֝וֹנִ֗ים மாறுகிறவர்களோடு אַל־ வேண்டாம்– תִּתְעָרָֽב׃ கலக்காதே
என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரர்களோடு சேராதே.
22 כִּֽי־ ஏனென்றால்– פִ֭תְאֹם திடீரென்று יָק֣וּם எழும்பும் אֵידָ֑ם அவர்களின்–ஆபத்து וּפִ֥יד அழிவும்– שְׁ֝נֵיהֶ֗ם இருவரின் מִ֣י யார் יוֹדֵֽעַ׃ அறிவார் ס §
திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் அழிவையும் அறிந்தவன் யார்?
23 גַּם־ மேலும்– אֵ֥לֶּה இவை לַֽחֲכָמִ֑ים ஞானிகளுக்கு הַֽכֵּר־ அடையாளம்– פָּנִ֖ים முகங்களை בְּמִשְׁפָּ֣ט நியாயத்தில்– בַּל־ இல்லை– טֽוֹב׃ நல்லது
பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல.
24 אֹ֤מֵ֨ר ׀ சொல்கிறவன்– לְרָשָׁע֮ தீயவனுக்கு צַדִּ֪יק நீதிமான்– אָ֥תָּה நீ יִקְּבֻ֥הוּ சாபிடுவார்கள்–அவனை עַמִּ֑ים ஜனங்கள் יִזְעָמ֥וּהוּ வெறுப்பார்கள்–அவனை לְאֻמִּֽים׃ இனங்கள்
துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாக இருக்கிறாய் என்று சொல்லுகிறவனை மக்கள் சபிப்பார்கள், குடிமக்கள் அவனை வெறுப்பார்கள்.
25 וְלַמּוֹכִיחִ֥ים கடிந்துகொள்கிறவர்களுக்கோ– יִנְעָ֑ם இனிமையாகும் וַֽ֝עֲלֵיהֶ֗ם அவர்கள்மேலும்– תָּב֥וֹא வரும் בִרְכַּת־ ஆசிர்வாதம்– טֽוֹב׃ நன்மையின்
அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.
26 שְׂפָתַ֥יִם உதடுகளை– יִשָּׁ֑ק முத்தமிடுவான் מֵ֝שִׁ֗יב திரும்பிக்–கொடுக்கிறவன் דְּבָרִ֥ים வார்த்தைகளை נְכֹחִֽים׃ நேர்மையானவை
செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம்.
27 הָ֘כֵ֤ן தயார்–செய் בַּח֨וּץ ׀ வெளியில்– מְלַאכְתֶּ֗ךָ நின்–வேலையை וְעַתְּדָ֣הּ தயார்–செய் בַּשָּׂדֶ֣ה வயலில்– לָ֑ךְ நினக்கு אַ֝חַ֗ר பின்னர்– וּבָנִ֥יתָ கட்டுவாய் בֵיתֶֽךָ׃ நின்–வீட்டை פ ¶
வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன்னுடைய வீட்டைக் கட்டு.
28 אַל־ வேண்டாம்– תְּהִ֣י இருக்காதே עֵד־ சாட்சியாக– חִנָּ֣ם வீணாக בְּרֵעֶ֑ךָ நின்–அயலானுக்கு–எதிராக וַ֝הֲפִתִּ֗יתָ ஏமாற்றுவாயா בִּשְׂפָתֶֽיךָ׃ நின்–உதடுகளினால்
நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே; உன்னுடைய உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.
29 אַל־ வேண்டாம்– תֹּאמַ֗ר சொல்லாதே כַּאֲשֶׁ֣ר எப்படி– עָֽשָׂה־ செய்தானோ– לִ֭י எனக்கு כֵּ֤ן அப்படியே– אֶֽעֱשֶׂה־ செய்வேன்– לּ֑וֹ அவனுக்கு אָשִׁ֖יב திரும்பக்–கொடுப்பேன் לָאִ֣ישׁ மனிதனுக்கு כְּפָעֳלֽוֹ׃ அவன்–செயலின்படி
அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செயல்களுக்குத் தகுந்தபடி நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.
30 עַל־ வயலின்– שְׂדֵ֣ה இடத்தில்– אִישׁ־ மனிதனின்– עָצֵ֣ל சோம்பேறியின் עָבַ֑רְתִּי கடந்தேன் וְעַל־ திராட்சைத்–தோட்டத்தின்– כֶּ֝֗רֶם திராட்சைத்–தோட்டத்தின்– אָדָ֥ם மனிதனின் חֲסַר־ குறைவுள்ள– לֵֽב׃ இருதயத்தின்
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
31 וְהִנֵּ֨ה இதோ עָ֘לָ֤ה முளைத்திருந்தது כֻלּ֨וֹ ׀ அது–முழுவதும் קִמְּשֹׂנִ֗ים முட்பூண்டுகள் כָּסּ֣וּ மூடியிருந்தது פָנָ֣יו அதன்–முகத்தை חֲרֻלִּ֑ים களைகள் וְגֶ֖דֶר சுவரும்– אֲבָנָ֣יו அதன்–கற்கள் נֶהֱרָֽסָה׃ இடிந்திருந்தது
இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; நிலத்தின் முகத்தை முட்கள் மூடினது, அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது.
32 וָֽאֶחֱזֶ֣ה நான்–கண்டேன் אָ֭נֹכִֽי நான் אָשִׁ֣ית சிந்தித்தேன் לִבִּ֑י என்–இருதயத்தை רָ֝אִ֗יתִי நான்–கண்டேன் לָקַ֥חְתִּי நான்–பெற்றேன் מוּסָֽר׃ உபதேசத்தை
அதைக் கண்டு சிந்தனை செய்தேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
33 מְעַ֣ט கொஞ்சம்– שֵׁ֭נוֹת தூக்கங்கள் מְעַ֣ט கொஞ்சம்– תְּנוּמ֑וֹת மயக்கங்கள் מְעַ֓ט ׀ கொஞ்சம்– חִבֻּ֖ק கட்டியணைப்பு– יָדַ֣יִם கைகளின் לִשְׁכָּֽב׃ படுத்துக்கொள்ள
இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?
34 וּבָֽא־ வரும்– מִתְהַלֵּ֥ךְ நடந்துவருவான் רֵישֶׁ֑ךָ நின்–வறுமை וּ֝מַחְסֹרֶ֗יךָ நின்–குறைவுகளும் כְּאִ֣ישׁ மனிதன்போல்– מָגֵֽן׃ கேடகத்தின் פ ¶
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.