1 זְב֣וּבֵי ஈக்களின் מָ֔וֶת மரணத்தின் יַבְאִ֥ישׁ நாற்றமடையாக்கும் יַבִּ֖יעַ நுரையைக்–கொப்புளிக்கும் שֶׁ֣מֶן எண்ணெய்யை רוֹקֵ֑חַ நறுமணக்–கூட்டுகிறவனின் יָקָ֛ר மதிப்புள்ளது מֵחָכְמָ֥ה ஞானத்தைக்காட்டிலும் מִכָּב֖וֹד மகிமையைக்காட்டிலும் סִכְל֥וּת மடமை מְעָֽט׃ சிறிது
செத்த ஈக்கள் நறுமணத் தைலக்காரனுடைய நறுமணத் தைலத்தை நாறிக் கெட்டுப்போகச்செய்யும்; ஞானத்திலும் மதிப்பிலும் பெயர்பெற்றவனைச் சிறிய மதியீனமும் அப்படியே செய்யும்.
2 לֵ֤ב இருதயம் חָכָם֙ ஞானமுள்ளவனின் לִֽימִינ֔וֹ தன்–வலத்தில் וְלֵ֥ב இருதயமானால் כְּסִ֖יל மடயனின் לִשְׂמֹאלֽוֹ׃ தன்–இடதில்
ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும்.
3 וְגַם־ மேலும் בַּדֶּ֛רֶךְ வழியில் [כשהסכל] [மடயன்] (כְּשֶׁסָּכָ֥ל) மடயன் הֹלֵ֖ךְ நடக்கும்போது לִבּ֣וֹ அவன்–இருதயம் חָסֵ֑ר குறைவுள்ளது וְאָמַ֥ר சொல்கிறான் לַכֹּ֖ל எல்லாருக்கும் סָכָ֥ל மடயன் הֽוּא׃ அவன்
மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான்.
4 אִם־ –ஆனால் ר֤וּחַ ஆவி הַמּוֹשֵׁל֙ ஆளுகிறவனின் תַּעֲלֶ֣ה எழும்பும் עָלֶ֔יךָ உன்–மேல் מְקוֹמְךָ֖ உன்–இடத்தை אַל־ வேண்டாம் תַּנַּ֑ח விடு כִּ֣י ஏனெனில் מַרְפֵּ֔א சுகம் יַנִּ֖יחַ தணிக்கும் חֲטָאִ֥ים பாவங்களை גְּדוֹלִֽים׃ பெரியவை
அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன்னுடைய இடத்தைவிட்டு விலகாதே; சாந்தம் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.
5 יֵ֣שׁ உண்டு רָעָ֔ה தீமையானது רָאִ֖יתִי கண்டேன் תַּ֣חַת –கீழே הַשָּׁ֑מֶשׁ சூரியனின் כִּשְׁגָגָ֕ה தவறைப்–போல שֶׁיֹּצָ֖א வெளியாகும் מִלִּפְנֵ֥י முன்னிலிருந்து הַשַּׁלִּֽיט׃ ஆளுகிறவனின்
நான் சூரியனுக்குக்கீழே பார்த்த ஒரு தீங்கும் உண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தவறே.
6 נִתַּ֣ן வைக்கப்பட்டது הַסֶּ֔כֶל மடமை בַּמְּרוֹמִ֖ים உயர்ந்த–இடங்களில் רַבִּ֑ים மிகுதியாக וַעֲשִׁירִ֖ים செல்வந்தர்களானால் בַּשֵּׁ֥פֶל தாழ்வில் יֵשֵֽׁבוּ׃ உட்காருவார்கள்
மூடர்கள் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
7 רָאִ֥יתִי கண்டேன் עֲבָדִ֖ים அடிமைகளை עַל־ –மீது סוּסִ֑ים குதிரைகளின் וְשָׂרִ֛ים பிரபுக்களானால் הֹלְכִ֥ים நடக்கிறார்கள் כַּעֲבָדִ֖ים அடிமைகளைப்–போல עַל־ –மேல் הָאָֽרֶץ׃ பூமியின்
வேலைக்காரர்கள் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்கள்போல் தரையிலே நடக்கிறதையும் பார்த்தேன்.
8 חֹפֵ֥ר தோண்டுகிறவன் גּוּמָּ֖ץ குழியை בּ֣וֹ அதில் יִפּ֑וֹל விழுவான் וּפֹרֵ֥ץ உடைக்கிறவனானால் גָּדֵ֖ר வேலியை יִשְּׁכֶ֥נּוּ கடிக்கும்–அவனை נָחָֽשׁ׃ பாம்பு
படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
9 מַסִּ֣יעַ நகர்த்துகிறவன் אֲבָנִ֔ים கற்களை יֵעָצֵ֖ב காயப்படுவான் בָּהֶ֑ם அவற்றால் בּוֹקֵ֥עַ பிளக்கிறவன் עֵצִ֖ים மரங்களை יִסָּ֥כֶן ஆபத்தில்–விழுவான் בָּֽם׃ அவற்றால்
கல்லுகளைப் பெயர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் அடிபடுவான்.
10 אִם־ –ஆனால் קֵהָ֣ה மழுங்கியிருந்தால் הַבַּרְזֶ֗ל இரும்பு וְהוּא֙ அவனானால் לֹא־ இல்லை פָנִ֣ים முகத்தை קִלְקַ֔ל கூர்மையாக்கியிருந்தால் וַחֲיָלִ֖ים பலங்களை יְגַבֵּ֑ר பெருக்கும் וְיִתְר֥וֹן நன்மையானால் הַכְשֵׁ֖ר(הכשיר*הַכְשֵׁ֖ר) வெற்றியடைய חָכְמָֽה׃ ஞானம்
இரும்பு ஆயுதம் மழுங்கலாக இருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைச் செலவிடவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாகச் செய்வதற்கு ஞானமே முக்கியம்.
11 אִם־ –ஆனால் יִשֹּׁ֥ךְ கடிக்குமானால் הַנָּחָ֖שׁ பாம்பு בְּלוֹא־ மந்திரம்–இல்லாமல் לָ֑חַשׁ மந்திரம் וְאֵ֣ין இல்லை יִתְר֔וֹן நன்மை לְבַ֖עַל உடைமையாளனுக்கு הַלָּשֽׁוֹן׃ நாவின்
தடை செய்யப்படாத பாம்பு கடிக்குமே, கோள்சொல்லுகிறவனும் அதற்கு ஒப்பானவன்.
12 דִּבְרֵ֥י வார்த்தைகள் פִי־ வாயின் חָכָ֖ם ஞானமுள்ளவனின் חֵ֑ן தயவு וְשִׂפְת֥וֹת உதடுகளானால் כְּסִ֖יל மடயனின் תְּבַלְּעֶֽנּוּ׃ விழுங்கும்–அவனை
ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும்.
13 תְּחִלַּ֥ת தொடக்கம் דִּבְרֵי־ வார்த்தைகளின் פִ֖יהוּ அவன்–வாயின் סִכְל֑וּת மடமை וְאַחֲרִ֣ית முடிவானால் פִּ֔יהוּ அவன்–வாயின் הוֹלֵל֖וּת பைத்தியம் רָעָֽה׃ தீய
அவன் வாய்மொழிகளின் ஆரம்பம் மதியீனமும், அவனுடைய வாக்குகளின் முடிவு கொடிய பைத்தியமாக இருக்கும்.
14 וְהַסָּכָ֖ל மடயனானால் יַרְבֶּ֣ה பெருக்குகிறான் דְבָרִ֑ים வார்த்தைகளை לֹא־ இல்லை יֵדַ֤ע அறிகிறான் הָאָדָם֙ மனிதன் מַה־ என்ன שֶׁיִּֽהְיֶ֔ה இருக்கும்–என்று וַאֲשֶׁ֤ר –ஐ יִֽהְיֶה֙ இருக்கும் מֵֽאַחֲרָ֔יו அவனுக்குப்–பின் מִ֖י யார் יַגִּ֥יד அறிவிக்குவான் לֽוֹ׃ அவனுக்கு
மூடன் மிகுதியாகப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனிதன் அறியான்; தனக்குப்பிற்பாடு நடக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?
15 עֲמַ֥ל உழைப்பு הַכְּסִילִ֖ים மடயர்களின் תְּיַגְּעֶ֑נּוּ அவனைக்–களைப்படுத்துகிறது אֲשֶׁ֥ר –ஐ לֹֽא־ இல்லை יָדַ֖ע அறியான் לָלֶ֥כֶת போக אֶל־ –க்கு עִֽיר׃ நகரத்தை
ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் சோர்வடையச்செய்யும்.
16 אִֽי־ ஐயோ לָ֣ךְ உனக்கு אֶ֔רֶץ நாடே שֶׁמַּלְכֵּ֖ךְ உன்–அரசனானால் נָ֑עַר இளைஞன் וְשָׂרַ֖יִךְ உன்–பிரபுக்களானால் בַּבֹּ֥קֶר காலையில் יֹאכֵֽלוּ׃ உண்கிறார்கள்
ராஜா சிறுபிள்ளையுமாக, பிரபுக்கள் அதிகாலமே சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, உனக்கு ஐயோ,
17 אַשְׁרֵ֣יךְ பாக்கியம்–உனக்கு אֶ֔רֶץ நாடே שֶׁמַּלְכֵּ֖ךְ உன்–அரசனானால் בֶּן־ மகன் חוֹרִ֑ים உன்னதங்களின் וְשָׂרַ֙יִךְ֙ உன்–பிரபுக்களானால் בָּעֵ֣ת காலத்தில் יֹאכֵ֔לוּ உண்கிறார்கள் בִּגְבוּרָ֖ה பலத்தினால் וְלֹ֥א இல்லை בַשְּׁתִֽי׃ குடிப்பதற்காக
ராஜா உயர்ந்த குடிமகனுமாகவும், பிரபுக்கள் வெறிக்கச் சாப்பிடாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, நீ பாக்கியமுள்ளது.
18 בַּעֲצַלְתַּ֖יִם சோம்பேறிதனத்தால் יִמַּ֣ךְ தாழும் הַמְּקָרֶ֑ה கூரை וּבְשִׁפְל֥וּת கைகளின்–தாழ்வினால் יָדַ֖יִם கைகளின் יִדְלֹ֥ף ஒழுகும் הַבָּֽיִת׃ வீடு
மிகுந்த சோம்பலினால் மேல்தளம் பழுதாகும்; கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும்.
19 לִשְׂחוֹק֙ சிரிப்புக்காக עֹשִׂ֣ים செய்கிறார்கள் לֶ֔חֶם அப்பத்தை וְיַ֖יִן திராட்சரசமானால் יְשַׂמַּ֣ח மகிழ்ச்சியாக்கும் חַיִּ֑ים ஜீவனை וְהַכֶּ֖סֶף பணமானால் יַעֲנֶ֥ה பதில்–அளிக்கும் אֶת־ –ஐ הַכֹּֽל׃ எல்லாவற்றையும்
விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சைரசம் உயிருள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.
20 גַּ֣ם மேலும் בְּמַדָּֽעֲךָ֗ உன்–சிந்தனையிலும் מֶ֚לֶךְ அரசனை אַל־ வேண்டாம் תְּקַלֵּ֔ל சபி וּבְחַדְרֵי֙ அறைகளிலும் מִשְׁכָּ֣בְךָ֔ உன்–படுக்கையின் אַל־ வேண்டாம் תְּקַלֵּ֖ל சபி עָשִׁ֑יר செல்வந்தனை כִּ֣י ஏனெனில் ע֤וֹף பறவை הַשָּׁמַ֙יִם֙ வானத்தின் יוֹלִ֣יךְ கொண்டு–செல்லும் אֶת־ –ஐ הַקּ֔וֹל குரலை וּבַ֥עַל உடைமையாளனானால் [הכנפים] [இறக்கைகளின்] (כְּנָפַ֖יִם) இறக்கைகளின் יַגֵּ֥יד அறிவிக்கும் דָּבָֽר׃ வார்த்தையை
ராஜாவை உன்னுடைய மனதிலும் இகழாதே, ஐசுவரியவானை உன்னுடைய படுக்கையிலும் இகழாதே; ஆகாயத்துப்பறவை அந்த சத்தத்தைக் கொண்டுபோகும், இறக்கைகள் உள்ளவை அந்த செய்தியை அறிவிக்கும்.