1 ה֥וֹי –ஐயோ הַחֹֽקְקִ֖ים –சட்டமியற்றுகிறவர்கள் חִקְקֵי־ –சட்டங்களை– אָ֑וֶן –அநீதியின் וּֽמְכַתְּבִ֥ים –மற்றும்–எழுதுகிறவர்கள் עָמָ֖ל –தொல்லை כִּתֵּֽבוּ׃ எழுதினார்கள்
ஏழைகளை வழக்கிலே தோற்கடிக்கவும், என் மக்களில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,
2 לְהַטּ֤וֹת –விலக்க מִדִּין֙ –நியாயத்திலிருந்து דַּלִּ֔ים –எளியவர்களை וְלִגְזֹ֕ל –மற்றும்–கொள்ளையடிக்க מִשְׁפַּ֖ט –நீதியை עֲנִיֵּ֣י –எளியவர்களின் עַמִּ֑י –ஜனத்தின்–என்னுடைய לִהְי֤וֹת –இருக்க אַלְמָנוֹת֙ –விதவைகள் שְׁלָלָ֔ם –கொள்ளை–அவர்களது וְאֶת־ –மற்றும்–ஐ– יְתוֹמִ֖ים –அநாதைகளை יָבֹֽזּוּ׃ கொள்ளையடிப்பார்கள்
அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ,
3 וּמַֽה־ –மற்றும்–என்ன– תַּעֲשׂוּ֙ செய்வீர்கள் לְי֣וֹם –நாளில் פְּקֻדָּ֔ה –தண்டனையின் וּלְשׁוֹאָ֖ה –மற்றும்–பாழத்துக்கு מִמֶּרְחָ֣ק –தொலைவிலிருந்து תָּב֑וֹא வரும் עַל־ –மீது– מִי֙ –யாரிடம் תָּנ֣וּסוּ ஓடுவீர்கள் לְעֶזְרָ֔ה –உதவிக்கு וְאָ֥נָה –மற்றும்–எங்கே תַעַזְב֖וּ விட்டுச்செல்வீர்கள் כְּבוֹדְכֶֽם׃ –மகிமையை–உங்களது
விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் அழிவின் நாளிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதவி பெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்துவிடுவீர்கள்?
4 בִּלְתִּ֤י –இல்லாமல் כָרַע֙ குனிந்தது תַּ֣חַת –கீழே אַסִּ֔יר –சிறையாளர் וְתַ֥חַת –மற்றும்–கீழே הֲרוּגִ֖ים –கொல்லப்பட்டவர்கள் יִפֹּ֑לוּ விழுவார்கள் בְּכָל־ –எல்லா– זֹאת֙ –இதில் לֹא־ இல்லை– שָׁ֣ב திரும்பியது אַפּ֔וֹ –கோபம்–அவரது וְע֖וֹד –மற்றும்–இன்னும் יָד֥וֹ –கரம்–அவரது נְטוּיָֽה׃ –நீட்டப்பட்டது ס —
கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
5 ה֥וֹי –ஐயோ אַשּׁ֖וּר அசீரியா שֵׁ֣בֶט –கோல் אַפִּ֑י –கோபத்தின்–என்னுடைய וּמַטֶּה־ –மற்றும்–தடி– ה֥וּא அது בְיָדָ֖ם –கரத்தில்–அவர்களது זַעְמִֽי׃ –சீற்றம்–என்னுடைய
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ, அவன் கையிலிருக்கிறது என் கோபத்தின் தண்டாயுதம்.
6 בְּג֤וֹי –தேசத்திற்கு–எதிராக חָנֵף֙ –வஞ்சக אֲשַׁלְּחֶ֔נּוּ அனுப்புவேன்–அவனை וְעַל־ –மற்றும்–மீது– עַ֥ם –ஜனம் עֶבְרָתִ֖י –சீற்றத்தின்–என்னுடைய אֲצַוֶּ֑נּוּ கட்டளையிடுவேன்–அவனை לִשְׁלֹ֤ל –கொள்ளையடிக்க שָׁלָל֙ –கொள்ளை וְלָבֹ֣ז –மற்றும்–கொள்ளையடிக்க בַּ֔ז –கொள்ளை [ולשימו] [அதைவைக்க] (וּלְשׂוּמ֥וֹ) (–மற்றும்–வைக்க) מִרְמָ֖ס –மிதிப்பாக כְּחֹ֥מֶר –சேற்றை–போல חוּצֽוֹת׃ –தெருக்களின்
அவபக்தியான மக்களுக்கு விரோதமாக நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின மக்களைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.
7 וְהוּא֙ –மற்றும்–அவன் לֹא־ இல்லை– כֵ֣ן –அவ்வாறு יְדַמֶּ֔ה நினைப்பான் וּלְבָב֖וֹ –மற்றும்–இருதயம்–அவனது לֹא־ இல்லை– כֵ֣ן –அவ்வாறு יַחְשֹׁ֑ב நினைக்கும் כִּ֚י –ஏனெனில் לְהַשְׁמִ֣יד –அழிக்க בִּלְבָב֔וֹ –இருதயத்தில்–அவனது וּלְהַכְרִ֥ית –மற்றும்–வெட்டியொழிக்க גּוֹיִ֖ם –தேசங்களை לֹ֥א இல்லை מְעָֽט׃ –சில
அவனோ அப்படி நினைக்கிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் மக்களை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.
8 כִּ֖י –ஏனெனில் יֹאמַ֑ר சொல்வான் הֲלֹ֥א இல்லையா– שָׂרַ֛י –பிரபுகள்–என்னுடைய יַחְדָּ֖ו –ஒன்றாக מְלָכִֽים׃ –அரசர்கள்
அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
9 הֲלֹ֥א இல்லையா– כְּכַרְכְּמִ֖ישׁ –கர்கெமிஷ்–போல כַּלְנ֑וֹ கல்னோ אִם־ –ஆனால்– לֹ֤א இல்லையா כְאַרְפַּד֙ –அர்ப்பாத்–போல חֲמָ֔ת காமாத் אִם־ –ஆனால்– לֹ֥א இல்லையா כְדַמֶּ֖שֶׂק –தமஸ்கு–போல שֹׁמְרֽוֹן׃ சமாரியா
கல்னோபட்டணம் கர்கேமிசைப் போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போல் ஆனதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?
10 כַּאֲשֶׁר֙ –போல–அது מָצְאָ֣ה கண்டெடுத்தது יָדִ֔י –கரம்–என்னுடைய לְמַמְלְכֹ֖ת –ராஜ்யங்களை הָאֱלִ֑יל –விக்கிரகங்களின் וּפְסִ֣ילֵיהֶ֔ם –மற்றும்–சிலைகள்–அவற்றின் מִירֽוּשָׁלִַ֖ם –எருசலேமிலிருந்து וּמִשֹּׁמְרֽוֹן׃ –மற்றும்–சமாரியாவிலிருந்து
எருசலேமையும் சமாரியாவையும்விட விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,
11 הֲלֹ֗א இல்லையா– כַּאֲשֶׁ֥ר –போல–அது עָשִׂ֛יתִי செய்தேன் לְשֹׁמְר֖וֹן –சமாரியாவுக்கு וְלֶאֱלִילֶ֑יהָ –மற்றும்–விக்கிரகங்களுக்கு–அதன் כֵּ֛ן –அவ்வாறு אֶעֱשֶׂ֥ה செய்வேன் לִירוּשָׁלִַ֖ם –எருசலேமுக்கு וְלַעֲצַבֶּֽיהָ׃ –மற்றும்–சிலைகளுக்கு–அதன் ס —
நான் சமாரியாவுக்கும், அதின் சிலைகளுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் சிலைகளுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்கிறான்.
12 וְהָיָ֗ה –மற்றும்–இருக்கும் כִּֽי־ –அதாவது– יְבַצַּ֤ע முடிப்பார் אֲדֹנָי֙ ஆண்டவர் אֶת־ –ஐ– כָּל־ –எல்லா– מַֽעֲשֵׂ֔הוּ –செயலை–அவரது בְּהַ֥ר –மலையில் צִיּ֖וֹן சீயோன் וּבִירוּשָׁלִָ֑ם –மற்றும்–எருசலேமில் אֶפְקֹ֗ד தண்டிப்பேன் עַל־ –மீது– פְּרִי־ –கனியின்– גֹ֙דֶל֙ –பெருமை לְבַ֣ב –இருதயம் מֶֽלֶךְ־ –அரசனின்– אַשּׁ֔וּר அசீரியா וְעַל־ –மற்றும்–மீது– תִּפְאֶ֖רֶת –மகிமை ר֥וּם –உயர்வு עֵינָֽיו׃ –கண்களின்–அவனது
ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.
13 כִּ֣י –ஏனெனில் אָמַ֗ר சொன்னான் בְּכֹ֤חַ –வலிமையில் יָדִי֙ –கரத்தின்–என்னுடைய עָשִׂ֔יתִי செய்தேன் וּבְחָכְמָתִ֖י –மற்றும்–ஞானத்தில்–என்னுடைய כִּ֣י –ஏனெனில் נְבֻנ֑וֹתִי அறிவுள்ளவன் וְאָסִ֣יר ׀ –மற்றும்–நீக்கினேன் גְּבוּלֹ֣ת –எல்லைகளை עַמִּ֗ים –ஜனங்களின் [ועתידתיהם] [பொக்கிஷங்களை–அவர்களது] (וַעֲתוּדֽוֹתֵיהֶם֙) (–மற்றும்–பொக்கிஷங்களை–அவர்களது) שׁוֹשֵׂ֔תִי கொள்ளையடித்தேன் וְאוֹרִ֥יד –மற்றும்–இறக்கினேன் כַּאבִּ֖יר –வலிமையானவனாக–போல יוֹשְׁבִֽים׃ –குடியிருப்பவர்கள்
அவன் என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச் செய்தேன்; நான் புத்திமான், நான் மக்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் குடிமக்களைத் தாழ்த்தினேன்.
14 וַתִּמְצָ֨א –மற்றும்–கண்டெடுத்தது כַקֵּ֤ן ׀ –கூடு–போல– יָדִי֙ –கரம்–என்னுடைய לְחֵ֣יל –செல்வத்தை הָֽעַמִּ֔ים –ஜனங்களின் וְכֶאֱסֹף֙ –மற்றும்–சேகரிக்க–போல בֵּיצִ֣ים –முட்டைகள் עֲזֻב֔וֹת –கைவிடப்பட்ட כָּל־ –எல்லா– הָאָ֖רֶץ –நாட்டை אֲנִ֣י நான் אָסָ֑פְתִּי சேகரித்தேன் וְלֹ֤א –மற்றும்–இல்லை הָיָה֙ இருந்தது נֹדֵ֣ד –அசைக்கிற כָּנָ֔ף –இறகு וּפֹצֶ֥ה –மற்றும்–திறக்கிற פֶ֖ה –வாய் וּמְצַפְצֵֽף׃ –மற்றும்–கிசுகிசுக்கிற
ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல் என் கை மக்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் இறக்கையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்கிறான்.
15 הֲיִתְפָּאֵר֙ –பெருமைபாராட்டுமா הַגַּרְזֶ֔ן –கோடரி עַ֖ל –மீது הַחֹצֵ֣ב –வெட்டுகிறவன் בּ֑וֹ –அதனால் אִם־ –ஆனால்– יִתְגַּדֵּ֤ל பெருக்குமா הַמַּשּׂוֹר֙ –ஆரம் עַל־ –மீது– מְנִיפ֔וֹ –ஆட்டுகிறவன்–அவனது כְּהָנִ֥יף –ஆட்டியவாறு–போல שֵׁ֙בֶט֙ –கோல் וְאֶת־ –மற்றும்–ஐ– מְרִימָ֔יו –உயர்த்துகிறவர்களை–அவனது כְּהָרִ֥ים –உயர்த்துவது–போல מַטֶּ֖ה –தடி לֹא־ இல்லை– עֵֽץ׃ –மரம்
கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாக மேன்மைபாராட்டலாமோ? வாளானது தன்னைப் பயன்படுத்துகிறவனுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினதுபோலவும் இருக்குமே.
16 לָ֠כֵן –ஆகையால் יְשַׁלַּ֨ח அனுப்புவார் הָאָד֜וֹן –ஆண்டவர் יְהוָ֧ה யெகோவா צְבָא֛וֹת –சேனைகளின் בְּמִשְׁמַנָּ֖יו –கொழுப்பவர்களிடம் רָז֑וֹן –மெலிவை וְתַ֧חַת –மற்றும்–கீழே כְּבֹד֛וֹ –மகிமையின்–அவனது יֵקַ֥ד எரியும் יְקֹ֖ד –எரியும் כִּיק֥וֹד –எரியும்–போல אֵֽשׁ׃ –நெருப்பு
ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய யெகோவா, அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; சுட்டெரிக்கும் அக்கினியைப் போலவும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.
17 וְהָיָ֤ה –மற்றும்–இருக்கும் אֽוֹר־ –ஒளி– יִשְׂרָאֵל֙ இஸ்ரவேல் לְאֵ֔שׁ –நெருப்பாக וּקְדוֹשׁ֖וֹ –மற்றும்–பரிசுத்தர்–அவனது לְלֶהָבָ֑ה –ஜ்வாலையாக וּבָעֲרָ֗ה –மற்றும்–எரியும் וְאָֽכְלָ֛ה –மற்றும்–விழுங்கும் שִׁית֥וֹ –முட்களை–அவனது וּשְׁמִיר֖וֹ –மற்றும்–நெருஞ்சியை–அவனது בְּי֥וֹם –நாளில் אֶחָֽד׃ –ஒரு
இஸ்ரவேலின் ஒளியான தேவனானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜூவாலையுமாகி, ஒரே நாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் எரித்து அழித்து,
18 וּכְב֤וֹד –மற்றும்–மகிமை יַעְרוֹ֙ –காட்டின்–அவனது וְכַרְמִלּ֔וֹ –மற்றும்–பழத்தோட்டத்தின்–அவனது מִנֶּ֥פֶשׁ –ஆத்மாவிலிருந்து וְעַד־ –மற்றும்–வரை– בָּשָׂ֖ר –சரீரம் יְכַלֶּ֑ה அழிப்பார் וְהָיָ֖ה –மற்றும்–இருக்கும் כִּמְסֹ֥ס –உருகும்–போல נֹסֵֽס׃ –உருகுகிறவன்
அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாக அழியச்செய்வார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.
19 וּשְׁאָ֥ר –மற்றும்–மீதி עֵ֛ץ –மரம் יַעְר֖וֹ –காட்டின்–அவனது מִסְפָּ֣ר –எண்ணிக்கையில் יִֽהְי֑וּ இருக்கும் וְנַ֖עַר –மற்றும்–சிறுவன் יִכְתְּבֵֽם׃ எழுதுவான்–அவற்றை פ —
காட்டில் அவனுக்கு மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும், ஒரு சிறுபிள்ளை அவைகளை எண்ணி எழுதலாம்.
20 וְהָיָ֣ה ׀ –மற்றும்–இருக்கும் בַּיּ֣וֹם –நாளில் הַה֗וּא –அந்த לֹֽא־ இல்லை– יוֹסִ֨יף தொடர்வார்கள் ע֜וֹד –மேலும் שְׁאָ֤ר –மீதி יִשְׂרָאֵל֙ இஸ்ரவேல் וּפְלֵיטַ֣ת –மற்றும்–தப்பியவர்கள் בֵּֽית־ –வீட்டின்– יַעֲקֹ֔ב யாக்கோபு לְהִשָּׁעֵ֖ן –சார்ந்திருக்க עַל־ –மீது– מַכֵּ֑הוּ –அடிக்கிறவனை–அவனது וְנִשְׁעַ֗ן –மற்றும்–சார்ந்திருக்கும் עַל־ –மீது– יְהוָ֛ה யெகோவா קְד֥וֹשׁ –பரிசுத்தர் יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் בֶּאֱמֶֽת׃ –உண்மையில்
அக்காலத்திலே இஸ்ரவேலின் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவையே உண்மையாகச் சார்ந்துகொள்வார்கள்.
21 שְׁאָ֥ר –மீதி יָשׁ֖וּב திரும்பும் שְׁאָ֣ר –மீதி יַעֲקֹ֑ב யாக்கோபு אֶל־ –நோக்கி– אֵ֖ל –தேவன் גִּבּֽוֹר׃ –வல்லமையுள்ள
மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்.
22 כִּ֣י –ஏனெனில் אִם־ –ஆனாலும்– יִהְיֶ֞ה இருக்கும் עַמְּךָ֤ –ஜனம்–உனது יִשְׂרָאֵל֙ இஸ்ரவேல் כְּח֣וֹל –மணல்–போல הַיָּ֔ם –கடலின் שְׁאָ֖ר –மீதி יָשׁ֣וּב திரும்பும் בּ֑וֹ –அதில் כִּלָּי֥וֹן –அழிவு חָר֖וּץ –தீர்மானிக்கப்பட்ட שׁוֹטֵ֥ף –வெள்ளப்பெருக்கும் צְדָקָֽה׃ –நீதி
இஸ்ரவேலே, உனது மக்கள் கடலின் மணலளவு இருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டு வரும்.
23 כִּ֥י –ஏனெனில் כָלָ֖ה –முடிவு וְנֶחֱרָצָ֑ה –மற்றும்–தீர்மானிக்கப்பட்டது אֲדֹנָ֤י ஆண்டவர் יְהוִה֙ யெகோவா צְבָא֔וֹת –சேனைகளின் עֹשֶׂ֖ה செய்கிறார் בְּקֶ֥רֶב –நடுவில் כָּל־ –எல்லா– הָאָֽרֶץ׃ –நாட்டின் ס —
சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தேசம் முழுவதற்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார்.
24 לָכֵ֗ן –ஆகையால் כֹּֽה־ –இவ்வாறு– אָמַ֞ר சொன்னார் אֲדֹנָ֤י ஆண்டவர் יְהוִה֙ யெகோவா צְבָא֔וֹת –சேனைகளின் אַל־ –வேண்டாம்– תִּירָ֥א –பயப்படு עַמִּ֛י –ஜனமே–என்னுடைய יֹשֵׁ֥ב –குடியிருக்கிற צִיּ֖וֹן சீயோன் מֵֽאַשּׁ֑וּר –அசீரியாவிலிருந்து בַּשֵּׁ֣בֶט –கோலால் יַכֶּ֔כָּה அடிப்பான்–உன்னை וּמַטֵּ֥הוּ –மற்றும்–தடியை–அவனது יִשָּֽׂא־ –உயர்த்துவான்– עָלֶ֖יךָ –உன்மீது בְּדֶ֥רֶךְ –வழியில் מִצְרָֽיִם׃ எகிப்து
ஆகையால் சீயோனில் குடியிருக்கிற என் மக்களே, அசீரியனுக்குப் பயப்படாதே; அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.
25 כִּי־ –ஏனெனில்– ע֖וֹד –இன்னும் מְעַ֣ט –சிறிது מִזְעָ֑ר –கொஞ்சம் וְכָ֣לָה –மற்றும்–முடிவும் זַ֔עַם –சீற்றம் וְאַפִּ֖י –மற்றும்–கோபம்–என்னுடைய עַל־ –மீது– תַּבְלִיתָֽם׃ –அழிவின்–அவர்களது
ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்திற்குள்ளே என் கடுங்கோபமும், அவர்களைச் அழிக்கப்போகிறதினால் என் கோபமும் தணிந்துபோகும் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.
26 וְעוֹרֵ֨ר –மற்றும்–எழுப்புவார் עָלָ֜יו –அவனுக்கு–எதிராக יְהוָ֤ה யெகோவா צְבָאוֹת֙ –சேனைகளின் שׁ֔וֹט –சாட்டை כְּמַכַּ֥ת –அடியின்–போல מִדְיָ֖ן மீதியான் בְּצ֣וּר –பாறையில் עוֹרֵ֑ב ஓரேப் וּמַטֵּ֙הוּ֙ –மற்றும்–தடியை–அவனது עַל־ –மீது– הַיָּ֔ם –கடல் וּנְשָׂא֖וֹ –மற்றும்–உயர்த்துவான்–அதை בְּדֶ֥רֶךְ –வழியில் מִצְרָֽיִם׃ எகிப்து
ஓரேப் கன்மலையின் அருகிலே மீதியானியர்கள் வெட்டுண்டதுபோல் சேனைகளின் யெகோவா அவன்மேல் ஒரு சவுக்கை எழும்பிவரச்செய்து, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.
27 וְהָיָ֣ה ׀ –மற்றும்–இருக்கும் בַּיּ֣וֹם –நாளில் הַה֗וּא –அந்த יָס֤וּר நீங்கும் סֻבֳּלוֹ֙ –சுமையின்–அவனது מֵעַ֣ל –மேலிருந்து שִׁכְמֶ֔ךָ –தோளின்–உனது וְעֻלּ֖וֹ –மற்றும்–நுகத்தின்–அவனது מֵעַ֣ל –மேலிருந்து צַוָּארֶ֑ךָ –கழுத்தின்–உனது וְחֻבַּ֥ל –மற்றும்–அழிக்கப்படும் עֹ֖ל –நுகம் מִפְּנֵי־ –முகத்திலிருந்து– שָֽׁמֶן׃ –எண்ணெய்
அந்நாளில் உன் தோளிலிருந்து அவன் சுமையும், உன் கழுத்திலிருந்து அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தினால் நுகம் முறிந்துபோகும்.
28 בָּ֥א வந்தான் עַל־ –மீது– עַיַּ֖ת அய்யாத் עָבַ֣ר கடந்தான் בְּמִגְר֑וֹן –மிக்ரோனில் לְמִכְמָ֖שׂ –மிக்மாஷில் יַפְקִ֥יד வைப்பான் כֵּלָֽיו׃ –பொருட்களை–அவனது
அவன் ஆயாத்திற்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் பொருட்களை வைத்திருக்கிறான்.
29 עָֽבְרוּ֙ கடந்தார்கள் מַעְבָּרָ֔ה –கடவுவழியை גֶּ֖בַע கெபா מָל֣וֹן –தங்கும்இடம் לָ֑נוּ –நமக்கு חָֽרְדָה֙ நடுங்கியது הָֽרָמָ֔ה –ராமா גִּבְעַ֥ת –கிப்பியாத் שָׁא֖וּל சாவூல் נָֽסָה׃ தப்பியோடியது
கணவாயைத் தாண்டி, கேபாவிலே முகாமிடுகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.
30 צַהֲלִ֥י –கூக்குரலிடு קוֹלֵ֖ךְ –குரலை–உனது בַּת־ –மகளே– גַּלִּ֑ים கல்லீம் הַקְשִׁ֥יבִי –கவனி לַ֖יְשָׁה –லாயிஷா עֲנִיָּ֥ה –எளியவளே עֲנָתֽוֹת׃ அனாதோத்
காலீம் மகளே, உரத்த சத்தமாகக் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்வரை கேட்க சத்தமிட்டுக் கூப்பிடு.
31 נָדְדָ֖ה தப்பியோடியது מַדְמֵנָ֑ה மத்மேனா יֹשְׁבֵ֥י –குடியிருப்பவர்கள் הַגֵּבִ֖ים –கேபீம் הֵעִֽיזוּ׃ திரட்டினார்கள்
மத்மேனா தப்பி ஓடிப்போகும், கேபிமின் மக்கள் எருசலேம் அருகில் மறைத்துக்கொள்கிறார்கள்.
32 ע֥וֹד –இன்னும் הַיּ֖וֹם –நாள் בְּנֹ֣ב –நோபில் לַֽעֲמֹ֑ד –நிற்க יְנֹפֵ֤ף ஆட்டுவான் יָדוֹ֙ –கரத்தை–அவனது הַ֣ר –மலை [בית־] [–வீட்டின்–] (בַּת־) (–மகளே–) צִיּ֔וֹן சீயோன் גִּבְעַ֖ת –கிப்பியாத் יְרוּשָׁלִָֽם׃ எருசலேம் ס —
இனி ஒருநாள் நோபிலே தங்கி, மகளாகிய சீயோனின் மலைக்கும், எருசலேமின் மேட்டிற்கும் விரோதமாகக் கை நீட்டி மிரட்டுவான்.
33 הִנֵּ֤ה –இதோ הָאָדוֹן֙ –ஆண்டவர் יְהוָ֣ה யெகோவா צְבָא֔וֹת –சேனைகளின் מְסָעֵ֥ף –கிளைகளை–வெட்டுகிறவர் פֻּארָ֖ה –கிளையை בְּמַעֲרָצָ֑ה –பயங்கரத்தில் וְרָמֵ֤י –மற்றும்–உயரமானவர்கள் הַקּוֹמָה֙ –உயரத்தின் גְּדוּעִ֔ים வெட்டப்படுகின்றனர் וְהַגְּבֹהִ֖ים –மற்றும்–உயர்ந்தவர்கள் יִשְׁפָּֽלוּ׃ தாழ்த்தப்படுவார்கள்
இதோ, சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாக வெட்டுவார்; உயர்ந்து வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.
34 וְנִקַּ֛ף –மற்றும்–வெட்டப்படும் סִֽבְכֵ֥י –புதர்கள் הַיַּ֖עַר –காட்டின் בַּבַּרְזֶ֑ל –இரும்பால் וְהַלְּבָנ֖וֹן –மற்றும்–லெபனான் בְּאַדִּ֥יר –மகத்தானவனால் יִפּֽוֹל׃ விழும் ס —
அவர் காட்டின் மரங்களின் அடர்த்தியைக் கோடரியினாலே வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்.