1 הֵ֥ן இதோ לְצֶ֖דֶק நீதிக்காக יִמְלָךְ־ ஆளுவார்– מֶ֑לֶךְ ராஜா וּלְשָׂרִ֖ים பிரபுக்களும் לְמִשְׁפָּ֥ט நீதிக்காக יָשֹֽׂרוּ׃ ஆளுவார்கள்
இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாக ஆளுகை செய்வார்கள்.
2 וְהָיָה־ இருக்கும்– אִ֥ישׁ மனிதன் כְּמַֽחֲבֵא־ காற்றின்–மறைவிடமாய்– ר֖וּחַ காற்றின் וְסֵ֣תֶר மறைவிடமும் זָ֑רֶם பெருமழையின் כְּפַלְגֵי־ நீர்–நதிகள்போல– מַ֣יִם தண்ணீரின் בְּצָי֔וֹן வறண்டநிலத்தில் כְּצֵ֥ל பெரிய–கன்மலையின்–நிழல்போல– סֶֽלַע־ கன்மலையின்– כָּבֵ֖ד கனமான בְּאֶ֥רֶץ –நிலத்தில் עֲיֵפָֽה׃ சோர்வான
அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்திற்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்திற்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.
3 וְלֹ֥א இல்லை תִשְׁעֶ֖ינָה மூடும் עֵינֵ֣י –கண்கள் רֹאִ֑ים பார்ப்பவர்களின் וְאָזְנֵ֥י காதுகளும் שֹׁמְעִ֖ים கேட்பவர்களின் תִּקְשַֽׁבְנָה׃ கவனிக்கும்
அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாக இருக்காது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.
4 וּלְבַ֥ב இருதயமும் נִמְהָרִ֖ים விரைவானவர்களின் יָבִ֣ין உணரும் לָדָ֑עַת அறிய וּלְשׁ֣וֹן நாவும் עִלְּגִ֔ים தடுமாறுகிறவர்களின் תְּמַהֵ֖ר விரைவாய்–பேசும் לְדַבֵּ֥ר பேச צָחֽוֹת׃ தெளிவாய்
பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், திக்குகிறவர்களுடைய நாவு தடையின்றித் தெளிவாகப் பேசும்.
5 לֹֽא־ இல்லை– יִקָּרֵ֥א அழைக்கப்படுவான் ע֛וֹד இனி לְנָבָ֖ל மூடனுக்கு נָדִ֑יב கொடைச்சீலன்–என்று וּלְכִילַ֕י கஞ்சனுக்கும் לֹ֥א இல்லை יֵֽאָמֵ֖ר சொல்லப்படுவான் שֽׁוֹעַ׃ பெரியவன்–என்று
மூடன் இனி தயாளன் என்று மதிக்கப்படமாட்டான்; துஷ்டன் இனி தயாள குணமுள்ளவன் என்று சொல்லப்படுவதுமில்லை.
6 כִּ֤י ஏனெனில் נָבָל֙ மூடன் נְבָלָ֣ה மூடத்தனத்தை יְדַבֵּ֔ר பேசுவான் וְלִבּ֖וֹ அவனுடைய–இருதயமும் יַעֲשֶׂה־ செய்யும்– אָ֑וֶן அக்கிரமத்தை לַעֲשׂ֣וֹת செய்யவும் חֹ֗נֶף வேடம் וּלְדַבֵּ֤ר பேசவும் אֶל־ –எதிராக– יְהוָה֙ யெகோவாவுக்கு תּוֹעָ֔ה வழிதவறை לְהָרִיק֙ வெறுமையாக்க נֶ֣פֶשׁ உயிரை רָעֵ֔ב பசியுள்ளவனின் וּמַשְׁקֶ֥ה பானத்தையும் צָמֵ֖א தாகமுள்ளவனின் יַחְסִֽיר׃ குறைப்பான்
ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்செய்து, யெகோவாவுக்கு விரோதமாக விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகம் தீர்க்காதிருக்கிறான்.
7 וְכֵלַ֖י கஞ்சனின் כֵּלָ֣יו அவனுடைய–ஆயுதங்கள் רָעִ֑ים தீயவை ה֚וּא அவன் זִמּ֣וֹת தீய–திட்டங்களை יָעָ֔ץ ஆலோசிக்கிறான் לְחַבֵּ֤ל அழிக்க [ענוים] [எளியவர்களை] (עֲנִיִּים֙) (ஏழைகளை) בְּאִמְרֵי־ –பொய்– שֶׁ֔קֶר பொய்யின் וּבְדַבֵּ֥ר பேசும்போதும் אֶבְי֖וֹן ஏழையனின் מִשְׁפָּֽט׃ நீதியை
துஷ்டனின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாகப் பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்க தீவினைகளை யோசிக்கிறான்.
8 וְנָדִ֖יב கொடைச்சீலனும் נְדִיב֣וֹת கொடைச்சீலன்–காரியங்களை יָעָ֑ץ ஆலோசிக்கிறான் וְה֖וּא அவனும் עַל־ –மேல்– נְדִיב֥וֹת கொடைச்சீலன்–காரியங்களின்–மேல் יָקֽוּם׃ நிற்பான் פ —
தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.
9 נָשִׁים֙ பெண்களே שַֽׁאֲנַנּ֔וֹת அமைதியான קֹ֖מְנָה எழுங்கள் שְׁמַ֣עְנָה கேளுங்கள் קוֹלִ֑י என்–சத்தத்தை בָּנוֹת֙ மகளிரே בֹּֽטח֔וֹת நம்பிக்கையுள்ள הַאְזֵ֖נָּה செவிகொடுங்கள் אִמְרָתִֽי׃ என்–வார்த்தையை
சுகஜீவிகளாகிய பெண்களே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான பெண்களே, என் வசனத்திற்குச் செவிகொடுங்கள்.
10 יָמִים֙ நாட்கள் עַל־ –மேல்– שָׁנָ֔ה வருடத்தின் תִּרְגַּ֖זְנָה நடுக்குவீர்கள் בֹּֽטְח֑וֹת நம்பிக்கையுள்ளவர்களே כִּ֚י ஏனெனில் כָּלָ֣ה முடிந்தது בָצִ֔יר திராட்சை–பழம் אֹ֖סֶף அறுவடை בְּלִ֥י இல்லாமல் יָבֽוֹא׃ வரும்
நிர்விசாரிகளே, ஒரு வருடமும் சில நாட்களுமாகத் தத்தளிப்பீர்கள்; திராட்சைப்பலன் அற்றுப்போகும்; அறுப்புக்காலம் வராது.
11 חִרְדוּ֙ நடுங்கள் שַֽׁאֲנַנּ֔וֹת அமைதியானவர்களே רְגָ֖זָה நடுங்கள் בֹּֽטְח֑וֹת நம்பிக்கையுள்ளவர்களே פְּשֹׁ֣טָֽה உடைகளை–கழியுங்கள் וְעֹ֔רָה நிர்வாணமாகி וַחֲג֖וֹרָה அரைகட்டுங்கள் עַל־ –மேல்– חֲלָצָֽיִם׃ அரைகளின்–மேல்
சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள்; உடையை களைந்துபோட்டு, இடுப்பில் சணல் ஆடையைக் கட்டிக்கொள்ளுங்கள்.
12 עַל־ –மேல்– שָׁדַ֖יִם மார்பகங்களின்–மேல் סֹֽפְדִ֑ים அடிக்கின்றனர் עַל־ –மேல்– שְׂדֵי־ வயல்களின்– חֶ֕מֶד இனிமையின் עַל־ –மேல்– גֶּ֖פֶן திராட்சைக்கொடியின் פֹּרִיָּֽה׃ கனியுள்ள
செழிப்பான வயல்களுக்காகவும் கனிதரும் திராட்சைச் செடிகளுக்காகவும் மாரடித்துப் புலம்புவார்கள்.
13 עַ֚ל –மேல் אַדְמַ֣ת நிலத்தின் עַמִּ֔י என்–ஜனத்தின் ק֥וֹץ முள் שָׁמִ֖יר களையும் תַּֽעֲלֶ֑ה வளரும் כִּ֚י ஏனெனில் עַל־ –மேல்– כָּל־ எல்லா– בָּתֵּ֣י வீடுகளின் מָשׂ֔וֹשׂ மகிழ்ச்சியின் קִרְיָ֖ה நகரத்தின் עַלִּיזָֽה׃ களிப்புள்ள
என் மக்களுடைய நிலத்திலும், களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
14 כִּֽי־ ஏனெனில்– אַרְמ֣וֹן அரண்மனை נֻטָּ֔שׁ கைவிடப்பட்டது הֲמ֥וֹן ஆர்ப்பாட்டம் עִ֖יר நகரத்தின் עֻזָּ֑ב கைவிடப்பட்டது עֹ֣פֶל ஓப்பேலும் וָבַ֜חַן காவல்–கோபுரமும் הָיָ֨ה ஆனது בְעַ֤ד –உட்படுத்துக்காக– מְעָרוֹת֙ குகைகளுக்காக עַד־ –வரை– עוֹלָ֔ם நித்தியமாய் מְשׂ֥וֹשׂ மகிழ்ச்சி פְּרָאִ֖ים காட்டுக்கழுதைகளின் מִרְעֵ֥ה மேய்ச்சல் עֲדָרִֽים׃ மந்தைகளின்
அரண்மனை பாழாக விடப்படும், மக்கள் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் கோபுரமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.
15 עַד־ –வரை– יֵ֨עָרֶ֥ה ஊற்றப்படும் עָלֵ֛ינוּ நம்–மேல் ר֖וּחַ ஆவி מִמָּר֑וֹם உன்னதத்திலிருந்து וְהָיָ֤ה இருக்கும் מִדְבָּר֙ வனாந்தரம் לַכַּרְמֶ֔ל கர்மேலாக [וכרמל] [கர்மேலும்] (וְהַכַּרְמֶ֖ל) (கர்மேலும்) לַיַּ֥עַר காடாக יֵחָשֵֽׁב׃ எண்ணப்படும்
உன்னதத்திலிருந்து நம்மேல் தேவனுடைய ஆவி ஊற்றப்படும்வரை அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்திரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக நினைக்கப்படும்.
16 וְשָׁכַ֥ן குடியிருக்கும் בַּמִּדְבָּ֖ר வனாந்தரத்தில் מִשְׁפָּ֑ט நீதி וּצְדָקָ֖ה நீதியும் בַּכַּרְמֶ֥ל கர்மேலில் תֵּשֵֽׁב׃ தங்கியிருக்கும்
வனாந்திரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும்.
17 וְהָיָ֛ה இருக்கும் מַעֲשֵׂ֥ה காரியம் הַצְּדָקָ֖ה நீதியின் שָׁל֑וֹם சமாதானம் וַֽעֲבֹדַת֙ வேலையும் הַצְּדָקָ֔ה நீதியின் הַשְׁקֵ֥ט அமைதியும் וָבֶ֖טַח நம்பிக்கையும் עַד־ –வரை– עוֹלָֽם׃ நித்தியம்
நீதியின் செயல் சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமைதலும் சுகமுமாம்.
18 וְיָשַׁ֥ב குடியிருக்கும் עַמִּ֖י என்–ஜனம் בִּנְוֵ֣ה சமாதானத்தின்–வாசமிடத்தில் שָׁל֑וֹם சமாதானத்தின் וּֽבְמִשְׁכְּנוֹת֙ பாதுகாப்பான–தங்குமிடங்களிலும் מִבְטַחִ֔ים நம்பகமான וּבִמְנוּחֹ֖ת அமைதியான–இளைப்பாறுகளிலும் שַׁאֲנַנּֽוֹת׃ அமைதியான
என் மக்கள் சமாதான குடியிருப்புகளிலும், நிலையான இருப்பிடங்களிலும், அமைதியாகத் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
19 וּבָרַ֖ד ஆலங்கட்டி–பெய்யும் בְּרֶ֣דֶת இறங்கும்போது הַיָּ֑עַר காடு וּבַשִּׁפְלָ֖ה தாழ்நிலத்திலும் תִּשְׁפַּ֥ל தாழ்த்தப்படும் הָעִֽיר׃ நகரம்
ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோகும்.
20 אַשְׁרֵיכֶ֕ם பாக்கியவான்கள் זֹרְעֵ֖י விதைக்கிறவர்களே עַל־ –மேல்– כָּל־ எல்லா– מָ֑יִם தண்ணீரின் מְשַׁלְּחֵ֥י அனுப்புகிறவர்களே רֶֽגֶל־ காலை– הַשּׁ֖וֹר எருதின் וְהַחֲמֽוֹר׃ கழுதையினும் ס —
மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.